Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பம்! 10வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த நாட்களில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. https://athavannews.com/2024/1408793
  2. தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்! பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும். அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி சார்பாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார். சமன்மலி குணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 59,657 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளதோடு, அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டத்தில் 58,201 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலந்தி கொட்டஹெச்சிகே 131,375 வாக்குகளுடனும், ஒஷானி உமங்கா – களுத்துறை மாவட்டத்தில் 69,232 வாக்குகளுடனும், சரோஜா போல்ராஜ்- மாத்தறை மாவட்டத்தில் 148,379 வாக்குகளுடனும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர். நிலுஷா கமகே – இரத்தினபுரி மாவட்டத்தில் 48,791 வாக்குகளையும், சாகரிகா அதாவுத – கேகாலை மாவட்டத்தில் 59,019 வாக்குகளையும் ஹிருணி விஜேசிங்க – புத்தளம் மாவட்டத்தில் 44,057 வாக்குகளையும் கௌசல்யா ஆரியரத்ன – கொழும்பு மாவட்டத்தில் 80,814 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேசிய மக்கள் சக்தி சார்பாக சதுரி கங்கானி மொனராகலை மாவட்டத்தில் 42,930 வாக்குகளையும், துஷாரி ஜயசிங்க கண்டி மாவட்டத்தில் 58,223 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, ஹஸார லியனகே காலி மாவட்டத்தில் 82,058 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்கவுள்ளனர். அத்தோடு, மாத்தளை மாவட்டத்தில் 47,482 தீப்தி வாசலகே, குருநாகல் மாவட்டத்தில் 84,414 வாக்குகளுடன் குமாரி ஹேரத், கம்பஹா மாவட்டத்தில் 66,737 வாக்குகளைப் பெற்று ஹேமாலி சுஜீவா ஆகியோர் நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாத்தளை மாவட்டத்தில் 27,845 வாக்குகளைப் பெற்ற ரோஹினி குமாரி விஜேரத்ன, கண்டி மாவட்டத்தில் 30780 வாக்குகளைப் பெற்ற சமிந்திரானி கிரியெல்ல ஆகியோரும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர். இதற்கு மேலதிகமாக, அந்தந்த அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல்களில் இருந்து மற்றுமொரு பெண்கள் குழுவும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408807
  3. இன்று ... எத்தனை தலை உருளப் போகுதோ... எத்தனை சட்டை கிழியப் போகுதோ... எத்தனை வேட்டி அவிழப் போகுதோ... எத்தனை கோவணம் உருவப்படப் போகுதோ... ஞாயிற்றுக்கிழமை நமக்கு.. "என்ரரெய்ன்மென்ட்" இருக்கு. 😂 🤣
  4. //தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.// மாவைக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்காது என நினைக்கின்றேன்.
  5. ஓம். எப்படியும்… மலையகத்திற்கு ஒரு தமிழ் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.
  6. பாராளுமன்ற தெர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களை, (பின் கதவு) தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் தெரிவு செய்யப் படுவதை தடுக்க புதிய சட்டம் ஒன்று அவசரமாக நிறைவேற்றப் பட வேண்டும். மக்களால்… செருப்படி கொடுத்து நிராகரிக்கப் பட்டவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் அனுமதிப்பது… மக்களை அவமதிப்பது போன்ற செயல்.
  7. எத்தனை தமிழ் அமைச்சர் பதவி கிடைக்கப் போகுது என்று அறிய ஆவலாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்ற வைத்தியர் எஸ். ஶ்ரீ பவானந்தராஜா அவர்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைக்கின்றேன்.
  8. சுமந்திரன் ஒருவரால் தான்…. தமிழரசு கட்சியில் இவ்வளவு பிரச்சினைகளும், பிழவுகளும் ஏற்பட்டது. நடந்து முடிந்த தேர்தலிலும் தமிழரசு கட்சி படு தோல்வி அடைந்ததற்கு சுமந்திரனின் செயல்களே முக்கிய காரணம். அதனை மக்களே “தேவை இல்லாத ஆணி” என்று அவரை வாக்குகளால் தோற்கடித்து காட்டி விட்டார்கள். இப்போ கட்சியை விட்டு சுமந்திரனை வெளியே அனுப்ப வேண்டிய பொறுப்பு தமிழரசு கட்சியிடமே உள்ளது. 💪 சுமந்திரனை தூக்கி வெளியே போட்ட அடுத்த நிமிடமே… தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு அணியாக திரளும். ✅ அதை விட்டுட்டு…. போகாத ஊருக்கு, வழி சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.
  9. மறவன் புலவு சச்சிதானந்தம் ஐயா கூறிய தீர்க்கதரிசன்மான வார்த்தைகள் மூலம்…. சுமந்திரனுக்கு படு தோல்வியை மக்கள் கொடுத்துள்ளனர். 👍 👍 👍
  10. நல்ல ஒரு அலசல். இணைப்பிற்கு நன்றி விசுகர். அதிலும்… சென்ற தேர்தலில் பெற்ற வாக்கையும் இம்முறை பெற்ற வாக்கையும் ஒப்பிட்டமை சிறப்பு. 👍🏽
  11. தேசியப் பட்டியல் மூலமாக போனால் சேர்ப்பு இல்லை. மக்களால்… நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
  12. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @Kandiah57, @vasee, @vaasi, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @sinnakuddy thasan, @kayshan அன்பான யாழ்.கள உறவுகளே... மீண்டும் ஒரு தேர்தலில், வாக்களிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலே உள்ள தலைப்பின் கேள்விக்கு... ஆம் அல்லது இல்லை என வாக்களித்தால் போதுமானது. வழமை போல் இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எதற்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.
  13. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை- சிவாஜிலிங்கம் ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம். தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள். நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர். நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1408757
  14. தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்குக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியலிலிருந்து ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408743
  15. மனோ கணேசன் அவர்களே... கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும்... சஜித் பிரேமதாசாவின் கட்சி இலங்கை முழுக்க பலத்த அடி வாங்கியதும், அனுர அலையும் உங்களால் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது. அதனை நினைத்து வருத்தம் கொள்ளாதீர்கள். டக்ளஸ் என்ற வைக்கல் பட்டறை நாலுகால் பிராணியும் கொழும்பில் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்ததும் உங்கள் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கும்.
  16. தலைப்பின் கேள்வி: திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? ஆம். ஆனால், சுத்துமாத்து செய்து... மத்திய குழுவை மிரட்டி, Black mail பண்ணி... உள்ளே போவார் என்பதே பலரது கருத்து. அது... சுமந்திரன் பாராளுமன்றம் போகவேண்டும் என்று விரும்பி போட்ட வாக்குகள் அல்ல. அவரின் சுத்துமாத்துக்கு கிடைத்தவை. 😂 வடக்கிற்கு ஒன்று என்றால்... மலையகத்திலும் ஒன்று. 😂
  17. தனக்கு தனக்கு என்றால், சுளகு... படக்கு படக்கு என்று அடிக்குமாம். ஊருக்குத்தான் உபதேசம். உனக்கில்லையடி கண்ணே.... என்றானாம்.
  18. நெல் முளைத்த... வயலை உழுத கையுடன், பசளையும் தூவிய அதி நவீன விவசாயி. இந்த ரெக்னிக்கை... நாங்கள் ஜேர்மனியிலும் அறிமுகப் படுத்த வேணும். 😂 இவர் எத்தனையோ... குறளி வித்தை காட்டியும், மக்கள் அதனை கோமாளிக் கூத்தாக எடுத்து, தேர்தலில் நல்ல பாடம் புகட்டி, வீட்டிற்கு அனுப்பி உள்ளார்கள். 🤣
  19. அனுர கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணமே... அவர்கள் சமூக மட்டத்தில் இருந்து... பல்வேறு மக்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியதுதான். ஆனால்.... இவர்களோ, தமக்கு.. காக்கா பிடித்து, குழை அடிப்பவர்களை தேர்வு செய்து நிறுத்தி... தமக்கும் தோல்வி ஏற்பட வழி சமைத்த பைத்தியக்காரர்கள்.
  20. 100% உண்மை விசுகர். அது புரியாமல் இன்னும் 1970´ம் ஆண்டுகளின் அரசியலை கள யதார்த்தம் புரியாமல்... செய்யும் முழு முட்டாள் சம்பந்தன், சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகளின் செயலால்... நன் மதிப்புடன் இருந்த தமிழரசு கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.