Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழ் – திருச்சி விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்! யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது. அந்தவகையில் திருச்சியில் இருந்து நண்பகல் 01.25க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணியளவில் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் எனவும் இண்டிகோ விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424211
  2. பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை! இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் குளோபோகன் 2022 தரவுகளின்படி, சர்வதேச அளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது. இந்த நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் ஹசராலி பெர்னாண்டோ கூறினார். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். இதற்கிடையில், 2040 ஆம் ஆண்டு அளவில் சுமார் 3.5 மில்லியன் நோயாளிகள் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் வசந்த விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார். பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் – எந்தவித காரணமும் இன்றி இரத்தத்துடன் மலம் வெளியேறுவது. இரத்தம் பிரகாசமான சிவப்பு அல்லது அடர் சிவப்பாக இருக்கலாம். – அடிக்கடி கழிவறைக்குச் செல்வது மற்றும் மலம் அதிக திரவமாகவோ அல்லது கடினமாகவோ வெளியேறுவது என குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். – வயிறு நிரம்பியிருக்கும் போது அடிவயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர்தல். – உடல் எடை குறைதல். – மலம் கழித்த பிறகும் முழுமையாக மலம் கழிக்காத உணர்வு ஏற்படுதல். – வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது மயக்கத்தை உணர்தல். இந்த அறிகுறிகள் இருந்தால் அவை குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், மூன்று வாரங்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. ஏனென்றால் தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் பெருங்குடல் புற்றுக்கட்டிகள் குடல் வழியாக கழிவுகள் வெளியேறுவதைத் தடுத்துவிடும். இதன் காரணமாக தீவிர வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்படும். இது மாதிரியான சூழல்களில் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். https://athavannews.com/2025/1424228
  3. ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை! காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார். பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்தது. வொஷிங்டன் இதுவரை அந்தக் குழுவுடன் நேரடி ஈடுபாட்டைத் தவிர்த்து வருகிறது. மேலும் பயங்கரவாத அமைப்புகளாக அது பட்டியலிடும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கு எதிரான நீண்டகால அமெரிக்கக் கொள்கை உள்ளது. இது குறித்து ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், பணயக்கைதிகள் அனைவரையும் இப்போதே விடுவித்து விடுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் அனைத்து இறந்த உடல்களையும் உடனடியாகத் திருப்பித் தரவும், நான் சொல்வது போல் நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் – என்று எச்சரித்தார். மேலும், காசா மக்களுக்கும் ஒரு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டிய அமெரிக்க ஜனாதிபதி நீங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அந்த நிலை மாறிவிடும் என்றும் குறிப்பிட்டார். ட்ரம்ப், ஹமாஸை அச்சுறுத்துவது இது முதல் முறை அல்ல. டிசம்பரில், அவர் பதவியேற்பதற்கு முன்பாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக அமெரிக்கா ஹமாஸுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தினார். பேச்சுவார்த்தைக்கு முன்னர் இஸ்ரேலுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். காசாவில் இன்னும் 59 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, மேலும் 24 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. கைதிகளில் அமெரிக்க குடிமக்களும் உள்ளனர். https://athavannews.com/2025/1424221
  4. தவறுதலாக பொது மக்கள் பகுதியில் குண்டுகளை வீசிய தென் கொரிய போர் விமானம்! தென் கொரிய போர் விமானம் ஒன்று வியாழக்கிழமை (06) பயிற்சியின் போது தவறுதலாக பொதுமக்கள் பகுதியில் எட்டு குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வட கொரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோன் நகரில், அந் நாட்டு நேரப்படி காலை 10:04 மணிக்கு (கிரீன்விச் நேரப்படி காலை 01:04) விமானப்படை கே.எஃப்-16 விமானம் சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்தது. வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று மாத்திரம் வெடித்ததாக நம்பப்படுகிறது. வெடிக்காத மற்ற ஏழு குண்டுகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் வெடிகுண்டு செயலிழப்பு குழு ஈடுபட்டுள்ளதாக போச்சியோன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் விளைவாக ஒரு தேவாலய கட்டிடம் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன. விபத்து தொடர்பில் தென்கொரிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் ஒரு கட்டிடத்தின் உடைந்த ஜன்னல் மற்றும் தேவாலயத்தின் சேதமடைந்த கூரையைக் காட்டுகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சி அமெரிக்கப் படைகளுடனான கூட்டுப் பயிற்சியுடன் தொடர்புடையது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் மார்ச் 10 முதல் மார்ச் 20 வரை கூட்டுப் பயிற்சிகளை நடத்த உள்ளன – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு இதுவே முதல் முறை. வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டணி குறித்து இரு நாடுகளும் அதிகளவில் எச்சரிக்கையாக இருக்கும் நேரத்தில் இந்த பயிற்சி வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் தென் கொரியாவும் அமெரிக்காவும் நடத்திய மற்றொரு கூட்டுப் பயிற்சியின் போது, படையினர் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவின. அது செயலிழந்து இராணுவத் தளத்தில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் மோதியது. இது வெடிக்கவில்லை என்றாலும், அது தீப்பிடித்து எரிந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தமையும் குறுப்பிடத்தக்கது. Athavan Newsதவறுதலாக பொது மக்கள் பகுதியில் குண்டுகளை வீசிய தென் கொர...தென் கொரிய போர் விமானம் ஒன்று வியாழக்கிழமை (06) பயிற்சியின் போது தவறுதலாக பொதுமக்கள் பகுதியில் எட்டு குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் நால்வர் படுகாயங்கள...
  5. இங்கிலாந்து சிரேஷ்ட தூதரை பணி நீக்கம் செய்த நியூஸிலாந்து. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரலாற்றைப் பற்றிய புரிதலை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஐக்கிய இராச்சியத்திற்கான அதன் மிக மூத்த தூதரை நியூஸிலாந்து பணிநீக்கம் செய்துள்ளது. செவ்வாயன்று லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில், இங்கிலாந்துக்கான உயர் ஸ்தானிகர் பில் கோஃப், ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை 1938 ஆம் ஆண்டு மியூனிக் ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டார். இது அடால்ஃப் ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவை இணைக்க அனுமதித்தது. சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒப்பந்தத்தை விமர்சித்ததை நினைவு கூர்ந்த கோஃப், பின்னர் அமெரிக்கத் தலைவரைப் பற்றி கூறினார்: “ஜனாதிபதி ட்ரம்ப் சர்ச்சிலின் மார்பளவு சிலையை ஓவல் அலுவலகத்தில் மீட்டெடுத்துள்ளார். ஆனால் அவர் உண்மையில் வரலாற்றைப் புரிந்துகொள்கிறார் என்று நினைக்கிறீர்களா?” – என்றும் கேள்வி எழுப்பினார். கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஏற்பட்ட சூடான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கியேவிற்கு இராணுவ உதவியை ட்ரம்ப் நிறுத்திய பின்னர் கோஃப்பின் கருத்துக்கள் வந்தன. ஐக்கிய இராஜ்ஜியம் அரசாங்கத்திலிருந்து விலகியிருந்தாலும், மியூனிக் ஒப்பந்தத்தை நாஜி ஜெர்மனியின் அச்சுறுத்தல்களுக்கு சரணடைவதாகக் கருதியதால், அதற்கு எதிராகப் பேசிய சர்ச்சிலுடன் ட்ரம்பை அவர் வேறுபடுத்தினார். அப்போதைய இங்கிலாந்து பிரதமர் நெவில் சேம்பர்லைனை சர்ச்சில் எவ்வாறு கண்டித்திருந்தார் என்பதை கோஃப் மேற்கோள் காட்டினார். இந்த நிலையில், கோஃபின் கருத்துக்கள் “மிகவும் ஏமாற்றமளிப்பதாக” இருந்ததாகவும், அவரது நிலைப்பாட்டை “ஏற்றுக்கொள்ள முடியாததாக” ஆக்கியதாகவும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறினார். அத்துடன், கோஃபின் கருத்துக்கள் நியூசிலாந்து அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று பீட்டர்ஸ் கூறினார். கோஃப் 2023 ஜனவரி முதல் உயர் ஆணையராக இருந்தார். அதற்கு முன்பு, நீதி, வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார். https://athavannews.com/2025/1424256
  6. இவ்வளவு காசையும் திருப்பி எடுப்பதென்றால்... உக்ரைனின் கனிம வளத்தை எடுக்கத்தைதான் வேண்டும். அதிக அளவிலான உக்ரைன் அகதிகளை ஜேர்மனி எடுத்து வைத்துள்ளது. போரை நடத்திய அமெரிக்கா... ஒரு உக்ரைன் அகதியையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கப் பட வேண்டியது.
  7. உக்ரைன் போரின், உண்மை நிலையை... அலசி ஆராய்ந்த நல்லதொரு கட்டுரை. ஐரோப்பிய நாடுகளில் பாதி... விரைவில் அமெரிக்க சார்பு நிலை எடுக்க வேண்டி வரலாம். இங்கிலாந்தும், பிரான்சும்... இப்ப உக்ரைனுக்கு கொம்பு சீவும் வேலையில் இறங்கி இறங்கி இருக்கின்றார்கள். மோசமான நிலையில் கொண்டு வந்து விடும் என்றே நினைக்கின்றேன். இதனால் பாதிக்கப் படப்ப போவது உக்ரைன் மக்களும், ஐரோப்பிய மக்களின் வரிப் பணமும் தான். அமெரிக்கா ஆயுதம் வழங்காத இந்நிலையில்... இந்தப் போருக்கான செலவு ஐரோப்பிய மக்களின் தலையில்தான் கட்டப்படும். ஏற்கெனவே விரக்தியில் உள்ள மக்களை இது மேலும் கோபப் படுத்தும்.
  8. உள்ளூராட்சி தேர்தல்; மாவட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு! 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரப்பட்டதையடுத்து, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை கொழும்புக்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இக்கலந்துரையாடலை எதிர்வரும் சனிக்கிழமை (08) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நாளை (06) நடைபெறும் தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் கூடுவது இதுவே முதல் முறை. தேர்தல் தொடர்பான திட்டமிடல் மற்றும் அது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424097
  9. முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு! முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சம்பவ தினமான நேற்று, குறித்த குழந்தை வீட்டில் இருந்த பாட்டியின் மாத்திரைகளை யாரும் கவனிக்காத வேளை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக் குழுந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424114
  10. ஏப்ரலில் இலங்கை வரும் பிரதமர் மோடி. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இது தொட்பில் செய்தி வெளியிட்டுள்ள வியோன் செய்திச் சேவை, இந்தப் பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும், 2025 ஏப்ரல் 5 ஆம் திகதியளவில் விஜயம் அமையலாம் என்றும் கூறியுள்ளது. இந்தப் பயணத்திற்கான அழைப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநநாயக்க 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புது டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக மேற்கொண்டபோது விடுத்தார். 2024 செப்டம்பரில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது, இந்திய அரசாங்கம் ஏழு முடிக்கப்பட்ட கடன் திட்டங்களுக்கான 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியங்களாக மாற்றுவதாக அறிவித்தது. இது இலங்கையின் கடன் சுமையைக் குறைக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்புக்கு டெல்லி வழங்கிய 4 பில்லியன் டொலர் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று இலங்கை ஜனாதிபதி இந்த விஜயத்தில் உறுதியளித்தார். இது இந்தியப் பிரதமர் மோடியின் முதல் இலங்கை வருகை அல்ல. அவர் இதற்கு முன்பு 2015, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பல முறை தீவு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்பு பயணமான 2015 ஆம் ஆண்டு வருகை, உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்புகளையும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாண மாகாணத்திற்கு விஜயம் செய்வதையும் கண்டது. 2017 மே மாதம் இலங்கை நடத்திய முதல் சர்வதேச வெசாக் தினத்திற்கு அவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில், ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், மோடி இலங்கையில் ஒரு குறுகிய கால பயணத்தை மேற்கொண்டார். அந்த துயரத்திற்குப் பிறகு அங்கு சென்ற முதல் உலகத் தலைவர் ஆனார், நெருக்கடியான நேரத்தில் இலங்கையுடன் ஒற்றுமையைக் காட்டினார். இரு நாடுகளுக்கு இடையிலான இணைப்புத் துறையில், இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னர் இடையே ஒரு புதிய படகுப் பாதையை அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. நாகப்பட்டினத்தை திருகோணமலையுடன் இணைக்கும் பல்துறை பெட்ரோலிய குழாய் பாதையை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) முக்கிய பங்கு வகிக்கிறது. 2024 பெப்ரவரியில் மொரிஷியஸுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு UPI ஐ ஏற்றுக்கொள்வதில் இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது. இது குறிப்பாக இலங்கையில் உள்ள இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகங்களுக்கு எல்லை தாண்டிய கட்டணங்களை மேம்படுத்துகிறது. https://athavannews.com/2025/1424123
  11. செர்பிய நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு! செர்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று (04) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகை குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மிகப்பெரிய பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தக் குழப்பத்திற்கு மத்தியில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் செர்பியாவின் கடுமையான அரசியல் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. அங்கு ஒரு ஜனநாயக அரசாங்கம் பல மாதங்களாக ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் செர்பியாவின் நோவி சாட் நகர ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து, நான்கு மாதங்களாக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் பலர், ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக்கின் தசாப்த கால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில் செவ்வாயன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில், செர்பிய முற்போக்குக் கட்சி (SNS) தலைமையிலான ஆளும் கூட்டணி நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகரை நோக்கி ஓடிச்சென்று பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். ஏனையவர்கள் புகை மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். 1990 இல் பல கட்சி ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பல தசாப்தங்களில் நாடாளுமன்றத்துக்குள் கறுப்பு மற்றும் இளஞ்சிவப்பு புகை மூட்டுவதை ஒரு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. https://athavannews.com/2025/1424100
  12. ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1200 பேர் வெளியேற்றம் ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424069
  13. யாழில் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு! இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் நேற்று (04) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது 174 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 69 மில்லியன் ரூபாவை விட அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1424043
  14. தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார் பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனாவின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கல்பனா தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளார் எனவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கல்பனாவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424061
  15. பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தாகவும் குழு கூறியது. எனினும், இராணுவம் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை. இரண்டு தற்கொலை குண்டுதாரிகளும் பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் தங்களை வெடிக்கச் செய்து, தாக்குதல் நடத்தியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் நடந்தது, அப்போது முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் தங்கள் நோன்பை முடித்துக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ரமலான் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள், பாதுகாவலர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்களை வளாகத்தின் சுற்றளவுக்குள் செலுத்திச் சென்று, பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் குறைந்தது ஆறு தாக்குதல்காரர்ககள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. https://athavannews.com/2025/1424063
  16. ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அரபு லீக் தலைவர் அகமட் அபூல் கெய்ட், “எகிப்துத் திட்டம் இப்போது ஒரு அரபுத் திட்டமாகும்” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்களை குறிப்பிடாமல், “தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ எந்தவொரு இடப்பெயர்ச்சியையும் நிராகரிப்பதே அரபு நிலைப்பாடு” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு முன்மொழிவுகள் அல்லது யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதிக்கான ஒரு பெரிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். அரபுத் திட்டம் என்றும் அழைக்கப்படும் எகிப்தின் திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் காசாவை அதன் மக்கள்தொகையை அகற்றாமல் மீண்டும் கட்டியெழுப்புவதை முன்னறிவிக்கிறது. முதல் கட்டத்தில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் எஞ்சியிருக்கும் 50 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றுவதும், வெடிக்காத குண்டுகளை செயலிழக்கம் செய்வதைத் தொடங்குவதும் அடங்கும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் “நிலையான, பசுமையான மற்றும் நடக்கக்கூடிய” வீடுகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை முழுமையாக மறுவடிவமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இது விவசாய நிலங்களைப் புதுப்பித்து, தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பெரிய பூங்கா பகுதிகளை உருவாக்குகிறது. இது ஒரு விமான நிலையம், ஒரு மீன்பிடி துறைமுகம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்கவும் அழைப்பு விடுக்கிறது. 1990 களில் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தங்கள் காசாவில் ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்க அழைப்பு விடுத்தன, ஆனால் அமைதி செயல்முறை சரிந்ததால் திட்டங்கள் கைவிடப்பட்டன. காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசங்களிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை அரபுத் தலைவர்கள் நிராகரிப்பதை மதிப்பதாகக் கூறி, ஹமாஸ் வரவேற்ற இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. இதற்கிடையில், வெள்ளை மாளிகை அரபு நாடுகளின் உள்ளீடுகளை வரவேற்பதாகக் கூறியது, ஆனால் ஹமாஸ் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் வலியுறுத்தியது. போருக்குப் பிந்தைய காசாவுக்கான தனது துணிச்சலான தொலைநோக்குப் பார்வையில் ஜனாதிபதி உறுதியாக நிற்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள எங்கள் அரபு கூட்டாளிகளிடமிருந்து உள்ளீடுகளை அவர் வரவேற்கிறார். அவரது திட்டங்கள் இந்தப் பிரச்சினையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்குப் பதிலாக பிராந்தியத்தை பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டியுள்ளன என்பது தெளிவாகிறது – என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ் கூறினார். அரபு நாடுகள் அங்கீகரித்த திட்டத்தில், சீர்திருத்தப்பட்ட பாலஸ்தீன ஆணையம் கட்டுப்பாட்டை ஏற்கும் வரை, ஹமாஸ் அரசியல் சுயேச்சைகளின் இடைக்கால நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கும். கடந்த மாதம், காசாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் முன்மொழிந்து, பிராந்தியத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, அமெரிக்கா அந்த நிலத்தை மீட்டு மத்திய கிழக்கில் ஒரு “ரிவியரா”வாக மாற்றும். பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை நிபுணர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அவரது திட்டம், இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று கூறியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424051
  17. சில வேளை… சுமந்திரனுக்கு, பாராளுமன்றம் போய்…. அமைச்சராகின்ற ஆசை, இன்னும் இருக்குதோ தெரியவில்லை. 😅 கிறுக்குத்தனமாக யோசிக்கின்றவருக்கு, அமைச்சர் ஆசையும் இன்னும் அடிமனதில் இருக்கும் என நினைக்கின்றேன். 😂 அதுக்குத்தான் ஆள்… பாராளுமன்றம் போக வேண்டும் என்று அடம் பிடிக்குது. 🤣 சிங்கனுக்கு.. “பெற்றோல் மக்ஸ்” லைட்டுத்தான் வேணுமாம். 😅 😂 🤣
  18. உச்சா.... போன மெத்தை என்றாலும், வீதியில் வைக்கப் பட்டுள்ள கமெராவை மறைக்க பயன்பட்டு இருக்கு. 😂
  19. கடவுளே... எனது பழைய உளவு இயந்திரத்தை, புதுசா மாற்றித்தா... 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.