Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கோவில் சுவற்றில் ஹால் டிக்கட் நம்பரை எழுதி வைத்தால் பரீட்சையில் பாஸாகிவிடலாம். விழுந்த பல்லை சாணி உருண்டைக்குள் வைத்து, வீட்டின் கூரை மேல் போட்டு விட்டால் சீக்கிரம் பல் முளைக்கும். மழை பெய்து கொண்டிருக்கும் போது.... வெயிலும் அடித்தால், நரிக்கு கல்யாணம் நடந்து கொண்டிருக்கும். யானையின் சாணியை மிதித்தால், படிப்பு வரும். சிவப்பு எறும்பு சாப்பிட்டால், கண் நல்லாய் தெரியும். 2020 ல் இந்தியா வல்லரசாகிவிடும். பென்சில் சீவிய குப்பையை... இண்டு நாள் அரிசி கஞ்சியில் ஊற வெச்சா அழிரப்பர் ஆயிடும். - இணையத்தில் பார்த்து ரசித்தவை. -
  2. @Kavi arunasalam, @பாலபத்ர ஓணாண்டி "சிரிப்போம் சிறப்போம்" பகுதியில்... கதைக்கிற கதையா இது ? பைத்தியக்காரருக்கு... ஸ்ரீதரன் வியாதி முத்திப் போச்சு. எங்கை... என்ன கதைக்கிறது, என்ற விவஸ்தை இல்லாததுகள். 😡 காகத்துக்கு, கனவிலையும்... 💩 ***** தின்னுற நினைப்புத்தான் வருமாம். 😎
  3. 1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும். 4)பல்லி கத்துனா கெட்ட சகுனம். 5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம். 7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது. 8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும். 9)படித்தால் வேலை கிடைக்கும். 10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....
  4. பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னின்று செயற்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://athavannews.com/2024/1414344
  5. போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு. நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரயில்வே திணைக்களத்தினால், இந்த தொழிற்சங்கங்களுக்கு 22 இலவச ரயில் பயண அனுமதிச் சீட்டுகளை ஒதுக்கியதன் விளைவாக, அதே ஆண்டில் அரசாங்கத்திற்கு 25 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது. நாடு முழுவதும் வழங்கப்படும் இந்த இலவச பயண அனுமதிச் சீட்டுகளை பெறுவதற்கு தொழிற்சங்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும், எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 பயண அனுமதிச் சீட்டுகளை வழங்குவது அனுமதிக்கப்பட்ட வரம்பை கணிசமாக மீறிய செயல் என்றும், இது, கணிசமான நிதி இழப்புகளுக்கு வழிவகுத்தது என்றும் கணக்காய்வாளர் நாயகம் கண்டறிந்துள்ளார். https://athavannews.com/2024/1414318
  6. மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை! மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்படும் நபர்களின் சாரதி அனுமதி உரிமத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றின் அனுமதியை கோருவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதவேளை, நேற்றுக் காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைதான 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், பொலிஸாரின் விசேட கண்காணிப்பு சோதனையின் போது, கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 120 பேரும், போக்குவரத்து விதிகளை மீறிய 1262 பேரும், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான குற்றங்களுக்காக 682 பேரும், மற்ற போக்குவரத்து விதிகளை மீறிய 5441 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் மொத்தம் 7950 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் டிசம்பர் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414324
  7. டெல்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி! நேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, ரணில் விக்ரமசிங்க மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு (Gursharan Kaur Kohli) தனது இரங்கலைத் தெரிவித்ததார். அதேநரேம், இறுதி அஞ்சலிக்காக புதி டெல்லியில் உள்ள இந்திய முன்னாள் பிரதமரின் இல்லத்துக்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இந்திய பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414330
  8. திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம்! திருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் என்று இலங்கை விமானப்படையின் (SLAF) ஊடகப் பேச்சாளர் கேப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் அல்ல என்றும், அது இலங்கையின் முப்படைக்கு சொந்தமானது அல்ல என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இது சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட இலக்கு ஆளில்லா விமானம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது பயிற்சியின் போது இடம்பெயர்ந்து இலங்கை கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருக்கலாம். அது வெடிபொருட்கள் எதையும் கொண்டு செல்லவில்லை என்றும், ஆளில்லா விமானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் அல்லது அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். எவ்வாறெனினும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1414337
  9. ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்! கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 விமானம், புதன்கிழமை தெற்கு ரஷ்யாவில் உள்ள செச்சினியா பிராந்தியத்தின் தலைநகரான க்ரோஸ்னிக்கு செல்லும் போது கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர். இந்த பேரழிவு குறித்த தனது ஆய்வின் கண்டுபிடிப்புகளை அசர்பைஜான் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. எனினும், விசாரணையை நன்கு அறிந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தான் விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வியாழனன்று தெரிவித்துள்ளன. விமானம் ரஷ்ய நகரான க்ரோஸ்னியை (Grozny) அணுகும் போது மின்னணு போர்முறை அமைப்புகளால் விமானத்தின் தகவல் தொடர்புகள் முடங்கிய பின்னர், ரஷ்ய ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் ஒரு ஆதாரத்தை மேற்கொள்ளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், விமானம் மீதான தாக்குதல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கவில்லை. அதேநேரம், விமானிகள் அவசரமாக தரையிறங்குமாறு கோரியதையடுத்து, விமானம் ரஷ்யாவில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக காஸ்பியன் கடலின் குறுக்கே அக்டாவ் நோக்கி பறக்குமாறும் இயக்கப்பட்டதாக அரசாங்க ஆதாரங்களை யூரோநியூஸ் மேற்கோளிட்டுள்ளது. இதனிடையே, பறவைகள் கூட்டத்தைத் தாக்கியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பகம் முதலில் கூறியது. அண்மைய வாரங்களில் உக்ரேனிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் வடக்கு காகசஸின் ஒரு பகுதியின் மீது விமானம் பறந்து கொண்டிருந்தது. மேலும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை காலை பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. சமூக ஊடகங்களில் தாக்கப்பட்ட விமானத்தின் காட்சிகள் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பு செங்குத்தான இறங்குவதைக் காட்டியது மற்றும் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. விபத்திற்கான காரணம் தொடர்பான ஊகங்களுக்கு எதிராக ரஷ்யா எச்சரித்துள்ளதுடன், விசாரணையின் முடிவுகளுக்கு முன் இவ்வாறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வெளியிடுவது தவறானது என்று சுட்டிக்காட்டியது. எவ்வாறெனினும், அசர்பைஜான் வியாழன் அன்று விபத்தில் பலியானவர்களுக்கு துக்க தினத்தை அனுசரித்தது. முன்னாள் சோவியத் நாட்டில் வசிப்பவர்கள் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு, நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தினர். https://athavannews.com/2024/1414297
  10. பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர, புட்டினுக்கு கடிதம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில், பிரிக்ஸ் குடும்பத்துடன் இணைவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. ஏனைய பிரிக்ஸ் நாடுகளையும் ஒரு கூட்டாளி நாடாக இணைவதற்கான கோரிக்கையுடன் நாங்கள் அணுகியுள்ளோம். மேலும், அவர்களின் நேர்மறையான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தூதுவர் பகீர் அம்சா ரஷ்ய ஊடகமான RIA நோவோஸ்டியிடம் கூறியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி புட்டினுக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதே மாதத்தில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நாட்டின் விண்ணப்பத்திற்கு ஆதரவைக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிரிக்ஸ் தற்போது 3.6 பில்லியன் மக்கள்தொகை கொண்ட பத்து நாடுகளை உள்ளடக்கியது. இந்த நாடுகள் உலகின் எண்ணெய் உற்பத்தியில் 40% மற்றும் உலகளாவிய பொருட்களின் ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414293
  11. யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா. எதிர்வரும் வருடம், தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, வருடாந்தரம் ஏற்பாடு செய்யப்படும் சபரிமலை யாத்திரைக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவிலான பக்தர்களை இணைத்துக் கொள்ளவும், அதற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையைப் பெற்றுத்தருமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். https://athavannews.com/2024/1414284
  12. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் – நடந்தது என்ன? கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்-கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி வழங்கியது? எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் என அர்ச்சுனா வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதில் அளித்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான சந்திரசேகர், இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமான குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், கிளிநொச்சியில் மதுபானசாலை அனுமதிப்பத்திர அமைவிடம் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் நகர திட்டமிடலுக்கு இடையூறாகவும், அதிகளவிலும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டு மக்களிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் சிபாரிசு வழங்கியவர்களின் விடயத்தை வெளியிட வேண்டும் எனவும், மதுபானசாலை அனுமதிகளுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனால் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1414244
  13. அதன் நிறமும்... சிவப்பு, மஞ்சள் என, புலிக்கொடியின் நிறத்தில் உள்ளது. 😂 அப்ப மகிந்தவுக்கு.... 160 பாதுகாப்பு படையினருடன், மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான். 🤣
  14. நோர்வே பஸ் விபத்தில் மூவர் உயிரிழப்பு, பலர் காயம்! மோசமான வானிலை காரணமாக வடக்கு நோர்வேயில் வியாழன் (26) அன்று பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இந்த விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், நார்விக்கிலிருந்து சோல்வேர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு நோர்வேயின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோபோடென் தீவுக்கூட்டத்தில், ராஃப்ட்சுண்டெட் அருகே உள்ள ஹாட்சல் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனையவர்கள் பாடசாலைகள் உட்பட அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தின் போது பஸ்ஸில் இருந்த பயணிகள் நோர்வே, இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பஸ்ஸில் சுமார் 20 சீன சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் ஐவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பைப் பேணி வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் விபத்தினால் உண்டான உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்குமாறு தேசத்தை வலியுறுத்தினார். https://athavannews.com/2024/1414262
  15. இடுப்பை கிள்ளுறது, பிரியாணி திருடுறது, பாலியல் வன்கொடுமை செய்யிறது என்றால்... தி.மு.க. காரனுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.
  16. இதுதான்... ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பது. 😂 எல்லாப் புகழும்.. சுமந்திரனுக்கே. 🤣
  17. மஹிந்த மீதான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்; அரசாங்கத்தின் பதில்! அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 முதல் ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சு திரும்பப் பெற்ற நடவடிக்கையையும் சாடிப் பேசினார். அத்துடன், அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்ததுடன், அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையிலேய‍ே பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சனில் வட்டகல மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளதுடன், இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். https://athavannews.com/2024/1414187
  18. சிவஞானம் சரியான "ரியூப் லைற்" போலை இருக்கு. தமிழரசு கட்சியை பிழக்க... சுத்துமாத்து சுமந்திரன் சதி செய்வது, இப்பதான் இவருக்கு தெரிந்து உள்ளது என்றால்... எப்படிப்பட்ட "அறிவாளியாக" இவர் இருந்திருக்கின்றார்? இதுவரை... சுத்துமாத்து சுமந்திரனின் தான்தோன்றித்தனமான, தரக்குறைவான செயல்பாடுகளுக்கு... கோவில் மாடு மாதிரி தலை ஆட்டிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் சிவஞானம், மற்றவர் செயலாளர் சத்தியமூர்த்தி. யாழ். களத்திலேயே... இவர்களின் சுத்துமாத்து சுமந்திரன் சார்பு செயல்பாடுகள், 75 வருட பாரம்பரியம் கொண்ட தமிழரசு கட்சியை, நடுத்தெருவில் நிறுத்தும் என்று பலராலும், பலமுறை எழுதப்பட்டுள்ளது. இது... அனைத்தும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இவருக்கு இப்போ தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்வது...? தாழும் கப்பலில் இருந்து தாங்கள் தப்பிக்க.. கடைந்தெடுத்த கடைசி அயோக்கியத்தனம்.
  19. அவர்கள் எல்லோரும்... ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுலா பிரயாணிகளாக இருக்க வாய்ப்பில்லை. இந்திய, ரஷ்ய, சீன, பாகிஸ்தானிய பிரஜைகளையும் சேர்க்க.... 6,474 வரும் என்று நினைக்கின்றேன். வந்ததில் அரைவாசி.... புளிச்சாதமும், சப்பாத்தியும், பருப்புக் கறியும் ஊரில் இருந்தே, "பார்சல்" கட்டிக் கொண்டு வாற ஆட்கள். 😂 🤣
  20. சுமந்திரன் குரூப்புக்கு.... கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழில் சொல்லியுள்ளதையும் வாசித்து விளங்க முடியவில்லை, காணொளியில் சொல்வதையும்... கேட்டு, கிரகிக்க முடியவில்லை. ஆதாரத்தை திரட்டிக் கொண்டு வாங்கோ... என்றால், அதற்கும் "வக்கு" இல்லை. 😂 சும்மா... "வள், வள்" என்று குலைத்துக் கொண்டு நிற்கிறார்கள். அப்ப... அவர்களுக்கு கடைசி முயற்சியாக, சிங்களத்தில் சொல்லிப் பார்ப்போம். 🤣 //පාර්ලිමේන්තුවට තේරී පත් වූ පසුවත් මම දේශපාලනයෙන් සමුගන්නවා ඔබ මත්පැන්වලට අවසර දෙන බව තහවුරු කළොත්. අසත්‍ය ප්‍රචාරවලට එරෙහිව ජනතාව දැනුවත් විය යුතු බව පාර්ලිමේන්තු මන්ත්‍රී ශිවඥානම් ශ්‍රීතරන් මහතා පැවසීය.// 😎 இதுகும்.... உங்களுக்கு புரியாவிட்டால், வேறை, ஏதோ... பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன். அதுக்கு.... வைத்தியம் பார்க்க குணமாகி விடும். 😂 வாங்கோ.... வந்து, வண்டியில ஏறுங்கோ... பேசிக் கொண்டே போகலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.