Everything posted by தமிழ் சிறி
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
முதல் நாள் எவரும்... விரும்பிய இருக்கையில் அமரலாம் என்று முன்பே சொல்லப் பட்டதாம். அப்படி அவர், பிழை என்றால்... அன்றே சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாராம், அப்படி நடவடிக்கை எடுக்காத படியால்... அர்ச்சுனாவில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால்... என்ன இருந்தாலும்... பிரதம மந்திரிக்கு சமமான அந்தஸ்து உடைய எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்து, முதல் நாளே பிரச்சினை பட்டது சரி அல்ல என்பது எனது நிலைப்பாடு. தமிழர்களுக்கு ஒரு பண்பு உள்ளது. அதனை காவலித்தனமாகவோ, கோமாளித்தனமாகவோ செய்வது அருவருப்பை எனக்கு ஏற்படுத்துக்கின்றது. எத்தனையோ... பிரச்சினைகள் இருக்க, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்துதான் தனது அடையாளத்தை காட்ட வேண்டும் என்று இல்லை. நேற்று முற்பகல் சஜித்தின் கதிரையில் இருந்து விட்டு, தேனீர் இடைவேளையில்... சஜித்துடன் நின்று ஒரு செல்ஃபியும் எடுத்துள்ளார். அத்துடன் அவர் தனது மதம் இந்து என்று பாராளுமன்ற பதிவில் கொடுத்தவராம், அதனை புத்த சமயம் என பதிந்து விட்டார்களாம் என்று இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டு இருக்குது.
-
கருத்து படங்கள்
இலங்கை பத்திரிகைகளில் இருந்து வரும் கருத்தோவியங்களே இவைகள். சிங்களவர், முஸ்லீம்கள் என்று (Shanika, Pradeep, Awantha Artigala, Sajith Bandara, Wasantha, Jeffrey) பலர்... முதல் நாள் நடந்த செய்திகளை சூடு ஆறாமல், உடனுக்குடன் தரமாக வரைந்து பிரசுரிப்பார்கள். "செல்வன்" என்று ஒரு தமிழரும்... இடைக்கிடை அழகிய கருத்தோவித்தை வீரகேசரியில் பிரசுரிப்பார் நிலாமதி அக்கா.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சுமந்திரனை விட... அர்ச்சுனாவும், கௌசல்யாவும் சுயேச்சையில் நின்று அதிக வாக்கு எடுத்து விட்டார்களே என்ற அவமானம், பொறாண்மை, வயித்தெரிச்சல்... இருக்கத்தானே செய்யும். சுமந்திரன்கள் ஒழுங்காக இருந்திருந்தால்... அர்ச்சுனாவுக்கும், கௌசல்யாவுக்கும் மக்கள் ஏன் வாக்களிக்கப் போகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில், அகில இலங்கையில் போட்டியிட்ட... அத்தனை சுயேட்சை வேட்பாளர்களில்... வென்ற ஒரேயொருவர் அர்ச்சுனா மட்டும் தானாம்.
-
சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஆனானப் பட்ட சுமந்திரனே... சுயேட்சை வேட்பாளர்களாக நின்ற ... அர்ச்சுனா, கௌசல்யாவை விட குறைய வாக்குகள் எடுத்த மாதிரி... ஈழப்பிரியன். 😂- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் ########### ######### @குமாரசாமி தாத்தா... தன்னுடைய அரசியல் அறிவை எல்லாம் @வீரப் பையன்26 க்கு கொடுத்து, ஏணியிலை உச்சத்திலை ஏத்தி விட்டுட்டு.. கீழை 21´ம் இடத்திலை நின்று அண்ணாந்து பார்க்கின்றார். 😂 இப்பிடி ஒரு தாத்தா கிடைக்க... பையன் கொடுத்து வைத்திருக்க வேணும். 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1970களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம்.. சாவகச்சேரியில், நிறுவப்பட்ட பனம் சீனி உற்பத்தி நிலையம்.- “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்!
“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்! கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை தயாரிக்கும் முறைகளும் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1409489- வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்!
வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்! வெயாங்கொடை, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காணியில் புதையல் தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் புதையல் இருப்பதாகக் கூறி பல வருடங்களாக புதையல் வேட்டையாடுபவர்களால் மேற்படி இடம் பல தடவைகள் தோண்டப்பட்டுள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருந்தனர். தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட சோதனையின் போது அந்த இடத்தில் புதையல் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. எவ்வாறெனினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய விசாரணையில், நிலத்தில் ஏதோ ஒன்று புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், தொல்பொருள் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வெயங்கொடை பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மீரிகம பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2024/1409488- யாழில் பெண்ணொருவரிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது
இந்தப் பொலிஸார் சிங்களவரா, தமிழரா? எப்படி இருந்தாலும்... யாழில் வென்ற அனுர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சொல்லி பொலிஸ் மா அதிபர், ஜனாதியபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படியானவற்றை முளையிலேயே கிள்ளி எறியா விட்டால், வேறு பலரும் இதே மிரட்டலை செய்ய வெளிக்கிடுவார்கள்.- கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி
கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம் சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், 25 சதவீத கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான உணவளிப்பதற்காக தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகைப் பொருட்களுக்கான செலவைக் குறைத்ததாக கூறி உள்ளனர். விலைவாசியை குறைப்பதற்காக சில அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிறுத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படும் சமயத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409547- $100,000 டொலர்களை நெருங்கும் பிட்கொயின் பெறுமதி!
$100,000 டொலர்களை நெருங்கும் பிட்கொயின் பெறுமதி! உலகின் மிகவும் பிரபலமான மின்னியல் நாணயமான பிட்கொயின் (Bitcoin) பெறுமதி வியாழன் (22) அன்று 100,000 அமெரிக்க டொலர்களை நெருங்கியது. 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 5 அன்று டொனால்ட் ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பிட்கொயின் பெறுமதி உயர்வு கண்டுள்ளது. அந்த வியாழக்கிழமை உலகின் முன்னணி மின்னியல் நாணயமான பிட்கொயின் 99,300 அமெரிக்க டொலர்களை எட்டியது. ஆசிய வர்த்தக நேரங்களின்படி, பிட்கொயின் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4% அதிகரித்து $99,314.95 இல் வர்த்தகமானது. அதன் சந்தை மூலதனமும் $1.97 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து பிட்கொயின் பெறுமதி 48% க்கு மேல் உயர்ந்துள்ளது. மின்னியல் நாணயங்களுக்கான ட்ரம்பின் ஆதரவு, எலோன் மஸ்க் போன்ற உயர்மட்ட நபர்களின் ஆதரவுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1409513- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@வீரப் பையன்26 ம், நீங்களும் ஒரே வாங்கு. 😂 பையனின் அரசியல் அறிவு… இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 🤣- கருத்து படங்கள்
- அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
- மாவீரர் தினத்தால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்; சிறிதரனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் பிமல்
மாவீரர் நாட்களில் கூட்டத்தினை வைக்காமல், வேறொரு தினத்தில் கூட்டத்தினை வைக்க.. மற்றைய கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது நல்ல ஒரு மாற்றம். 👍🏽- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இந்தப் படத்தை… “போட்டோ ஷொப்” என்று சொல்லி ஒரு குறூப் உருட்டிக் கொண்டு வருவார்கள், பையன். 😂 உருட்டுபவர்கள்…. “கை” உழையும் மட்டும், நல்லாய் உருட்டட்டும். 🤣- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
பையா… படத்தைப் பார்த்த ஆட்கள், மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள் போலுள்ளது. 😂 🤣- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
கன பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது. 😂 🤣- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
உண்மைதான்... வெளி உலக பிரச்சினைகளை சமாளிக்க, அந்த இனத்தவனை போட்டு.. பிரச்சினையை அடங்கச் செய்வதில் சிங்களவன் கெட்டிக்காரன்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
ஓ.... பயங்கரமாக விலை சரிந்துள்ளது.- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
உண்மைதான்... உலகம் எங்கும் இவர்களால் பல்வேறு பிரச்சினைகள். எங்கும் இவர்களது சனத்தொகை அளவு கணக்கு இல்லாமல் எகிறிக் கொண்டுள்ளது. இங்குள்ள ஆஸ்பத்திரி... பிள்ளை பெறும் பகுதி 60% முஸ்லீம் பெண்களால் நிரம்பி இருக்கும்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
நெத்தலி சாதாரண நாட்களில் என்ன விலை. நமக்கு... கணவாய், நண்டு என்றால்.. மூன்று தரம் சோறு போட்டு சாப்பிடுவேன். 😂 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.