Everything posted by தமிழ் சிறி
-
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா!
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா! தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டுவரப்பட்டது. இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் அம்பலவாணர் அருள் வழிபாடு நடைபெற்று கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. https://athavannews.com/2024/1413994
-
கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்!
கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்! சிரியாவில் கிறிஸ்மஸ் மரத்தை எரித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரமான சுகைலாபியாவின் (Suqaylabiyah) பிரதான சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்டுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு போராளிகள் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்திய எழுச்சிக்கு தலைமை தாங்கிய முக்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கூறியுள்ளது. அதேநேரம், சிரியாவில் மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட சிரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராவதற்கு முந்தைய நாள் இரவு, முகமூடி அணிந்தவர்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் மர்மமான திரவத்தை ஊற்றுவதை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. அவர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார்களா அல்லது அது கொழுந்து விட்டு எரிவதற்கு வழிவகுத்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறெனினும், கிறிஸ்மஸ் மர தீ வைப்புக்கு எதிராக செவ்வாயன்று (24) தலைநகர் டமாஸ்கஸின் சில பகுதிகள் உட்பட பல தெருக்களில் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். டமாஸ்கஸின் கஸ்ஸா (Kassa) சுற்றுப்புறத்தில் சிலர் சிரியாவிலுள்ள வெளிநாட்டு போராளிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். டமாஸ்கஸின் பாப் டூமா சுற்றுப்புறத்தில், எதிர்ப்பாளர்கள் சிலுவை மற்றும் சிரியக் கொடிகளை ஏந்தி, “எங்கள் சிலுவைக்காக எங்கள் ஆன்மாக்களை தியாகம் செய்வோம்” என்று கோஷமிட்டனர். குர்துகள், ஆர்மேனியர்கள், அசிரியர்கள், கிறிஸ்தவர்கள், ட்ரூஸ், அலவைட் ஷியா மற்றும் அரபு சுன்னிகள் உட்பட பல இன மற்றும் மத குழுக்களின் தாயகமாக சிரியா உள்ளது. இவர்களில் இறுதியாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, பஷர் அல்-அசாத்தின் ஜனாதிபதி பதவி கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்தது, அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பல இடம்பெயர்ந்த சிரியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர் – செவ்வாயன்று, 25,000 க்கும் மேற்பட்ட சிரியர்கள் நாட்டிற்குத் திரும்பியதாக துருக்கி கூறியது. https://athavannews.com/2024/1413957
-
ஜப்பானில் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம்!
ஜப்பானில் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம்! ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறதுடம் அந்நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா உள்ளார். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், ‘சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் எனக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதுடன் மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024ஆம் ஆண்டில் பட்ட வேதனைகள், சோகங்களை மறக்கும் வகையில் ஜப்பானில் ஒசாகாவில் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழும் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் வரை வாய்விட்டு சிரித்து மக்கள் தங்கள் கவலைகளை மறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413923
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதை…. திறந்த மனதுடன் அணுக முடியாதவர்களுக்கு, சந்தேகம் ஒரு கேடு. 😂 🤣
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
ஏன்…. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், சந்திரகுமாரின், பெயரை சொன்னால்… காதுக்குள்ளை “வெடி” வைத்து விடுவாங்கள் எண்டு பயமோ… உங்களுக்கு… அந்தப் பயம் இருக்க வேணும். இளகின இரும்பை கண்டால்…. குமட்டிலை குந்தி இருந்து அடிப்பாங்களாம்.
-
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
எவரும் ஏற்காத நிலையில்... ரோஹிங்கா அகதிகளையும் வடக்கு மாகாணத்தில்தான் கொண்டு வந்து வைத்திருக்கின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும்... தமிழ் மக்கள் என்றோ ஒரு நாள், பெரும் விலை கொடுக்க வேண்டி வரும்.
-
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
இலங்கையில்... அமெரிக்கா, சீனா, இந்தியா... மும்முனை போட்டி. எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகுது என்று தெரியவில்லை.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂 அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால் உசாராக இருப்பார்கள். 😂 🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும், ஏராளனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙂 வாழ்க வளமுடன். 🙏
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
யாழ்.கள உறவுகளுக்கு, இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
- பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல “போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக” பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம் ஆண்டு 352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக அங்குள்ள மின் விளக்குகள் செயலிழந்து காணப்படுகின்றன. குறித்த பகுதி அசுத்தமாகக் காணப்படுவதோடு, துர்நாற்றமும் வீசி வருகின்றது. அத்துடன் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன” இவ்வாறு சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1413714- தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா. தாய்வானுக்கும் சீனாவுக்கும் போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில், தாய்வானுக்கு 57.1 கோடி டொலர்கள் பெறுமதிவாய்ந்த இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் ஒப்புதல் அளித்தார். அமெரிக்காவின் குறித்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அரசு நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தாய்வானுக்கு ஆயுதம் அளிப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். தாய்வான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அபாயகரமான நகர்வுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது. சுமாா் 2.3 கோடி மக்கள்தொகை கொண்ட தாய்வானை, சீனா தனது பிராந்தியமாக உரிமைக் கோரி வருகின்றது.இவ்விவகாரத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413782- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு முன்பு வந்திருந்தது. அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.- இரசித்த.... புகைப்படங்கள்.
- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அறிந்து வைப்பது, பிற்காலத்துக்கு நல்லம் தானே... 🤣- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அந்த 70 வயது இஸ்லாமியரின் விளம்பரம் ஏற்கப்பட்டதா. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!
இந்த ரோஹிங்யா முஸ்லீம் அகதிகளை பொறுப்பேற்க, ஏன்... இலங்கை முஸ்லீம்கள் முன்வரவில்லை. இவர்களை தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றி... எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை உருவாக்க அரசு திட்டமிடுகின்றதா. ஏற்கெனவே... போரால் பாதிக்கப் பட்டு இடம் பெயர்ந்த தமிழ் மக்களே பல வருடங்களாக சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல்... தத்தளிக்கின்றார்கள் தமிழர்களுக்குள் முஸ்லீம்களை ஏன்... கலக்க வேண்டும். ஏற்கெனவே கிழக்கில் முஸ்லீம்கள் செய்யும் சண்டித்தனம் போதாதா?- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
கபிதனுடைய அவதாரும், கந்தையா அண்ணையின் அவதாரும் பச்சை நிறத்தில் K என்று இருந்ததால் ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விட்டது. 😂 கந்தையா அண்ணை... அதற்குள் நைசாக புகுந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டேன். 😂 கபிதன் திருந்தி விட்டார் என்று நான் சந்தோசப் பட்டு 15 நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ரசோதரனும், அல்வாயனும், நுணாவிலானும் தட்டி எழுப்பி விட்டார்கள். 😃 சரி... அது, ஒரு கனவாகவே போகட்டும். 🤣 நுணா.... நான், நேற்று சுவிஸில் இருந்து ஜேர்மனி திரும்பி விட்டேன். 😃- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
கபிதன்... உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍 இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. 😂- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அப்பிடி எல்லாம் சொல்லாதீர்கள் ஈழப்பிரியன். 68 எல்லாம் ஒரு வயதா? இன்னும் நிறைய பார்க்க இருக்கு. மனதை உற்சாகமாக வைத்திருங்கள். ❤️- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
சிரிப்புக் குறி போட்டு எழுதுற கருத்துக்கும்... சீரியசாக பதில் எழுதுற ஆள் நீங்கள் ஒருவர்தான் கபிதன். 😂 வருசம் முடியுற நேரம்... கூல் டவுன் புரோ... 🤣- வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
இதே Formula, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம் சுமந்திரனுக்கும் பொருந்தி வர வேண்டும் என்பதே எனது நத்தார் கால பிரார்த்தனை. 😂- Imagine Dragons - Thunder
ROSÉ & Bruno Mars - APT. (Lyrics) | SONG OF THE YEAR! 채영이가 좋아하는 랜덤 게임, 랜덤 게임 Game start 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh Kissy face, kissy face sent to your phone, but I'm trying to kiss your lips for real (uh-huh, uh-huh) Red hearts, red hearts, that's what I'm on, yeah Come give me somethin' I can feel, oh-oh-oh Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh It's whatever, it's whatever, it's whatever you like (whoo) Turn this 아파트 into a club (uh-huh, uh-huh) I'm talking drink, dance, smoke, freak, party all night (come on) 건배, 건배, girl, what's up? Oh-oh-oh Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh Hey, so now you know the game Are you ready? 'Cause I'm comin' to get you, get you, get you Hold on, hold on, I'm on my way Yeah, yeah, yeah, yeah, yeah, I'm on my way Hold on, hold on, I'm on my way Yeah, yeah, yeah, yeah, yeah, I'm on my way Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh - பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.