Everything posted by தமிழ் சிறி
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
கீத் நாத் காசிலிங்கம் இவ்வளவு நாளும் எங்கை இருந்தவர்? 😂 இப்பதான் இவரின் பெயரை கேள்விப் படுகின்றேன். 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வாங்கின கதிரையை... பெட்டியை திறந்து வைக்க, அவ்வளவு பஞ்சி. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
- வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த 2 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த 3 ஆம் திகதி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர். இதனையடுத்து வைத்தியர் அர்ச்சுனா நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில், வைத்தியர் அர்ச்சுனா இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது வைத்தியர் அர்ச்சுனாவை இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1395010- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை-ஜனாதிபதி! என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு போர் அல்ல. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா என்பதைச் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் நாட்டை முன்னெடுத்துச் செல்வேன். நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். மேலும் மற்ற வேட்பாளர்கள் எனக்கு சவாலாக இல்லை என்றும் நான் நாட்டின் எதிர்காலத்திற்காக வருகிறேன். ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக வரவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார் . இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1394978- ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பும் பசில் ராஜபக்ஷ!ராஜபக்ச குடும்பத்தில் பிளவா? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் காரணமாகவே பசில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நிறுத்தும் தீர்மானித்தினால் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்இ பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவரும் அதனை நிராகரித்ததையடுத்து, நாமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததுடன் இது தொடர்பில் பல்வேறு மட்ட கலந்துரையாடலில் ரணில் – பசில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394989- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை – குவியும் புகழாரம் ஒலிம்பிக் போட்டிகளில் பல சுவாரஷ்யங்கள் , பல வரலாற்று வெற்றிகள் என்பன பதிவாகி கொண்டிருக்கும் நிலையில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். வரலாற்றுச் சாதனை படைத்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார். வினேஷ் மற்றும் அவரது சக வீராங்கனைகளின் போராட்டத்தை விமர்சித்தவர்கள், அவர்களின் எண்ணம் மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஆகிய அனைவருக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது. இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்துதான் பதிலளிப்பார்கள். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸ் நகரில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். முன்னதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சொந்த நாடே உதறித்தள்ளியது இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394966 #################### ################## ############# ஒலிம்பிக் 2024: வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி! நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக பாரீசில் உள்ள மருத்துவமனையில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன்காரணமாக இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. குறித்த சம்பவம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பதக்கத்தைப் பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தமது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை இரவு முழுவதும் உடல் எடையைக் குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட காரணத்தினால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பாரீசில் உள்ள மருத்துவமனையில் வினேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394988- டிரம்ப் உட்பட பலரை கொலை செய்ய திட்டம் - பாக்கிஸ்தானை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் கைதான ஈரான் உளவாளி. அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த ஈரான் உளவாளி ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவரை உளவுத்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உற்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாகவும், அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அமெரிக்காவில் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலரை அணுகியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் ஆவார்கள். கூலிப்படை போல் நடித்த அதிகாரிகளிடம் ஆசிப் மெர்ச்சன்ட் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார். ஆவணங்களைத் திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார். அதன்பின் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது ஆசிப் மெர்ச்சன்ட்டை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சில முக்கிய ஆதாரங்களின்படி டிரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றபோது அவரை அமெரிக்கா கொலை செய்தது. இதற்கு பதிலடியாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரான் உளவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394970- ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
- கருத்து படங்கள்
- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
- ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தினையும் தம்மிக்க பெரேரா கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆண்டு வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பணியாற்றியிருந்தார். தற்போது இலங்கை வரலாற்றில் மிகக்குறைந்த வயதுடைய ஜனாதிபதி வேட்பாளராக என்ற பெருமையை நாமல் ராஜபக்ச தனதாக்கிக்கி கொண்டுள்ளார். https://athavannews.com/2024/1394936- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
எல்லாம்... இவராலை தான்.- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
ஸ்ரீலங்காவில் மகிந்தவின் தந்தை ராஜபக்சவின் சிலை உடைப்பும், வங்காளதேசத்தில் தற்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை.... முஜிபுர் ரஹ்மானின் சிலை உடைப்பும்... மீண்டும்... ஸ்ரீலங்கா சம்பவத்துக்கும் , வங்காளதேச சம்பவத்துக்கும் உள்ள ஒற்றுமை.- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
வங்காளதேசத்தில் மோசமான நிலை. நாடு முழுவதும் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். உள்ளூர் அதிகாரிகள் இடைக்கால பாணியில் அடித்துக் கொல்லப்பட்டனர், உடல்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப் படுகின்றன.- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
வங்காளதேசத்தில் இந்துக்களின் கடை மற்றும் வீடுகளை கொள்ளை அடிக்கும் முஸ்லீம்கள்.- 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்
சீனப் படை இலங்கை வந்தால்... இந்தியா கோவிக்க மாட்டுதா...? பல பில்லியன் டொலர் காசு குடுத்து, இலங்கையை மஜா பண்ணி வைத்திருந்ததெல்லாம் வீணாகி போய் விடாதா?- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இலங்கையில் நடக்கும் சம்பவங்களும், வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால்... இதன் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாம் பெரிய அண்ணரின் வேலையோ அல்லது பக்கத்து கிரகம் பிடித்த நாட்டின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கின்றது. வங்காள தேசத்து பிரதமரின் உள்ளாடையை எடுத்தது போல்... கோத்தாவின் மனைவியின் உள்ளாடையை எடுத்த காணொளியையும் முன்பு பார்த்திருந்தேன். கண்டு பிடித்தால்... இணைத்து விடுகின்றேன். அது வரை கோத்தாவின் "ஜட்டி"யை, மீண்டும் பாருங்கள். 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
நண்பனை கண்டவுடன்... வாயெல்லாம் பல்லாக, கால் நிலத்தில் படமால் துள்ளிக் குதிக்கின்றார். 😂- ஜனாதிபதித் தேர்தல் – இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினா்!
கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளா்கள் தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு! 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, P.W.S.K .பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே.ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர். இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் நேற்று பிற்பகல் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அத்துடன், ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் சுயேட்சை வேட்பாளராக நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருணலு மக்கள் முன்னணி சார்பில் அதன் செயலாளர் வைத்தியர் கே.ஆர். கிஷான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1394866- கருத்து படங்கள்
கோத்தா போல்... குப்பைத் தொட்டிக்குப் போன வங்கதேச பிரதமர். 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.