Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அப்பிடி என்றால்... சுத்துமாத்து சுமந்திரனை, எட்டு நாளைக்கு... மூத்திர சந்துக்குள் கொண்டு போய் வைத்து அடிப்போம்.
  2. மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால், நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கீழுள்ள செய்தியை.... @goshan_che ஆற, அமர்ந்து.. இருந்து வாசிக்கவும். 😂 🤣 கோசான் சே... சிறீதரன் மதுபான அனுமதி பெற்ற விடயத்தை உறுதிப் படுத்தி, சிறீதரனை பாராளுமனத்திலிருந்து விலக வைக்க அரிய சந்தர்ப்பம். செய்வாரா.... 🤣 அல்லது வதந்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும். 🙂
  3. தமிழ் மக்களுக்கு சார்பாக நிற்கும், மன்னாரை சேர்ந்த முஸ்லீம் பெருமகன். ரிஷாட் பதியூதினின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஊழல்களை வெளியே கொண்டு வருகின்றார். அனுர ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது, நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம். அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.
  4. ஒரு மாவீரரின் வயோதிபத் தாயாரை, எவரும் வேண்டுமென்று அவமானப் படுத்தி இருக்கமாட்டார்கள். அப்படி செய்திருந்தாலும்.... அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று... சாதாரண மனிதராலேயே ஊகிக்க முடியும் போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அப்படி செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. கபிதன் கூறியமாதிரி... இது ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட தவறாக இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம்.
  5. தமிழ் மக்களுக்கு சார்பாக நிற்கும், மன்னாரை சேர்ந்த முஸ்லீம் பெருமகன். ரிஷாட் பதியூதினின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஊழல்களை வெளியே கொண்டு வருகின்றார். அனுர ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது, நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம். அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.
  6. அமைச்சுகளுக்கு சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்! தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு கார்களை பராமரிக்க அரசு பாரிய செலவை சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அத்துடன், 05 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1410326
  7. சம்மாந்துறை உழவு இயந்திர விபத்து; நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்! அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் நேற்று (28) கைது செய்யப்பட்டனர். கைதான சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது மதரசாவின் அதிபர், ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இரு உதவியாளர்களையும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள மதரசா ஒன்றில் கல்வி கற்றி, மாணவர்கள் சம்மாந்துறை பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீடுகளுக்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தினால், உழவு இயந்திரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, மாணவர்கள் பயணம் செய்யவுள்ள குறித்த வீதியானது மோசமான வானிலையால் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஊழவு இயந்திரத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும் சோதனைச் சாவடி பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும் அறிவுறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில், 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது ஐந்து மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 06 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். காணாமல் போன மாணவர்களில் இதுவரை 05 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்காக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர உழவு இயந்திர சாரதி, மற்றுமொருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மாணவரை தேடும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1410343
  8. பத்தரமுல்ல சீலரத்ன தேரரருக்கு... யாழ்ப்பாணத்து வாக்குகளும் வேணுமாம். 😂 பிற்குறிப்பு: பழைய படம். புதிய கருத்து. 🤣
  9. இந்த 6000 மணித்தியால வீடியோவை, ஒரு நாளைக்கு 8 மணித்தியாலப்படி பார்த்தாலும்… முழுவதையும் பார்த்து முடிக்க, 750 நாள் எடுக்கும். 😂 கிட்டத்தட்ட…. இரண்டு வருசம் வீடியோ பார்க்கிறதிலேயே போயிடும். 🤣
  10. குடிகாரர், சைக்கிள் ஓடுவதற்கான வீதி. 😂
  11. 10 லட்சம் முஸ்லீம்களின் வாக்குகளைப் பெற்று வந்த இந்த அரசாங்கம், முஸ்லீம்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை இப்போதே ஆரம்பித்துள்ளது.
  12. புலிகளின் தலைவர் படம் மறைப்பு! வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் போது அங்கு வந்த வல்வெட்டித்துறை காவல்துறையினா் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், புகைப்படத்தினை நீக்கிவிட்டு பிறந்தநான் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துங்கள் எனவும் அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் பதாகையில் இருந்த புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை மறைத்து விட்டு பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினார்கள். https://athavannews.com/2024/1410277
  13. 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை! 2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இதன்படி, சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் உயர் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரதிவாதிகள் தமது சட்டத்தரணி ஊடாக இது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றில் அறிவித்த நிலையில் இவ்வாறு தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1410249
  14. உக்ரேனில் மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதி! முக்கியமான எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாது தவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர். கிய்வில் உள்ள எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மாத்திரமான உக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்த எரிசக்தி கட்டமைப்புக்கு எதிரான 11 ஆவது பெரிய அளவிலான தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதல் இது நாடு தழுவிய மின் வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனின் எல்விவ், வோலின் மற்றும் ரிவ்னேவின் மேற்குப் பகுதிகளில் பெரிய மின்தடை ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410246
  15. ஒராள்... குடை பிடித்துக் கொண்டு நிற்க, மாவை Football விளையாடுகிறார். எல்லாம்... விசர் முத்தின கூட்டங்கள். 😂 🤣
  16. எம். கே. சிவாஜிலிங்கம், அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல. நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார். ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார். இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார். இதுதான் அவரது அடையாளம். ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!! சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்! Mathusuthan Kumarasamy
  17. மட்டக்களப்பில்... ஆற்றில், "ரிக் ரொக்" வீடியோ எடுக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி இறப்பு. 4 பேர் உயிருடன் மீட்பு.
  18. தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை இது வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவிலே கரையைக் கடக்கும் இலங்கையில் மழையுடனான காநிலை நீடிக்கும் கரையை கடக்கும் வரை இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 160km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 110km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 135km தூரத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து (பருத்தித்துறை) தென்கிழக்காக 210km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது. AB Amam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.