Everything posted by தமிழ் சிறி
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
உங்களின் அண்ணருக்கு... பென்சில் செய்வதன் மூலப் பொருளையும், அதன் செய்முறையையும் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என அறிய ஆவல். 😂 எனக்குத் தெரிந்து.. யாழ்ப்பாணத்திலேயே அப்ப ஆறு குதிரைகள்தான் நின்றது. அந்த ஆறு குதிரையும் போடும் சாணியை வைத்து, ஒரு பள்ளிக்கூடத்துக்கு கூட பென்சில் தயாரிக்க போதாது. 🤣
-
நத்தார் பரிசு
நல்ல திறமான சரக்குத்தான் வாங்கி குடித்திருக்கின்றார். 😀 அவர்.... குடித்தது விஸ்கியா, பிராந்தியா, பியரா. 😂 பெயரை கேட்டு சொல்லுங்க. "நியூ இயர்" பார்ட்டிக்கு நாமும் வாங்கணும். 🤣
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
எம்.ஜி.ஆரின் சமாதிக்குள் இருந்து, மணிக்கூடு "டிக்டிக்" என்று ஓடும் சத்தம் கேட்பதாக... இன்றும் ஒரு நம்பிக்கை உள்ளது ரசோதரன். 😂 ####### ########### ##### எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-tn-government-to-pay-25-lakhs-to-the-victim-of-anna-university-student-assault-case-1136951
-
கருத்து படங்கள்
- மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி CIDயில் 4 மணிநேர வாக்குமூலம்
மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி CIDயில் 4 மணிநேர வாக்குமூலம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் விசாரிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார். இதன்படி, அவர் நேற்று முற்பகல் 9.30 இருந்து பிற்பகல் 1.30 வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஏலவே, இரண்டு தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் அங்கு முன்னிலையாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக யோசித ராஜபக்ஸவையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414395- ‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஒசாமு சுசுகி காலமானார்!
‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஒசாமு சுசுகி காலமானார்! சுசுகி மோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார். லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு, உலகப் புகழ் பெற்ற சுசுகி மோட்டார்ஸ் குழுமத்தின் நிறுவனர் குடும்பத்துடன் திருமணம் செய்த பின், அந்த தொழிலில் முன்னணி நபராக செயலாற்ற தொடங்கினார். 1958ஆம் ஆண்டு சுசுகி குழும தொழிலில் சேர்ந்த அவர், 1978இல் நிறுவனத்தின் தலைவரானார். 1982ஆம் ஆண்டு அவர் இந்திய ஓட்டோமொபைல் சந்தையில் தடம் பதித்தது திருப்பு முனையாக அமைந்தது. இந்தியாவின் மருட்டி நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து, மருட்டி சுசுகி கார்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். குறிப்பாக இந்த நிறுவனத்தின் மருட்டி 800 கார், இந்திய மற்றும் இலங்கைச் சந்தையில் பிரபலமான காராக மாறியது. மத்தியதர குடும்பங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் இந்த கார் இருந்தது. அப்போது தொடங்கி தற்போது வரை, இந்திய கார் சந்தையில் சுசுகி நிறுவனத்தின் பங்களிப்பு முன்னிலையில் உள்ளது. தற்போதும், இந்திய கார் சந்தையில் மருட்டி சுசுகி, 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. மறைந்த ஒசாமு சுசுகிக்கு. சோகோ என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். ஒசாமுவின் மறைவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவற்றின் தலைவர்கள், தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஓட்டோமொபைல் துறையில் அவரது தொலைநோக்கு பார்வை, உலக அளவில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414375- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நீங்கள் கூறிய ஒன்பதாவது கருத்தில்…. மற்ற இருவரையும் விட…. விக்னேஸ்வரனில் அதிக நம்பிக்கை வைத்து மலைபோல் நம்பி இருந்தனான். 😂 கடைசியில் முன்னாள் நீதியரசரும் கவுட்டு விட்டார். 🤣 மற்ற இருவரும்…. பக்கா (Fraud) பிராட்டுக்கள் என்று முகத்திலேயே எழுதி ஒட்டி இருந்தது. 😂 விக்கியர் திருநீறு பூசி இருந்ததால்… எனக்கு கண்டுபிடிக்க கஸ்ரமாய் போச்சுது. 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
நான், இரண்டு கோப்பை சோறு மட்டுமே சாப்பிடுவதால்.... இது... என்னுடைய... வண்டி அல்ல. ஆகவே... நீங்கள் தந்த பெயர்களில், எனது பெயர் "அவுட்." 😂 அடுத்து இருப்பவர்களான... @suvy, @Kandiah57, @குமாரசாமி, @Paanch, @ஈழப்பிரியன் ஆகியோரை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣 நிலாமதி அக்காவுக்கு... அப்பவும் சந்தேகம் தீரவில்லை என்றால், எங்கள், வண்டிகளை... படம் எடுத்து அனுப்புகின்றோம். ஓகேயா....- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நீங்கள், கஸ்ரமான... கேள்வி கேட்கிறியள். 😂 🤣- புது வருட சிரிப்புகள்.
யாருடா நீ.... ஆஸ்பத்திரிக்கு வந்து காலண்டர் கேட்குறே. என்ன டாக்டர், மாசத்துக்கு ஒரு வாட்டி வந்து போறேன். நான் கேட்கக் கூடாதா... 😂 🤣- புது வருட சிரிப்புகள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
நிஜத்தை விட... நிழல், தெளிவாக இருக்கு. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஒரு சம்பந்தமும் இல்லை. 😀 ஆனால்... நான், சம்பந்தப் படுத்திக் கொண்டேன். 😂 இதனால் கற்றுக் கொள்வது யாதெனில்.... ஏமாற்றுபவர்கள்... எப்பவும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். 🤣- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, 55,000 வீடுகள் கட்டித் தரப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பை... மீள கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட மூவர் இராமேஸ்வரத்தில் கைது.- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
//சந்திர மண்டலத்துக்கு சென்று கூட... அரிசி கொண்டு வந்து தருவோம்.// ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா.... 50 வருசத்துக்கு முன் சொன்னது. இருக்கிறதிலை... இதுதான், முதல் பொய் என நினைக்கின்றேன். 😂- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
தலைவர் வந்து கேட்டால்... சேர்த்த காசை, திருப்பி தருவோம். கச்தீவை... மீட்போம். உதயநிதி அரசியலுக்கு வர மாட்டார். துவாரகா... சுவிற்சலாந்தில் வசிக்கின்றார். சதாம் குசைன்... அணு ஆயுதம் வைத்திருக்கின்றார். வடக்கில் வசந்தம்... கிழக்கில் உதயம்.... யாழ்ப்பாணத்தை... சிங்கப்பூராக மாற்றுவோம். 😂- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
குமாரசாமி அண்ணே.... 20 வயசுக்கு உள்ளேயும், 40 வயசுக்கு மேலேயும் சின்ன வயசுதான். 😂 இப்ப... உங்கடை அனுபவத்தை எடுத்து விடுங்க. 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
வடமாகாண ரீதியில் நடைபெற்ற புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு கடற்கரை. வடமாகாண சுற்றுலா பணியகம் நடத்திய இந்தப்போட்டியில்... "முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை" இந்த படத்தை போட்டிக்காக சமர்ப்பித்து, வடமாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றது. Vetri Nadai வெற்றி நடை- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
90 வயது மனிதன், 50 வயது மனிதனுக்கு சொல்லும் போது... 50 வயசுக்காரனுக்கு, சின்ன வயசுதானே. ஹ... ஹா... ஹா.... 🤣- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஓம்.இதில் வாழ்க்கை துணைவியின் பங்கு மிக மிக முக்கியம். அத்துடன் அந்தப் பெண்... சாதுரியமான, புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லையேல்... குடும்பமே நரகம்தான். இரண்டிற்கும்... நம் சமூகத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன.- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அல்வாயன்... எமது சிறிய வயது கற்பனைகளை இப்போ நினைத்துப் பார்க்க பிரமிப்பாக உள்ளது. விபரிக்க முடியாத ஏதோ ஒரு சக்தி, எம்மை வழிகாட்டிக் கொண்டு இருந்ததாகவே நான் கருதுகின்றேன். 🙂- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஊற வைத்த அரிசி சாப்பிட்டால்....கல்யாணத்து அன்று மழை வரும். பாவம் செய்றவங்க... நல்லா இருக்க மாட்டாங்க (இதுதான் மிகப்பெரிய பொய்.) பொன் வண்டு முட்டையை சேகரிச்சா காசு வரும். யானை முடி உள்ள மோதிரம் போட்டால் பணம் கொட்டும். கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான். வேப்பமரத்திலை... இரவில் பேய் இருக்கும். தீபாவளிக்கு.... தீர்வு கிடைக்கும். 😂 🤣- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஓம். இதனை எங்கள் பாட்டி சொல்லி பயப்பிடுத்துவார். கலியாணம் கட்டுற அன்று மழை பெய்து, எங்களது பட்டு வேட்டி, கூறைச் சீலை எல்லாம் நனையப் போகுதே என்று... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் கவலையில் இருப்போம். 😂 - மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி CIDயில் 4 மணிநேர வாக்குமூலம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.