Everything posted by தமிழ் சிறி
-
இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
என்ன... மெல்ல, சுருதி மாறுது. மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில்... பரவாயில்லைப் போல இருக்கே. சிங்கள அரச அதிகாரிகளை விட... தமிழ் அரச அதிகாரிகள் மோசமானவர்கள் என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளதை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது.
-
மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
மகிந்தவின் பாதுகாப்பை ஏன் ஒரு தலைப்பட்சமாக புத்தரிடம் மட்டும் கொடுக்கின்றீர்கள். நீங்கள் தானே... அடிக்கடி திருப்பதிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் சென்று வழிபடுகின்றனீர்கள். புத்தருடன்... பெருமாளையும் (யாழ்.கள @பெருமாள் அல்ல) துணைக்கு சேர்க்கிறது. 😂 பிற் குறிப்பு: இவர்கள் தான் மகிந்தவுக்கு சத்த வெடி வைத்து விட்டு... அனுதாபம் தேடப் போகிறார்கள் போலுள்ளது. கோத்தாவுக்கும்... சட்டையில் இரத்தம் பட, சத்த வெடி வைத்த ஆட்கள்தானே. 😂
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வரும் சுனிதா வில்லியம்ஸ்.
-
ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்!
ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்! மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (25.12.2024) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414044
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்! அசர்பைஜானில் இருந்து தெற்கு ரஷ்யாவிற்கு 67 பேருடன் சென்ற பயணிகள் விமானம் புதன்கிழமை (25) கசாக் நகரமான அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், விபத்தில், இரு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பேர் உயிர் பிழைத்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அசர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜே2-8243 என்ற விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது. இதன்போது, அக்டோவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தினை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டனர். தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்ட தகவல்களின்படி, உயிர் பிழைத்தவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக கஜகஸ்தானின் போக்குவரத்து அமைச்சின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணிகளில் 37 பேர் அசர்பைஜானைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் கசகஸ்தானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் 16 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1414018
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
நான் பார்த்த அளவில்.... சுமந்திரன் குரூப்தான், இங்கு நின்று கம்பு சுத்திக் கொண்டு நிற்கிறார்கள் போலுள்ளது. 😂 என்ன... இருந்தாலும், அனுரா அரசில்... ஒரு அமைச்சராக வருவேன் என நம்பி இருந்த சுமந்திரன் தோற்றுப் போன வேதனையை மறக்க, கனநாள் எடுக்கும்தானே.... 🤣 அது மட்டும், ஸ்ரீதரனுக்கு... "தடி, ஒட்டிக்" கொண்டு இருக்க வேண்டியதுதான்.
-
கருத்து படங்கள்
- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
👇 👆 மேலே தமிழில் உள்ள செய்தியில்... ஸ்ரீதரன்... //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று... வெளிப்படையாக அறிவித்த பின்பும், லூசுத் தனமாக எழுதிக் கொண்டு இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். இனி.... உங்களுக்கு தெரிந்த ஆதாரங்களை, திரட்டிக் கொண்டு களத்தில் இறங்கவும். 👍 பைத்தியக்காரத்தனமாக.... சும்மா ஊளையிடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. மேலே எல்லாம் தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது. வாசித்து... விளங்கிக் கொள்வதில், எந்தப் பிரச்சினையும் இராது என நினைக்கின்றேன். திரும்பத் திரும்ப... ஒரு விடயத்தை, உங்களுக்கு விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போய் ஆதாரங்களை திரட்டவும். அதுதான்... இப்போ நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. இதற்குமேல்.... உங்களுக்கு, விளக்கமாக.. சொல்ல எதுவும் இல்லை. 🙂- நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு
நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களினால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 44 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1413909- தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா!
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா! தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டுவரப்பட்டது. இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் அம்பலவாணர் அருள் வழிபாடு நடைபெற்று கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. https://athavannews.com/2024/1413994- கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்!
கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்! சிரியாவில் கிறிஸ்மஸ் மரத்தை எரித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரமான சுகைலாபியாவின் (Suqaylabiyah) பிரதான சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்டுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு போராளிகள் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்திய எழுச்சிக்கு தலைமை தாங்கிய முக்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கூறியுள்ளது. அதேநேரம், சிரியாவில் மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட சிரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராவதற்கு முந்தைய நாள் இரவு, முகமூடி அணிந்தவர்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் மர்மமான திரவத்தை ஊற்றுவதை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. அவர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார்களா அல்லது அது கொழுந்து விட்டு எரிவதற்கு வழிவகுத்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறெனினும், கிறிஸ்மஸ் மர தீ வைப்புக்கு எதிராக செவ்வாயன்று (24) தலைநகர் டமாஸ்கஸின் சில பகுதிகள் உட்பட பல தெருக்களில் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். டமாஸ்கஸின் கஸ்ஸா (Kassa) சுற்றுப்புறத்தில் சிலர் சிரியாவிலுள்ள வெளிநாட்டு போராளிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். டமாஸ்கஸின் பாப் டூமா சுற்றுப்புறத்தில், எதிர்ப்பாளர்கள் சிலுவை மற்றும் சிரியக் கொடிகளை ஏந்தி, “எங்கள் சிலுவைக்காக எங்கள் ஆன்மாக்களை தியாகம் செய்வோம்” என்று கோஷமிட்டனர். குர்துகள், ஆர்மேனியர்கள், அசிரியர்கள், கிறிஸ்தவர்கள், ட்ரூஸ், அலவைட் ஷியா மற்றும் அரபு சுன்னிகள் உட்பட பல இன மற்றும் மத குழுக்களின் தாயகமாக சிரியா உள்ளது. இவர்களில் இறுதியாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, பஷர் அல்-அசாத்தின் ஜனாதிபதி பதவி கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்தது, அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பல இடம்பெயர்ந்த சிரியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர் – செவ்வாயன்று, 25,000 க்கும் மேற்பட்ட சிரியர்கள் நாட்டிற்குத் திரும்பியதாக துருக்கி கூறியது. https://athavannews.com/2024/1413957- ஜப்பானில் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம்!
ஜப்பானில் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம்! ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறதுடம் அந்நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா உள்ளார். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், ‘சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் எனக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதுடன் மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024ஆம் ஆண்டில் பட்ட வேதனைகள், சோகங்களை மறக்கும் வகையில் ஜப்பானில் ஒசாகாவில் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழும் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் வரை வாய்விட்டு சிரித்து மக்கள் தங்கள் கவலைகளை மறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413923- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதை…. திறந்த மனதுடன் அணுக முடியாதவர்களுக்கு, சந்தேகம் ஒரு கேடு. 😂 🤣- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
ஏன்…. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், சந்திரகுமாரின், பெயரை சொன்னால்… காதுக்குள்ளை “வெடி” வைத்து விடுவாங்கள் எண்டு பயமோ… உங்களுக்கு… அந்தப் பயம் இருக்க வேணும். இளகின இரும்பை கண்டால்…. குமட்டிலை குந்தி இருந்து அடிப்பாங்களாம்.- தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
எவரும் ஏற்காத நிலையில்... ரோஹிங்கா அகதிகளையும் வடக்கு மாகாணத்தில்தான் கொண்டு வந்து வைத்திருக்கின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும்... தமிழ் மக்கள் என்றோ ஒரு நாள், பெரும் விலை கொடுக்க வேண்டி வரும்.- தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
இலங்கையில்... அமெரிக்கா, சீனா, இந்தியா... மும்முனை போட்டி. எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகுது என்று தெரியவில்லை.- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂 அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால் உசாராக இருப்பார்கள். 😂 🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும், ஏராளனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙂 வாழ்க வளமுடன். 🙏- யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
யாழ்.கள உறவுகளுக்கு, இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல “போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக” பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம் ஆண்டு 352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக அங்குள்ள மின் விளக்குகள் செயலிழந்து காணப்படுகின்றன. குறித்த பகுதி அசுத்தமாகக் காணப்படுவதோடு, துர்நாற்றமும் வீசி வருகின்றது. அத்துடன் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன” இவ்வாறு சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1413714- தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா. தாய்வானுக்கும் சீனாவுக்கும் போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில், தாய்வானுக்கு 57.1 கோடி டொலர்கள் பெறுமதிவாய்ந்த இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் ஒப்புதல் அளித்தார். அமெரிக்காவின் குறித்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அரசு நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தாய்வானுக்கு ஆயுதம் அளிப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். தாய்வான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அபாயகரமான நகர்வுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது. சுமாா் 2.3 கோடி மக்கள்தொகை கொண்ட தாய்வானை, சீனா தனது பிராந்தியமாக உரிமைக் கோரி வருகின்றது.இவ்விவகாரத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413782- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு முன்பு வந்திருந்தது. அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.- இரசித்த.... புகைப்படங்கள்.
- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அறிந்து வைப்பது, பிற்காலத்துக்கு நல்லம் தானே... 🤣 - கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.