Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்! ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல்‘ குறித்த மசோதாவுக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. குறித்த மசோதாவானது திங்ககிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என கடந்த வாரம் வெளியான அவை அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அலுவல் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்ட போது மசோதா இடம்பெறவில்லை. இந்நிலையிலேயே இன்று நண்பகல் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412564
  2. ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்! இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார். பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதியை அநுரவை பௌத்த பிக்குகள் அன்புடன் வரவேற்றனர். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் மகாபோதி கோயில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் இடத்தைக் குறிக்கும் வகையில், புத்த கயாவில் உள்ள ஒரு பழங்கால புத்த கோவில் இதுவாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே வலுவான பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது என்று திங்கட்கிழமை விசேட மாநாட்டில் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அநுரகுமார பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார். இந்த விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளிடையிலான வலுவான பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதையும் அதன் எல்லைகளை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார். முன்னதாக திங்கட்கிழமை, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து எக்ஸில் பதிவிட்ட ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதியாக எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தது ஒரு பாக்கியம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளித்ததற்காகவும் கடன் மறுசீரமைப்பிற்கு உதவுவதற்காகவும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, BRICS, UNCLCS மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலை நிறுத்துவது குறித்து இன்றைய சந்திப்பின் போது விவாதித்தோம். நான் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன், மேலும் இலங்கையின் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்தியாவுக்கு உறுதியளித்தேன் என்று குறிப்பிட்டார். டிசம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். https://athavannews.com/2024/1412636
  3. மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. முதலில்... உங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ளவும். மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.
  4. மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்! மொஸ்கோவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மொஸ்கோவில் நடந்த வெடிப்பின் விளைவாக, ரஷ்ய ஆயுதப்படைகளின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையின்படி, செவ்வாயன்று (டிசம்பர் 17) காலை, ஒரு மெஸ்கோவின் ரியாசான்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் புலனாய்வு பணிகளை மேற்கொண்டனர், மருத்துவ மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடவடிக்கைக்கு உதவ அழைக்கப்பட்டனர். குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது என்று ரஷ்ய புலனாய்வு குழுவின் செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்ய பாதுகாப்புப் படைகள் தென்கிழக்கு மொஸ்கோவில் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்ட கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் இருந்து வீடியோவை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்று தலைநகரின் அவசர சேவைகளின் பிரதிநிதி கூறியுள்ளார். https://athavannews.com/2024/1412628
  5. முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கமாக அணியும்.. கோட்டு, சூட்டு, கழுத்துப் பட்டி (Tie) எதுவும் இல்லாமல்... வெறும் சேர்ட்டுடன் போன படியால்.... சாணக்கியனின் வாகன சாரதியாக, "பைல்" தூக்கிக் கொண்டு, பின்னால் போயிருப்பார். படத்தைப் பார்க்க... "மிக்சர்" சாப்பிடப் போன ஆள் மாதிரித்தான் தெரியுது. 😂 🤣
  6. சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைமுறைக்கு வரவிருந்த மிகவும் சர்ச்சைக்குரிய “ஹிஜாப் மற்றும் கற்பு சட்டம்” அமலாக்கத்தை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) இடைநிறுத்தியுள்ளது. சட்டத்திற்கு எதிராக உள்நாட்டு, சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீர் இடைநிறுத்தம் வந்துள்ளது. சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ள ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian), அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றும் விவரித்தார். இதன் விளைவாக குறித்த சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படவுள்ளது. பொது வெளியில் தலைமுடி, முன்கைகள் அல்லது கீழ் கால்களை முழுமையாக மறைக்கத் தவறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அபராதம், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை குறித்த சட்டமானது முன்மொழிந்தது. அதேநேரம், இது மனித உரிமை ஆர்வலர்களால் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. பல தசாப்தங்களாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆட்சியாளர்களால் தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாகக் கருதப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்பட்ட கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் முன்பு எதிர்ப்புகளைத் தூண்டின. புதிய சட்டத்தின் கீழ் அந்த கட்டுப்பாடுகளானது மேலும் இறுக்கம்மாக்கப்படுவதுடன், அதனை மீறும் நபர்களுக்கு எதிராக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராத விதிப்பினையும் கட்டாயப்படுத்தும். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ஹிஜாப் விவகாரத்தில் ஈரானியப் பெண்களை நடத்துவதை அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான பெஜேஷ்கியன் வெளிப்படையாக விமர்சித்தார். ஹிஜாப் விவகாரத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். 2022 ஆம் ஆண்டிலிருந்து ஈரானில் ஹிஜாபைச் சுற்றியுள்ள பதட்டங்கள் அதிகமாகவே உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், பல இளம் ஈரானியப் பெண்கள், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில், பொது இடங்களில் தங்கள் ஹிஜாப்களை மீறி அகற்றியுள்ளனர். ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான கடும்போக்கு பிரிவுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், கடந்த வாரம், 300 க்கும் மேற்பட்ட ஈரானிய உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் புதிய ஹிஜாப் சட்டத்தை “சட்டவிரோதமானது மற்றும் செயல்படுத்த முடியாதது” என்று பகிரங்கமாக கண்டித்தனர். மேலும், ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை மதிக்குமாறும் பெசேஷ்கியனை வலியுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2024/1412619
  7. இப்படியான நேரங்களில்… ஒரு தொழில் ரகசிய கையேடு, பக்கத்தில் வைத்திருப்பதால்…. தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க சிறந்த அருமருந்து. 😂 🤣
  8. கணவனும், மனைவியும்…. சரியான மாங்காய் மடையர்களாக இருப்பார்கள் போலுள்ளது. பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது. அதனை பாதுகாக்க… புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.
  9. கல்வித் தகைமைகள் பிரத்தியேகமாக தேவை இல்லை. சபையை கொண்டு நடத்தக் கூடிய ஆற்றலும், ஆளுமையும், மிதமான பொது அறிவும் போதும் என நினைக்கின்றேன். முன்னைய சபாநாயகர் இடைச் செருகலாக போலியான கலாநிதி பட்டம் போட்டதுதான் பிரச்சினையாகி விட்டது.
  10. இவர்களின் ஒப்பந்தங்கள் எல்லாம்… தமது சுய நலத்துக்காகவும், காலத்தை கடத்துவதற்கும் போடப் படுகின்றவை.
  11. நீங்கள் சொல்லாவிட்டாலும்…. எங்களுக்கு யார், யார் எந்த குரூப் என்று தெரியும். 🤣
  12. வக்கீல்... சேர்டிபிக்கட் எடுக்க, பேராசிரியர் பீரிஸை வைத்து குதிரை ஓடிய நாமல் ராஜபக்சவும், பத்தாம் வகுப்பு "பாஸ்" பண்ணாத, பசில் ராஜபக்ச... நிதி அமைச்சராகவும், அமெரிக்காவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்த, கோத்தா ராஜபக்ச ஜனாதிபதியாகவும்.... எந்த வித பிரச்சினையும் இல்லாமல்... நாட்டை ஆண்டு விட்டு போயிருக்கின்றார்கள். 😂 அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது. அனுபவம் காணாது போலுள்ளது. 🤣
  13. எல்லா இடமும் கை ஏந்தி, கடைசியில் சுயத்தை இழக்க வேண்டி வந்துவிட்டது. 1948´ல் சுதந்திரம் கிடைத்த கையுடன்... தமிழருடன் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஸ்ரீலங்கா... இன்று சிங்கப்பூர் மாதிரி இருந்திருக்கும். இனவாதம் விடவில்லையே... போர் என்று தொடங்கியதால், முழு நாட்டையும் சீனன், இந்தியன், அமெரிக்கன் என்று பங்கு போட காத்து இருக்கின்றார்கள். பிக்குகளுக்கும், இனவாதிகளுக்கும் சமர்ப்பணம்.
  14. நீங்கள்... அவரின், சேர்டிபிக்கட் பார்த்தீங்களா? 😂
  15. அடுத்த மாதம்... அனுர, சீனா போகிறார். அங்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது என்று பார்த்து விட்டு, ஹபரணை சந்தியில்... காந்தி சிலை வைக்கிறதா, இல்லையா... என்ற முடிவுக்கு வாங்கோ அண்ணை. 😂
  16. காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்! காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது. கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம், சிறைச்சாலை மதில் சுவருக்கு மேல் பாதுகாப்பு வலை மற்றும் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். https://athavannews.com/2024/1412465
  17. எலிக்காய்ச்சலால் மற்றொருவர் உயிரழப்பு. யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருஷாந்தன் என்ற 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கடந்த காலங்களில் நெல் வேலைக்கு உதவியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கரவெட்டி பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். https://athavannews.com/2024/1412438
  18. ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு! மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றனர். இங்கு ஜனாதிபதி அநுரகுமார, ஒன்றிணைந்த இந்திய பாதுகாப்பு சேவையினரின் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டார். இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தத்தமது அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். இலங்கை ஜனாதிபதி டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இலங்கை ஜனாதிபதியை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் வரவேற்றார். அவரது வருகையைத் தொடர்ந்து ஜனாதிபதி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் முக்கிய துறைகளை முன்னேற்றுதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. https://athavannews.com/2024/1412454
  19. இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி. முன்னொரு காலத்திலே.... சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்.... ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில், அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து, கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை பற்றி கதைத்ததாக "றீல்" விட்டதை நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன் கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள். சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.