Everything posted by தமிழ் சிறி
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
யார்… அந்த சார்…? இன்னும் அந்த சாரை, தி.மு.க. அரசு கண்டு பிடிக்காததால்… அவங்க கட்சி ஆள்தான் என்று உறுதியாகி விட்டது. இடுப்பை கிள்ளுறது, பிரியாணி களவெடுக்கிறது, பாலியல் சில்மிஷம் செய்யுறவன் எல்லாம்…. தீம்கா கட்சியில்தான் இருக்கிறாங்கள். தலைவன் எவ்வழியோ… தொண்டனும் அவ்வழிதான். (200 றுப்பீஸ்) 😂 🤣
-
யாழ், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
காற்றின் தரத்தை வெறும் கண்ணாலேயே பார்க்கும் அளவுக்கு புகை மூட்டமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் நாட்டு மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து மீள முடியாது. வாகனங்கள், தொழிற்சாலைகள், குப்பைகளை சகட்டு மேனிக்கு எரித்தல் போன்றவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். ஜேர்மனியில் 49, 000, 000 கார்கள் உள்ளன. பார ஊர்திகள் வேறு. இவை வெளியேற்றும் புகைகளை கடினமான சோதனைக்குப் பின்பே, வீதியில் ஓட அனுமதிப்பதால் காற்றின் தரம் மாசு படுவது தவிர்க்கப் படுகின்றது. நல்ல தண்ணீர், நல்ல காற்று போன்றவற்றை கொடுப்பதும்…. அரசாங்கத்தின் பொறுப்புத் தான்.
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
மிகப் பெரிய தொழில் அதிபர் என்றுபத்திரிகையில் உள்ளது. பெயரைப் பார்க்க, தமிழாராகவும் இருக்குது. ஆனால்… இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்டதே இல்லை. அனுதாபங்கள்.
-
ஜனாதிபதி அநுரவின் யாழ். பயணம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு!
வசந்திகளை பரப்ப என்றே ஒரு கூட்டம், தீயாய் வேலை செய்யுது. 😂
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சரியாக சொன்னீர்கள் குமாரசாமி அண்ணை. 👍🏽 தலையை மண்ணில் புதைக்கும்… தீக்கோழிகளுக்கு இது புரியாது. 🤣
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
இப்ப ஆச்சி அரசியல் செய்தால்தான்... ஆட்சியில் இருக்கலாம் போலுள்ளது. 😂 முதலாவது சிங்கள ஆச்சி, மற்றது தமிழ் ஆச்சி. 🤣
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவையரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ச.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சம்பந்தரின் ஆவி.... மாவையரின் செத்த வீட்டுக்கு வந்த பிரபலங்களையும், மக்களையும் பார்த்து பொறாமை பட்டிருக்கும். அதுகும் சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப் பட்டிருந்த போது 50 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்தார்கள். இரவில்... அந்தப் பிணத்தின் அருகே 5 பேர் கூட நிற்கவில்லையாம்.
-
மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!
- மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!
மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்! மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். 1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, வீட்டில் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419369- கட்சியை காப்பாற்ற மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும் - சி.சிவமோகன்
சிவமோகன் குறிப்பிடும் மும்மூர்த்திகள். 1) சுமந்திரன். 2) சிவஞானம். 3) சத்தியமூர்த்தி. என நினைக்கின்றேன்.- "இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
தில்லை அண்ணா….உங்களின் இளைய மகளுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏- வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; கிளிநொச்சி பண்ணை உரிமையாளர் கவலை !
சிலவேளை இவை வெளிநாட்டு பன்றிகள் என்ற படியால்… நம் ஊர் வைரசுகளை தாங்கும் சக்தி இல்லாமல் இருக்கலாம்.- வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.
வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் வைத்து மறித்து விட்டார்கள். அதேசமயம் ஜனாதிபதி அவர்களுடைய கண்ணில் படாமல் பழைய பூங்கா வீதி வழியாக வெளியேறிச் சென்று விட்டார்.பட்டதாரிகள் தங்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் மட்டும் 3000த்துக்கும் குறையாத பட்டதாரிகள் நிரந்தர வேலையின்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 30,000 பட்டதாரிகள் அவ்வாறு உண்டு என்று ஒரு பட்டதாரி சொன்னார். இவர்களில் 80 வீதத்திற்கும் குறையாதவர்கள் எங்கேயோ ஒரு தனியார் துறையில் ஏதோ ஒரு வேலையைச் செய்கிறார்கள். சிலர் நல்ல சம்பளத்துக்கும் வேலை செய்கிறார்கள். வேலை தேடும் பட்டதாரிகளின் ஒன்றுகூடல்களில் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம். அங்கே முப்பது வயதைக் கடந்தவர்களும் உண்டு.அதாவது பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகிறார்கள் என்று பொருள்.அவர்களுக்கும் வயது ஏறிக்கொண்டு போகிறது. வேலை தேடித் தேடி வயதுகள் வீணாகிவிட்டன. ஆனால் அவர்கள் எந்த வேலையைத் தேடுகிறார்கள்? அரச உயர் அதிகாரியான எனது நண்பர் ஒருவர் சொல்வார், அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைக்கக்கூடாது. “அரச வேலையற்ற பட்டதார்கள்” என்றுதான் அழைக்க வேண்டும் என்று.ஏனென்றால் அவர்கள் அரச வேலைக்காகத்தான் போராடுகிறார்கள். தனியார் துறையில் வேலை செய்வதற்கோ அல்லது தாமாக ஒரு தொழில்துறையை தொடங்குவதற்கோ தயாரில்லை என்றும் அவர் கூறுவார். அவர்கள் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் என்று கேட்டால்,அதற்கும் அவர் பதில் சொல்வார். ஏனென்றால் அது சுகமானது. கஷ்டப்படத் தேவையில்லை. தடைதாண்டல் பரீட்சைகளின்மூலம் பதவி உயர்வுகளைப் பெறலாம். கஷ்டப்பட்டு வேலை செய்து பதவி உயர்வுகளைப் பெற வேண்டிய தேவை இல்லை. பணி நேரத்தில் ஓய்வாக இருக்கலாம். ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர் என்ற சலுகைகள் கிடைக்கும். எனவே ஒப்பீட்டளவில் ரிஸ்க் இல்லாத, கஷ்டப்படுத்த தேவையில்லாத, பாதுகாப்பான பிற்காலத்தைக் கொண்ட ஒரு தொழில், என்பதனால் பெரும்பாலானவர்கள் அரச ஊழியத்தை நாடுகிறார்கள் என்று எனது நண்பர் சொல்வார். ஆனால் அரசு ஊழியத்தின் தொடக்க காலம் அப்படியொன்றும் செழிப்பானதோ மகிழ்வானதோ அல்ல.யாழ்ப்பாணத்தில் ஓர் அரசு ஊழியருக்கு முதலில் கிடைக்கும் நியமனம் பெரும்பாலும் தூரப் பிரதேசங்களுக்கே கிடைக்கும். தூர மாவட்டங்களுக்குத்தான் கிடைக்கும்.கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அங்கே அவர் சேவை புரிய வேண்டும்.அரசியல் செல்வாக்கு இருந்தால் தீவுப் பகுதிக்கோ அல்லது பளைப் பிரதேசத்துக்கோ நியமனத்தை எடுக்கலாம்.ஆனால் அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இவ்வாறு 8 ஆண்டுகள் கட்டாயமாக கஷ்டப் பிரதேசத்தில் வேலை செய்யவேண்டி வரும்பொழுது,அது முதல் நியமன அனுபவத்தை துன்பகரமானதாக மாற்றுவதுண்டு. தூர மாவட்டத்தில் அங்குள்ள அரச ஊழியருக்கான விடுதியில் தங்கினால் அது வேறு விடயம். அதல்லாமல் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வேலைக்குப் போய் மாலையில் வருவது என்று சொன்னால் அது மிகத் துன்பம்.வேலை வெறுக்கும் அளவுக்குத் துன்பம். அதிகாலையில் எழ வேண்டும். எழுந்தால்தான் அரச ஊழியர்களுக்கான பஸ்ஸைப் பிடிக்கலாம்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது கிட்டத்தட்ட நான்கு மணிக்கு மேல் ஆகிவிடும். அது நியமனம் கிடைத்த இடத்தின் தூரத்தைப் பொறுத்த விடயம். இவ்வாறு நியமனம் கிடைத்த அதே காலப்பகுதியில்தான் பெரும்பாலும் திருமணமும் நடக்கும். திருமணம் செய்த நபரும் முதல் நியமனம் பெறும் அரசு ஊழியர் என்றால் தேனிலவுக் காலம் பயணத்திலேயே கழியும்.காலையில் எழுந்து பரக்கப்பரக்க ஓட வேண்டும்.காலையில் எழுவதற்காக இரவு முன்கூட்டியே நித்திரைக்குப் போக வேண்டும்.புதுமணத் தம்பதிகள் உல்லாசமாகத் திரிவதற்கு கிடைக்கும் நேரம் மிகச் சில மணித்தியாலங்கள்தான்.அதற்குள் பிள்ளையைப் பெற்றால் அது அடுத்த துன்பம்.பிள்ளையைப் பராமரிக்க அம்மம்மா,அப்பம்மா யாராவது இல்லையென்றால், அதற்கு வேலைக்கு ஆள் தேட வேண்டும். அநேகமாக ஆட்கள் கிடையாது. வேலை நேரத்தில் பிள்ளையின் முகம் அல்லது துணையின் முகம் கண்ணுக்கு முன்வரும்.அது வேலை செய்யவிடாது. இப்படித்தான் 8 ஆண்டுகளும் கழியும். பொதுவாக திருமணத்தை உடனடுத்து வரும் காலப் பகுதியானது வாழ்வில் மகிழ்ச்சியாக,ஃப்ரீயாகக் கழிக்க வேண்டிய ஒரு காலம். ஆனால் முதல் நியமனம் பெறும் நகரப் பகுதி அரசு ஊழியர்களுக்கு அதுதான் துன்பகரமான, வெறுப்பான ஒரு காலமாகவும் அமைவதுண்டு.குடும்பத்தைப் பிரிந்து பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.எந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டுமோ அதே காலகட்டம் பயணத்தில் கழிந்து போகும்.அந்த அரசு ஊழியர் மகிழ்ச்சியான அரசு ஊழியராகவும் இருக்கப் போவதில்லை;மகிழ்ச்சியான குடும்பத் தலைவராகவோ தலைவியாகவோ இருக்கப் போவதும் இல்லை. படிப்பு எதற்கு? பட்டம் எதற்கு? தொழில் எதற்கு? மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தானே?ஒரு தம்பதி மகிழ்ச்சியாக உல்லாசமாகக் கழிக்க வேண்டிய காலத்தில் பெரும் பகுதியை பயணத்தில் கழிப்பது என்பது வாழ்க்கையின் பொருளை, கல்வியின் பொருளைக் கேள்விக்கு உள்ளாக்கும். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் நியமனம் பெறும் பெரும்பாலான அரசு ஊழியர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.அந்த எட்டு ஆண்டுகளையும் பல்லைக் கடித்துக்கொண்டு கடந்துவிட்டால் அதன் பின் ரிலாக்ஸாக இருக்கலாம் என்று பலரும் கருதுகிறார்கள். இவ்வாறாக அரச ஊழியத்துக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளின் தொகை ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.ஆனால் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் புதிய நியமனங்கள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே போகின்றன. இது ஒரு காட்சி.இதற்கு நேர் எதிரான மற்றொரு காட்சி உண்டு. 3000த்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைகேட்டு போராடும் ஒரு நாட்டில் கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. நான் வாழும் கிராமத்தில் படித்தவர்கள், பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உண்டு. ஆனால் இங்கு கூலி வேலைக்கு ஆள் கிடையாது. முன்பு ஒரு முதியவர் இருந்தார்.அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.ஒரு கோவில் தாழ்வாரத்தில் உறங்குவார். அவரை வேலைக்கு பிடிப்பதே கஸ்ரம். வேலைக்கு வந்தாலும் அவருக்கு விருப்பமான நேரம்தான் வருவார்.விரும்பின வேலையைத்தான் செய்வார்.அதிகம் சாப்பிடமாட்டார்.அவரும் ஒரு கடுமையான மழை நாளில்,கோவில் தாழ்வாரத்தில் இறந்துவிட்டார். இப்பொழுது வேலைக்கு ஆட்கள் இல்லை. கூலி வேலைக்கும் துப்புரவு வேலைகளுக்கும் தேங்காய் பிடுங்குவதற்கும் ஆட்கள் இல்லை.தேங்காய் பிடுங்குவதற்கு முன்பு கேட்கப்பட்ட கூலி சில தேங்காய்கள். இப்பொழுது ஒரு மரத்துக்கு 300 ரூபாய். அது பரவாயில்லை. ஏனென்றால் ஒரு பெரிய தேங்காய் 200 ரூபாய்க்கு மேல் போகிறது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான பட்டப்பட்டதாரிகள் வேலை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம், கூலி வேலைகளுக்கு, சாதாரண சிறிய வேலைகளுக்கு ஆட்கள் இல்லை.முதியவர்களைப் பராமரிக்க, இயலாதவர்களைப் பராமரிக்க, சமைக்க, வீட்டு வேலைகளைச் செய்ய, பிள்ளை பெற்ற பெண்ணைப் பராமரிக்க,ஆட்கள் இல்லை. இதற்கு அரசாங்கம் மட்டும் பொறுப்பல்ல.தொழில் தொடர்பாக,தொழில் ஸ்தலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது தொடர்பாக,தொழில் பாதுகாப்பு தொடர்பாக,தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் அளவுகோள்களும் நம்பிக்கைகளும்கூட இதற்குக் காரணம்தான். அவ்வாறு அரசு ஊழியத்துக்காக காத்திருக்கும் பட்டதாரிகளைத் தயார்ப் படுத்திய கல்விமுறையும் பல்கலைக்கழகங்களும் காரணம்தான்.அரச தொழில்துறைக்கு வெளியே தாமே சுயமாக தொழில் துறைகளை தொடங்கத் தேவையான தொழில் முனைவோர்களை நமது கல்விமுறை உற்பத்தி செய்ய தவறிவிட்டதா? ஒருபுறம் சாதி சார்ந்த தொழில் பிரிவுகள்.இன்னொரு புறம் தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி.யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகங்கள் மத்தியில் இருந்துவரும் பட்டதாரிகள் கடற்தொழிலை திரும்பிப் பார்ப்பதில்லை.அதுபோல வலிகாமத்தின் மையப் பகுதிகளில் விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்த பட்டதாரிகள் விவசாயத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை.ஆனால் வன்னியில் பெரும்பாலான பட்டதாரிகள் விவசாயத்தை ஒரு உப தொழிலாக மேற்கொள்வார்கள். முதலீட்டுத் துறையைச் சேர்ந்த ஒரு விற்பனர் ஒருமுறை என்னிடம் கேட்டார், ஒரு வாகனம் திருத்துபவரின் மகன் முகாமைத்துவப் பட்டதாரியாக வந்தபின் தன்னுடைய தகப்பனின் சிறிய வாகனம் திருத்தும் கடையை பெரிய அளவில் விஸ்தரித்து முகாமைத்துவம் செய்வதற்கு முயற்சிப்பதில்லை.அவர் தன் தகப்பனின் தொழிலைத் திரும்பிப் பார்க்காத ஒரு நிலைமைதான் உண்டு. ஒருபுறம் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஒரு புதிய தலைமுறை தமது பரம்பரை தொழிலை கைவிடுகின்றது. அதில் ஒரு நியாயம் உண்டு. அதே சமயம் அந்த தொழில்களை நவீனமாக்கி எந்திரமயப்படுத்துவதன்மூலம் அவற்றின் சாதி அடையாளங்களை அகற்றலாம். ஆனால் கல்விமுறை அதற்கு வேண்டிய தொழில் தரிசனங்களைக் கொடுக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் காசும் இந்த விடயத்தில் இளையவர்களைக் கெடுக்கிறது என்று ஒரு மதகுரு சொன்னார்.ஆனால் 2009க்கு உடனடுத்த ஆண்டுகளில் அவ்வாறு உதவிய பலரும் இப்பொழுது உதவுவதில்லை. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் நிதி உதவிகளை வைத்துத் தொழில் முனைவோராக மேலெழுந்த பலர் உண்டு.இங்கு பிரச்சனை என்னவென்றால், இவை எவையும் ஒரு மையத்தில் இருந்த திட்டமிடப்படாத உதிரிச் செயற்பாடுகளே. இப்பொழுது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் படித்தவர்கள், பட்டதாரிகள், நல்ல தொழில் பார்த்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் ஒரு பகுதியினர் திரும்பி வருகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் வெளியேறத் துடிக்கும் அனைவரும் வாழ்க்கை இங்கு கடினமானது, மகிழ்ச்சியற்றது என்று கருதுகிறார்கள் என்பது மட்டும் உண்மை. அல்லது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழ்க்கை ஒப்பீட்டளவில் வசதியானது, பாதுகாப்பானது என்று நம்புகிறார்கள் என்பது மட்டும் உண்மை. தமிழ்த் தேசியவாத கட்சிகளிடம் இது தொடர்பான பொருத்தமான பொருளாதாரத் தரிசனங்கள் இல்லை.அவர்களுக்கு தேசியவாத அரசியல் என்றாலே என்ன என்று தெரியவில்லை. ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பொருளாதாரம் ஆகும். ஆனால் தமிழ்க் கட்சிகளில் யாரிடமாவது பொருத்தமான பொருளாதாரத் தரிசனங்கள் உண்டா? இல்லை.ஒருபுறம் நல்ல பதவிகளை வகிக்கும் பட்டதாரிகள் புலம் பெயர்கிறார்கள்.இன்னொருபுறம்,வேலை கேட்டுப் போராடும் பட்டதாரிகள். அதேசமயம் கூலி வேலைக்கு ஆள் இல்லாமல்,முதியோரை, இயலாதவர்களைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல்,சமைப்பதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள்.ஒரு தேசமாகத் தமிழ் மக்கள் தமது பொதுப் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்பப் போகிறார்கள்? https://athavannews.com/2025/1419349- கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்!
கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்! கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 24 வயதுடைய குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரும் ஜேர்மனைச் சேர்ந்த தம்பதியினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419355- சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி? - நிலாந்தன்
- வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; கிளிநொச்சி பண்ணை உரிமையாளர் கவலை !
மிகவும் சோகமான செய்தி. பாவம் அந்த பண்ணை உரிமையாளர். நோய்த் தொற்று ஏற்பட முதல், அதற்குரிய தடுப்பூசிகளை போட்டிருந்தால் இழப்பு, குறைவாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.- யோஷித ராஜபக்ஷ கைது
விளக்கமறியலில்... ஐந்து நட்சத்திர விடுதியின், உபசரிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார் போலுள்ளது. அப்பன்,சித்தப்பன்... பதவி இருக்கும் போது, பணிவாக நடந்திருந்தால்... ஏன் இந்த வில்லங்கம்.- அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும்.
அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு) தமிழ்த் திரைப்படமொன்றில் தன்னை ஊரில் ரவுடியாகப் ‘பில்ட்டப்’ பண்ணும் நோக்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடிதான். என்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு போங்கள்” என்று கெஞ்சுவதை சிலர் பார்த்திருப்பீர்கள். அந்தக்காட்சிதான் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதனை சாவகச்சேரியில் வைத்து அனுராதபுர காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நடந்தகொண்டவிதம் நினைவுபடுத்தியது. காவல்துறையினர் அவரைக் கைவிலங்கின்றி அழைத்துச்செல்ல முற்பட்டபோது அர்ச்சுனா தனக்கு விலங்கிட்டுக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே வலிந்து கேட்டு விலங்கு கையில் மாட்டப்பட்டதைப் பார்த்தோம். அர்ச்சுனாவின் அரசியலை விளங்கிக் கொள்ள இதுவொன்றே போதும். வடிவேலுவின் நடிப்பை இரசிகர்கள் எவ்வாறு கைதட்டி ரசித்தார்களோ அதேபோல அர்ச்சுனாவின் இது போன்ற நடிப்புகளை இரசிப்பதற்கென்றும் நம்மத்தியில் ஒரு ரசிகர் வட்டம் இருக்கவே செய்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்களே அவரது ஆதரவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆனால் அரச்சுனாவின் இதுபோன்ற நடிப்புகளுக்கான அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் அந்த வட்டத்தினர் இல்லாமலிருப்பதே அர்ச்சுனாவுக்கான பலம். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்யட்சகராக அர்ச்சுனா பதவியேற்றது தொடக்கம் நேற்றுவரை அவரது நடத்தைகளை அவதானித்து வந்தால் அவரது குணச்சித்திரத்தைப் (மனப்பாங்கு+ நடத்தை) புரிந்து கொள்வது கடினமானதொன்றல்ல. சிலர் அவரை நகைச்சுவைத் துண்டாக( comedy piece)க் கடந்து செல்கின்றர். சிலர் அவரை மனநலம் குன்றியவராகப் பார்க்க முனைகின்றனர். அதேவேளை அரச்சுனாவின் இரசிகர்கள் அவரைக் கதாநாயகனாவே பார்க்கின்றனர். இவற்றுள் அர்ச்சுனா யார்? நகைச்சுவையாளரா? மனநலம் குன்றியவரா? அல்லது கதாநாயகனா? இவை எல்லாமாகவுமன்றி இதற்கப்பால் வில்லனாகவுங்கூட அவரைப் பார்க்க முடியும். கிராமத்தவர்களின் ‘காரிய விசரன்’ என்ற பேச்சுமொழி இவ்வாறான குணச்சித்திரம் கொண்டவர்களைத்தான் குறிப்பதாக இருக்கிறது போலும். தொடக்கத்தில் சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்பட்டதாக அவரால் சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்போது அவரை ஒரு ‘குறை அறைவோன்’(Whistleblower) ஆகச் சிலர் பார்த்தார்கள். ஆனால் அவரது அடுத்தடுத்த செயற்பாடுகள் குறைகளைக் களைவதற்கான உண்மையான வெளிப்படுத்தல்களாக அல்லாமல் தன்னையொரு மீட்பராகக் காட்டுவதற்காகப் பொய்கள், புனைவுகள், ஊதிப்பெருப்பித்தல் போன்ற நடவடிக்கைகளாக மாறியதால் அவர் குறை அறைவோனல்லன் என்றும் குறிக்கோளோடு நகர்வோன் என்றும் மக்கள் இனங்காணத் தொடங்கியதால் அவரைச் சுற்றியேற்படுத்தப்பட்ட ஒளிவிம்பம் மெல்ல மெல்ல அகலத்தொடக்கியது. நிறுவனமொன்றின் தவறுகளைத் திருத்த விரும்பும் ஒருவன் முதலில் அதனை உரியவழிகளில் தீர்க்கவே முயற்சிப்பான். அவை வெற்றிபெறாதவிடத்து மட்டுமே அதற்காகப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டப் பொதுவெளிக்கு அவற்றைக் கொண்டு வருவான். இவையாவற்றுக்குமுன் அக்குறைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதுடன் அதற்கான ஆதாரங்களையும் இயன்றவரை சேகரிக்கத்திருப்பான். இவை எதுவும் இல்லாத அர்ச்சுனாவின் செயற்பாடுகள் அவர் உண்மையில் குறைகளைக் களைவதற்காகவன்றி வேறு தேவைகளுக்காக முயற்சிக்கிறார் என்பதை மக்கள் படிப்படியாக விளங்கிக் கொள்ளத் தலைப்பட்டனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடங்கிய அவரது குற்றச்சாட்டுகள் மாவட்டம், மாகாணம், போதனா வைத்தியசாலை என வைத்தியத்துறை முழுவதுமே சாக்கடை தான்மட்டும் சந்தனம் என்ற நிலைக்கு உயர்ந்தபோதே அவர்தொடர்பான விம்பமும் சரியத் தொடங்கிவிட்டது. அவரது குற்றச்சாட்டுகள் எவற்றுக்குமே ஆதாரங்களை முன்வைக்காமையினால் வழக்குகளுக்குமேல் வழக்குகளாக நாளாந்தம் ஒவ்வொரு நீதிமன்றிலும் முன்னிலையாகவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.சாவகச்சேரியில் போற்றியும் தூக்கியும் கொண்டாடாடிய கூட்டத்தினர் படிப்படியாக உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர். அவருக்காகப் பிணை நின்றவர்களும் தாமாகவே அதிலிருந்து விலகிக் கொண்டனர். ஆனாலும் அதற்கிடையில் அவர் தனது மூலதனத்திற்கான பயனை அறுவடை செய்து கொண்டார். தொடர்ந்து அதனைத் தக்கவைப்பதற்கான செயற்பாடுகளிலேயே அவர் தற்போது ஈடுபட்டுவருகிறார். ஒருவர் தன்னை மற்றவர் கவனிக்க வேண்டும், தன்னைப்பற்றி பேசவேண்டும், புகழவேண்டும் என்று எண்ணுவது இயல்பானதே. அதற்காகப் பலர் நேர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். சிலர் எதிர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். ஒப்பீட்டு ரீதியில் எதிர்மறையான நடத்தைகள் அதிகவனத்தைப் பெறுவதுடன் அதன் பரவல் வேகமும் கூடுதலாக இருக்கும். அத்துடன் அவர்கள் அவ்வாறான நடத்தைகளை அடிக்கடி மேற்கொள்ளவும் விரும்புவர். இவர்கள் தமது நடத்தையின் நேரடி விளைவின்மீது கவனத்தைக் குவிப்பார்களேயன்றி அதன் தொடர்விளைவுகளின்மீது கவனம் செலுத்தமட்டார்கள். பிறர் நலனுக்காகச் செய்வதாகக் கூறும் இவர்கள் தமது நடத்தைகளால் பிறருக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகள் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. இவ்வாறான நடத்தைகளுக்கு சிறுவயதில் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள், தாழ்வு மனப்பாங்கு போன்ற பல காரணங்கள் இருக்கலாம் என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மக்களைத் தன்பால் ஈர்க்க இந்த முறையையே அர்ச்சுனா அதிகம் கையாள விரும்புகிறார். தான் வைத்தியத்துறையில் சாதனை செய்து பெயரெடுப்பதற்குப் பதிலாக மற்ற வைத்தியர்கள் பிழை என்று கூறி நக்கீரராக பெயரெடுக்க அர்ச்சுனா விரும்புகிறார்.அடிக்கடி செய்திகளில் தான் வரவேண்டும் எனக் கணக்குப் பண்ணுகிறார். ஒழுக்கத்தையும் அற, விழுமிய பண்புகளையும் அதிகம் மதிக்கும் சமூகமொன்றில் ஒருவரின் இவ்வாறான எதிர்மறை நடத்தைகள் அவர்மீதான வெறுப்பையே அதிகம் உருவாக்கும். ஆனால் அப்பண்புகள் குறைந்துவரும் ஒருசமூகத்தில் இதனை வரவேற்கும் போக்கு வளரும். இவ்வடிப்படையில் நோக்கும்போது அரச்சுனா எமது சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சியின் குறியீடா? சிலர் கூறுவதுபோன்று அர்ச்சுனா தெரியாமல் எதையும் செய்யவில்லை. அவர் அவ்வாறான பேர்வளியுமல்லர். தெரிந்தகொண்டே தேவைக்காகவே அனைத்தையும் செய்கிறார். அதனாற்றான் தான் செய்வதையெல்லாம் தானே ஊடகங்களில் நேரலையாக வெளிப்படுத்துகிறார். தனது செயல்களைக் கண்டு முகஞ்சுழிக்கும் பெருங் கூட்டத்தைவிட அதனை ரசித்து வரவேற்கும் சிறுகூட்டமே அவரது தற்போதைய இலக்கு. தரக்கரீதியாக சிந்திக்காத அக்கூட்டத்தைக் கெத்து காட்டுவதன்மூலம் அவர் கவரவிரும்புகிறார். பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவரின் கதிரை என்பது, அதிகாரிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து கலாட்ட செய்வது, கௌசல்யாவின் காதலனை இழிவுபடுத்துவது, கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றையெல்லாம் நேரலையில் சமூக ஊடகங்களில் வெளிவிடுவது போன்ற விடயங்கள் தவறானவை என்பது எம்.பி.பி எஸ் படித்தவருக்கு தெரியாததல்ல. இதன்மூலம் தனது வாக்கிலும் கணக்கிலும் வரவு கூடுமென அவர் எண்ணுகிறார். அவர் இவ்வாறு எண்ணுவது சரியென இங்கும் அங்கும் சிலர் இருப்பதுதான் கவலை. இது தமிழ்ச் சினிமாவின் தாக்கமாகவும் இருக்கலாம். அதில்தான் ரஜனி,விஜய் போன்ற கதாநாயகர்கள் செய்யும் சட்டரீதியற்ற மோசமான செயல்கள் யாவும் நியாயமானவை என நிறுவப்படுகின்றன. மக்களைக் கனவுலகில் மிதக்கவைத்து அவர்கள் பெட்டியை நிரப்புவது போல்தான் இதுவும். அடிக்கடி தான் எம்.பி.பி.எஸ் என்று கூறி மற்றவரை கல்வித் தரத்தின் மூலம் இழிவு படுத்துவதும் தெரிந்துகொண்டே செய்யும் ஒருவகை உளவியல் ரீதியான தாக்குதல்தான். ஒருவனை மட்டந்தட்ட, அடக்க இவ்வாறான முறைகள் எமது சமூகத்தில் நீண்ட காலமாகவே கையாளப்பட்டு வருகின்றன. சாதி,படிப்பு அல்லது பட்டங்கள், ஆங்கில மொழியறிவு அதற்கப்பால் தாய்,தந்தை, உறவுகளின் தவறான நடத்தைகள் என்பவை சிலர் கையாளும் அங்குசங்கள். அர்ச்சுனா எமது சமூகத்திற்கு அதிலும் குறிப்பாக இளையோருக்கு தவறானதொரு முன்மாதிரி. அவரை ஊக்குவிப்பது என்பது நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது. பணத்துக்காக தவறாகப் புனையும் யு ரியூப்பினரும், உண்மைநிலை அறியாது உதவும் புலம்பெயர் உறவுகளும் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய நேரமிது. தவறுகள் திருத்தப்பட வேண்டும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு)- கருத்து படங்கள்
- மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!
மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று! மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று (02) இடம்பெறவுள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் அன்னாரது உடல் பி.ப 3 மணியளவில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சகலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார். உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419299- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது – ஜனாதிபதி! நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் – கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல வருடங்களின் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது, வாகனங்களின் விலை அதிகரித்தாலும், சில நாட்கள் செல்லும்போது அதனைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளனர் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419302 😂- வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகின்றது! -நீதிபதி இளஞ்செழியன் தெரிவிப்பு. புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில்இ வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன் போது ” தான் வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகளும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகளும் கடமை புரிந்துள்ளதாகவும், 2012 – 2014இல் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராகவும், 2018-2022 மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் 8 ஆண்டுகள் திருகோணமலையில் கடமை புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாகவும், ஒன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் என 3 ஆண்டுகள் கல்முனையில் கடமையாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாது தான் பிறந்த யாழ்ப்பாணத்தில் 2015-2018 வரை மூன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியதாகத் தெரிவித்த அவர் மட்டக்களப்பில் சிவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஒராண்டு கடமை புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை தனது 28 ஆண்டுகள் நீதித்துறை வாழ்க்கை புரியாத புதிராக முடிவுறுவதாகத் தெரிவித்த அவர் இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419310- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜீவன் இறுதி அஞ்சலி! இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார். https://athavannews.com/2025/1419326- இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!
இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு! இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும். இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள்இ வீட்டு வசதிஇ வீதிகள்இ பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு இந்தியாவின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 1032 கோடியாகும். இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால்இ அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய வரவு செலவு திட்டத்தில் வௌிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பூடான் நாட்டுக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுக்காக 2025-26ம் ஆண்டுக்காக 2,150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419315 - மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!
Important Information
By using this site, you agree to our Terms of Use.