Everything posted by தமிழ் சிறி
- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
சுமந்திரன் என்னும் கோடாலி காம்பு….. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, இப்போ… தமிழரசு கட்சியை சல்லி சல்லியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்.
-
கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது
சீனன் இலங்கைக்கு கடன் கொடுத்து தனது வித்தையை காட்டுகின்றான். வழக்கமாக இப்படியான வேலைகளை பாகிஸ்தான்காரனின் பெயரும் அடிபடும். இப்போ… அவர்கள் திருந்தி விட்டார்களா.
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
பதுக்கல் முதலாளிகள் பொருட்களின் விலைகளை உயர்த்தி, வரும் தேர்தலில் அனுரவின் கட்சிக்கு ஆப்படிக்கப் போகிறார்கள் போலுள்ளது.
- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
-
திருகோணமலையில் கூட்டிணைந்து போட்டியிட ஆயர் முன்னிலையில் இணங்கியது தமிழரசு - அம்பாறை விடயத்தினை உரையாடித் தீர்க்குமாறும் அறிவுரை!
சுமந்திரனுக்கு…. பாராளுமன்றத்துக்குள் போக வேண்டும் என்றால், தேசியப் பட்டியல் மூலமே உள்ளே போகலாம். அவருக்கு தனியே மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் போக வாய்ப்பில்லை ராஜா. அப்போ…. பின் கதவு வழிகளைதான் தேடிப் போகவேண்டும்.😂
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளது
அம்பாறையில்…. தமிழரசு கட்சி தனித்துப் போட்டியாம், திருகோணமலையில் தமிழரசு கட்சி…. சங்கு சின்னம் வைத்திருக்கும் ஐக்கிய மக்கள் தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியாம். என்ன ஒரு கொள்கை. பாராளுமன்ற கதிரை எடுக்க நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறார்கள்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
இளைஞர்களுக்கு வழி விடாமல், தேர்தல் என்றவுடன் முன்னுக்கு வந்து நிற்கும் கிழட்டு தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருக்கும், இந்த முறை பென்சன் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பப் போகின்றார்கள். வீட்டில்…. சாய்மனைக் கதிரையில் அமர்து நிரந்தரமாக ஓய்வு எடுக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
தினமும்…. லூசுத்தனமான அறிக்கை விடுபவர்களில் சுமந்திரன் உங்கள் கண்ணில் படவில்லையா. அல்லது உங்கள் ஆளுக்கு வெள்ளை அடிக்க நினைத்து அவரை கருத்தோவியமாக வரைய மனம் இடம் கொடுக்கவில்லையா. சுமந்திரன் தானே…. ஶ்ரீதரனை தேர்தலில் போட்டியிடாமல் செய்ய, பல திருகுதாளங்கள் செய்து கொண்டு இருந்தவர். பிறகு ஏன்… அவரை இணைத்தவர்? துணிவு இருந்திருந்தால் ஶ்ரீதரனை நீக்கி இருக்கலாமே. ஶ்ரீதரன் இல்லாமல்… தேர்தலில் தமிழரசு கட்சி போட்டியிட்டால், தோல்வி வரும் என்ற பயம் சுமந்திரனுக்கு வந்து விட்டது என்பதே யதார்த்தம். இப்போ…. ஶ்ரீதரனின் செல்வாக்கில்…. சுமன் குளிர்காய நினைக்கின்றார் என்பதே உண்மை. நிஜம் கசக்கும்தான்… அதுக்காக உண்மைக்கு புறம்பானவற்றை எழுதியோ, வரைந்தோ கொண்டு இருந்தால்… உங்கள் மேல் மற்றவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விட சந்தர்ப்பங்கள் அதிகம்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
சுமந்திரனும், சிறீதரனும் இப்ப சினேகிதமாம். இருக்கின்ற பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்று சினேகிதம் ஆகியுள்ளார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் என்ன கூத்துகள் எல்லாம் பார்க்கப் போகின்றோமோ. வெட்கம் கெட்டவர்கள். படு பயங்கர சுயநலவாத கும்பல்கள். மக்களை பைத்தியக்காரர் என நினைத்துக் கொண்டு, தினமும் லூசுத்தனமான அறிக்கைகளை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். இவர்களை நம்பி பின்னால் போனவர்கள் பாடுதான், திண்டாட்டம். 😂 🤣
-
மாற்றம் ஒன்றே மாறாதது
அத்தனையும்… வரிக்கு, வரி மிக அருமையான கருத்து. நன்றி வளவன். 🙏
-
சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி
சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு இப்ப எத்தினை வயசு. அவர் இளைஞரா? சுமந்திரன் தானே… இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று, பெரிய பருப்பு மாதிரி முந்தநாள் அறிக்கை விட்டுட்டு இப்ப விலகிச் சென்ற சார்ள்சை போட்டியிட பிடித்து இழுக்கின்றார். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாவிட்டால்…. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அறிக்கை விட்டு, மோட்டு வேலை பார்க்க வேண்டும். பேசாமல் பொத்திக் கொண்டு இருந்திருக்கலாமே.
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
13’ ஐ அமுல் படுத்தச் சொல்லித்தானே…. சந்திரிகாவிடமும், மகிந்தவிடமும், மைத்திரியிடமும், கோத்தாவிடமும் சொல்லி களைத்துப் போய்… மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக… அனுரவிடம் சொல்கிறார்கள். இவ்வளவு பேரும் உங்கள் சொல்லை கேட்கவில்லை என்றால், உங்களை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
கபிதன்…. கெதியாக உங்கள் “Boss” மாரிடம் சொல்லி, அவர்களின் கை சுத்தம் என்று நிரூபிக்க சொல்லுங்கள். இல்லையேல்…. சுமந்திரனின் வல்வெட்டித்துறை சாராயக் கடையும், சாணக்கியனின் கல்லடி சாராயக்கடையும் உண்மையாகி விடும். சுமந்திரன், இவ்வளவு காலமும் மௌனமாக இருப்பதை பார்க்க…. ஆள் எக்கச் சக்கமாக மாட்டு பட்டுப் போனார் என்றே கருதுகின்றோம். 😂
-
யாரைத்தான் நம்புவதோ?
சமகால அரசியல் போக்கையும், தமிழ் அரசியல் தலைமையின் இரட்டை வேடத்தையும்… தோல் உரித்துக் காட்டிய அருமையான கவிதைக்கு நன்றி பசுவூர்கோபி.
-
யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோப்பாயில்…. மதுபானசாலையை திறந்தாலும், நீர்வேலி ஆட்கள்… கோப்பாய்க்கு போய் சாராயத்தை, வாங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் போராட்டம் நடத்தி இருக்கலாம். 😁
-
புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நீங்கள், அவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில்…. ஊகத்தின் அடிப்படையில் சொல்லாமல் அதற்குரிய ஆதாரத்தையும் இணைத்தால் நன்றாக இருக்குமே. நம்பகத் தன்மையான தகவல்களைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நீங்கள் ஒருவரின் பிரச்சார பீரங்கியாக இல்லாமல்…. நம்பகமான தகவலை தாருங்கள் ப்ளீஸ். பிற்குறிப்பு: வர இருக்கும் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் இதுவரை… ஒரு கட்சிக்கும் உத்தியோக பூர்வமாக சின்னத்தை ஒதுக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
ஶ்ரீதரன் தான் குற்றம் அற்றவர் என்று மறுப்பு தெரிவித்து விட்டார். விக்னேஸ்வரன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார். சுத்துமாத்து கோஷ்டிகளான சுமந்திரனும், சாணக்கியனும் ஏன் இன்னும் பம்மிக் கொண்டு இருக்கின்றார்கள். அடுத்த சில நாட்களில்… இவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால்…. சுமந்திரன் எடுத்ததாக சொல்லப்படும் மூன்று மதுபானசாலை அனுமதிப் பத்திரமும், சாணக்கியன் எடுத்ததாக சொல்லப்படும் கல்லடியில் இயங்கும் மதுபான பத்திரமும் உண்மை என்றே கருதப்படும். பதுங்கிக் கொண்டு இருக்காமல், உண்மையை சொல்ல துணிவு இவர்களிடம் உள்ளதா என்பதே, பலரின் எதிர்பார்ப்பு. சீக்கிரம் வெளியே வாங்க.
-
யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அவரை படத்தில் காணவில்லை. அமெரிக்காவில் இருந்து இயக்குகின்றாரோ… 😂
-
புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஏராளன்… எந்தக் கட்சி பொதுவேட்பாளரின் சங்கு சின்னத்தை, தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து மீண்டும் பெற்றது.
-
யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
@நீர்வேலியான் உங்களுடைய ஏரியாவிலை போராட்டம் நடக்குது. 🙂
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
@goshan_che கோசானை சொல்கிறீர்கள் போலுள்ளது. 🧐 🙂
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
சாத்தான்… நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லையே. அவர் பெயரின் முதல் எழுத்தை “கிசு கிசு” பாணியில் சொல்லவும். 😀
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
நான் எங்கே என்று… அடித்தும் கேட்பாங்க, ஒன்றும் சொல்லிப் போடாதீங்க. 😂 🤣
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
அருமையான கருத்து கந்தையா அண்ணை. 👍🏼