Everything posted by தமிழ் சிறி
-
இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.
விமானப் படை விமான விபத்துக்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்! பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விசாரணை அறிக்கையின் நகலைக் கேட்டுப் பெற்றதாகக் கூறினார். அந்த அறிக்கையின் படி, விமானம் மற்றும் இயந்திரங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு பழையவை அல்ல என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார். சாலைகளில் பழைய வாகனங்கள் ஓட அனுமதிக்கப்படுவதால், விமானங்களில் அப்படிச் செய்ய முடியாது. இந்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கிய விமானிகள் பயிற்சியில் இருந்தனர். அவர்களால் ஒரு தவறு நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் விபத்தில் இருந்து தப்பியதில் நாங்கள் நிம்மதியடைகிறோம். இது பயிற்சியின் போது ஒரு சாதாரண சம்பவம், உலகம் முழுவதும் இவ்வாறான விபத்துக்கள் நடக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் விமானப்படை விமான விபத்துக்குள்ளானதற்கு இதுவே ஒரே காரணம் என்றும், விபத்து குறித்த தொழில்நுட்ப அறிக்கையின் கண்டுபிடிப்பும் இதுதான் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். மார்ச் 21, வெள்ளிக்கிழமை வாரியபொலவில் இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளுடன் சென்ற K-8 பயிற்சி ஜெட் விமானம் திடீரென ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொலவில் விபத்துக்குள்ளானது. எனினும், இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி, குருநாகலின் பதேனியாவில் தரையிறங்கினர். https://athavannews.com/2025/1426246
-
திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!
திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்! கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது வாக்காளர்களின் மனதில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, லிபரல் கட்சியைச் சேர்ந்த கார்னி, கனடாவின் பிரதமராகப் பதவியேற்ற ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இந்த தேர்தல் அழைப்பு வந்துள்ளது. கார்னி இப்போது கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை எதிர்கொள்ள வேண்டும், அவருடைய கட்சி 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தேசிய கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும் அண்மைய கருத்துக் கணிப்புகள் இப்போது போட்டி மிகவும் இறுக்கமாக இருப்பதாகக் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் பேசிய கார்னி, ட்ரம்பை சமாளிக்க தனக்கு தெளிவான, நேர்மறையான ஆணை தேவை என்றார். “ஜனாதிபதி ட்ரம்பின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நமது இறையாண்மைக்கு அவர் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் காரணமாக, நமது வாழ்நாளில் மிக முக்கியமான நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார். இந்தத் தேர்தலுக்காக ஒரு காலத்தில் விலக்கு அளிக்கப்பட்ட தாராளவாதிகள், இப்போது கார்னியின் கீழ் தொடர்ந்து நான்காவது முறையாக அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இங்கிலாந்து வங்கி மற்றும் கனடா வங்கியின் முன்னாள் ஆளுநரான 60 வயதான கார்னி, ஒருபோதும் எம்.பி.யாக பணியாற்றியதில்லை, அரசியல் ரீதியாக சவால்களை எதிர்கொள்ளவும் இல்லை. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ளகார்னி தனது குறுகிய பதவிக் காலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து, கனடாவின் நிலப்பகுதியில் தங்கி ஆஸ்திரேலியாவுடன் ஒரு புதிய வடக்கு ரேடார் அமைப்பை உருவாக்க ஒரு கூட்டாண்மையை அறிவித்தார். அத்துடன், பழமைவாதிகளால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ட்ரூடோவின் கையெழுத்து கார்பன் வரி காலநிலைக் கொள்கையையும் அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். இப்போது அவர் பொது வாக்காளர்களை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் கனடா அதன் வரலாற்று ரீதியாக நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவுடனான உறவில் வேகமாக மாறிவரும் தன்மை மற்றும் நாட்டின் உயர்ந்த வாழ்க்கைச் செலவு குறித்து கவலை கொண்டுள்ளது. https://athavannews.com/2025/1426211
-
சிரிக்கலாம் வாங்க
- “நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.
“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன். சில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்.”நாங்கள் மட்டும் தோற்கவில்லை”. இதை அவர் எத்தகைய அர்த்தத்தில் சொன்னார் ? இது எல்லாருக்குமான தோல்வி என்ற அர்த்தத்தில் சொன்னாரா? அல்லது எல்லாருமே தோற்றிருக்கிறார்கள். எனவே இதில் எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்ற அர்த்தத்தில் சொன்னாரா ? எல்லாருக்குமே தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்பதை அதன் சரியான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ்த் தேசியத் தரப்பைச் சேர்ந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.அந்த பின்னடைவுக்கு யார் பொறுப்பு? ஒரு மூத்த கட்சியாக, உள்ளதில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுகள் அதற்குக் காரணம் இல்லையா ? இந்தத் தோல்வியானது கடந்த 15 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான தோல்விகளில் ஆகப்பிந்தியது என்பதனை சிவிகே சிவஞானமும் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளுமா? இந்தத் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்ன? காரணம் மிகவும் எளிமையானது. தமிழரசுக் கட்சி தன்னை எல்லாக் கட்சிகளையும் விட உயர்வானது, பெரியது, தலைமைப் பொறுப்பில் இருப்பது என்றெல்லாம் கூறிக்கொள்கின்றது. ஆனால் அந்தக் கட்சி அந்தப் பொறுப்பை உணர்ந்து நடக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக சம்பந்தர் அந்தக் கட்சியை கொழுப்பை நோக்கிச் சாய்த்துசெல்ல முற்பட்டார்.அதன் விளைவாக கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் பலமாக மேலெழுந்து விட்டன. ஒரு நிலைப்பாடு கொழும்பை நோக்கிச் சாய்வது. இன்னொரு நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக இருப்பது. சம்பந்தர் நினைத்தது போல கட்சியை செங்குத்தாகக் கொழும்பை நோக்கித் திருப்ப முடியவில்லை. அதன் விளைவாக மேற்சொன்ன இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதற்கு எதிரானதாக மேல் எழுந்துவிட்டன. அதன் விளைவாகக் கட்சி இரண்டாகப் பிளந்து கிடக்கின்றது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில்தான் நிற்கின்றது.கட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் கட்சிக்குள் புத்திசாலித்தனமாக உள்நுழைந்து கட்சியைப் படிப்படியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டவர். கடந்த ஆண்டின் இறுதியில் நாடு முழுவதும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் கட்சிக்குள் ஒரு பிரதானியாகத் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். தேர்தலில் தோற்ற ஒருவர் கட்சிக்குள் இவ்வளவு முக்கியத்துவத்தை பெறுவதை எப்படிப் பார்ப்பது? தேர்தலில் வெற்றி பெறுவதை ஒரு பிரதான தகுதியாகக் கருதிய சம்பந்தர் அதைச் சொல்லித்தான் ஏனைய கட்சிகளை மட்டம் தட்டுவார்.சம்பந்தரின் வார்த்தைகளில் சொன்னால் தேர்தலில் வெல்லாத ஒருவர் கட்சிக்குள் தன்னுடைய பிடியைப் பலப்படுத்தி வருகிறார். இதை எப்படிப் பார்ப்பது? கட்சியைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அவர் முன்னெடுக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் மற்றொரு உள்நோக்கமும் இருக்கும்.சிறீதரனை எப்படி கிளிநொச்சிக்குள் முடக்குவது? என்பதே அந்த உள்நோக்கம். சிறீதரனையும் அவருடைய அணியையும் முடக்குவதற்கு அவர் பயன்படுத்தும் பிரதான ஆயுதங்களில் ஒன்று பொது வேட்பாளரை ஆதரித்தமை. பொது வேட்பாளர் என்ற கருத்துருவமே தமிழ் அரசியலில் புதுமையானது. அது கடந்த 15 ஆண்டு கால ரியாக்ரிவ்-பதில் வினையாற்றும் அரசியலில் இருந்து தமிழ் அரசியலை ப்ரோ ஆக்டிவாக – செயல்முனைப்பு உள்ளதாக மற்றும் நோக்கத்தைக் கொண்டது.அது கட்சி கடந்து ஒரு திரட்சியை ஏற்படுத்த முயற்சித்தது. கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கு மேலான வாக்குகள் கிடைத்தன. அது ஒரு சாதாரண தொகை அல்ல. தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு தனி அரசியல்வாதிக்கு இதுவரை கிடைத்த வாக்குகளில் அதிகமான தொகை வாக்குகள் அவை. அந்த வாக்குகளைத் திரட்டும் குறியீடாக தேர்தலில் நின்றவர் அரியனேத்திரன். அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர். நமது கட்சி உறுப்பினர் ஒருவருக்கு அவ்வாறு அதிக தொகை வாக்குகள் கிடைத்ததை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தாயக ஒருமைப்பாட்டுக்காக வாக்குகளை திரட்டும் ஒரு குறியீடாக தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தமிழ் அரசியலை செயலூக்கம் மிக்கதாக மாற்றும் உயர்வான நோக்கத்தோடு ஒரு தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தேசத்தைத் திரட்டும் குறியீடாக ஒரு சந்நியாசி போல தேர்தலில் நின்றதை, தமிழரசுக் கட்சி எப்படிப் பார்க்கின்றது? அதை ஒரு குற்றமாகக் கூறி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது. அதாவது அவர் செய்த குற்றம் தேசத்தைத் திரட்டியது. தமிழரசுக் கட்சிக்கு தனது கட்சிக்காரரின் மகிமையே தெரியவில்லை. தேசத்தைத் திரட்டிய குற்றத்துக்காக அரியநேத்திரனை கட்சியை விட்டு நீக்கலாமென்றால் அதே குற்றத்துக்காக பொது வேட்பாளரை ஆதரித்த ஏனையவர்களிடம் விளக்கம் கேட்கலாமென்றால், தமிழரசு கட்சி எங்கே நிற்கின்றது? தேசத் திரட்சிக்கு எதிராகவா நிக்கிறது? இப்பொழுது ரணில் விக்கிரமசிங்காவின் அல்ஜசீரா பேட்டி தொடர்பாக எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் போட்டியில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதான செய்தி, ரணில் இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற மாட்டார் என்பதுதான்.ரணில் விக்கிரமசிங்கம் மட்டுமல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவும் பொறுப்புக் கூறத் தயாரில்லை. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐநா கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருந்தது.அப்பொழுது தமிழ் வாக்குகளில் தங்கியிருந்த சஜித் என்ன சொன்னார் ? பன்னாட்டுப் பொறிமுறைக்கு எதிராகத்தான் கருத்து தெரிவித்திருந்தார். எனவே ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, மகிந்த மட்டுமல்ல, அனுர மட்டுமல்ல, சஜித்தும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறத் தயார் இல்லை. ஆனால் சுமந்திரன் அவருக்கு ஆதரவாக பகிரங்கமாக மேடையில் தோன்றினார். பொது வேட்பாளருக்காக விழும் வாக்குகள் வீணாகப்போன வாக்குகள் என்று கூறினார். பொது வேட்பாளருக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு எதிராக பகிரங்கமாக பிரகடனங்களை வெளியிட்டார். பொது வேட்பாளரை ஆதரித்த தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனக்கு விசுவாசமான கட்சியின் மத்திய குழுவைத் தூண்டி வருகிறார். அப்படி என்றால் சுமந்திரன் எங்கே இருக்கிறார்? தேசத் திரட்சிக்கு ஆதரவாகவா? தேசத் திரட்சிக்கு எதிராகவா? பொறுப்புக் கூறலுக்கு ஆதரவாகவா? பொறுப்புகு கூறலுக்கு எதிராகவா ? தேசத் திரட்சியை அவர் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்? கட்சியை ஒரு கட்டுக்கோப்பான இறுக்கமான ஸ்தாபனமாகத் திரட்ட முடியாத ஒருவர் எப்படித் தேசத்தைத் திரட்ட முடியும்? தானே ஒரு திரண்ட கட்டமைப்பாக இல்லாத கட்சி தேசத்தைத் திரட்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? பொது வேட்பாளரின் விடயத்தில் தேசத் திரட்சிக்கு எதிராக நின்றவர்,கட்சிக்குள் தனது பிடியை படிப்படியாகப் பலப்படுத்தி வருகிறார். தேசத் திரட்சிக்கான குறியீடாக நின்ற அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அரியநேத்திரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி எடுத்த நடவடிக்கை என்பது அக்கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவுகளிலேயே பாரதூரமான ஒரு வரலாற்றுத் தவறு. தேசத் திரட்சியின் குறியீடாக நின்ற தன் கட்சிக்காரரின் மகிமை தமிழரசுக் கட்சிக்கே தெரியவில்லை.கட்சி அரசியலானது தேசிய உணர்வை மழுங்கடித்து விட்டதா? தமிழ்த் தேசிய வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் ஒரு தனித்தமிழ் வேட்பாளர் பெற்ற ஆகக் கூடிய வாக்குகளை அரியநேத்திரன் பெற்றார்.அந்த மகத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவருடைய கட்சியின் மத்திய குழு அதன் தேசிய ஆன்மாவை இழந்து விட்டதா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 257,813. அரியநேத்திரனுக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் 2,25,000. அவை தேசத்தைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைக்கு கிடைத்த அடிப்படை வாக்குகள். அவை பொதுக் கட்டமைப்புக்கு மட்டும் சொந்தமான வாக்குகள் அல்ல என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபித்தார்கள். அவை கட்சி கடந்த தேசத் திரட்சிக்கு கிடைத்த வாக்குகள். ஆனால் அரியநேத்திரனின் மகத்துவத்தை அவருடைய சொந்தக் கட்சியே உணரத் தவறிவிட்டது மட்டுமல்ல அவரைக் கட்சிக்குள் இருந்து நீக்கியதன் மூலம் கட்சியின் மத்திய குழு தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன? தேசத் திரட்சிக்கு எதிராக நிற்கிறோம் என்பதா? தேசத் திரட்சிக்காக ஒரு சன்னியாசியைப் போல குறியீடாக நின்ற அரியம் கட்சிக்கு வெளியே. தேசத் திரட்சிக்கு எதிராகவும் பொறுப்புக் கூறலுக்கு எதிராகவும் தமிழ் வாக்குகளை சஜித்திற்குச் சாய்த்துக் கொடுத்தவரும் அதை ஆதரிப்பவர்களும் கூறுகிறார்கள் “நாடு அனுரவோடு; ஊர் எங்களோடு” என்று. ஆனால் கட்சி யாரோடு? https://athavannews.com/2025/1426184- தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம்; - இன்று திறப்பதற்கு ஏற்பாடு
தையிட்டியில் மற்றுமொரு புதிய கட்டிடம்: பொதுமக்கள் போராட்டம்! யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று மற்றுமொறு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள இப் புதிய கட்டிடம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அப் பகுதியில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த பதில் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராணுவத்தால் அமைக்கப்பட்டுவந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அக் கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை கையளிக்கும் என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426182- கருத்து படங்கள்
- நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்!
நாடளாவிய ரீதியில் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படும்! நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை காணப்படுமென தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையின் போது இரண்டு, சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் இது அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது 8 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறுவடை நேரத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளினால் நெல் வயல்கள் சேதமடைவதால், விளைச்சல் மேலும் குறையும் என்றும் அரிசி பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த பருவத்தில் குறைந்தது 7 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அனுராத தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அரிசி கையிருப்பு குறையுமாயின் நாடு கடுமையான அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்பதுடன், அரிசியை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426171- பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது
பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது. பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக மூன்று பெண்களும் 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த விருந்தில் பங்கேற்றிருந்த 12 இளம் பெண்களும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1426143- இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்...
இராமேஸ்வரம்- தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து. இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1965-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இக் கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கான கப்பல் போக்குவரத்து ஆரம்பமானது. இக்கப்பல் சேவையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ”ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் நான்கு இடங்களை தேர்வு செய்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரை அருகே 22.15கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடைய பயணிகள் இறங்குதளம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணியாக நகர்வு மேடை அமைக்கும் பணி இராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நகர்வு மேடைக்கான பாகங்கள் இரண்டு வாரத்திற்குள் பொறுத்தப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே பயணிகள் இறங்குதளம் அமைய உள்ள பகுதியில் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கரையிலிருந்து கடலுக்குள் கொங்கிரீட் தூண்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426137- முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்!
முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்! கடந்த கால அரசாங்கங்களில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இச் சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426160- மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு!
மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு! மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. எனவே சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது. இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் நேற்று மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தோ-மியான்மர் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியான்மார் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426164- பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்!
பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்! ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426179- 30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்! கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடல் மட்டம் அதிவேகமாக உயரும் என்றும் இதன் விளைவாக பலகோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை உலக வானிலை ஆய்வியல் அமைப்பின் இயக்குநர் Stefan Uhlenbrook இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்” ”அன்டார்ட்டிக் மற்றும் கிரீன்லாந்து உட்பட உலகம் முழுவதும் தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் பனிப்பரப்புகள் மட்டுமே இருப்பதாகவும், பனிப்பாறைகளை பாதுகாப்பதன் மூலம் உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426156- மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்
ஒரு பிள்ளைக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எவ்வளவு முக்கியமானது என்று தெரியாத தமிழ் பெற்றோரும் 21’ம் நூற்றாண்டில் வாழ்கின்றார்களா.- எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
தேசிய மக்கள் சக்தி சார்பாக, யாழ். மேயர் பதவிக்கு போட்டியிடும், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் தனது வீட்டு விலாசத்தை.... தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து விண்ணப்பித்ததை ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாம். விதியின் படி... போட்டியிடுபவர் யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்க வேண்டுமாம். இவர் அந்த விதிக்குள் அடங்காத படியால்... கட்சி அலுவலகத்தை, தனது வசிப்பிடமாக குறிப்பிட்டுள்ளாராம்.- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- சிரிக்கலாம் வாங்க
- மலரும் நினைவுகள் ..
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!
@goshan_che, @கிருபன், @பெருமாள், @நந்தன் உங்கள் விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடைக்கு, 🐵 இவர்கள் 🐒 காரணம் இல்லையா? 😂- சிரிக்கலாம் வாங்க
மாத்திரை விலையை கேட்டாலே, ஒரே ரென்ஷனா வருகுது டாக்டர். 😂- லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
வயசு கோளாறு... சொல்வழி கேளாது. 😜 பட்டுத்தான் தெளியவேணும். 😂 அதுவரை... நாம, ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். 🤣- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- “நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.