Everything posted by தமிழ் சிறி
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
என்னுடைய பொது அறிவை பரிதோதனை செய்து, கேடயம் தரப் போகின்றீர்களா. 😂 எனக்கு உந்த "ஈர வெங்காயம்" ஒன்றும் வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். 🤣 கேட்டமைக்கு... நன்றி. 😃
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
1970´ம் ஆண்டுகளில் தமிழர் அதிகமாக இருந்தார்கள். பின்...சம்பந்தன் ஐயா... திருகோணமலை எம்.பி.யாக வந்த பின், தமிழர்கள் குறைந்து... சிங்களவரும், முஸ்லீமும் பல்கி பெருகி விட்டார்கள். 😂
-
யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு!
முதலை ஒன்று வெளியே வந்ததன் மூலம்... இன்னும்... அதன் கணவன், தாய், தந்தை, பிள்ளை, குட்டி, தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, அன்ரி, அங்கிள், மச்சான், மச்சாள் என்று பெரிய குடும்பமே அங்கு குடியிருக்கும். முதலை முட்டை போடுவது என்றால்... கோழி மாதிரி ஒன்றுடன் நிறுத்திக் கொள்வதில்லை. ஒரே வீச்சில் 100 முட்டையாவது இடும். ஆனபடியால்... மிகுந்த அவதானத்ததுடன் இருக்க வேண்டும். யாரோ... உடும்பு இறைச்சி சாப்பிடும் ஆசையில் குட்டி முதலையை... உடும்பு என எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து அது முதலை என தெரிந்தவுடன் குளத்தில் விட்டு விட்டார்கள் போலுள்ளது. மேற்கு நாடுகளில் முதலை, மலைப்பாம்பை... பொழுது போக்காக அரசுக்கு தெரியாமல் வீட்டில் வளர்ப்பவர்கள் அது பெரிதாகியவுடன் பக்கத்தில் உள்ள காட்டிலோ, குளத்திலோ விட்டு விட்டுப் போய்... பிடிபடும் செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வரும். ஒரு முறை ஜேர்மனியில், அனாதை கங்காரு ஒன்று சுற்றித் திரிந்ததை பிடித்தார்கள்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
- புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
இது, போதுமா... இன்னும் வேணுமா... அல்வாயன். 😂- புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு அரசியல் அறிவு பூச்சியம். 🙃 சுமந்திரன்... எப்போ, பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டவர்? அவர் ஒற்றை ஆட்சியை ஆதரித்தும், சிங்கள மக்களுடன் வாழ்வது பெரும் பேறு என்றும், இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவில்லை என்றும், ஸ்ரீலங்காவில் நடந்த இனப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை இல்லை, உள்ளூரிலேயே விசாரிக்கலாம் என்றும், போர்க்குற்ற விசாரணையில் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும்... சிங்கள மக்களுக்கு ஆதரவாக இருந்ததுடன்... மேலும் தான் இருந்த கட்சியையே சிதைக்கும்.. பல உளறுவாய் வேலைகளை செய்தபடியால் தான்... சுமந்திரன் தோற்கடிக்கப் பட்டார் என்பதை, அந்த சிங்கள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நினைவு படுத்தி விடுங்கள். 😂 விட்டால்... வரலாறை திரித்து, சுமந்திரனை மாவீரன் நெப்போலியன் ஆக்கி விடுவார்கள் போலுள்ளது. 🤣- கருத்து படங்கள்
- அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
- அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – விஜித ஹேரத்
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – விஜித ஹேரத் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி புதிய வேட்புமனுக்களை அழைப்பதா இல்லையா என்பதை ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும் எனவும், திகதிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409597- விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கன வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். படுகாயமடைந்திருந்த கை. சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. https://athavannews.com/2024/1409571- யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு!
யாழில் ஊருக்குள் புகுந்த பாரிய முதலையால் பரப்பு! யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1409594- நினைவாலய திறப்புக்கு அழைப்பு
நினைவாலய திறப்புக்கு அழைப்பு. 982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில்,தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் , விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும், சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் இன்று (23) மாலை 6 மணிக்கு நல்லூர் தியாக தீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீர் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் முல்லைத்தீவு, நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில், தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டுதாக நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோர்கள் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1409583- சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-
சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்- ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார். சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கி என்று கூறுபவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறார்கள். எதற்கு சந்திக்க சென்றீர்கள் என கூறுவதில்லை… என்ன சந்தித்து உரையாடினீர்கள் என கூறுவதில்லை. இப்போது நான் ரஜினிகாந்த்தை சந்தித்த போது பேசியதை கூறுகிறேன்.. அதை ஏன் கூறுவதில்லை?. என்னை வந்து கேட்கிறார்கள் கள்ள உறவா என்று, நல்ல உறவே இருக்கிறது. பொண் கொடுத்து பொண் எடுத்த சம்மந்திங்கள் போல பிரதமரும், முதலமைச்சரும் சந்திக்கின்றார்கள். ஆனால் வெளியில் வந்து எங்களை சங்கி என்கிறார்கள். இது என்ன கொடுமை? . திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால்,.. இதை எப்படி சொல்வது? … அப்படியாயின் பெருமையாக நாங்கள் சங்கி என்பதை ஏற்கதான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1409534- வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்!
சிலவேளை அந்தப் பாரிய கல்… இரத்தினக் கல்லாகவும் இருக்கலாம். வடிவாக தண்ணீரில் கழுவி விட்டு பார்க்கவும். 😁- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அவர்கள்... நல்லெண்ண சமிக்ஞை காட்ட ஆரம்பிக்கும் போது... நாம் பொறுமையாக இருந்து பெறவேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பவே... ஒன்றுக்கும் உதவாத, வறட்டு வீரத்தை காட்டி... ஆரம்பத்திலேயே குழப்பி அடித்தால், அடுத்த ஐந்து வருடம் தமிழர்களுக்கு நரகமாக இருக்கும். நேற்றைய காணொளி... சிங்களப் பகுதிகளை வடிவாக போய்ச் சேரவில்லை என நினைக்கின்றேன். அதன் பின்... புத்த பிக்குகளில் இருந்து, கடைமட்ட கிராமத்து சிங்களவன் வரை... இதன் எதிர்வினை கடுமையையாக வரும் என நினைக்கின்றேன். போதாக் குறைக்கு.... முஸ்லீம்களும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற தயாராகவே இருக்கின்றார்கள். பிறகு தமிழர்களை காப்பாற்ற யாரும் இல்லை.- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
முதல் நாள் எவரும்... விரும்பிய இருக்கையில் அமரலாம் என்று முன்பே சொல்லப் பட்டதாம். அப்படி அவர், பிழை என்றால்... அன்றே சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாராம், அப்படி நடவடிக்கை எடுக்காத படியால்... அர்ச்சுனாவில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால்... என்ன இருந்தாலும்... பிரதம மந்திரிக்கு சமமான அந்தஸ்து உடைய எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்து, முதல் நாளே பிரச்சினை பட்டது சரி அல்ல என்பது எனது நிலைப்பாடு. தமிழர்களுக்கு ஒரு பண்பு உள்ளது. அதனை காவலித்தனமாகவோ, கோமாளித்தனமாகவோ செய்வது அருவருப்பை எனக்கு ஏற்படுத்துக்கின்றது. எத்தனையோ... பிரச்சினைகள் இருக்க, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்துதான் தனது அடையாளத்தை காட்ட வேண்டும் என்று இல்லை. நேற்று முற்பகல் சஜித்தின் கதிரையில் இருந்து விட்டு, தேனீர் இடைவேளையில்... சஜித்துடன் நின்று ஒரு செல்ஃபியும் எடுத்துள்ளார். அத்துடன் அவர் தனது மதம் இந்து என்று பாராளுமன்ற பதிவில் கொடுத்தவராம், அதனை புத்த சமயம் என பதிந்து விட்டார்களாம் என்று இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டு இருக்குது.- கருத்து படங்கள்
இலங்கை பத்திரிகைகளில் இருந்து வரும் கருத்தோவியங்களே இவைகள். சிங்களவர், முஸ்லீம்கள் என்று (Shanika, Pradeep, Awantha Artigala, Sajith Bandara, Wasantha, Jeffrey) பலர்... முதல் நாள் நடந்த செய்திகளை சூடு ஆறாமல், உடனுக்குடன் தரமாக வரைந்து பிரசுரிப்பார்கள். "செல்வன்" என்று ஒரு தமிழரும்... இடைக்கிடை அழகிய கருத்தோவித்தை வீரகேசரியில் பிரசுரிப்பார் நிலாமதி அக்கா.- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சுமந்திரனை விட... அர்ச்சுனாவும், கௌசல்யாவும் சுயேச்சையில் நின்று அதிக வாக்கு எடுத்து விட்டார்களே என்ற அவமானம், பொறாண்மை, வயித்தெரிச்சல்... இருக்கத்தானே செய்யும். சுமந்திரன்கள் ஒழுங்காக இருந்திருந்தால்... அர்ச்சுனாவுக்கும், கௌசல்யாவுக்கும் மக்கள் ஏன் வாக்களிக்கப் போகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில், அகில இலங்கையில் போட்டியிட்ட... அத்தனை சுயேட்சை வேட்பாளர்களில்... வென்ற ஒரேயொருவர் அர்ச்சுனா மட்டும் தானாம்.- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஆனானப் பட்ட சுமந்திரனே... சுயேட்சை வேட்பாளர்களாக நின்ற ... அர்ச்சுனா, கௌசல்யாவை விட குறைய வாக்குகள் எடுத்த மாதிரி... ஈழப்பிரியன். 😂- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் ########### ######### @குமாரசாமி தாத்தா... தன்னுடைய அரசியல் அறிவை எல்லாம் @வீரப் பையன்26 க்கு கொடுத்து, ஏணியிலை உச்சத்திலை ஏத்தி விட்டுட்டு.. கீழை 21´ம் இடத்திலை நின்று அண்ணாந்து பார்க்கின்றார். 😂 இப்பிடி ஒரு தாத்தா கிடைக்க... பையன் கொடுத்து வைத்திருக்க வேணும். 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1970களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம்.. சாவகச்சேரியில், நிறுவப்பட்ட பனம் சீனி உற்பத்தி நிலையம்.- “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்!
“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்! கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது “மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை தயாரிக்கும் முறைகளும் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1409489 - புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.