Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி. வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்தி, அவர்களையும் மனிதர்களாக எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்து நடைபவனி ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை இந்த நடைபவனி சென்றடைந்து அங்கு நிறைவு பெற்றிருந்தது. சுமார் 50 பேர் வரையில் இந்த நடைபவனியில் கலந்து கொண்டனர். யாழ் சங்கம் என்கின்ற இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பணியாற்றுகின்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இவ் ஊர்வலத்தில் திருநங்கைகள் அதிக அளவில் கலந்து கொண்டதோடு தமது உரிமைகளை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகளை உடைய மனிதப் பிறப்புகளை என்ற கருத்துக்களையும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389908
  2. சிங்கத்தின் வால், மிதிபட்டால் என்ன நடக்கும். 😂
  3. தீயா, வேலை செய்யணும் குமாரு... 😂
  4. பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதன்போது குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389828
  5. வாகனம் பழுது பட்டு நின்றால்... அந்த இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் மேலே காட்டியபடி எச்சரிக்கை முக்கோணம் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. அதனை இவர்கள் பின்பற்றி இருந்தால் மூன்று உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  6. இலங்கையின் வரலாற்றில் பெண் உரிமைகள் தொடா்பாக விசேட சட்டம்! ”இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெண் உரிமைகள், பெண்களுக்கான சம அந்தஸ்து தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் கொண்டு வரப்படவில்லை” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ பெண்கள் வலுவூட்டல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், பெண்களின் உரிமைகள் அல்லது பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்குவதற்கான எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை. இந்தச் சட்டத்தின் மூலம், பெண்களை வலுவூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு தேசியக் கொள்கை தயாரிக்கப்படும். இந்த சட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய கொண்டுவரப்பட்டுள்ளது. சட்ட வரைவின் போது பல திருத்தங்கள் செய்யப்பட்டன. நாடாளுமன்ற மகளிர் மன்றமும் அதற்கான பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, சட்டத்தில் பல அத்தியாவசிய மற்றும் முக்கியமான விடயங்களைச் சேர்த்துக்கொள்ள முடிந்தது. மேலும், தேசிய பெண்கள் ஆணைக்குழுவை அமைத்தல் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்களோடு, பெண்களின் உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த சட்டம் பெண்களை வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் கலைவதற்கான இணக்கப்பாட்டிற்கு அமைவாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புக்களைச் செயற்படுத்தும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் பாலினம் மற்றும் பாலியல் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பதற்கும், துன்புறுத்தல்களைத் தடுப்பதற்குமான ஏற்பாடுகளையும் செய்ய முடியும்” இவ்வாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். https://athavannews.com/2024/1389776
  7. முல்லைத்தீவு – மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு! முல்லைத்தீவு – மாங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. இதன்போது நிறுத்தப்பட்ட பேருந்தின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்களில் பேருந்து சாரதியும் மேலும் இரு பயணிகளும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பேருந்தின் நடத்துநரும் மற்றுமொருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சடலங்கள் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389706
  8. சட்ட மா அதிபராக மீண்டும் சஞ்சய் ராஜரத்தினம் – ஜனாதிபதி விசேட அனுமதி! சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்ட மா அதிபரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது . அதேசமயம் ஏற்கனவே அவருக்காக ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசியலமைப்பு சபை இன்று விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது. இந்த பின்னணியிலேயே அரசியலமைப்பு சபையின் முடிவை புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2024/1389718
  9. நீ... யாரை அதிகம் நேசிக்கின்றாயோ, அவர்தான் உன்னை தையல் போடுகின்ற அளவுக்கு காயப்படுத்துவார். 🤣
  10. குடிச்சிட்டு பாட்டில திரும்ப கொடுத்தா 10 ரூபா! குடிச்சிட்டு உங்க பாடியவே கொடுத்தா பத்து லட்ச ரூபா!! Anish J P
  11. பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம்! பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சிக்கும், இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையில் தீவிர போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன் ” குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் தேர்தல் போட்டியானது உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்திருந்தார். இதேவேளை வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389624
  12. உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்! யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர் துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக அழித்து வருகின்றன. இதன் காரணமாக நாம் கடற்படையினருக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைது செய்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்திய இழுவைப் படகை கைது செய்ய முற்பட்டபோது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய அந்த கடற்படை வீரருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கடற்படை வீரர் உயிரிழந்துள்ள நிலையில் எவர் பக்கமானாலும் உயிர் இழப்பை நாம் விரும்பவில்லை. இந்திய மீனவர்களிடம் வினையமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் உங்கள் கடல் எல்லையைத் தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம். அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காக கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம்பெறுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1389598

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.