Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஒரு சம்பந்தமும் இல்லை. 😀 ஆனால்... நான், சம்பந்தப் படுத்திக் கொண்டேன். 😂 இதனால் கற்றுக் கொள்வது யாதெனில்.... ஏமாற்றுபவர்கள்... எப்பவும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். 🤣
  2. போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, 55,000 வீடுகள் கட்டித் தரப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பை... மீள கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட மூவர் இராமேஸ்வரத்தில் கைது.
  3. //சந்திர மண்டலத்துக்கு சென்று கூட... அரிசி கொண்டு வந்து தருவோம்.// ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா.... 50 வருசத்துக்கு முன் சொன்னது. இருக்கிறதிலை... இதுதான், முதல் பொய் என நினைக்கின்றேன். 😂
  4. தலைவர் வந்து கேட்டால்... சேர்த்த காசை, திருப்பி தருவோம். கச்தீவை... மீட்போம். உதயநிதி அரசியலுக்கு வர மாட்டார். துவாரகா... சுவிற்சலாந்தில் வசிக்கின்றார். சதாம் குசைன்... அணு ஆயுதம் வைத்திருக்கின்றார். வடக்கில் வசந்தம்... கிழக்கில் உதயம்.... யாழ்ப்பாணத்தை... சிங்கப்பூராக மாற்றுவோம். 😂
  5. குமாரசாமி அண்ணே.... 20 வயசுக்கு உள்ளேயும், 40 வயசுக்கு மேலேயும் சின்ன வயசுதான். 😂 இப்ப... உங்கடை அனுபவத்தை எடுத்து விடுங்க. 🤣
  6. வடமாகாண ரீதியில் நடைபெற்ற புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு கடற்கரை. வடமாகாண சுற்றுலா பணியகம் நடத்திய இந்தப்போட்டியில்... "முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை" இந்த படத்தை போட்டிக்காக சமர்ப்பித்து, வடமாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றது. Vetri Nadai வெற்றி நடை
  7. 90 வயது மனிதன், 50 வயது மனிதனுக்கு சொல்லும் போது... 50 வயசுக்காரனுக்கு, சின்ன வயசுதானே. ஹ... ஹா... ஹா.... 🤣
  8. ஓம்.இதில் வாழ்க்கை துணைவியின் பங்கு மிக மிக முக்கியம். அத்துடன் அந்தப் பெண்... சாதுரியமான, புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லையேல்... குடும்பமே நரகம்தான். இரண்டிற்கும்... நம் சமூகத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன.
  9. அல்வாயன்... எமது சிறிய வயது கற்பனைகளை இப்போ நினைத்துப் பார்க்க பிரமிப்பாக உள்ளது. விபரிக்க முடியாத ஏதோ ஒரு சக்தி, எம்மை வழிகாட்டிக் கொண்டு இருந்ததாகவே நான் கருதுகின்றேன். 🙂
  10. ஊற வைத்த அரிசி சாப்பிட்டால்....கல்யாணத்து அன்று மழை வரும். பாவம் செய்றவங்க... நல்லா இருக்க மாட்டாங்க (இதுதான் மிகப்பெரிய பொய்.) பொன் வண்டு முட்டையை சேகரிச்சா காசு வரும். யானை முடி உள்ள மோதிரம் போட்டால் பணம் கொட்டும். கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான். வேப்பமரத்திலை... இரவில் பேய் இருக்கும். தீபாவளிக்கு.... தீர்வு கிடைக்கும். 😂 🤣
  11. ஓம். இதனை எங்கள் பாட்டி சொல்லி பயப்பிடுத்துவார். கலியாணம் கட்டுற அன்று மழை பெய்து, எங்களது பட்டு வேட்டி, கூறைச் சீலை எல்லாம் நனையப் போகுதே என்று... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் கவலையில் இருப்போம். 😂
  12. கோவில் சுவற்றில் ஹால் டிக்கட் நம்பரை எழுதி வைத்தால் பரீட்சையில் பாஸாகிவிடலாம். விழுந்த பல்லை சாணி உருண்டைக்குள் வைத்து, வீட்டின் கூரை மேல் போட்டு விட்டால் சீக்கிரம் பல் முளைக்கும். மழை பெய்து கொண்டிருக்கும் போது.... வெயிலும் அடித்தால், நரிக்கு கல்யாணம் நடந்து கொண்டிருக்கும். யானையின் சாணியை மிதித்தால், படிப்பு வரும். சிவப்பு எறும்பு சாப்பிட்டால், கண் நல்லாய் தெரியும். 2020 ல் இந்தியா வல்லரசாகிவிடும். பென்சில் சீவிய குப்பையை... இண்டு நாள் அரிசி கஞ்சியில் ஊற வெச்சா அழிரப்பர் ஆயிடும். - இணையத்தில் பார்த்து ரசித்தவை. -
  13. @Kavi arunasalam, @பாலபத்ர ஓணாண்டி "சிரிப்போம் சிறப்போம்" பகுதியில்... கதைக்கிற கதையா இது ? பைத்தியக்காரருக்கு... ஸ்ரீதரன் வியாதி முத்திப் போச்சு. எங்கை... என்ன கதைக்கிறது, என்ற விவஸ்தை இல்லாததுகள். 😡 காகத்துக்கு, கனவிலையும்... 💩 ***** தின்னுற நினைப்புத்தான் வருமாம். 😎
  14. 1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும். 4)பல்லி கத்துனா கெட்ட சகுனம். 5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம். 7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது. 8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும். 9)படித்தால் வேலை கிடைக்கும். 10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....
  15. பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னின்று செயற்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://athavannews.com/2024/1414344
  16. போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு. நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரயில்வே திணைக்களத்தினால், இந்த தொழிற்சங்கங்களுக்கு 22 இலவச ரயில் பயண அனுமதிச் சீட்டுகளை ஒதுக்கியதன் விளைவாக, அதே ஆண்டில் அரசாங்கத்திற்கு 25 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது. நாடு முழுவதும் வழங்கப்படும் இந்த இலவச பயண அனுமதிச் சீட்டுகளை பெறுவதற்கு தொழிற்சங்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும், எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 பயண அனுமதிச் சீட்டுகளை வழங்குவது அனுமதிக்கப்பட்ட வரம்பை கணிசமாக மீறிய செயல் என்றும், இது, கணிசமான நிதி இழப்புகளுக்கு வழிவகுத்தது என்றும் கணக்காய்வாளர் நாயகம் கண்டறிந்துள்ளார். https://athavannews.com/2024/1414318
  17. மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை! மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்படும் நபர்களின் சாரதி அனுமதி உரிமத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றின் அனுமதியை கோருவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதவேளை, நேற்றுக் காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைதான 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், பொலிஸாரின் விசேட கண்காணிப்பு சோதனையின் போது, கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 120 பேரும், போக்குவரத்து விதிகளை மீறிய 1262 பேரும், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான குற்றங்களுக்காக 682 பேரும், மற்ற போக்குவரத்து விதிகளை மீறிய 5441 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் மொத்தம் 7950 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் டிசம்பர் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414324
  18. டெல்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி! நேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, ரணில் விக்ரமசிங்க மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு (Gursharan Kaur Kohli) தனது இரங்கலைத் தெரிவித்ததார். அதேநரேம், இறுதி அஞ்சலிக்காக புதி டெல்லியில் உள்ள இந்திய முன்னாள் பிரதமரின் இல்லத்துக்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இந்திய பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414330
  19. திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம்! திருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் என்று இலங்கை விமானப்படையின் (SLAF) ஊடகப் பேச்சாளர் கேப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் அல்ல என்றும், அது இலங்கையின் முப்படைக்கு சொந்தமானது அல்ல என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இது சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட இலக்கு ஆளில்லா விமானம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது பயிற்சியின் போது இடம்பெயர்ந்து இலங்கை கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருக்கலாம். அது வெடிபொருட்கள் எதையும் கொண்டு செல்லவில்லை என்றும், ஆளில்லா விமானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் அல்லது அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். எவ்வாறெனினும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1414337
  20. ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்! கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 விமானம், புதன்கிழமை தெற்கு ரஷ்யாவில் உள்ள செச்சினியா பிராந்தியத்தின் தலைநகரான க்ரோஸ்னிக்கு செல்லும் போது கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர். இந்த பேரழிவு குறித்த தனது ஆய்வின் கண்டுபிடிப்புகளை அசர்பைஜான் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. எனினும், விசாரணையை நன்கு அறிந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தான் விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வியாழனன்று தெரிவித்துள்ளன. விமானம் ரஷ்ய நகரான க்ரோஸ்னியை (Grozny) அணுகும் போது மின்னணு போர்முறை அமைப்புகளால் விமானத்தின் தகவல் தொடர்புகள் முடங்கிய பின்னர், ரஷ்ய ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் ஒரு ஆதாரத்தை மேற்கொள்ளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், விமானம் மீதான தாக்குதல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கவில்லை. அதேநேரம், விமானிகள் அவசரமாக தரையிறங்குமாறு கோரியதையடுத்து, விமானம் ரஷ்யாவில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக காஸ்பியன் கடலின் குறுக்கே அக்டாவ் நோக்கி பறக்குமாறும் இயக்கப்பட்டதாக அரசாங்க ஆதாரங்களை யூரோநியூஸ் மேற்கோளிட்டுள்ளது. இதனிடையே, பறவைகள் கூட்டத்தைத் தாக்கியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பகம் முதலில் கூறியது. அண்மைய வாரங்களில் உக்ரேனிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் வடக்கு காகசஸின் ஒரு பகுதியின் மீது விமானம் பறந்து கொண்டிருந்தது. மேலும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை காலை பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. சமூக ஊடகங்களில் தாக்கப்பட்ட விமானத்தின் காட்சிகள் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பு செங்குத்தான இறங்குவதைக் காட்டியது மற்றும் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. விபத்திற்கான காரணம் தொடர்பான ஊகங்களுக்கு எதிராக ரஷ்யா எச்சரித்துள்ளதுடன், விசாரணையின் முடிவுகளுக்கு முன் இவ்வாறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வெளியிடுவது தவறானது என்று சுட்டிக்காட்டியது. எவ்வாறெனினும், அசர்பைஜான் வியாழன் அன்று விபத்தில் பலியானவர்களுக்கு துக்க தினத்தை அனுசரித்தது. முன்னாள் சோவியத் நாட்டில் வசிப்பவர்கள் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு, நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தினர். https://athavannews.com/2024/1414297

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.