Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் "வயாகரா" குளிசை எல்லாம், கொம்பனி கணக்கில் வழங்கப்படும். ✔️ கடைசியாக வந்த மூன்று பேருக்கும்... தாய்லாந்து மசாஜுக்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. 🤣 அங்கு யானைதான்... மசாஜ் செய்யும். 😂
  2. அதுக்குத்தானே "வயாகரா" குளிசை இருக்கு. 😂 🤣
  3. பிலிப்பைன்ஸுக்கு...போக இருக்கிற ஆட்கள் இப்பவே, உங்கள் வேலை இடத்தில், லீவுக்கு விண்ணப்பித்து வைக்கவும். பாஸ்போட், விசா, விமான சீட்டு, ஹோட்டேல், சாப்பாடு, மசாஜ்... எல்லாம் எங்களுடைய பொறுப்பு. நீங்கள்... ஒரு சூட்கேசில் உங்கள் உடுப்புக்களையும், வழக்கமாக பாவிக்கிற... பிரசர், நித்திரை, இருமல், சர்க்கரை வியாதி குளிசைகளையும் மறக்காமல் இப்பவே எடுத்து, ரெடியாக வையுங்கள். 😂 எந்த நேரமும் உங்களை விமான நிலையத்திற்கு ஏற்றிக் கொண்டு செல்ல இரண்டு பிலிப்பைன்ஸ் பெண்கள் வந்து, உங்கள் வீட்டு அழைப்பு மணியை... "டிங்... டொங்..." என்று அடிப்பார்கள். ஆயத்தமாக இருங்கள். 🤣
  4. மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்து விட்டது. மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து விட்டதாக உக்ரைனின் (Ukraine) முன்னாள் இராணுவத் தளபதி வலேரி ஜலுஸ்னி (Valery Zaluzhny) தெரிவித்துள்ளார். ரஷ்ய- உக்ரைன் மோதலில் ரஷ்ய சார்பு நாடுகளின்; நேரடி ஈடுபாடு அதனையே குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றும் தாம் அதனை உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கான உக்ரைனின் தூதராக தற்போது பணியாற்றும் ஜலுஸ்னி, போரின் உலகளாவிய விரிவாக்கத்தில் குறிப்பிடத்தக்க காரணியாக, ரஷ்யாவின் எதேச்சதிகார கூட்டு நாடுகளின் நேரடி ஈடுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரியாவின் படையினர் மற்றும் ஈரானிய படையினர் உக்ரைனுக்கு எதிரான போரின் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொஸ்கோ 10,000 வட கொரிய துருப்புக்களை குர்ஸ்க் பிராந்தியத்தில் நிலைநிறுத்தியதாகவும், உக்ரைனுக்கு எதிராக போரில், ஈரானிய ட்ரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில், உக்ரைன் இந்த போரில் தனியாக வெற்றி பெற முடியுமா என்பதில் தெளிவில்லை என்றும் ஜலுஸ்னி கூறியுள்ளார். https://athavannews.com/2024/1409616
  5. நீங்கள் கூறியபடி... பாராளுமன்றத்தில் "எனக்கு நடந்தது என்று... அவர் அழுது ஒரு வீடியோ போடும் நாள் வரும்" என்றே நினைக்கின்றேன். (அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்பதே.. எனது பிரார்த்தனை.)
  6. வீட்டிலை... யாரும் இல்லையா? படம் எடுக்க வந்திருக்கின்றேன், கொஞ்சம் கதவை திறங்க.
  7. உங்களுக்கு... சமூக ஊடகத்திற்கும், பத்திரிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாதா? சுமந்திரன் பதவியில் இருக்கும் போது, மிதப்பிலை விட்ட அறிக்கைகளைத்தான்.... மேலே உள்ள பிரபல பத்திரிகைகள், தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. அதனை திரட்டிப் போட்டால்... உங்களுக்கு கோபம் வருவதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பதை நான் புரிந்து கொள்கின்றேன். ஆனால்... அதற்கு நான் என்ன செய்ய..? அவர் சம்பாதித்து வைத்தது இவைதான். அதனால்தான்... மக்கள் சுமந்திரனுக்கு, ஒய்வு கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.😂 அவர் செய்த வேலையாலை... வீட்டில் இருந்து, கொட்டாவி விட வேண்டிய நிலை வந்திட்டுது. 🤣 இல்லாவிடில்... சுமந்திரன் நேற்று, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திக்க முதல் ஆளாக, கோட்டு சூட்டுடன் போய் நின்றிருப்பார். 🤣 காலம் செய்த கோலம்... பத்திரிகையை பார்த்து செய்தி அறிய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். 😂 நன்றி வணக்கம். 🙏
  8. என்னுடைய பொது அறிவை பரிதோதனை செய்து, கேடயம் தரப் போகின்றீர்களா. 😂 எனக்கு உந்த "ஈர வெங்காயம்" ஒன்றும் வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். 🤣 கேட்டமைக்கு... நன்றி. 😃
  9. 1970´ம் ஆண்டுகளில் தமிழர் அதிகமாக இருந்தார்கள். பின்...சம்பந்தன் ஐயா... திருகோணமலை எம்.பி.யாக வந்த பின், தமிழர்கள் குறைந்து... சிங்களவரும், முஸ்லீமும் பல்கி பெருகி விட்டார்கள். 😂
  10. முதலை ஒன்று வெளியே வந்ததன் மூலம்... இன்னும்... அதன் கணவன், தாய், தந்தை, பிள்ளை, குட்டி, தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, அன்ரி, அங்கிள், மச்சான், மச்சாள் என்று பெரிய குடும்பமே அங்கு குடியிருக்கும். முதலை முட்டை போடுவது என்றால்... கோழி மாதிரி ஒன்றுடன் நிறுத்திக் கொள்வதில்லை. ஒரே வீச்சில் 100 முட்டையாவது இடும். ஆனபடியால்... மிகுந்த அவதானத்ததுடன் இருக்க வேண்டும். யாரோ... உடும்பு இறைச்சி சாப்பிடும் ஆசையில் குட்டி முதலையை... உடும்பு என எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து அது முதலை என தெரிந்தவுடன் குளத்தில் விட்டு விட்டார்கள் போலுள்ளது. மேற்கு நாடுகளில் முதலை, மலைப்பாம்பை... பொழுது போக்காக அரசுக்கு தெரியாமல் வீட்டில் வளர்ப்பவர்கள் அது பெரிதாகியவுடன் பக்கத்தில் உள்ள காட்டிலோ, குளத்திலோ விட்டு விட்டுப் போய்... பிடிபடும் செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வரும். ஒரு முறை ஜேர்மனியில், அனாதை கங்காரு ஒன்று சுற்றித் திரிந்ததை பிடித்தார்கள்.
  11. இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு அரசியல் அறிவு பூச்சியம். 🙃 சுமந்திரன்... எப்போ, பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டவர்? அவர் ஒற்றை ஆட்சியை ஆதரித்தும், சிங்கள மக்களுடன் வாழ்வது பெரும் பேறு என்றும், இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவில்லை என்றும், ஸ்ரீலங்காவில் நடந்த இனப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை இல்லை, உள்ளூரிலேயே விசாரிக்கலாம் என்றும், போர்க்குற்ற விசாரணையில் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும்... சிங்கள மக்களுக்கு ஆதரவாக இருந்ததுடன்... மேலும் தான் இருந்த கட்சியையே சிதைக்கும்.. பல உளறுவாய் வேலைகளை செய்தபடியால் தான்... சுமந்திரன் தோற்கடிக்கப் பட்டார் என்பதை, அந்த சிங்கள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நினைவு படுத்தி விடுங்கள். 😂 விட்டால்... வரலாறை திரித்து, சுமந்திரனை மாவீரன் நெப்போலியன் ஆக்கி விடுவார்கள் போலுள்ளது. 🤣
  12. அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – விஜித ஹேரத் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி புதிய வேட்புமனுக்களை அழைப்பதா இல்லையா என்பதை ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும் எனவும், திகதிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409597
  13. விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கன வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். படுகாயமடைந்திருந்த கை. சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. https://athavannews.com/2024/1409571
  14. யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு! யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1409594
  15. நினைவாலய திறப்புக்கு அழைப்பு. 982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில்,தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் , விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும், சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் இன்று (23) மாலை 6 மணிக்கு நல்லூர் தியாக தீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீர் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் முல்லைத்தீவு, நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில், தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டுதாக நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோர்கள் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1409583
  16. சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்- ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார். சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கி என்று கூறுபவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறார்கள். எதற்கு சந்திக்க சென்றீர்கள் என கூறுவதில்லை… என்ன சந்தித்து உரையாடினீர்கள் என கூறுவதில்லை. இப்போது நான் ரஜினிகாந்த்தை சந்தித்த போது பேசியதை கூறுகிறேன்.. அதை ஏன் கூறுவதில்லை?. என்னை வந்து கேட்கிறார்கள் கள்ள உறவா என்று, நல்ல உறவே இருக்கிறது. பொண் கொடுத்து பொண் எடுத்த சம்மந்திங்கள் போல பிரதமரும், முதலமைச்சரும் சந்திக்கின்றார்கள். ஆனால் வெளியில் வந்து எங்களை சங்கி என்கிறார்கள். இது என்ன கொடுமை? . திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால்,.. இதை எப்படி சொல்வது? … அப்படியாயின் பெருமையாக நாங்கள் சங்கி என்பதை ஏற்கதான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1409534
  17. சிலவேளை அந்தப் பாரிய கல்… இரத்தினக் கல்லாகவும் இருக்கலாம். வடிவாக தண்ணீரில் கழுவி விட்டு பார்க்கவும். 😁
  18. அவர்கள்... நல்லெண்ண சமிக்ஞை காட்ட ஆரம்பிக்கும் போது... நாம் பொறுமையாக இருந்து பெறவேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பவே... ஒன்றுக்கும் உதவாத, வறட்டு வீரத்தை காட்டி... ஆரம்பத்திலேயே குழப்பி அடித்தால், அடுத்த ஐந்து வருடம் தமிழர்களுக்கு நரகமாக இருக்கும். நேற்றைய காணொளி... சிங்களப் பகுதிகளை வடிவாக போய்ச் சேரவில்லை என நினைக்கின்றேன். அதன் பின்... புத்த பிக்குகளில் இருந்து, கடைமட்ட கிராமத்து சிங்களவன் வரை... இதன் எதிர்வினை கடுமையையாக வரும் என நினைக்கின்றேன். போதாக் குறைக்கு.... முஸ்லீம்களும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற தயாராகவே இருக்கின்றார்கள். பிறகு தமிழர்களை காப்பாற்ற யாரும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.