Everything posted by தமிழ் சிறி
-
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !
அதன் நிறமும்... சிவப்பு, மஞ்சள் என, புலிக்கொடியின் நிறத்தில் உள்ளது. 😂 அப்ப மகிந்தவுக்கு.... 160 பாதுகாப்பு படையினருடன், மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான். 🤣
-
நோர்வே பஸ் விபத்தில் மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!
நோர்வே பஸ் விபத்தில் மூவர் உயிரிழப்பு, பலர் காயம்! மோசமான வானிலை காரணமாக வடக்கு நோர்வேயில் வியாழன் (26) அன்று பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இந்த விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், நார்விக்கிலிருந்து சோல்வேர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு நோர்வேயின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோபோடென் தீவுக்கூட்டத்தில், ராஃப்ட்சுண்டெட் அருகே உள்ள ஹாட்சல் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனையவர்கள் பாடசாலைகள் உட்பட அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தின் போது பஸ்ஸில் இருந்த பயணிகள் நோர்வே, இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பஸ்ஸில் சுமார் 20 சீன சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் ஐவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பைப் பேணி வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் விபத்தினால் உண்டான உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்குமாறு தேசத்தை வலியுறுத்தினார். https://athavannews.com/2024/1414262
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
இடுப்பை கிள்ளுறது, பிரியாணி திருடுறது, பாலியல் வன்கொடுமை செய்யிறது என்றால்... தி.மு.க. காரனுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
இதுதான்... ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பது. 😂 எல்லாப் புகழும்.. சுமந்திரனுக்கே. 🤣- மஹிந்த மீதான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்; அரசாங்கத்தின் பதில்!
மஹிந்த மீதான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்; அரசாங்கத்தின் பதில்! அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 முதல் ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சு திரும்பப் பெற்ற நடவடிக்கையையும் சாடிப் பேசினார். அத்துடன், அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்ததுடன், அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையிலேயே பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சனில் வட்டகல மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளதுடன், இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். https://athavannews.com/2024/1414187- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
சிவஞானம் சரியான "ரியூப் லைற்" போலை இருக்கு. தமிழரசு கட்சியை பிழக்க... சுத்துமாத்து சுமந்திரன் சதி செய்வது, இப்பதான் இவருக்கு தெரிந்து உள்ளது என்றால்... எப்படிப்பட்ட "அறிவாளியாக" இவர் இருந்திருக்கின்றார்? இதுவரை... சுத்துமாத்து சுமந்திரனின் தான்தோன்றித்தனமான, தரக்குறைவான செயல்பாடுகளுக்கு... கோவில் மாடு மாதிரி தலை ஆட்டிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் சிவஞானம், மற்றவர் செயலாளர் சத்தியமூர்த்தி. யாழ். களத்திலேயே... இவர்களின் சுத்துமாத்து சுமந்திரன் சார்பு செயல்பாடுகள், 75 வருட பாரம்பரியம் கொண்ட தமிழரசு கட்சியை, நடுத்தெருவில் நிறுத்தும் என்று பலராலும், பலமுறை எழுதப்பட்டுள்ளது. இது... அனைத்தும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இவருக்கு இப்போ தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்வது...? தாழும் கப்பலில் இருந்து தாங்கள் தப்பிக்க.. கடைந்தெடுத்த கடைசி அயோக்கியத்தனம்.- 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!
அவர்கள் எல்லோரும்... ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுலா பிரயாணிகளாக இருக்க வாய்ப்பில்லை. இந்திய, ரஷ்ய, சீன, பாகிஸ்தானிய பிரஜைகளையும் சேர்க்க.... 6,474 வரும் என்று நினைக்கின்றேன். வந்ததில் அரைவாசி.... புளிச்சாதமும், சப்பாத்தியும், பருப்புக் கறியும் ஊரில் இருந்தே, "பார்சல்" கட்டிக் கொண்டு வாற ஆட்கள். 😂 🤣- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
சுமந்திரன் குரூப்புக்கு.... கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழில் சொல்லியுள்ளதையும் வாசித்து விளங்க முடியவில்லை, காணொளியில் சொல்வதையும்... கேட்டு, கிரகிக்க முடியவில்லை. ஆதாரத்தை திரட்டிக் கொண்டு வாங்கோ... என்றால், அதற்கும் "வக்கு" இல்லை. 😂 சும்மா... "வள், வள்" என்று குலைத்துக் கொண்டு நிற்கிறார்கள். அப்ப... அவர்களுக்கு கடைசி முயற்சியாக, சிங்களத்தில் சொல்லிப் பார்ப்போம். 🤣 //පාර්ලිමේන්තුවට තේරී පත් වූ පසුවත් මම දේශපාලනයෙන් සමුගන්නවා ඔබ මත්පැන්වලට අවසර දෙන බව තහවුරු කළොත්. අසත්ය ප්රචාරවලට එරෙහිව ජනතාව දැනුවත් විය යුතු බව පාර්ලිමේන්තු මන්ත්රී ශිවඥානම් ශ්රීතරන් මහතා පැවසීය.// 😎 இதுகும்.... உங்களுக்கு புரியாவிட்டால், வேறை, ஏதோ... பிரச்சினை இருக்குது என்று நினைக்கின்றேன். அதுக்கு.... வைத்தியம் பார்க்க குணமாகி விடும். 😂 வாங்கோ.... வந்து, வண்டியில ஏறுங்கோ... பேசிக் கொண்டே போகலாம்.- கருத்து படங்கள்
- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் உண்டான வாக்குவதாம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து கூட்டத்தை அமைதி நிலைக்கு கொண்டு வந்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமான குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://athavannews.com/2024/1414177- தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவனுக்கு வெள்ளி பதக்கம்
தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவனுக்கு வெள்ளி பதக்கம். தேசிய மட்ட இளையோருக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் T.தரனிதரன் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளான். இளையோருக்கான இவ் குத்துச்சண்டை போட்டியானது , 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 kg எடைப்பிரிவில் போட்டியிட்ட இம் மாணவன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டான். இப் போட்டியில் கண்டி வித்தியார்த்த கல்லூரி மாணவனுடன் தெரிவு போட்டியில் வெற்றியீட்டி அரையிறுதிபோட்டிக்கு தெரிவாகிய தரனிதரன் அரை இறுதிப்போட்டியில் ,கொழும்பு ரோயல் கல்லூரி மாணவனுடன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தார். இம்மாணவனுக்கான முழுமையான பயிற்சியினையும் வழிகாட்டலினையும் குத்துச்சண்டையின் வடமாகாண தலைமை பயிற்றுவிப்பாளர் எம்.நிக்சன் வழங்கியிருந்தார். இவரது முழுமையான வழிகாட்டலில் வெற்றி பெற்ற இம் மாணவன் வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். https://athavannews.com/2024/1414114- அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்!
அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்! இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்படி, இன்று முதல் அரிசி இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அரச வர்த்தக பல்வேறு சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று (25) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1414145- 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!
2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது! 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே அந்த இலக்கை அடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. டிசம்பர் முதல் பாதியில் மாத்திரம் மொத்தம் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். https://athavannews.com/2024/1414160- கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
கஜகஸ்தான் விமான விபத்து; 38 பேர் மரணம், 29 பேர் உயிர் பிழைப்பு! 67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் ஒன்று புதன்கிழமை (25) கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாக கசாக் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஒரு விரிவான மீட்பு நடவடிக்கையில், இரண்டு குழந்தைகள் உட்பட 29 உயிர் பிழைத்த நிலையில் மீட்க்கப்பட்டதாகவும் கஜகஸ்தானின் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ் (Kanat Bozumbayev) தெரிவித்துள்ளார். அவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 என் விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பயணம் செய்து கொண்டிருந்தது. எனினும், அது அக்டாவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறங்க முயற்சித்த போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் உயிர் பிழைத்த அனைவரும் அவசர மீட்பு பணிகள் மூலமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று கசாக் அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்களில் எவரும் கசாக் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் கூறியுள்ளார். இந்த நிலையில், ஒரு தேடல் குழு விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக அசர்பைஜான் அரச செய்தி நிறுவனம் AZERTAC தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் பயணிகளின் குடும்பங்களுக்கு உதவவும் கஜகஸ்தான் அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை அமைத்துள்ளது. விசாரணையில் அசர்பைஜானுடன் அரசாங்கம் ஒத்துழைக்கும் என்றும் அது கூறியது. விபத்து குறித்து வெளியோன வீடியோவில், விமானம் விபத்துக்கு முன் விமானநிலையத்தை தவறாக சுற்றி வந்தது. தரையில் மோதியவுடன், விமானம் தீப்பிடித்து எரிந்தது, சிறிது நேரத்தில் இடிபாடுகளில் இருந்து இரத்தம் தோய்ந்த பயணிகள் வெளியே வந்ததை காட்டுகின்றது. https://athavannews.com/2024/1414075- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
ஏற்கனவே பலரை மிரட்டி…. பாலியல் வன்கொடுமை செய்த திருட்டுப் பூனை தான் சிக்கியுள்ளது. மறியலில் இருந்து திருந்தாதவனுக்கு…. சவூதி அரேபியா தண்டனைதான் சரி வரும். பாக்கு வெட்டிக்கு, வேலை கொடுங்க….- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
தலைப்பையும்…. முதல் பந்தியையும் வாசித்து விட்டு கருத்து எழுதினால் இப்பிடியான பிழை வரத்தான் பார்க்கும். 😂 🤣 தவறுக்கு வருந்துகின்றேன் நியாயம் & சாத்தான். 🙂 உங்களுக்குத்தான்… பிரச்சினை சரியாக விளங்கியிருக்கு. 😁 😂 🤣- முள்ளிவாய்க்கால் செல்வதை தவிர்க்கும் மெல்கம் ரஞ்சித்
மெல்கம் ரஞ்சித்தின் செயல்பாடுகளுக்கும் இனவாதிகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இவர் ஒரு வெள்ளை உடை அணிந்த, மொட்டை அடிக்காத பிக்கு. 🤣 சிலகாலத்திற்கு முன்… தமிழர்களுக்கு தனியாக ஒரு கர்தினால் ஆண்டகை வேண்டும் என்று ஒரு கோரிக்கை வடக்கு, கிழக்கில் இருந்து முன்வைக்கப் பட்டதாக வாசித்த நினைவு.- இரசித்த.... புகைப்படங்கள்.
- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
புலவர்.... தேர்தலுக்கு முன்பு இருந்து இன்றுவரை... கடந்த ஒரு வருடமாக, சுமந்திரனின் அல்லக்கைகள்... தமிழர்களுக்கு வேறு ஒரு பிரச்சினையும் இல்லை என்ற மாதிரி இதை வைத்தே அரசியல் செய்யலாம் என்று முட்டாள் தனமாக செயல் படுகின்றார்கள். இந்த அல்லக்கைகள் தான் சுமந்திரனை பப்பாவில் ஏற்றி விட்டு, தோல்வியை கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும்... சுமந்திரனுக்கு ஆப்பு அடிக்கிறது என்றே முடிவு எடுத்து விட்டார்கள் போலுள்ளது. 😂- "உண்டியலில் விழுந்த ஐபோன் சாமிக்கே சொந்தம்" - திருப்போரூர் முருகன் கோவிலில் நடந்தது என்ன?
இந்தியரைப் போல் மோசமான சட்ட திட்டங்களை கதைக்கும் மனிதரை உலகத்தில் எங்கும் காண முடியாது. ஒருவனின்... ஐ - போன் உண்டியலில் தவறி விழுந்தால் அதை அவனுடையதா என சோதித்துப் பார்த்துவிட்டு, அவனிடம் திருப்பி கொடுப்பதுதானே மனிதாபிமானம். அதில் அவன்.. எத்தனை தரவுகளை சேமித்து வைத்தானோ... அவற்றை மீட்டு எடுக்க எவ்வளவு காலம் எடுக்குமோ. சில முக்கிய படங்கள் அவனுக்கு கிடைக்காமலே போகலாம். இப்படிச் செய்த கோவில் நிர்வாகம் கண்டனத்துக்குரியது.- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்குகளுக்கு தனித்தீவு. புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்.- "உண்டியலில் விழுந்த ஐபோன் சாமிக்கே சொந்தம்" - திருப்போரூர் முருகன் கோவிலில் நடந்தது என்ன?
பேங்க் மேனேஜர் : கிரிடிட் கார்டு பில்லை, எப்ப சார் கட்டுவீங்க...? வாடிக்கையாளர்: கட்ட முடியாது சார். பில்லை முருகன் கோவில் உண்டியல போட்டுட்டேன்... இனிமே நீங்க, முருகன் கிட்ட தான் வசூல் பண்ணிக்கணும்....😂😂😂- "உண்டியலில் விழுந்த ஐபோன் சாமிக்கே சொந்தம்" - திருப்போரூர் முருகன் கோவிலில் நடந்தது என்ன?
திருப்போரூர் கோவில் சம்பவம். - சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.