Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கௌசல்யாவும் சட்டத்தரணி என்றார்கள். தமது கட்சி விண்ணப்பத்தை நிரப்புவதிலேயே கோட்டை விட்டு விட்டார்கள். கிளிநொச்சியில் ஒரு சுயேச்சை குழுவைத்தவிர…. பாரம்பரிய கட்சிகள் (தமிழரசு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி) எதுவுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என்று @ஏராளன் இணைத்திருந்த செய்தி ஒன்றில் பார்த்தேன். அவ்வளவிற்கு போட்டியிட எவரும் ஆர்வம் காட்டாத நிலை காணப்பட்டுள்ளது. இதற்குள் தமிழரசு கட்சி…. கொழும்பு, கண்டியில் போட்டி என்று உசுப்பேத்தல் விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
  2. அவர்கள்… ரெலிபோன் வயர் சூடாகும் மட்டும், நிறைய கதைத்து இருப்பார்கள். 📞 ☎️ தொடருங்கள் குமாரசாமி அண்ணை. 😂
  3. வணக்கம் செழியன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 🙏 உங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தையும் தாருங்களேன்.
  4. மக்களுக்கு அரசியலே வெறுத்து விட்டது போலுள்ளது ஏராளன்.
  5. கிளி நொச்சியில்… தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் போன்றவை போட்டியிடவில்லையா.
  6. வாழ்த்துக்கள் ரமோஷன். உங்களின் பரந்த எண்ணம் தாய்நாட்டுக்கு உரம் சேர்க்கட்டும்.
  7. தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மிக்க மகிழ்ச்சியான செய்தி. சுஜீவன் முருகானந்தம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
  8. 👉 https://www.facebook.com/watch/?v=2404829226548549 👈 ஜேர்மன்கார பெண்மணியின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளதாம்.
  9. பலத்த பாதுகாப்புடன் மக்கள் மத்தியில் வாழ்க்கை நடத்துவதை பெரிய சமூக அந்தஸ்தாக கருதுகின்றார்கள் போலுள்ளது. அதற்கும்… மக்களின் வரிப்பணம் தான் தேவைப்படுகின்றது.
  10. பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்! பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரது சொத்துக்கள், தடை செய்யப்பட்ட நாள் முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் குறித்த நபர் ஆஜராகும் பட்சத்தில், சொத்துக்களை விற்பனை செய்ய அல்லது சொத்துக்களை விற்பனை செய்து பெறப்பட்ட வருமானத்தை அவருக்கே மீள வழங்குவதற்கான விதிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் செயற்பட வேண்டுமென்பதுடன் இந்த நடவடிக்கைகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425999
  11. இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்‍டேட்! இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று படகின் எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றன. https://athavannews.com/2025/1426006
  12. யோவ் யாருயா நீயி? உள்ள இருந்து வர்ற? என் பேரு Butch Wilmore. நானும் சுனிதா கூட 9 மாதம் விண்வெளில தான்யா இருந்தேன். அப்படியா சரி போ... போ... Dinesh Kumar 😂 🤣 ஆம்பளை எல்லாம் எவன்யா ராக்கெட் லே ஏத்துனது.. 🤣 Sun Shun
  13. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஜெர்மனி, பெர்லினின் பிளான்டர்வால்ட் மற்றும் ஸ்டெக்லிட்ஸ் சுற்றுப்புறங்களில் நான்கு டெஸ்லா வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. உலகம் பூராகவும் எலான் மஸ்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! Vaanam.lk
  14. மாட்டு சாணியால்... தனது Toyota Corolla காரை மெழுகிய பெண். மாட்டு சாணி - மாற்று யோசனை! 😂
  15. இசைஞானி இளையராஜாவை சந்தித்தது பெருமை மற்றும் மகிழ்ச்சி என இந்திய பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.” Vaanam.lk
  16. இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி! இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிலோவாட் மணி நேரத்திற்கு 7 காசுகளாக விலையை மாற்றியமைக்க தனது நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என சுட்டிக்காட்டியுள்ளது. ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் செய்துகொள்ளப்பட்ட அசல் உடன்படிக்கைக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம். மேலும் அதானி Green Energy SL Ltd இன் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மேலும் தெரிவிக்கிறோம். முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டத்தில் இருந்து நிறுவனம் கெளரவத்துடன் விலகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எப்போதாவது மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில் எந்தவொரு அபிவிருத்தி வாய்ப்பையும் எடுக்க எப்போதும் தயாராக இருப்பதாக அதானி குழுமம் மீண்டும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரியில் இலங்கையில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காற்றாலை மின் உற்பத்தி முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்நாட்டின் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயன்றதைத் தொடர்ந்து இந்த முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியது. 2023 பெப்ரவரியில் இலங்கையின் முதலீட்டு வாரியம் (BOI), அதானி கிரீன் எனர்ஜியின் $442 மில்லியன் காற்றாலை மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் வடக்கு இலங்கையின் மன்னார் மற்றும் பூனேரினில் மின் நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் 2023 அறிக்கையின்படி, மன்னார் காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் (மெகாவாட்) திறனில் இயங்க வேண்டும். அதேநேரத்தில், பூனாரியின் ஆலை 100 மெகாவாட்டிற்கு திட்டமிடப்பட்டது மற்றும் 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டது. அப்போதிருந்து, இந்த திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது, அதன் விவரங்கள் உயர் நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425967

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.