Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல். ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய 37 இடங்களை அடையாளம் கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் எனவும், இதன்போது, வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுஇடங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் உள்ள பிற வளாகங்கள் கள ஆய்வுக் குழுக்களின் பங்கேற்புடன் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426373
  2. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சந்தேகநபருக்கு மனநல பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய, மனநல மருத்துவ அறிக்கையைக் கோருவதற்கான விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1426338
  3. திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார். அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது சட்டத்தரணி வாதிடுகையில், புகார் கொடுத்த பெண், பிரதும் யாதவ் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர் என்றும், எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார். அதை ஏற்காத கூடுதல் அரச தரப்பு சட்டத்தரணி, சட்டப்படியான கணவர் என்றபோதிலும், அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். இந்த வழக்கில், நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு அளித்துள்ளார். பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி தனது தீர்ப்பில் , கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும். நெருக்கமான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம், அவர் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மீறிவிட்டார். நம்பிக்கையை மீறிய செயல், திருமண பந்தத்தின் அடித்தளத்தையே சிறுமைப்படுத்துகிறது. மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர். திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும் என கூறியுள்ளார். https://athavannews.com/2025/1426351
  4. நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்! தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார். அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார். அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு அவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 5 இலட்சம் இந்திய ரூபா நிதி உதவி வழங்கியது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹுசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார். 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் ரஜினிகாந்தின் வேலைக்காரன், பிளட்ஸ்டோன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே பயிற்சியாளராக நடித்தார். விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகியவை அவரது இறுதி நடிப்பு முயற்சிகளில் சில. படங்களில் நடிப்பதைத் தவிர, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் அவர் தோன்றினார். ஹுசைனி, போர் விளையாட்டு, சிற்பம், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார். https://athavannews.com/2025/1426343
  5. இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்! இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரையில் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் காணப்பட்ட உயிரற்ற உயிரினமொன்று அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனின் உடலையும் வேற்றுக் கிரக வாசியின் தோற்றத்தையும் கொண்டு காணப்படும் குறித்த உயிரினமானது உயிரற்ற நிலையில் கடற்பாசியால் சூழப்பட்டு மணலில் புதையுண்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக் கடற்கரைக்குச் சென்ற இருவர் குறித்த உயிரினத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426302
  6. போர்க்குற்றம் நடக்கவில்லை. நாங்கள் உள்ளூர் பொறிமுறை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம் என்று சுமந்திரன் சொல்லியிருப்பாரே. வழமை போல் நடக்க இருக்கும்… ஐ.நா.வின் செப்ரெம்பர் திருவிழாவிற்கு, இப்பவே பந்தல் போட்டு காவடி எடுத்து பம்மாத்து காட்ட வெளிக்கிட்டினம். இத்தனை வருடமாக நடந்த ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு பிரயோசனமாவது இருந்ததா? அதனை ஏன்… நிறைவேற்ற முடியாமல் போனது என்று தமிழ் தரப்புகள் ஐ.நா.வை நோக்கி கேள்வி எழுப்பியதா? இறுதியாக நடந்த ஐ.நா. கூட்டத் தொடரில்…. அனந்தி சசிதரனைத் தவிர தமிழ் கட்சிகள் எதுவுமே கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. அதே நேரம் சிங்கள தரப்பு பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு தமது தரப்பு வாதங்களை முன் வைத்தது. நமது தமிழ் கட்சிகள்… தமக்குள் அடிபட்டு, வெள்ளைகாரனுடன் இருந்து படம் எடுத்து… உள்ளூர் பத்திரிகைகளுக்கு படம் காட்டத்தான் லாயக்கு. இனியாவது கொஞ்சம் திருந்துங்கள் என்று பார்த்தால்…. ஹ்ஹூம் சான்ஸே இல்லை. இன்னும் மக்களை பைத்தியக்காரர்களாகவே நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
  7. சிறுமி…. கண்டோஸ் எடுத்து இருந்தால், அதனை பெற்றோருக்கு தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து…. கட்டி வைத்து, சிறுநீர் கழிக்கும் வரை… வயரால் தாக்கும் உரிமையை கடைக்காரருக்கு யார் கொடுத்தது. சிறுமி மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர் மீது பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  8. ஓம். நிச்சயமாக நமது ஊருக்கும் வரும். அதை நினைக்க… இப்பவே அருவருப்பாக உள்ளது.
  9. நீதிபதியின் வீட்டில்… சாக்கு மூடைகளில் பணம். இந்தியாவின் நீதி… பல் இழிக்குது. எத்தனை பேரிடம் பணம் வாங்கி… நீதிக்குப் பிறழ்வான தீர்ப்பை வழங்கினாரோ.
  10. சென்ற வருடமும்…. இதே போல அதி உயரமான ஒரு தேர் சரிந்து விழுந்தது. மீண்டும் அதே தவறை செய்ய கோவில் நிர்வாகமும், காவல் துறையும் எப்படி அனுமதித்தது? மக்களின் உயிரைப் பற்றி சம்பந்தப் பட்டவர்கள் அக்கறை எடுக்காமல் இருப்பது ஏன்? ஆர்வக்கோளாறில்…. உயரமாக கட்டும் போது, அது குறிப்பிட்ட உயரத்தை மீறும் போது அடிப்பாகம் அதிக எடையுடன் இல்லாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், காற்றுக்கு கூட சரிந்து விழும் அபாயம் உள்ளது என்பதை பாடசாலை மாணவனுக்கும் தெரிந்த விடயம். இதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்தால்தான்… வருகின்ற வருடமும் இந்தத் தவறை செய்ய மாட்டார்கள். இல்லாவிடில்…. இது தொடர்கதைதான்.
  11. முகநூலில் நேரலை வீடியோ போட்டு ஊர்வலமா போய்.... சவுக்கு சங்கர் வீட்ல மனித மலத்தை கொட்டிருக்கானுங்க. கிட்டத்தட்ட மூணு மணி நேரமாக... ஆனா பாருங்க இது காவல்துறைக்கு தெரியலையாம்?? கட்டெறும்பு
  12. அதானியுடனான எரிசக்தி திட்டம்; ஜனாதிபதியை குற்றம் சாட்டும் ரணில்! இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார். சனிக்கிழமை (22) நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அதன் உரை இன்று (24) வெளியிடப்பட்டது. அந்த உரையில், தீவு நாட்டிற்கான பலன்களை அதிகரிக்க இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் மற்றும் வர்த்தக இணைப்புகள் ஆகிய துறைகளில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட பொருளாதார கட்டமைப்பை வலியுறுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார். இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல வழிகளை நான் ஆராய்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் மன்னாரில் அதானி புதுப்பிக்கத்தக்க திட்டத்தைத் தொடரத் தவறிவிட்டது. அதானி பசுமை எரிசக்தித் திட்டத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சியில் எந்த தர்க்கத்தையும் காணவில்லை. இது அனைத்து இந்திய முதலீடுகளையும் மோசமாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த பெப்ரவரி 13 அன்று, கோடீஸ்வரர் கௌதம் அதானியின் கூட்டு நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க பிரிவான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் புதிய அரசாங்கம் கட்டணங்களை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, தீவு நாட்டில் முன்மொழியப்பட்ட இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகியது. இரண்டு திட்டங்களில் காற்றாலையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலும், அதை பயனர்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பறிமாற்ற அமைப்புக்களை அமைப்பதிலும் நிறுவனம் மொத்தம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவிருந்தது. மின்சாரச் செலவுகளைக் குறைக்க விரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கு இந்த திட்டம் உட்பட்டது. கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, வடகிழக்கு பிராந்தியத்தில் அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இரத்து செய்வதாக தேசிய மக்கள் சக்தி கூறியது. அதிகாரத்தைப் பெற்ற பிறகு, முந்தைய ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்முதல் விலை உயர்ந்தது மற்றும் ஊழலைக் குறிக்கிறது என்ற நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, 400 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஐந்து மில்லியன் டொலர் செலவிட்ட பின்னர், அதானி அதிலிருந்து கெளரவத்துடன் விலக முடிவு செய்துள்ளதாகக் கூறியது. புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கான ஏலங்களை இலங்கை பெற்றுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார், இது அதானி ஒரு யூனிட்டுக்கு 8.26 அமெரிக்க சென்ட் வழங்கிய கொள்முதல் விலையில் பாதி செலவாகும். எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்திய முதலீடுகள் குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் மட்டுமே இலங்கைக்கு ஒரே வழியா என்று முன்னாள் ஜனாதிபதியிட் கேள்வி எழுப்பிய போது, சர்வதேச பத்திரதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடனை வெற்றிகரமாக மறுசீரமைக்கும் திறன் IMF உத்தரவாதத்தைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார். “எனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைத் தொடருமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனது திட்டம் முடிக்கப்படாவிட்டால் அது மேலும் சிரமங்களைச் சந்திக்கும்.” – என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அப்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவி விலகியதைத் தொடர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியானார். அதன் பின்னர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைப் பெற்று, நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான பாதையைத் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426261
  13. சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர் ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-”ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் அவரது படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடை நீரைக் கொட்டி உள்ளார்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியதுஇ மனசாட்சி உள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். இக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அ.தி.மு.க. பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1426274
  14. உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்! உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ரூ பீக் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி மைக்கேல் ஆண்டன் ஆகியோர் வழிநடத்துவதாக உறுதிபடுத்தியுள்ளனர். கருங்கடலில் கடல்சார் போர் நிறுத்தத்தை எட்டுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை கூறுகிறது. இது கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற அனுமதிக்கிறது. ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் முன்னாள் இராஜதந்திரி கிரிகோரி கராசின், தற்போது ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவராக உள்ளார். மேலும் சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசு நிறுவனமான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் பணிப்பாளரின் ஆலோசகர் செர்ஜி பெசெடா ஆகியோரும் உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் விதம் குறித்து பரந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதுவரை புட்டின் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால், 2022 ஆம் ஆண்டில் உக்ரேனுக்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதிலிருந்து மாறாத அவரது அதிகபட்ச கோரிக்கைகளாக புட்டின் அர்த்தமுள்ள விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தயாரா அல்லது கடைப்பிடிப்பாரா என்பது குறித்து முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே சந்தேகம் உள்ளது. அமைதியைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாக புட்டின் கூறுகிறார். ஆனால் உக்ரேன் அதிகாரப்பூர்வமாக அதன் நேட்டோ அபிலாஷைகளைக் கைவிட்டு, ரஷ்யாவால் உரிமை கோரப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் நான்கு உக்ரேனியப் பகுதிகளின் முழுப் பகுதியிலிருந்தும் அதன் வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். https://athavannews.com/2025/1426285
  15. நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு! ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (Netumbo Nandi-Ndaitwah) 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 72 வயதான அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சியினால் 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அண்மையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹாசன் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆபிரிக்காவின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426298
  16. போலியான நிதி மோசடி குறித்து ஸ்ரீ தலதா மாளிகை எச்சரிக்கை! எதிர்வரும் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகை ஆலய உற்சவத்துக்காக நன்கொடைகள் கோரி சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படும் செய்தி குறித்து விகாரை நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அதில், இவ்வாறு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியானது முற்றிலும் தவறானது என ஸ்ரீ தலதா மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையின்படி, விகாரை உற்சவத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீ தலதா மாளிகையால் வழங்கப்படுகின்றன. எந்தவொரு தனிநபர், குழு அல்லது அமைப்பும் அதன் சார்பாக நிதி சேகரிக்கவோ அல்லது தொடர்புடைய நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அதிகாரம் அளிக்கவில்லை என்பதை மாளிகை வலியுறுத்தியது. இதுபோன்ற தவறான செய்திகளைப் புறக்கணிக்கவும், துல்லியமான தகவல்களுக்கு ஸ்ரீ தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளை மட்டுமே நம்பியிருக்கவும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் – என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1426253
  17. தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 39.77 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.30 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலை இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. அத்துடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், லிபியா 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426240
  18. தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது! யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையின் முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை களவாடியுள்ளனர் எனவும், மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Athavan Newsதொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்...யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது...
  19. விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை; 57 பேர் கைது! பமுனுகம, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒனறில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விருந்துபசார நிகழ்வானது சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஹோட்டலில் இன்ஸ்டாகிராம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் போபை்பொருள் பாவனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை பயன்படுத்திக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர். அதேநேம், போதைப்பொருள் வைத்திருந்த 16 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன், விருந்து இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 03 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள், கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1426203

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.