Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தகவலுக்கு நன்றி. ஆனாலும் இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்ட நினைவு வரவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல், தொழில் செய்துள்ளார் போலுள்ளது.
  2. கடந்த வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில்... தமிழரசு கட்சியை சேர்ந்த சிறிதரன், சி.வி.கே.சிவஞானம் போன்றோரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்காததால்... தையிட்டி விகாரையை தமிழரசு கட்சி வரவேற்கின்றதா? இவ்வளவு தூரம் கட்டிய விகாரையை, இடிக்க மாட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் கஜேந்திரமாருக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி, தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு முன் பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு. தமிழனின் பொது விடயத்தில் ஒன்றாக நிற்க முடியாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழனின் சாபக்கேடுகள்.
  3. கடந்த வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில்... தமிழரசு கட்சியை சேர்ந்த சிறிதரன், சி.வி.கே.சிவஞானம் போன்றோரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்காததால்... தையிட்டி விகாரையை தமிழரசு கட்சி வரவேற்கின்றதா? இவ்வளவு தூரம் கட்டிய விகாரையை, இடிக்க மாட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் கஜேந்திரமாருக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி, தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு முன் பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு. தமிழனின் பொது விடயத்தில் ஒன்றாக நிற்க முடியாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழனின் சாபக்கேடுகள்.
  4. யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும்போது... அர்ச்சுனா, கேள்வி கேட்டு துவைத்து எடுக்கப்போறார். தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்று மக்கள் எதிர் பார்த்து இருக்க, அங்கே சென்று தமிழர்களுக்கு எதிராக கதைக்குறான் பைத்தியம் , தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்பட்ட விகாரை அதை இடிக்க கூடாது , சிங்கள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படுகிறார்கள் இனபாகுபாடு காட்டும் தமிழர்கள் என்கிறான் , பைத்தியம் இந்து கோவில் அடையாளங்களை அகற்றி குருந்தூர்மலையில் விகாரை கட்டும் பொழுது பைத்தியம் கோமாவில் இருந்தானா? வேம்பு மரங்கள் அழித்து அரசமரம் நடும் போது ஊசி அர்ச்சுனா சிங்களப் பெண்களுடன் உறவில் இருந்து விட்டு, இப்போ கூறுகிறான் தமிழர்கள் விகாரைகளை இடிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள் என்றும் முட்டாள் தமிழர்கள் என்றும் கூறுகிறான். இவன் தமிழர்களை ஏமாற்றி வோட்டை பெற்று வெளிநாட்டு தமிழர்களின் காசைப்பெற்று சிங்களனைக்கு வேலை செய்கிறான் தமிழர்கள் ஏமாளிகள். நவம் சின்னத்தம்பி.
  5. யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும்போது... அர்ச்சுனா, கேள்வி கேட்டு துவைத்து எடுக்கப்போறார். தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்று மக்கள் எதிர் பார்த்து இருக்க, அங்கே சென்று தமிழர்களுக்கு எதிராக கதைக்குறான் பைத்தியம் , தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்பட்ட விகாரை அதை இடிக்க கூடாது , சிங்கள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படுகிறார்கள் இனபாகுபாடு காட்டும் தமிழர்கள் என்கிறான் , பைத்தியம் இந்து கோவில் அடையாளங்களை அகற்றி குருந்தூர்மலையில் விகாரை கட்டும் பொழுது பைத்தியம் கோமாவில் இருந்தானா? வேம்பு மரங்கள் அழித்து அரசமரம் நடும் போது ஊசி அர்ச்சுனா சிங்களப் பெண்களுடன் உறவில் இருந்து விட்டு, இப்போ கூறுகிறான் தமிழர்கள் விகாரைகளை இடிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள் என்றும் முட்டாள் தமிழர்கள் என்றும் கூறுகிறான். இவன் தமிழர்களை ஏமாற்றி வோட்டை பெற்று வெளிநாட்டு தமிழர்களின் காசைப்பெற்று சிங்களனைக்கு வேலை செய்கிறான் தமிழர்கள் ஏமாளிகள். நவம் சின்னத்தம்பி.
  6. வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்களைப் பார்த்து சிறீ லங்கா சனாதிபதி கேட்கிறார், "நாங்கள் பிரிந்திருக்க வேண்டுமா?" அவருடைய எதிர்பார்ப்பு/விருப்பம்... "வேண்டாம் வேண்டாம் வேண்டாம்!" என மக்கள் கூட்டம் ஒரே தரத்தில் குரல் கொடுப்பார்கள், கொடுக்க வேண்டும் என்பது. ஆனால் ஆயிரக்கணக்கில் குவிதிருந்த மக்கள் வெள்ளம் மௌனம் காக்கிறது. சிலர் சோளம்பொரியோ, எதுவோ சாப்பிட்டபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சனாதிபதி மீண்டும் கேட்கிறார், "விலகி இருப்போமா?" ஓரிரு அல்லக் கைகள், வேண்டாம் என்கின்றனர். அவ்வளவுதான்! கூட்டத்தைச் சேர்த்த எடுபிடிகள் அந்தக் கூட்டத்தை ட்ரெயின் பண்ணிக் கொண்டு வரவில்லை. அதற்காக அவர்கள் நிட்சயம் வாங்கிக் கட்டியிருப்பார்கள். ஆனால், அடுத்த முறை அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். தேர்தல் பிரச்சரத்துக்கு வந்த போது தன் பேச்சில் அநுர ஒரு விடயம் சொன்னார், "இந்த நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அரசியல் தலைவர்கள்தான். நாங்கள் இனி அவர்களோடு பேசப் போறதில்லை. மக்களான உங்களோடுதான் நேரடியாகப் பேசப் போகிறோம்" அந்தக் கூற்றின் ஆபத்தை எமது அரசியல்வாதிகள் எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியாது. மக்களுடன் பேசுவதற்க்கு முன்னர், மக்களை முட்டாளாக்கி மடைமாற்றம் செய்யும் வேலைத் திட்டத்தைத்தான் இப்போது சிங்களம் மேற்கொண்டு வருகிறது. ரோகண விஜயவீர மீதான சிங்கள இளைஞர்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது பேச்சுத் திறன் ஆகும். ஜேவிபி சிங்களதேசத்தில் மேலே வருவதற்கு முக்கிய காரணம் ரோகண வழி அவர்கள் கற்றுக் கொண்ட பேச்சுத் திறன் ஆகும். அடுத்தது, மக்களோடு மக்களாகப் பழகும் அவர்களின் திறன்/உத்தி. Down to Earth. இடதுசாரிப் பண்பாட்டைப் (போலியாகக் கூட) பின்பற்றுவர்களுக்கு இந்த ஆற்றல் இலகுவாக வந்துவிடும். ஜேவிபியின் இந்த இரண்டு ஆற்றலையும் சாதகமாகப் பயன்படுத்தியே தமிழர்களை வீழ்த்த முடிவெடுத்திருக்கிறது சிங்களம். ஏதோ யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் கடற்றொழில் நடப்பது போல் கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணத்தின் மூலை முடக்கெல்லாம் போய் படுத்துக் கிடப்பதுவும் இந்த அடிப்படையில்தான். அர்ச்சுனா, தன்னை ஒரு சாதாரணன் போல் காட்டிக் கொண்டு "அடேய், பிடேய்" என்று கதைப்பதும் இந்த அடிப்படையில்தான். மொத்தமாக தமிழர்களின் மண்டையைக் கழுவி, தம் "தோழர்கள்" ஆக்கி பின்னர் போட்டுத்தள்ளுவது. Gnanadas Kasinathar
  7. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத் மௌலானா தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொய்யான பிரசாரம் தொடர்பாகவும் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று செனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இமாம் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம். அதில் பலவிடயங்களை தெரியப்படுத்தியிருந்தோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார். அவரை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது”இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419538
  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர். மேலும் பல தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419530
  9. மகனும்... தந்தையும். அலுக்காமல் பார்க்கக் கூடிய... அழகிய படம்.
  10. ஒரு பக்கம் கிளீன் ஸ்ரீலங்கா. மறு பக்கம் டிஜிட்டல் ஸ்ரீலங்கா.
  11. ட்ரம்பின் நிதியுதவி முடக்க அறிவிப்பால் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு! USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் தொழிலை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் பல நிறுவனங்கள் நிதியுதவி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் திட்டங்களைத் தக்கவைக்க போராடுகின்றன. மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் USAID ஆதரவுடன் இயங்குகின்றன. இந்த நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “அமெரிக்கா முதல்” கொள்கையின் கீழ் வெளிநாட்டு உதவியை குறைக்கும் உந்துதலுடன் ஒத்துப்போகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர், “இந்த முடிவு எங்களை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது, இதனால் நாங்கள் ஊழியர்களை விடுவித்தோம், முடக்கம் தொடர்ந்தால், பல திட்டங்கள் சரிந்துவிடும்” என்று கூறினார். அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்க ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட பில்லியனர் எலோன் மஸ்க் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் நிதியுதவி நிறுத்தப்பட்டது. 2023 இல் அமெரிக்கா கிட்டத்தட்ட 180 நாடுகளுக்கு விநியோகித்த 72 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியில் பாதிக்கு மேல் USAID நிர்வகிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வெளிநாட்டு உதவியை மொத்தமாக முடக்கிய ஒரு வாரத்திற்குப் பின்னர், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் எதிர்காலம் – வெளிநாடுகளில் அமெரிக்காவின் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளின் மையத்தில் உள்ள நிறுவனம் – நிச்சயமற்றதாகவே உள்ளது. ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் USAID ஐ வெளியுறவுத் துறையின் அதிகாரத்தின் கீழ் வைப்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர். கடந்த வாரத்தில், நூற்றுக்கணக்கான USAID ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், முகவர் நிலையத்தில் பணிபுரியும் 60 மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டுப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொடர்புடைய வேலைகள் வரவிருக்கும் நாட்களில் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. https://athavannews.com/2025/1419516
  12. புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் ஆரம்பம்! டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1419517
  13. ஏங்க..வண்டில என் பேர எழுதுங்க. Ok.. இனிசியலோட எழுதிடுறேன் ... 🤣
  14. வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்! 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தயாராக உள்ளது. 2024 இல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 579,362 வாகனங்களை விடுவித்துள்ளது, இது 2023 இல் 238,997 ஆக இருந்தது. இறக்குமதி மற்றும் டிரான்ஸ்ஷிப்மென்ட் வாகனங்கள் இரண்டையும் கையாளும் வகையில் குறைந்தபட்சம் 4,000 வாகனங்களை சேமிக்கும் திறன் கொண்ட முற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்சன் கியூ குறிப்பிட்டார். வாகனம் கையாளும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை பராமரிக்க மொபைல் மற்றும் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1419506
  15. காற்றின் தரக்குறியீடு தொடர்பான முக்கியத் தகவல்! நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு மிதமான நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நுவரெலியா நகரில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக கொழும்பு 07, குருணாகல், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சீரான நிலையிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419505
  16. தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு! தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419446
  17. ட்ரம்பின் கட்டண உயர்வால் சரிவை சந்தித்த ஆசிய சந்தைகள்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரி விதிப்பதாக அளித்த வாக்குறுதியை தொடர்ந்து திங்கள்கிழமை (03) காலை ஆசிய பங்குகள் சரிந்தன. பெரிய நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் மற்றும் உலகளாவிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சாத்தியமான வர்த்தகப் போருக்கு முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் பதிலடி கொடுக்கும் கட்டணங்களுடன் பதிலடி கொடுப்பதாகக் கூறியுள்ளன, அதேநேரத்தில் சீனா “தொடர்பான எதிர் நடவடிக்கைகளுக்கு” உறுதியளித்தது மற்றும் உலக வர்த்தக அமைப்பில் ட்ரம்பின் நடவடிக்கைக்கு சவால் விடுவதாக உறுதியளித்தது. அமெரிக்காவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குடியேற்றத்தை தடுக்க இந்த வரிகள் அவசியம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஹொங்கொங்கின் ஹாங் செங் குறியீடு 1.3%, ஜப்பானின் நிக்கேய் 225 2.4%, தென் கொரியாவின் கோஸ்பி 3% மற்றும் அவுஸ்திரேலியாவின் ASX 200 1.8% திங்களன்று குறைந்தது. சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சீனாவின் பிரதான நிலப்பரப்பில் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், அமெரிக்க டொலர் வலிமையைக் காட்டியது, சீனாவின் யுவானுக்கு எதிராக சாதனையாக உயர்ந்தது, அதே நேரத்தில் கனேடிய டொலர் 2003 க்குப் பிறகு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது. ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது “மிக விரைவில்” வரிகளை விதிக்கவுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டனில் உறுதிபடுத்தியுள்ளார். குறுகிய காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கட்டணங்கள் பயனளிக்கும் அதே வேளையில், நீண்ட காலத்திற்கு அவை கணிசமான அபாயங்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டணங்களை திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது அமெரிக்காவை நம்புவதைக் குறைக்க மற்ற நாடுகளை ஊக்குவிக்கும், டொலரின் உலகளாவிய பங்கை பலவீனப்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். செவ்வாய்கிழமை நள்ளிரவில் அமலுக்கு வரவுள்ள கட்டணங்கள் குறித்து திங்கட்கிழமை கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களிடம் பேசவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25% வரியை எதிர்கொள்கின்றன, அதே நேரத்தில் சீனப் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும். https://athavannews.com/2025/1419456
  18. ஏனைய நாடுகளுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கர்களும் பாதிக்கப்படலாம் – ட்ரம்ப். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது விதித்துள்ள கடுமையான கட்டணங்கள் அமெரிக்கர்களுக்கு “குறுகிய கால” வலியை ஏற்படுத்தக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார். ஏனெனில் உலக சந்தைகளில் வரிகள் வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் மற்றும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய வரி விதிப்புகள் குறித்து கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களுடன் திங்களன்று பேசுவேன் என்றும் ட்ரம்ப் கூறினார். புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் இருந்து வொஷிங்டனுக்குத் திரும்பிய ட்ரம்ப் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனைக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் கட்டணங்களும் “நிச்சயமாக நடக்கும்” என்று இதன்போது கூறிய டரம்ப், ஆனால் எப்போது என்று சுட்டிக்காட்டவில்லை. கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% வரியும், சீனா மீது 10% வரியும் விதிக்கும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியின் திட்டம் உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் அமெரிக்கர்களுக்கு விலையை உயர்த்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்கவும் அவை தேவை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1419450

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.