Everything posted by தமிழ் சிறி
-
தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட தீர்மானம் - சுமந்திரன்
என்ன, சுருதி மாறுது…. நேற்று வரை சுமந்திரன், தனித்துப் போட்டி என்று அடம் பிடித்தார். இன்று இணைந்து போட்டியிட தயார் என்கிறார். தோல்வி பயம் வந்திட்டுது போலை. தலை கீழாக நின்று… என்ன குத்துக்கரணம் அடித்தாலும், சுமந்திரன் இருக்கும் கட்சி மண் கவ்வுவது உறுதி. அந்தளவுக்கு… சுமந்திரன், தனது ஊத்தை வேலைகளால்… தமிழ் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளார்.
-
சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்
உண்மையில் நானும் அதை நினைத்தேன். தனக்கு லாபம் என்றால்.... எந்த ஊத்தைவாளி வேலையும் செய்யத் தயங்காதவர் தான், சுமந்திரன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பாரிஸ்.
-
மாற்றமின்மையே மாறாதது ? நிலாந்தன்.
மாற்றமின்மையே மாறாதது ? நிலாந்தன். ஒரு புறம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்புக் களுக்காக உழைக்கும் கட்சிகள், சுயேட்சைகள். இன்னொருபுறம் ஐநாவின் 58 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளிலும் ஐநாவின் மீதான கவனக்குவிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஐநாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது. இம்முறை ஐநா கூட்டத் தொடருக்கு இரண்டு முக்கிய புதிய பரிமாணங்கள் உண்டு. முதலாவது பரிமாணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனக்குத் தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக்கொள்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல என்றும் கூறத் தொடங்கிவிட்டது. அவ்வாறு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றிருக்கும் ஓர் அரசாங்கம், தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில்,இன நல்லிணக்கம் தொடர்பில் தமிழ் மக்களோடு இணைந்து செயற்படுவதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்று வெளி உலகத்திற்கு காட்ட முற்படுகின்றது.இது உள்நாட்டு நிலவரம். மற்றது,பிராந்திய மற்றும் உலகளாவிய நிலவரம். இலங்கையில் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஆனால் நடைமுறையில் வலது பக்கம் சாய்கின்ற ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்கிறது.சீனா இந்த அரசாங்கத்தை இலகுவாகக் கையாளப்படத்தக்க ஒன்றாகக் கருதுகிறது. அது இப்பிராந்தியத்தில் இந்திய-சீன; அமெரிக்க – சீன நலன்கள் தொடர்பான ஒரு புதிய போட்டிக் களத்தைத் திறக்கப் போகின்றதா ? மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றது.அதேசமயம், புதிய அமெரிக்க அதிபராகிய ட்ரம்பின் வழமைக்கு மாறான அணுகுமுறையும் அனைத்துலக அரசியலில் புதிய தெரிவுகளையும் புதிய ரத்தச் சுற்றோட்டங்களையும் உருவாக்கக்கூடியது. இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழலில் ஐநாவின் ஐம்பத்தி எட்டாவது கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன அத்தனை புதிய நிலைமைகளும் இருக்கத்தக்கதாக அல்லது, புதிய திருப்பங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் இருக்கத்தக்கதாக, இலங்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஐநாவுக்குச் சென்ற அமைச்சர் விஜித ஹேரத் அங்கே ஆற்றிய உரைகளைத் தொகுத்து பார்த்தால் என்ன தெரிகிறது? எதுவுமே மாறவில்லை. முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே விதமான அணுகுமுறைகளைத்தான் தேசிய மக்கள் சக்தியும் கையாளப் போகிறது என்று கருதத்தக்க விதமாக அமைச்சர் விஜித ஹேரத்தின் உரை காணப்படுகின்றது. அமைச்சர் தனது உரையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து உள்நாட்டுப் பொறி முறைகளை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையைப் பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டத்துக்கு ஆதரவாக அவர் எதையும் கூறவில்லை. அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான பொறி முறைக்கு ஆதரவாக அவர் எதையும் தெரிவித்திருக்கவில்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மற்றொரு அமைச்சரான லால் காந்த அண்மையில் கூறியிருப்பதுபோல “அரசாங்கம்தான் மாறியிருக்கிறது. அரசு மாறவில்லை என்பது உண்மைதான். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு அப்படியே இருக்கின்றது. அக் கட்டமைப்பின் ஒரு பகுதியான அரசாங்கம் தேர்தல் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது. மாறாக சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நிர்மாணிக்கும் ஏனைய அடிப்படை மூலக்கூறுகளான மகா சங்கம்,படைக் கட்டமைப்பு, நீதி பரிபாலனக் கட்டமைப்பு ஆகிய ஏனைய மூன்று கட்டமைப்புகளிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நிர்மாணிக்கும் நான்கு அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்று மட்டும் மாறியிருக்கிறது. அந்த மாற்றமும்கூட தமிழ் நோக்கு நிலையில் மாற்றம் அல்ல. எனவே இந்த அரசாங்கம் அரசுக் கொள்கையில், அரசுக் கட்டமைப்பில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தலாம்? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கொள்ளளவு புதிய அரசாங்கத்துக்கு உண்டா? அல்லது சிங்கள பவுத்த அரசுக் கட்டமைப்பு அவ்வாறான மாற்றங்களை அனுமதிக்குமா ? இல்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரே ஐநா தொடர்பான அதன் அணுகு முறைகளை ஓரளவுக்குத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. அனுர ஜனாதிபதி வேட்பாளராக இருந்த காலகட்டத்தில் அசோசியேற்றற் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் அதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள் என்று. இங்கு உண்மை என்பது என்ன? யார் குற்றம் இழைத்தார்கள் என்று கண்டுபிடிப்பது. குற்றவாளிகளை ஏன் கண்டு பிடிக்க வேண்டும்? அவர்கள் இழைத்த குற்றங்களுக்காக அவர்களை தண்டிப்பதற்கா? அல்லது மன்னிப்பதற்கா? அக்குற்றங்கள் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கு அதாவது “மீள நிகழாமைக்கு” குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமா? மன்னிக்கப்பட வேண்டுமா? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பில் குற்றங்களைத் தண்டிக்கும் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தேவையான “பொலிட்டிக்கல் வில்”லை -அரசியல் திட சித்தத்தைக்- கொண்டிருக்கின்றதா? இல்லை. அல்லது குறைந்தபட்சம் கடந்த சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மன்னிப்புக் கேட்குமா? அதிலாவது ஒரு குறைந்தபட்ச மாற்றத்தைக் காட்டுமா? இல்லை. அவர்கள் காட்ட மாட்டார்கள். சரியோ பிழையோ ரணில் விக்கிரமசிங்க யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் தந்திரங்கள் இருக்கலாம். ஆனால் ரணில் மன்னிப்புக் கேட்டார் என்பது ஒரு சரியான முன்னுதாரணம். அதே சமயம், தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு இழைத்த எல்லாக் குற்றங்களுக்கும் அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு மன்னிப்புக் கேட்டால் குற்றங்கள் நடந்திருப்பதை அவர் ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதற்கு ரணில் தயாராக இருக்கவில்லை. இப்பொழுது தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை.லால் கந்த கூறியது போல அரசாங்கம்தான் மாறியிருக்கிறது. இனப்பிரச்சினை தொடர்பான சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. தமிழ் கட்சிகளின் செயலின்மையால் ஐக்கியமின்மையால் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். அது சிங்கள பொது அரசு கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக் கொடுத்த வாக்குகள் அல்ல. அரகலிய போராட்டங்கள் ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின.ஆனால் வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை, என்று ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் கூறியிருக்கிறார்.அது மிகச் சரி. அரசியலறிவு வளர்ந்திருக்கலாம். ஆனால் வரலாற்று அறிவு அல்லது வரலாற்று உணர்வு வளரும் போதுதான் இறந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்ச்சி ஏற்படும். அப்பொழுதுதான் மன்னிப்புக் கேட்கலாம். மன்னிப்பு கேட்டால்தான் அடுத்த கட்டமாக குற்றங்களுக்குப் பரிகாரம் காணலாம். குற்றங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கலாம். ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் அதாவது நிலைமாறு கால நீதியின் சொற்றொடர்களில் சொன்னால் “மீள நிகழாமை”- Non recurrence. இப்பொழுது,மீண்டும் ஐநா கூட்டத்தொடருக்கு வருவோம்.அமைச்சர் விஜித ஹேரத் ஐநாவில் ஆற்றிய உரையின்படி அவர்கள் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்தின் (30\1) அடிப்படையில் சில கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிகிறது. அல்லது சில கட்டமைப்புகளோடு அனுசரித்துப் போக முற்படுவதாகத் தெரிகிறது. ஆனால் அக்கட்டமைப்புகள் யாவும் எவை என்று பார்த்தால், உள்ளூரில் இயங்குபவை. அனைத்துலகப் பரிமாணம் குறைந்தவை. அதைவிட முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளால் நிராகரிக்கப்பட்டவை. அதாவது அமைச்சர் விஜித ஹேரத்தின் வார்த்தைகளிலேயே சொன்னால், அரசாங்கம் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை எதற்கும் தயாரில்லை. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றைத்தான் கேட்கின்றது. அதைத்தானே மகிந்தவும் கேட்டார்? அதைத்தானே ரணிலும் கேட்டார்? இந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி என்ன மாற்றத்தைக் காட்டியிருக்கிறது? புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார்.ஆனால் இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியலில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மாற்றமின்மைதான் மாறாத ஒன்றா? https://athavannews.com/2025/1423718
-
அமெரிக்காவில் ஆட்சி மொழியாக `ஆங்கிலம்` அறிவிப்பு!
அமெரிக்காவில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு! ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான். காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்ற போதிலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கில மொழி மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423722
-
சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்
சுமந்திரன்.... பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்று, வெளியே இருப்பது.... அவருக்கு தன்மான பிரச்சினை மட்டுமல்ல, அவமானமும் புடுங்கி... தின்பதால், தாங்க முடியாமல்... ஆரையாவது... தள்ளி விழுத்தி, பாராளுமன்றத்துக்குள் நுழைய நிற்கிறார். ஆனால்... எவரும், மசியிற மாதிரி தெரியவில்லை. 😂 அதுதான்... சுமந்திரனுக்கு பெரிய விசராய் இருக்கு. 🤣
-
கருத்து படங்கள்
- ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
- நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!
நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை! ”நாட்டில் எரிபொருளுக்கு எந்த விதத் தட்டுப்பாடு இல்லையென” பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நேற்றைய தினம் (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காண்பிக்க சில குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423667- தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை! 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேவேளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அன்று, மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் மீது வெள்ளை வேனில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வெலிகம பொலிஸ் ரோந்து வாகனத்தில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, வேனின் திசை நோக்கி பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வேனிலிருந்து குறித்த ஹோட்டல் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது கொழும்பு குற்றவியல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழு என்பதுடன், வெலிகம பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில் வேனில் இருந்த கொழும்பு குற்றவியல் பிரிவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பொலிஸ் சார்ஜன்ட் உபுல் குமார உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423646- முப்படைகளுக்குச் சொந்தமான 3, 400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி!
முப்படைகளுக்குச் சொந்தமான 3, 400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி! நாட்டில் முப்படைகளின் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்களில், ஆயிரத்து 400 வாகனங்கள் முதல் சுற்று சோதனையில் தோல்வியடைந்ததாக மோட்டார் வாகனத் துறையின் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்தின் இயக்குனரும் பொறியியலாளருமான தாசுன் கமகே தெரிவித்துள்ளார். கரும்புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் Clean srilanka திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், முப்படை வாகன ஆய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்திலிருந்து பத்து தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் இத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423684- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
சுமந்திரன்... சுத்துமாத்து செய்பவர் என்று எங்களுக்கே தெரியும் போது.. அவருடன் ஒன்றாக இருக்கும் ஸ்ரீதரனுக்கு தெரியாமல் இருக்குமா? அதுகும்... அண்மையில், இவர்கள் இந்தியாவுக்கு போகும் போது.. ஸ்ரீதரனுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்று, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "பெட்டிசம்" போட்டதாக சுமந்திரன் மீது சந்தேகப் பார்வை உள்ளது என்று பத்திரிகைகளே அம்பலத்துக்கு கொண்டு வந்த பின்... சுமந்திரனை, ஸ்ரீதரன் நம்ப மாட்டார் என்றே நினைக்கின்றேன்.- மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்!
மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்! உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் உலக செம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 2,833 புள்ளிகளுடன் 1 ஆவது இடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் உலக செஸ் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 2,758 புள்ளிகளைப் பெற்று 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டொப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423691- மு.க.ஸ்டாலினுக்கு 72-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து
மு.க.ஸ்டாலினுக்கு 72-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு , தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர், எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். https://athavannews.com/2025/1423604- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்! இஸ்ரேல் ஒப்புதல். ரமலான் பண்டிகை காலத்தை முன்னிட்டு, காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தினை மேற்கொள்வது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின்(Steve Witkoff) முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கம் எனவும்,இக்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் ரமலான் மாதத்தை வரவேற்கிறார்கள் எனவும், இதன்காரணமாகவே தற்காலிகப் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423698- 14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்! டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகின் மிகப்பெரும் செல்வந்தருமான எலான் மஸ்க்கிற்கு 14ஆவதாகக் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது. அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன. பின்னர் தொடர்ந்து பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் எலான் மஸ்க்கிற்கும், தனக்கும் ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறு இருப்பினும் எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 14-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423680- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
அட…. மாகாணசபை முதல்வரின் உடுப்புத்தான், சுமந்திரனை தடுக்குதோ… 😂. நல்ல சாட்டு. 🤣- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
விக்னேஸ்வரனின் கலைக்கப் பட்ட வடக்கு மாகாணசபைக்கு மீண்டும் தேர்தல் நடத்த விடாமல், சுமந்திரன் அழுத்தம் தருவதாக மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருந்தார். ஏனென்றால்… அப்போது தேர்தல் நடத்தினால்.. விக்னேஸ்வரன் மீண்டும் பெருமளவிலான வாக்குகளால் தெரிவு செய்யப் படுவார் என்று சுமந்திரன் அஞ்சியதே காரணம் என்று மக்களால் விமர்சிக்கப் பட்டார்.- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
இவர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி… எந்த ஒரு தூர நோக்கும் அற்ற சுயநலக் கும்பல்கள். சொந்தப் புத்தி அறவே கிடையாது. எல்லாம்… சுமந்திரனின் கண் அசைவுக்கு ஆடும் பொம்மைகள். சுத்துமாத்து சுமந்திரன்… எப்படிப் பட்ட யோக்கியர் என்று, உலகுக்கே தெரியும். 😂- சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்
சுமந்திரன் அவசரமாக பாராளுமன்றத்துக்குள் செல்ல பல வழிகளில் காய் நகர்த்திக் கொண்டு இருக்கின்றார். அதில்…. சத்தியமூர்த்தியை விலக வைப்பது அல்லது ஶ்ரீதரனுக்கு மாகாணசபை முதல்வர் ஆசை காட்டி அவரை வெளியே அனுப்புவது. சுமந்திரனின் நயவஞ்சக வார்த்தையை நம்பி…. சத்தியமூர்த்தியோ, ஶ்ரீதரனோ… தமது பதவியை விட்டு வெளியேறினால்…. அது அவர்களின் அரசியல் தற்கொலைக்குச் சமன்.- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
விக்னேஸ்வரன் மாகாணசபை முதல்வராக இருந்த போது… சுமந்திரன்… மாகாணசபையிலுள்ள தனது ஆட்கள் மூலம் குடைச்சல் கொடுத்து, அவரை நிர்வாகம் செய்ய விடாமல், கடைசியில் வடக்கு மாகாண சபையையும் கலைக்க வைத்து, விக்னேஸ்வரனை அரசியல் அனாதை ஆக்கியவர்தான் சுமந்திரன். இப்போ…. ஶ்ரீதரனுக்கு, மாகாணசபை முதல்வர் ஆசை காட்டி, அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து விலக வைத்து… சுமந்திரன் பாராளுமன்றம் போவதுடன், ஶ்ரீதரனின் அரசியல் வாழ்க்கையையும் முடிவிற்கு கொண்டுவர சுமந்திரன் செய்யும்… ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் சூழ்ச்சியே இது. ஶ்ரீதரனை… மக்கள், பாராளுமன்றதுக்குத்தான் தெரிவு செய்தார்களே ஒழிய மாகாணசபைக்கு அல்ல. வேண்டுமென்றால்…. ஒரு பதவியும் இல்லாமல் இருக்கும் சுமந்திரன், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையை (?) பெற்று முதல்வராக வரட்டும். அதுதான் முறையான செயல். நெடுகவும் சபை குழப்பி மாதிரி… மற்றவர்கள் இருக்கும் பதவியில் கண் வைத்து குடைச்சல் கொடுப்பதை இனியாவது நிறுத்தி, நேர்மையான அரசியல் செய்வதுதான் மனிதருக்கு அழகு.- தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை.
தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை. கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்தே இச்சாதனையை படைத்துள்ளார். இவருக்கு தங்கப் பதக்கத்துடன் ரூபா 650,000 ரொக்கப் பரிசுடன் வர்ண தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 3வது தடவையாக ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியினால் கொழுந்து பறிக்கும் போட்டி இன்று (01) ரதல்ல பிரதேசத்தில் நடைபெற்று பின்னர் பரிசு வழங்கும் நிகழ்வு ரதல்ல விளையாட்டு மைதானத்தில நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரத அதிதியாக வேறலிஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. மொஹான் பண்டித்த கே மற்றும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ரொஷான் ராஜதுரை அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கொழுந்து பறிக்கும் போட்டியில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின், கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி, ஹொரண பெருந்தோட்ட பெருந்தோட்ட கம்பனி ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 60 தோட்டங்களைச் சேர்ந்த 50 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.. இவர்களுக்கு போட்டிக்காக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இற்றேரத்தில் தரமுள்ள அதிக கிலோ கொழுந்தை பறிப்பவர்களுக்கே முதல் 3 இடங்கள் வழங்கப்பட்டன. அதற்கமைய 3 பெருந்தோட்ட கம்பனிகளிலிருந்தும் வெண்கல பதக்கத்தை பெற்று 3 ஆம் இடத்தை, கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. மாரியாய், தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் வீரையா வனிதா மற்றும் ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் P. சந்ரலேகாவும் பெற்றுக் கொண்டனர். அத்தோடு வெள்ளி பதக்கத்தை பெற்று 2ஆம் இடத்தை, களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் சுப்பிரமணியம் கோமதி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் தர்மலிங்கம் பூமணி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் K. கவிதா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தை , கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. இந்திராகாந்தி,தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் எந்தனி இரேஷா ராஜலெட்சுமி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் சுகுமாறன் ராஜலெட்சுமி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். Athavan Newsதேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி - 15 நிமிடங்களில் 8 kg க...கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15 நிமிடங்களில் 8 kg க...- மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கியுடன் டொனால்ட் டிரம்ப் நடத்திய சண்டை, அமெரிக்கா உக்ரைனை காலனியாக எப்படி நடத்துகிறது என்பதைக் காட்டுகிறது. சீனாவை பலவீனப்படுத்தவும், மீண்டும் தொழில்மயமாக்கவும் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தை உருவாக்கவும், உக்ரைனின் அரிய பூமிகள் மற்றும் முக்கியமான தாதுக்களின் கட்டுப்பாட்டை டிரம்ப் கோருகிறார். டிரம்ப் $350 பில்லியன் ஊதியம் பெற விரும்புகிறார்: உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு.- மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
மூன்றாம் உலகப் போரில் தான் சூதாடுவதாக... டிரம்ப், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் கூறுகிறார்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.