Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்! சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலா் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றாரகள். சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது. அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும். தமிழ்ப் பொது வேட்பாளளை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும்இ சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாகவுமே தென்னிலங்கையின் வேட்பாளா்களுக்குத் தெளிவுபடுத்த முடியும். எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழா்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1396876
  2. அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 454,285 ரூபாய் என்றும் இவரே இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 285,681 ரூபாய் மாதாந்த வருமானத்துடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 256,802 ரூபாய் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 317,786 ரூபாய் என்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகேயின் மாத வருமானம் 3 இலட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். https://athavannews.com/2024/1396904
  3. தேர்தல் முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்! தேர்தல் முறையை டிஜிட்டல் மயமாக்க முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் டிஜிட்டல் தேர்தல் முறையை பரீட்சிக்க முடியும் எனவும் அதன் பின்னர் தேசிய தேர்தல்களில் இந்த முறைமையை பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் மாநாடு நடைபெற்றது. நாட்டின் எதிர்கால குறியீடு என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மாநாட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட பெப்பர் என்ற ரோபோ வரவேற்றமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி, ”இலங்கையில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும். எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம் தேவைப்படும். இன்றைய உலகில், தொழில் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் இன்றியமையாதது. ஆசியாவிலேயே தலைசிறந்து விளங்கும் நோக்கில், தொழில் நுட்பத்தை நமது பொருளாதாரத்தின் அடிப்படை அங்கமாக இணைக்க முடிவு செய்துள்ளோம். இது தவிர விவசாயம் போன்ற நவீனமயமாக்கல் செய்யப்பட வேண்டிய துறைகளையும் அடையாளம் கண்டிருக்கிறோம். தற்போதும் நாட்டில் மில்லியன் கணக்கான ஏக்கரில் நாட்டுக்குள் வாழ்வாதார விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் 300,000 ஏக்கரில் விவசாயம் செய்வதற்கான சாத்தியமும் உள்ளது. விவசாயத்தை நவீனமயமாக்கி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக நாம் மாறலாம். சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நமது பரந்த டிஜிட்டல் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை பொருளாதாரம் என்ற இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ பல்கலைக் கழகங்களை நிறுவவும் எதிர்பார்க்கிறோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக, கண்டியின் கலஹா பகுதியில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தை நிறுவுவதற்கும், குருநாகல், சீதாவக்க மற்றும் சியனே உள்ளிட்ட நான்கு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டாா். https://athavannews.com/2024/1396919
  4. வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன? எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவினா் வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில்இ அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. குறிப்பாக மத்திய மாகாணத்தில் 1421 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலிடத்திலும், தொடர்ந்து 1005 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாசவும், 420 வாக்குகளுடன் அநுரகுமார திசாநாயக்க மூன்றாவது இடத்திலும், 70 வாக்குகளுடன் நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, வடமாகாணத்தை பொறுத்தவரையில், 886 வாக்குகளைப் பெற்று ரணில் முதலிடத்திலும்இ 683 வாக்குகளை பெற்று சஜித் இரண்டாவது இடத்திலும், 298 வாக்குகளை பெற்று அநுரகுமார மூன்றாவது இடத்திலும், 46 வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளார். இருப்பினும்இ வடக்குக் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் பா.அரியநேந்திரன் இந்த பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. https://athavannews.com/2024/1396922
  5. த.வெ.க கொடியினால் சர்ச்சை – ஸ்பெயினை அவமதித்ததாக விஜய் மீது குற்றச்சாட்டு. தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார். முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396911
  6. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதன்போது கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். http://athavannews.com/2024/1396821
  7. தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகா் விசேட சந்திப்பு! தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகா் சந்தோஸ் ஜாவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகரசபை முதல்வர், இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் கலந்து கொண்டதோடு திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல்இ தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் அவர் கிழக்கு மாகாணத்தில் Indian High Commission அலுவலகத்தினையும் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். https://athavannews.com/2024/1396813
  8. அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் இலங்கையில் ஆரம்பம்! அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது வெளிநாட்டு நிறுவனமாகும். இதேவேளை இந்த நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்ய இந்தியாவின் ஐஓசி, சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவின் ஷெல் நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1396826
  9. உயர்நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து விசேட ஆராய்வு – தேர்தல்கள் ஆணைக்குழு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தன்னிச்சையாகவும் மற்றும் சட்ட விரோதமாகவும் பிற்போடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நிதியமைச்சர் என்ற வகையில், மக்களின் அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தேர்தல் நடவடிக்கைகளை முறையாக திட்டமிட்டு நிர்வகிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தவறியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக எதிர்வரும் 28ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆராயப்படும் என்றும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396841
  10. பையா... 200 ரூபாய் உடன் பிறப்புகள் இந்த 100 ரூபாய் காசை, எப்படி 10,000 ரூபாய்க்கு வாங்குவார்கள் என்று தெரியவில்லையே. 😂
  11. ஆக, கூத்தமைப்பு உடை பட்டதற்கும்... நரியன் ரணில் காரணமாகி விட்டார்.
  12. இரண்டு யானை... ஐடியாவை, இலங்கை நெருப்புப் பெட்டியில் இருந்து சுட்டு இருப்பார்களோ... 🤣
  13. திறைசேரியில்... பணம் இல்லாததால் தான்... உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் விட்டதாக அப்போது ஒரு காரணம் சொல்லப் பட்டது. 😂 உள்ளூராட்சி தேர்தல் நடத்தப் படும் என நம்பி... தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிக்கப்பட்டு, தமிழரசு கட்சியாக சுருங்கியதும் நடந்தேறியது.
  14. எங்கள் நாட்டில் ஒரு யானை வைத்திருந்த ரணிலே ஜனாதிபதி ஆகும்போது, இரண்டு யானை வைத்திருக்கும் விஜய்க்கு... முதலமைச்சர், பிரதமர் ஆகும் யோகம் இருக்கு மேடம்.😂
  15. பெட்டியையும்... சேர்த்து, சாப்பிட்டு விடுவோம் என நினைத்து விட்டார்கள் போலுள்ளது. 😂
  16. செய்தி: ரூ 10000 செலுத்தி... 100 ரூபாய் பெறுமதியான கலைஞர் நாணயத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  17. அந்த அளவிற்கு... இந்த அரசியல்வாதிகள் சுத்த ஞானசூனியங்களாக இருந்திருக்கின்றார்கள். அதுகளை கொண்டாடிய சனங்களை என்னவென்று சொல்வது.
  18. கூட்டம் வராத பிரச்சார மேடைக்கு முன்பு ஆகக் குறைந்தது... மைக் செட்டுக்காரன், கதிரை வாடைக்கு விட்டவன், மேடை கட்டியவன் என்று ஒரு சிலராவது அங்கு நிற்பார்கள். சில இடங்களில்... தெருநாய், காகம் கூட அங்கினை சுற்றி திரியும். இதிலை, ஒரு குருவியை கூட காண முடியவில்லையே... 😂 கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டிய கூட்டம் இது. 🤣
  19. 385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகரம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் அழகு நகரமாக விழங்கும் சென்னைக்கு இன்று 385வது பிறந்தநாள் . அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது. சென்னை நகருக்கு அப்பெயரைப் பெரும் முன்பே நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்துள்ளது. 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது புனித ஜோர்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர். அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது. இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுகூர சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார். நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து “மெட்ராஸ் மாகாணம்” உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது. அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன. அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது. சென்னையில் தற்போது 1 கோடியே 22 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு. இந்த நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396790
  20. 35 நாடுகளுக்கு இலவச விசா. 35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஸகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக்குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கட்டார், ஓமான், பஹ்ரைன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396774

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.