Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக “தேசத்துரோக” விசாரணை! தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிரான “தேசத்துரோக” குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை அந்நாட்டு பொலிஸார் வியாழனன்று (05) ஆரம்பித்தனர். தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைவாக, குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபியிடம் விசாரணை மேற்கொள்ள தேசிய பொலிஸார் முகவர் நிலையத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இராஜினாமா செய்த பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், இராணுவ தளபதி ஜெனரல் பார்க் அன்-சு மற்றும் உள்துறை அமைச்சர் லீ சாங்-மின் ஆகியோர் மீதும் தேசத்துரோகம் மற்றும் பிற தொடர்புடைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) இராணுவச் சட்ட மூலத்தை தீர்மானமாக இரத்து செய்ததை அடுத்து, நாடு செவ்வாய்க்கிழமை (03) இரவு ஒரு வியத்தகு அரசியல் எழுச்சியைக் கண்டது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தென் கொரியாவின் முதல் இராணுவச் சட்டத்தை திணிக்க யூனின் அதிர்ச்சி முயற்சி, அதன் நவீன ஜனநாயக வரலாற்றில் நாட்டை அதன் ஆழ்ந்த கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இது நாடு முழுவதும் பரவலான கோபம் மற்றும் எதிர்ப்புக்களை தூண்டியதுடன், ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தில் பல தசாப்தங்களில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதன் பின்னணியில், யூனுக்கு எதிரான முறைப்பாடுகள் அரசுத் தரப்பிலும் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது தோல்வியுற்ற இராணுவச் சட்ட நடவடிக்கையை அடுத்து, ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான ஆறு எதிர்க்கட்சிகள் யூன் மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஆகியோருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்தனர். பாதுகாப்பு அமைச்சர் கிம் இராஜினாமா செய்ததையடுத்து அவர் தனது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், யூனுக்கு எதிரான பதவி நீக்க வாக்கெடுப்பு சனிக்கிழமை (07) நடைபெற உள்ளது. https://athavannews.com/2024/1411223
  2. உண்மைதான். அனுர அரசு... ஆரம்பத்திலேயே, அதிரடி நடவடிக்கை மூலம் இவரை கைது செய்து, இனி வரும் காலங்களில்... தேவையில்லாத வதந்திகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். காலம் காலமாக... இனவாதத்தை வைத்தே... அரசியல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த இப்படியான நடவடிக்கை மூலம்தான் கடிவாளம் போட முடியும்.
  3. மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா (Renuka Perera) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டிகாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தே அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1411149
  4. நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு? சந்தையில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பெய்து வருவதால், போதிய அளவு உப்பை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் உப்பின் விலை சடுதியாக அதிகரிக்கலாம் எனவும் வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 05 கிராம் உப்பை ஒருவர் சாப்பிட வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சிற்றுண்டி மற்றும் உலர் உணவு உற்பத்தியிலும் சில அளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்கள் விவசாய நடவடிக்கைகளிலும் உப்பைப் பயன்படுத்துகின்றனர். அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 38325 மெட்ரிக் தொன் உப்பும், 46,000 மெட்ரிக் தொன் உப்பும் தேவைப்படுகிறது. அம்பாந்தோட்டை,புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரச சுரங்கங்களில் மட்டுமே இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1411147
  5. உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ! இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ (IndiGo), ஐரோப்பிய ஒன்றிய உரிமைகோரல் செயலாக்க நிறுவனமான ஏர்ஹெல்ப் (AirHelp) ஆல் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் உலகின் மோசமான விமான நிறுவனங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், விமான நிறுவனம் குறித்த அறிக்கையை முற்றாக நிராகரித்தது மற்றும் கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏர்ஹெல்ப் அதன் அறிக்கையில், இண்டிகோவுக்கு 4.80 மதிப்பெண்களை வழங்கியது, பட்டியலில் உள்ள 109 விமான நிறுவனங்களில் 103 ஆவது இடத்தைப் பிடித்தது. ஏர்ஹெல்ப் தரவரிசைகள் விமான நிறுவனங்களின் உரிய நேரத்திலின செயல்திறன், வாடிக்கையாளர் கருத்து மற்றும் இழப்பீடு கோரிக்கைகளை செயலாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளன. தரவரிசையில் உள்ள மற்றைய ஒரேயொரு இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா 6.15 மதிப்பெண்களுடன் 61 ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரம், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் 8.12 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், கட்டார் ஏர்வேஸ் 8.11 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் 8.04 மதிப்பெண்களுடன் மூன்றாவதும் இடத்திலும் உள்ளன. இந்தியாவின் மிகவும் விருப்பமான விமான நிறுவனமாக, IndiGo இந்த கணக்கெடுப்பினை மறுத்துள்ளது. நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில், குறைந்த விலையில் மரியாதையான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்கியதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இண்டிகோவின் உள்நாட்டு சந்தைப் பங்கு 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளது மற்றும் 2023 ஆம் ஆண்டில் விமான நிறுவனம் 100 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கொண்டு சென்றது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து பணிகயமும் (DGCA) இண்டிகோவின் கூற்றுகளை ஆதரிப்பதாக தெரிவிக்கின்றது. இண்டிகோ 10,000 பயணிகளுக்கு வெறும் 0.2 சதம் முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்துள்ளதாக ஒக்டோபர் விமானப் போக்குவரத்து அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இது நாட்டிலேயே குறைவான முறைப்பாடு அளிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411177
  6. ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடல்; நெரிசலில் தாய் உயிரிழப்பு, மகன் காயம்! ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் புதன்கிழமை மாலை ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் செனற் 35 வயதுடைய பெண்ணொருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும், அவரது ஒன்பது வயதுடைய மகன் பலத்த காயமடைந்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் சிறப்பு காட்சிக்கா வருகை தந்திருந்த தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் அலை மோதியமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திரையிடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் வந்திருந்த நடிகரைக் காண ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்குக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒருகட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போன நிலையில், பொலிஸார் லத்தி அடி தாக்குதல் நடத்தியதால் பயங்கர நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் அவரது மகன் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. https://athavannews.com/2024/1411159
  7. நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வி: கவிழ்ந்தது பிரான்ஸ் அரசாங்கம்! பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை (04) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியதுடன், பிரான்ஸ் பிரதமர் மைக்கல் பார்னியரையும் (Michel Barnier) பதவியிலிருந்து வெளியேற்ற கட்டாயப்படுத்தியது. பிரதமர் மைக்கேல் பார்னியர் மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 331 தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி சட்டமியற்றுபவர்கள் ஆதரவாக வாக்குகளை அளித்தனர். பார்னியர் சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தனது வரவு செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பின்றி கட்டாயப்படுத்தியதை அடுத்து எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை முன்வைத்தன. 1962 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரான்சின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும். இந்த வளர்ச்சியானது பிரான்சின் அரசியல் உறுதியற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும், கோடையில் நடந்த திடீர் தேர்தல்களுக்குப் பின்னர் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு குழுவிற்கும் பெரும்பான்மை இல்லை. பார்னியர் இப்போது தனது அரசாங்கத்தின் இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், அவரால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமும் தற்சமயம் செலிழந்து விட்டது. முன்னாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளராக இருந்த பார்னியர், தனது இராஜினாமா மற்றும் அவரது அரசாங்கத்தின் இராஜினாமாவை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 73 வயதான அவர் செப்டம்பரில் பிரதமராக நியமிக்கப்பட்டார் மற்றும் பிரான்சின் நவீன குடியரசில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதமர் ஆகியுள்ளார். https://athavannews.com/2024/1411112
  8. 100,000 டொலர்களை கடந்த பிட்கொயின் பெறுமதி! டிஜிட்டல் நாணய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பிட்கொயின் (Bitcoin) பெறுமதி 100,000 அமெரிக்க டொலர்களை கடந்தது. அண்மைய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் டிஜிட்டல் நாணயம் குறித்த நம்பிக்கை முதலீட்டார்களிடம் அதிகரித்து வரும் நிலையில் பிட்கொயினின் பெறுமதி உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயின் பெறுமதி இருமடங்காக அதிகரித்துள்ளது மற்றும் ட்ரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நான்கு வாரங்களில் சுமார் 45% உயர்ந்துள்ளது. வியாழன் (05) அன்று 02,40 GMT மணி நேரப்படி பிட்கொயின் ஒன்றின் பெறுமதி முந்தைய நாளை விட 2.2% அதிகரித்து 100,027 அமெரிக்க டொலர்களில் வர்த்தகம் செய்யப்பட்டது. எதிர்வரும் வாரங்களில் அதன் பெறுமதியானது $120,000 எட்டும் என்றும் இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள நிதி நிறுவனமான Mudrex இன் தலைமை நிறைவேற்று அதிகாரி எடுல் படேல் (Edul Patel) கணித்துள்ளார். https://athavannews.com/2024/1411185
  9. இப்ப... உங்களுக்கு, என்ன பிரச்சினை? கீழே உள்ள செய்தி தமிழில் தானே உள்ளது. அதனை நீங்கள் வாசித்து விளங்கிக் கொள்வதில், உங்களுக்கு ஏதாவது கோளாறு உள்ளதா? கிளிநொச்சியில்.... அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் எல்லோரினது சாராயக் கடைகளும் உள்ளது தெரியுமா? ஸ்ரீதரன்... //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று... வெளிப்படையாக அறிவித்த பின்பும், லூசுத் தனமாக எழுதிக் கொண்டு இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். 👇 கீழே உள்ள இணைப்பை... உங்கள் மூளையில் பதியும் வரை... திரும்ப, திரும்ப வாசிக்கவும். அப்படியும் விளங்கவில்லை என்றால், ஏதோ... கோளாறு இருக்குது என்று அர்த்தம். நல்ல வைத்தியரை நாடவும். நன்றி. 👇
  10. நாய்... கடித்து இறந்த கோழியை, சமைத்து சாப்பிடலாமா? 😂
  11. இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர். சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், சாணக்கியன் ராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன்,கவீந்திரன் கோடீஸ்வரன், இளயதம்பி சிறிநாத்,துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர். https://athavannews.com/2024/1411097
  12. மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளியானது! புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ”இக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும். மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாவட்ட ரீதியாக பார்க்கும் பொழுது கொழும்பு 24, கம்பஹா 18, களுத்துறை 8, காலி 9, மாத்தறை 5, அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை 5, கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அநுராதபுரம் 4, பொலனறுவை 3, புத்தளம் 6, குருணாகலை 8, பதுளை 9, மொணராகலை 7, இரத்தினபுரி 6 , கேகாலை 2 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எந்த விதமான மதுபான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இப் பட்டியலின் பிரகாரமே சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சமீபத்தில் பேசுபொருளாக மாறியிருந்தன. அரசியல் இலஞ்சத்தின் போர்வையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்களும் அறியக்கூடிய வகையில் அதனை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1411089
  13. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா! கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சீனாவுடனான வர்த்தகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. இந்நிலையிலேயே , சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் கணினிகளுக்கான சிப்புகளைத் தயாரிக்கும் இயந்திரங்கள், மென்பொருள்கள், உயர்-அலைத்தொகுப்பு நினைவக சிப்புகள் ஆகியவற்றை அமெரிக்கா சேர்த்தது. இந்தப் பொருள்கள் உயர்தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும். சீன இறக்குமதி பொருள்களுக்கு கூடுதல் வரி வரி விதிக்கப்போவதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள சூழலில், பைடன் தலைமையிலான அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக சீன வர்த்தகத் துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. அப் பொருட்கள் சாதாரண பட்டரி முதல் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுத தளவாடங்கள் வரை பல்வேறு பொருள்களின் தயாரிப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1411032
  14. கிளிப்பிள்ளை மாதிரி... சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வேறு மாதிரி சிந்திக்கும் திறன் இருக்கவும் வேணுமே... தலையில், உள்ள கொள்வனவு அம்புட்டுத்தான். இதுவரை... இவர்கள் இந்தியாவை நம்பி, தமிழர்களுக்கு இந்தியாவால் கிடைத்த நன்மை ஒன்றை சொல்வாரா.
  15. அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன். அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது எனவும், 13ஆவது திருத்தம் அவசியம் எனவும் செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாட்டில் மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410848
  16. ஜனாதிபதியைச் சந்திக்க சாணக்கியனுக்கு சந்தர்ப்பம்! ஜே.வி.பியன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்த விடயத்தை தாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னநாயக்க ”இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை எனக்கு உள்ளது. ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை சபையில் எழுப்ப வேண்டாம். இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். எனவே நாம் அதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றோம். ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவை விடுங்கள். நாம் ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துகின்றோம். இந்த விடயம் குறித்து நீங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது சாணக்கியனுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். ஜனாதிபதியுடனான சந்திப்பினை இந்த வாரத்திற்குள் ஒழுங்குபடுத்துகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410892
  17. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று! நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ள மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான, சபை ஒத்திவைப்பு விவாதம், இன்று மாலை 05.30 மணி தொடக்கம் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 05 மணிக்கு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1410944
  18. அனலை தீவு கடற்தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்துவருமாறு கோரிக்கை! தமிழ்நாடு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைத்தீவு கடற்தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரண்டு கடற்தொழிலாளர்களும், கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில் , தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இருவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1410951
  19. அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு! எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க குறிப்பிட்டார். பீயர், கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார். இதனிடையே, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வேளாண்மைப் பணிப்பாளர் கே. பி. குணரத்ன குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1410954
  20. வுஹான் ஆய்வகத்திலிருந்து கொவிட் கசிவு; அமெரிக்க விசாரணையில் தகவல்! கொவிட் தொற்றுநோய் உலகைப் பேரழிவிற்கு உட்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைரஸ் சீனவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைமையிலான ஹவுஸ் செலக்ட் துணைக்குழுவானது 1.1 மில்லியன் அமெரிக்கர்களைக் கொன்ற தொற்று நோய் குறித்த இரண்டு ஆண்டு கால விசாரணையை நிறைவு செய்த பின்னர் மேற்கண்ட அறிவிப்பினை திங்களன்று (2) வெளியிட்டது. AFP செய்தி நிறுவனத்தின்படி, குழுவானது 25 கூட்டங்கள், 30 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் அதன் முடிவை எட்டியது. 520 பக்க அறிக்கையானது மத்திய, மாநில அளவிலான பதில்கள், வைரஸின் தோற்றம், தடுப்பூசி முயற்சிகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தது. இந்த ஆய்வானது அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அடுத்த தொற்றுநோயைக் கணிக்கவும் அவற்றிலிருந்து தயாராகவும், அடுத்த தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், அடுத்த தொற்றுநோயைத் தடுக்கவும் உதவும் என்று குழுவின் குடியரசுக் கட்சியின் தலைவர் பிராட் வென்ஸ்ட்ரப் காங்கிரசுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1410893
  21. இந்த வருடம்.... கோசான் எழுதிய கருத்துக்களில், மேலே உள்ளதுதான்... மிகச் சிறந்த கருத்து. 👍 இருக்கின்ற சூழ்நிலையை யதார்த்தமாக அணுகும் மனநிலை, பலருக்கு இல்லை என்பது கவலையான விடயம்.
  22. ஆம். அதில் என்ன சந்தேகம். 😂 சுமந்திரனை விட... பத்தாயிரம் மடங்கு திறம். 🤣 இதற்குள் சுமந்திரன் வந்தால்.... நான் திரும்பவும் அரசியலில் குதிக்க வேண்டி வரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.