Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை!
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை! இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவானோர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஆண்டாக 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2022 இல் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் புறப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும், கடந்த 2019 முதல் 2024 வரையான ஆறு வருடங்களில் மொத்தம் 1.3 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு (77,546), ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (51,550) சென்றுள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா (7098), இஸ்ரேல் (9665), ஜப்பான் (8665) ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியும் 2024 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது. நவம்பர் மாத இறுதியில் 6462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அது பதிவாகியுள்ளன. https://athavannews.com/2025/1414744- வருவாயில் இலங்கை சுங்கம் மைல்கல்!
வருவாயில் இலங்கை சுங்கம் மைல்கல்! இலங்கை சுங்கத்துறை கடந்த வருடம் 1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இது ஒரு வருடத்தில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும். அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1414760- 16 தரம், புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்.
16 தரம், புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க விண்வெளி வீராங்கணையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். கடந்த ஜூன் 5 விண்வெளிக்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார். அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் கூறும்போது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1414740- எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலோன் மஸ்க்!
எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலோன் மஸ்க்! உலகின் முன்னணி பில்லியனரான எலோன் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸில் தனது பெயரை செவ்வாயன்று (டிசம்பர் 31) “கெகியஸ் மாக்சிமஸ்” என்று மாற்றியமைத்துள்ளதுடன், சுயவிவரப் படத்தையும் புதுப்பித்துள்ளார். உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டுவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலோன் மஸ்க் விலைக்கு வாங்கினார். டுவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலோன் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர், தனது எக்ஸ் ஐடியின் பெயரை ‘கெகியஸ் மாக்சிமஸ்’ என்று மாற்றம் செய்துள்ளார். மேலும் தனது ஐடியின் முகப்பு படத்தையும் மாற்றி, பெபே தவளை மீமில் வரும் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார். தீவிர வலதுசாரி குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு நினைவுச்சின்னமான பெப்பே த ஃபிராக் என்ற கதாபாத்திரத்தை சித்தரிக்கும் அவரது புதிய சுயவிவரப் படத்திற்கான உடனடி விளக்கத்தை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான எலோன் மஸ்க் வெளியிடவில்லை. அதே சமயம் இந்த மாற்றத்திற்கு பிறகு கெகியஸ் எனும் மீம் நாணயத்தின் மதிப்பு 500% அதிகரித்துள்ளது. இணையத்தில் வைரலாக மீம்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் மீம் நாணயங்கள் மின்னியல் வகையை சார்ந்தது ஆகும். 2000 ஆம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் திரைப்படத்தின் நாயகனின் பெயர் மாக்சிமஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1414768- முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்!
முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்! உக்ரேனின் எரிவாயு போக்குவரத்து நிறுவனமான Naftogaz மற்றும் ரஷ்யாவின் Gazprom ஆகியவற்றுக்கு இடையேயான 05 ஆண்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர், உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் 2025 புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வந்தது. இது ஐரோப்பிய எரிவாயு சந்தையில் மொஸ்கோவின் நீண்ட கால ஆதிக்கத்துக்கான முற்றுப்புள்ளியாக அமைந்தது. அதேநேரம், மாற்று வழியை தேடுவதன் மூலம் ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதன் முயற்சியையும் இரட்டிப்பாக்கியது. மேற்கண்ட ஒப்பந்தமானது போரிடும் இரு நாடுகளுக்கிடையே 2019 ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. இது ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியை உக்ரேன் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலைகளில் கொண்டு செல்வதற்கு அனுமதித்தது. இந்த ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானது, ரஷ்யாவுக்கு வருவாயிலும், உக்ரேனுக்கு போக்குவரத்து கட்டணத்திலும் பில்லியன்களை சேர்த்தது. இந்த நிலையில், ஒப்பந்தம் நிறைவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), “எங்கள் இரத்தத்தில் கூடுதல் பில்லியன்களை சம்பாதிக்க” ரஷ்யாவை அனுதிக்க மாட்டோம் என்றதுடன், ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்தார். ஐரோப்பாவிற்கான ரஷ்யாவின் பழமையான எரிவாயு வழியை நிறுத்துவது, 2014 இல் உக்ரேனிய கிரிமியன் தீபகற்பத்தை இணைத்ததில் தொடங்கி, கண்டத்துடன் ஒரு தசாப்த கால கொந்தளிப்பான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருகிறது. 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தி வருகிறது. பிரஸ்ஸல்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2023 இல் மொத்த எரிவாயு இறக்குமதியில் 8% ரஷ்ய எரிவாயுவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக, அந்த எண்ணிக்கை 2021 இல் 40% க்கு மேல் இருந்தது. பிரஸ்ஸல்ஸ் ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதியை கணிசமாகக் குறைத்த போதிலும், பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இன்னும் பெரும்பாலும் மொஸ்கோவை நம்பியுள்ளன. ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் இன்னும் பெருமளவிலான ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன, இது மொஸ்கோவிற்கு வருவாயில் சுமார் 5 பில்லியன் யூரோக்கள் ஆகும். இதேவேளை உக்ரேன் வழியான எரிவாயு விநியோக முடிவினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அல்லாத பிற ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மால்டோவா கடுமையான இழப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1414755- குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
தமிழரசு கட்சியின் உதவாக்கரை பேச்சாளர். 😂 🤣- இலங்கை குறித்த கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது - ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
ஒரு தரப்பை ஒதுக்கிவிட்டு பயணிக்கும் சமூகம் ஒருபோதும் வளர்ச்சியடையாது-ஜனாதிபதி! புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பத்துடன்தான் இந்தப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. நாம் இந்த நாட்டை வளம் மிக்கதொரு நாடாக மாற்றியமைப்பதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். குடும்ப ஆட்சி, ஊழல், வீண் விரயங்கள், அதிகாரத் துஷ்பிரயோகம், மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தையும் மக்கள் இன்று புறக்கணித்துள்ளார்கள். எமது பொருளாதாரம் கடந்த காலங்களில் வங்குரோத்து நிலைக்கு சென்றிருந்தது. கடந்தாண்டு இறுதி கட்டத்தில், வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. இன்று பொருளாதாரம் சற்று ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை இன்னும் பலப்படுத்தும் வகையில், செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் மேற்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். அத்தோடு, எமது நாட்டின் பாதுகாப்பையும் நாம் பலப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு அருகம்பே பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால், எமது பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்கள். நாம் படிப்படியாக சட்டத்தின் ஆட்சியை பலமாக்க வேண்டும். கடந்த காலங்களில் சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாடாகவே எமது நாடு காணப்பட்ட நிலையில் குற்றவாளிகள் சட்டத்திற்கு மேல் இருந்து தப்பித்திருந்தார்கள். அரசியல்வாதிகள் தங்கள் நினைத்தவாறு சட்டத்தை மாற்றி, அரசியலமைப்பை மீறினார்கள். எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றமே, அரசமைப்பை மீறியுள்ளார்கள் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலைமையை நாம் மாற்றியமைப்போம். அத்தோடு, ஊழல்- வீண் விரயங்களும் எமது நாட்டின் ஒரு நோயைப் போன்று பரவியுள்ளது.இதனை வேறோடு இல்லாதொழிக்க வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை எமக்காக வழங்கும். அரச அதிகாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை சரியாக உணர்ந்து, கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன். நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.பொருளாதாரமானது ஒரு தரப்பிடம் மட்டும் குவிந்து இருந்தால், ஒருபோதும் வறுமையை இல்லாதொழிக்க முடியாது. இதனை ஒழிக்கும் வகையில் நாம் வரவு- செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இரண்டாவதாக நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். மூன்றாவதான கீளின் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு அமைய அனைத்துத் துறைகளையும் தூய்மையாக்க வேண்டும். மேலும் எமது நாடு மிகவும் அழகானதொரு நாடாகும். ஆனால், இந்த அழகான நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் யானை- மனிதன் மோதலில் 182 பேர் உயிரிழந்துள்ளார்கள்.2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. இதுதான் நாட்டின் நிலைமை. வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகளவானோர் உயிரிழக்கின்றார்கள். எமது நாட்டு சொத்துக்களையும் மக்களையும் பாதுகாப்பதே கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதேநேரம், மக்களுக்கும் தங்களின் உயிரின் பெறுமதி தெரியாமல் உள்ளது. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன். ஏனெனில், கடந்த ஆண்டு மட்டும் நீரில் முழ்கி 595 பேர் உயிரிழந்துள்ளார்கள். வாகன விபத்துக்களில் 2321 பேர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்கள். ஒரு நாளைக்கு 7 பேர் விபத்துக்களால் உயிரிழக்கிறார்கள். தங்களதும், பிறரின் உயிர் தொடர்பாகவும் மக்களுக்கு கவலை இல்லாமல் உள்ளது. இந்த சமூதாயத்தை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.அத்தோடு, மக்களுக்கு விஷமில்லாத உணவை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது. விசேட தேவையுடையவர்களையும் ஒதுக்கி விட்டு பயணிக்க முடியாது. ஒரு தரப்பை ஒதுக்கிவிட்டு பயணிக்கும் ஒரு சமூகம் ஒருபோதும் வளர்ச்சியடைந்த சமூகமாக வளர்ச்சியடையாது. அரச சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பிரதான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாக்கும் அளவுக்கு அரச சொத்துக்களை இங்கு யாரும் பாதுகாப்பதில்லை என்றும் அரச சொத்துக்கள் இந்த தலைமுறைக்கு மட்டும் உரித்தானது கிடையாது. மாறாக இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் செயற்பாட்டையும் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தில் உள்ளடக்கியுள்ளோம். என்று நாம் கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1414759- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
“கிளீன் இந்தியா” எனும் திட்டம் சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட போது…. டெல்லி அரசியல்வாதிகளில் இருந்து, உள்ளூர் அரசியல்வாதி வரை…. விளக்குமாத்தைப் பிடித்து கூட்டுவது மாதிரி படம் பிடித்து பத்திரிகைகளில் பிரசுரித்து விளம்பரம் தேடிக் கொண்டார்கள். தமிழ் நாட்டில்….. உதயநிதி கூட, திடீரென்று பொதுக் கழிப்பிடத்துக்கு சென்று படம் எடுத்துப் போடும் வழக்கம் உடையவர்தான். அதே போல்… கேலிக் கூத்துக்களை செய்யாமல், சிங்கப்பூர் மாதிரி தெருவில் குப்பை போடுபவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.- மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்!
ஒரு சுற்றுக்கான பயணச் சீட்டு எனும் போது, போகவும், வரவுமான இரட்டை வழிப் பயணத்துகுரிய பயணச்சீட்டு 35,000 ரூபாய் என கருதுகின்றேன்.- தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது
சிறைச்சாலையினுள் பணப் பரிமாற்றம் இராது என நினைக்கின்றேன். பொருளுக்கு உரிய பணம்… கைதிகளின் உறவினர், நண்பர்கள் அல்லது அவர்களின் எஜமானர்களால் சிறைக்கு வெளியே கொடுத்து விடுவார்கள்.- வருடச் செய்முறை
வித்தியாசமான சமையல் கவிதையுடன், புத்தாண்டு வாழ்த்துக்கள். 😁- செந்தமிழாய் எங்கும் இசை-பா.உதயன்
அழகிய கவிதைக்கு நன்றி. 👍- 2024/2025 புது வருடம்!
நம்பிக்கைதானே வாழ்க்கை. நல்லதே நடக்கும் என்று, புது வருடத்தை வரவேற்போம்.- வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
இவர்கள் வீட்டு வேலை என்று குறிப்பிடுவது…. வீடு கூட்டுதல், தூசி தட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்றவை என நினைக்கின்றேன். “எமது உழைப்பின் பெறுமதியை, நாமே நிர்ணயிப்போம்” என்ற கோசம் நன்றாகத்தான் உள்ளது. இவர்கள் குறிப்பிடும் தொகையை…. கொடுப்பதற்கு பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் போலுள்ளதே. 50,000 ரூபா மாதச் சம்பளத்தை ஓரளவு கல்வி கற்ற அரச ஊழியர்களுக்கே கொடுப்பது இல்லை என நினைக்கின்றேன். மற்றும்படி… வீட்டு வேலையாளர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.- சிரிக்கலாம் வாங்க
இடுப்பை மறைச்சு சீலை கட்டுங்க தோழி. பொறுக்கி பசங்க உலவும் பகுதி. 😂 அதெல்லாம் தெரிஞ்சே தான் கட்டுறேன். நீ மூடிட்டு கிளம்பு. 🤣- புது வருட சிரிப்புகள்.
நைட்டு 12 மணிக்குள்ள ரெடி பண்ணி குடுத்துருயா...- புது வருட சிரிப்புகள்.
- ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். "கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் இனி தூக்குப் போட்டு சாவுங்க.- பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
நாங்கள் "பிளவுசிலேயே"... "ஜன்னல்" வைக்கிற ஆட்கள் கண்டியளோ.... 😂 தலிபானுக்கு அந்த யன்னலை மூட... "தில்" இருக்கா? 😂- குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
இம்முறை நடக்கும் இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும் சுமந்திரன் செல்வாரா? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பார்களா? ப்ளீஸ் ரெல் மீ. 😂- இலங்கைக்கான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்!
இலங்கைக்கான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்! உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, EK654/655 ஆகச் செயற்படுவதுடன், அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிக்கிறது. கூடுதல் விமானத்தில் 360 பயணிகளுக்கு இடமளிக்க முடியும். மேலும், 2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கும் உதவியாக அமைகிறது. மேலதிக சேவை 2025 மார்ச் 31 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும். EK654 விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி காலை 10:05 மணிக்கு (புதன் கிழமைகள் தவிர) புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும். EK655 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, டுபாய் விமான நிலையத்தை அடுத்த நாள் அதிகாலை 1.05 மணிக்கு சென்றடையும். 2025 ஏப்ரல் 1 முதல், புதன்கிழமைகளில் ஏழாவது வாராந்திர விமானம் சேவையில் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும். எமிரேட்ஸ் தற்போது கொழும்பு மற்றும் டுபாய் இடையே இரண்டு நேரடி சேவைகளையும், மாலே வழியாக மூன்றாவது தினசரி சேவையையும் நடத்துகிறது. https://athavannews.com/2024/1414668- 2025; தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள்
2025; தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள். உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள், மனிதர்களுடன் அன்னிய தொடர்பு, விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சி, பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனங்களைச 2025 ஆம் ஆண்டுக்கு கணித்துள்ளனர். இவர்கள் 470 வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும், நவீன வரலாற்றில் இதுவரை நடக்காத சில பெரிய நிகழ்வுகளை இருவரும் கணித்துள்ளனர். பாபா வங்கா (Baba Vanga) பாபா வங்கா ஒரு பல்கேரிய தீர்க்கத்தரிசி ஆவார், அவர் 1996 இல் இறந்தார். அவர் பல்கேரியாவின் நோஸ்திரதாம் என்றும் அழைக்கப்படுகிறார். பாபா வாங்காவின் கணிப்புகள் 85 சதவிகிதம் துல்லியமாக இருப்பதாக நம்பப்படுகிறது. 2004 இல் இந்தோனேசியா சுனாமி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற சில வரலாற்றுத் தருணங்களை அவர் முன்னறிவித்தார். அது தவிர, 2022 இல் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று அவர் கணித்தார். அந்த ஆண்டு ஜூலைக்கு முன்பு அவுஸ்திரேலியா மூன்று முறை வெள்ளத்தில் மூழ்கியது. வடக்கு அரைக்கோளத்தில், முக்கிய நகரங்கள் கடுமையான வறட்சியை சந்திக்கும் என்றார். இது இங்கிலாந்து, இத்தாலி மற்றும் போர்ச்சுகலில் காணப்பட்டது. இந்த நிலையில், பாபா வாங்காவின் கூற்றுப்படி 2025 ஆம் ஆண்டு மோசமானதாக இருக்கிறது. மனிதகுலத்தின் வீழ்ச்சி 2025 இல் தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார். ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்கும் என்று அவர் கூறினார். போர் நமது மக்கள்தொகையில் கணிசமான பகுதியை அழிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். அதேநேரம், ரஷ்யா உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் கணித்தார். எனினும், 2023 இல் உலகம் அழிந்துவிடும் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. அணு உயிரி ஆயுதங்களும் சூரிய புயலும் அதற்குக் காரணமாக அமைந்திருந்தது. 2025 இல் பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு என்னவென்றால், பூமி வேற்று கிரக உயிரினங்களை சந்திக்கும். டெலிபதி உண்மையாக மாறக்கூடும். அது தவிர, விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் மனித உறுப்பை வெற்றிகரமாக வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், 2028 ஆம் ஆண்டில் வெள்ளி கிரகம் மீதான விண்வெளி ஆய்வு தொடங்கும், அதனால் உலகம் ஒரு புதிய வாழ்விடத்தைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் கூறினார். இது தவிர பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள், அமெரிக்க மேற்கு கடற்கரையில் நிலநடுக்கங்கள் மற்றும் செயலற்ற எரிமலைகள் வெடிப்பது உட்பட தொடர்ச்சியான பேரழிவு இயற்கை பேரழிவுகளையும் முன்னறிவிக்கிறது. மைக்கேல் டி நோஸ்திரதாம் (Michel de Nostredame) 450 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த போதிலும், நோஸ்ட்ராடாமஸ் தொடர்ந்து தீர்க்கதரிசனமான விடயங்களை கூறியுள்ளார். 1566 இல் அவர் இறப்பதற்கு முன், அவர் 94 கவிதை அறிக்கைகளின் தொகுப்பை எழுதினார் மற்றும் 1555 ஆம் ஆண்டு தனது புத்தகமான Les Prophéties ஐ வெளியிட்டார். அவர், தனது நண்பரும் முன்னாள் மன்னருமான இரண்டாம் ஹென்றி 40 வயதில் ‘இளம் சிங்கத்தின்’ கைகளில் இறந்துவிடுவார் என்று துல்லியமாக கணித்தார். அது மட்டுமல்லாமல், 1930 ஆம் ஆண்டு ஹிட்லரின் அதிகாரத்திற்கு எழுச்சி மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்படுவதையும் அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டு கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்க கூடும் என்றும், பிரித்தானியா மோதலால் அழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2025 இல் அவர் கடந்த காலத்திலிருந்து ஒரு பெரிய கொள்ளைநோய் திரும்பும் என்றும் கணித்துள்ளார். ஸ்தாபிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு 2025 ஆம் ஆண்டு குறையும்’ என்றும், ‘புதிய உலக வல்லரசுகளின் எழுச்சியுடன்’ படைவீரர்கள் போர்க்களத்தால் ‘சோர்வடைந்து’ போவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1414659- கருத்து படங்கள்
- புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு! அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1414646 - வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.