Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நிறைவேற்று அதிகாரமுடைய இரும்பு மனிதர்களைத் தமிழ் மக்கள் தெரிவு செய்யப் போகிறார்களா? - நிலாந்தன். - நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பதுண்டு. நாட்டில் உள்ள லிபரல்கள், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோரின் கோரிக்கைகளும் அவ்வாறு இருப்பதுண்டு.தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், தமிழ் மக்கள் அதிகம் கொன்றொழிக்கப்பட்ட காலம், துன்பப்பட்ட காலம், இன அழிப்புக்கு உள்ளாகிய காலம், ஜனாதிபதி முறைமையின் கீழான காலம்தான் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை எனப்படுவது இரும்பு மனிதர்களைத்தான் தோற்றுவித்திருக்கின்றது. இந்த இரும்பு மனிதர்கள் எப்பொழுதும் ஜனநாயக விரோதமானவர்கள். சிறிய தேசிய இனங்களுக்கும் எதிரானவர்கள். இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியதற்கு அது மிகப் பிரதான காரணம். இப்படிப்பட்டதோர் பின்னணியில் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் முன்னைய காலங்களில் ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுவாக முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால் இம்முறை அப்படி ஒரு கோரிக்கையை யாரும் தொடர்ச்சியாக முன் வைப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்படவில்லை என்பதை இப்போதிருக்கும் ஜனாதிபதியே ஒருமுறை சுட்டிக்காட்டியதாக ஞாபகம். அப்படி என்றால் இப்போது இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் நிறைவேற்று அதிகாரமுடைய அந்த கதிரையை மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார்களா ? ஜனாதிபதி முறைமை தொடர்பான இந்த அடிப்படை கேள்விகளை எழுப்பாமல், இந்த அடிப்படைப் பிரச்சினையில் கை வைக்காமல் “நான் ஜனாதிபதியாக வந்தால் என்ன செய்வேன்” என்றுதான் எல்லா ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமைதான் இந்த நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்று மூலம் என்பதனை ஏன் அவர்கள் சுட்டிக் காட்டவில்லை? பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், ஆயுத மோதல்கள் இல்லாத ஒரு பின்னணியில், அப்படிக் கூற வேண்டிய தேவை அவர்களுக்கு வரவில்லையா? அல்லது மறைமுகமாக அவர்கள் அனைவரும் அந்த முறமையை ஆதரிக்கின்றார்களா ? இதற்கு முந்திய ஜனாதிபதித் தேர்தல்களின் போது பெரும்பாலான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அந்த முறைமையை அகற்ற வேண்டும் என்று கூறித்தான் வாக்கு கேட்பார்கள். ஆனால் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டால் அந்த வாக்குறுதியை அவர்கள் மறந்து விடுவார்கள். ஏன் மறந்து விடுகிறார்கள்? ஏனென்றால் அந்தக் கதிரையின் சுகம் அப்படி. அந்தக் கதிரையின் பலம் அப்படி. ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களைக் கொண்ட பதவி அது.ஜே.அர். ஜெயவர்தனாவின் வார்த்தைகளில் சொன்னால் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது தவிர மற்ற எல்லா அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யலாம். ஆனால் கடந்த பல தசாப்த கால அனுபவமானது நாட்டை அதிசயங்கள் அற்புதங்களின் சொர்க்கமாக மாற்றவில்லை.மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தீவாகவும் மனிதப் புதைகளின் தீவாகவும் ஐநாவில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படும் நாடாகவும் தான் அதை மாற்றியிருக்கின்றன. அப்படி என்றால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு தீங்கானது என்று தானே பொருள்? எனவே அதை அகற்ற வேண்டும். ஆனால் இம்முறை எந்த ஒரு பிரதான வேட்பாளரும் அதை அகற்ற வேண்டும் என்பதனை ஒரு பிரதான வேண்டுகோளாக, வாக்குறுதியாக முன் வைக்கவில்லை. இது எதைக் காட்டுகின்றது? நாடு அடிப்படைப் பிரச்சினைகளைத் தவிர்த்து விட்டு அல்லது பிரச்சனையின் அடிப்படைகளை ஆழமாக நோக்காமல் மேலோட்டமாக எல்லாவற்றையும் அணுகி வருகிறது என்பதைத் தானே? நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையால் ஒப்பீட்டளவில் அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் தான். இரும்பு மனிதர்களின் மிருகப் பிடிக்குள் இன அழிப்புக்கு உள்ளாகியது தமிழர்கள்தான். ஆனால் தமிழ்த் தரப்பில் அது தொடர்பாக ஏதும் உரையாடப்பட்டிருக்கிறதா ? பிரதான தமிழ்க் கட்சிகள் அதை ஒரு பேசு பொருளாக மாற்றவில்லை. மாறாக ஒரு கட்சி பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறுகிறது. இன்னொரு கட்சிக்குள் ஒரு பிரிவு தென் இலங்கையில் யாராவது ஒரு வேட்பாளரோடு சமரசத்துக்கு போகலாமா என்று காத்திருக்கின்றது. இன்னொரு தரப்பு பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்தக் கோரும் தரப்புக்களும் இந்த விடயத்தை பெரிய அளவில் பேசவில்லை. ஆனால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் எனப்படும் கருத்துருவம் தென்னிலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மனிதர்களுக்கு எதிரானதுதான். அதனால் தான் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் சமூகங்கள் தமது தீர்மானத்தில் அதை வேறு வார்த்தைகளில் கூறியிருந்தன. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நாம் நிராகரிப்பதாக அதாவது இரும்பு மனிதர்களை தெரிந்தெடுக்கும் தேர்தல் என்ற அடிப்படையில் அதை நிராகரிப்பதாக, குடிமக்கள் சமூகங்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளன.எதிர்காலத்தில் அதை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் மக்களின் அமைப்பானது தெளிவாக முன்வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். தென்னிலங்கையில் இரும்பு மனிதர்களாக வர ஆசைப்படும் தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்துவிட்டு தமிழ் மக்கள் தங்களுடைய குறியீடாக ஒருவரை நிறுத்தும் முயற்சிதான் தமிழ்ப் பொது வேட்பாளர். தென்னிலங்கையில் இதுவரையிலும் தெரிவு செய்யப்பட்ட இரும்பு மனிதர்கள் தமிழ் மக்களை ஒன்றில் ஒடுக்கியிருக்கிறார்கள். அல்லது தமிழ் மக்களின் ஆணைக்குத் துரோகமிழைத்து இருக்கிறார்கள். எனவே இரும்பு மனிதர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய அபிலாசைகளின் குறியீடாக,தங்களுடைய தேசிய ஐக்கியத்தின் குறியீடாக முன் வைக்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டை முன் நிறுத்தி, அதற்கு வாக்கு சேகரிக்க முயற்சிப்பதுதான் ஒரு தமிழ் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு ஆகும். பெருமளவுக்கு தென்னிலங்கை வேட்பாளர்களால் தெரிவு செய்யப்படக்கூடிய ஒரு இரும்பு மனிதரை நிராகரிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவைப் பொறுத்தவரை தேர்தலைப் புறக்கணிப்பதுதான். அதாவது தென் இலங்கை வேட்பாளர்கள் யாரோடும் சமரசம் பேசத் தயார் இல்லை என்ற நிலைப்பாடு, சாராம்சத்தில் ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பதற்குச் சமம்.இந்த இடத்தில் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. ஆனால் எங்கே வேறுபடுகின்றன என்று சொன்னால், தமிழ் வாக்குகளை தமிழ் பொது நிலைப்பாட்டின் வாக்குகளாக மாற்றும் விடயத்தில் தான். பசிக்கரிப்பு தேர்தல் என்ற ஜனநாயக பயில்வை முற்றாக நிராகரிக்கின்றது. ஆனால் பொது வேட்பாளர் என்ற தேர்வு அதை ஓர் உபாயமாகக் கையாளுகின்றது. அரசாங்கம் இரும்பு மனிதர்களை தெரிந்து எடுப்பதற்காக நடத்தும் ஒரு தேர்தலை தமிழ்த் தரப்பு தனது நோக்கு நிலையில் இருந்து எப்படி கையாளலாம் என்ற ஒரு ஜனநாயக உபாயம் அது. தமிழில் பழமொழி ஒன்று உண்டு. “உடையாரின் திருவிழாவில் சடையர் வானம் விட்டாராம்” என்று அதன் பொருள் என்ன? உடையார் பெருஞ் செலவு செய்து எடுப்பாகத் தன்னுடைய திருவிழாவை ஒழுங்குபடுத்த,அதில் சடையர் தன்னுடைய மத்தாப்பு வானத்தை விட்டு எல்லாருடைய கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துவிட்டார் என்பதுதான். தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயமும் அதுதான். அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தமிழ்த் தரப்பு எப்படி தன்னுடைய நோக்கு நிலையில் இருந்து பயன்படுத்தலாம் என்ற ஒரு முயற்சி. ஆனால் அந்த உடையாரின் விழாவில் விழும் வாக்குகளை வைத்து இரும்பு மனிதர்களாக வரமுற்படும் சஜித் பிரேமதாச கூறுகிறார், அது ஒரு பேரழிவாக முடியலாம் என்று. அவ்வாறு இரும்பு மனிதராக வர விரும்பும் ஒருவருக்கு தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்க வேண்டும் என்று ஓடித் தெரியும் தமிழ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் அது ஒரு கோமாளிக் கூத்து என்று. அது பேரழிவும் அல்ல கோமாளி கூத்தும் அல்ல. அது ஒரு ஜனநாயக உபாயம் என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. அதுபோலவே இரும்பு மனிதர்களை ஆட்சியில் இருந்து துரத்திய சிங்கள மக்களுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. அண்மையில் அரகலய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடாத்திய ஒரு ஊடகச் சந்திப்பில் ஒற்றை ஆட்சிக்கு வெளியே வந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தரத் தயார் என்று அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பில் அரசறிவியல் ரீதியாக அடர்த்தி மிக்க வார்த்தைகள், அதாவது சமஸ்டி, சுய நிர்ணைய உரிமை, தேசிய இனம் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. எனினும் பொதுப்படையாக ஒற்றை ஆட்சி முறமையை ஏற்றுக் கொள்வதில்லை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிங்கள மக்கள் மத்தியில் தன் எழுச்சியாக தோன்றிய ஒரு போராட்டத்தை வழிநடத்தியவர்கள் அவ்வாறு அறிவித்திருப்பதை தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும். அந்த மக்கள் இயக்கத்தின் பேச்சாளர்கள் அவ்வாறு கூறுவது மாற்றம்தான். அதைத் தமிழ் மக்கள் பொசிட்டிவ் ஆகவும் நிதானமாகவும் அணுகலாம். மக்கள் அமைப்பினர் அவ்வாறு கூறியிருப்பது, ஏனைய மூன்று பிரதான தென்னிலங்கை வேட்பாளர்களுக்கும் சவால்களை ஏற்படுத்தும். அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மேலும் தெளிவாகவும் துணிச்சலாகவும் கருத்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தை அது ஏற்படுத்தும். அது மட்டுமல்ல, யாராவது ஒரு தென் இலங்கை வேட்பாளருக்கு தமிழ் வாக்குகளை வளைத்துக் கொடுக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அங்கே செய்தி உண்டு. https://athavannews.com/2024/1389242
  2. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவு – இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திச் செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களுக்கு சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுடன் இனப்பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்படும் எனவும், அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனவும் அடுத்த 05 வருடங்களிலும் கூட இந்த மாகாணத்தை அபிவிருத்தி குறைந்த மாகாணமாக கைவிட்டுவிட முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1389253
  3. தாய்வான் சுதந்திரம் கோருபர்களுக்கு மரண தண்டனை – சீனா எச்சரிக்கை! தாய்வானின் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்ககை விடுத்துள்ளது. இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவிடமிருந்து, தாய்வானுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என தீவிரமாக செயற்படுபவர்களுக்கு எதிராக பிரிவினைவாதச் சட்டத்தின்கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுதந்திரம் கோரும் அமைப்புகளின் தலைவா்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும் என சீன அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய, சீன பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி சுன் பிங், பிரிவினைவாதக் குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை மரணம் ஆகும். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை என்ற கூரிய வாளை உயா்த்திப் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1949-ஆம் ஆண்டில் முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர், தாய்வான் பிரதேசம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தாய்வானும் தன்னை தனி நாடாக இதுவரை பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில், தாய்வானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகின்றது. தேவையேற்படின், இராணுவ வலிமையைக் கூட இதற்காகப் பயன்படுத்தலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழலில், தாய்வான் சுதந்திரத்தை தீவிரமாக வலியுறுத்தும் தலைவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389266
  4. வணக்கம் சுண்டல். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.
  5. இவ்வளவு பெரும் தொழிலதிபர்களால்… அவர்களின் வீட்டு வேலை செய்யும் மனிதர்களை மதித்து உரிய சம்பளம் கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை. இப்போ வசமாக மாட்டுப் பட்டு, வருடக் கணக்கில் களி தின்னப் போகின்றார்கள். சுவிஸ் நீதிமன்றத்துக்கும், கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதிக்கும் பாராட்டுக்கள்.
  6. பையனிட்டை கிரிக்கெட் படித்த ஆட்கள் எல்லாம், மேலை நிற்கிறதை பார்க்க எனக்கும் விசரா இருக்கு. ஹ… ஹா… ஹா…. 😂 🤣 விளையாட்டுத்தானே… இப்ப விட்டதை, அடுத்தமுறை பிடிக்கலாம் பையா. 🙂
  7. போர்த்துக்கல்லுக்கும் துருக்கிக்கும் நடந்து கொண்டிருக்கின்ற விளையாட்டில் இடைவேளை வரை... போர்த்துக்கல் துருக்கிக்கு இரண்டு கோல் அடித்து விட்டது.
  8. 2022´ம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்திய யோகா தினத்தில் ரணிலுடன், சுமந்திரனும் கலந்து கொண்டவர்கள். இந்த வருசமும் கலந்து கொண்டவரா என்று தெரியவில்லை. எதற்கும் இன்னும் இரண்டு மூன்று நாள் பொறுக்க படத்துடன் செய்திகள் வரும். நம்முடைய ஆட்கள் எங்கு வாக்குவாதப் படுவது என்ற விவஸ்தையே இல்லை. அதுசரி... எல்லாப் பிரச்சினைகளையும் பின்னுக்கு நின்று இயக்குவது இந்தியா தானே... அங்கை சண்டை பிடித்ததும் பரவாயில்லைப் போலுள்ளது.
  9. ஆச்சரியமானதும், பிரயோசனமானதுமான அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி ஏராளன். இதுவரை.. பறவைகள், மிருகங்கள் மூலம் மனிதன் கற்றவை அனேகம், இன்னும் பல கண்டறிய வேண்டி உள்ளது. "பறவையை கண்டான் விமானம் படைத்தான்" ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் அருந்தும் போது.... தனது முள்ளந்தண்டுக்கு பாதிப்பு இல்லாமல் நன்றாக காலை அகட்டி குனிந்து குடிக்கும் போது அதன் முள்ளந்தண்டுகள் பாதுகாக்கப் படுகின்றன. மனிதர் தமது தவறான செயல்களால் ஐந்து பேரில் ஒருவருக்கு முள்ளந்தண்டு பிரச்சினை உள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கின்றது.
  10. 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி மனைவிக்கு வீடியோ அனுப்பிய தந்தை கைது. ஊவா- பரணகம பகுதியில் அமைந்துள்ள கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், மனைவி தனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் தான், மகனை தாக்கும் காட்சியை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தக் காணொளியை சந்தேக நபரின் மனைவி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா தோட்டம், மேல் பிரிவு – உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்டதாக கூறப்படும் 4 வயது சிறுவனும் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1389162
  11. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும், ஜனாதிபதி ரணிலும்... கொழும்பில் யோகா செய்தபோது..... கண்ட காட்சி. 😂 இந்தியா... எள் என்றால், வெ(எ)ண்ணையாக நிற்போமில்ல. 🤣
  12. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும், ஜனாதிபதி ரணிலும்... கொழும்பில் யோகா செய்தபோது.....
  13. எமக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோம்! - ஜனாதிபதி - தொழில் அமைச்சராக தாம் பதவிவகித்தபோது வியட்நாம் நாட்டின் தொழில் அமைச்சர் தம்மை சந்தித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பெற்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவையில் இடம்பெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 09 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்தோடு நாங்கள் இந்த நாட்டில் ஒரு ஏற்றுமதித் தொழிற்துறைய உருவாக்கவில்லை எனவும் வாய்ப்புகள் இருந்தும் அந்த வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1979 ஆம் ஆண்டில் நான் சீனாவுக்குச் சென்றபோது சீனா நம்மைவிட ஏழ்மையான நாடாக இருந்ததாகவும் ஆனால் இப்போது சீனா நமக்கு பணம் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று 1991 ஆம் ஆண்டில் நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் என்னைச் சந்தித்ததுடன் உங்களுக்கு எப்படி முதலீடுகள் வந்தன எப்படி அன்னியச் செலாவணி கிடைத்தது வர்த்தக வலயங்களை எப்படி உருவாக்கினீர்கள் என என்னிடம் கேட்டு ஆலோசனை கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டதாகவும் இதை சரிசெய்துகொண்டு புதிய பொருளாதாரத்தை நோக்கி செல்லாவிட்டால் மீண்டும் ஒரு நாடாக நாம் படுகுழியில் விழுந்து விடுவோம் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2024/1389115
  14. திமுக மாணவரணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு திமுக மாணவரணி சார்பில் 24ம் திகதி நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் , குறித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி , திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பரீட்சை வினாத்தாள் வெளியானதாக பீகார் பொலிஸார் தெரிவித்திருந்ததும் நீட் தேர்வை மீள நடத்த வேண்டும் என தெரிவிப்பதற்கு முக்கிய காரணங்களாகும். மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே , திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன பேரணி முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், தற்போது பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் , திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நீட் வினாத்தாள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 32 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பீஹாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389133 @ரசோதரன்
  15. அங்கை வந்தாலும்.... ஆயிரம் சட்டங்கள் கதைத்துக் கொண்டு இருப்பது அவர்கள் குணம். வேலியிலை போற ஓணானை, பிடித்து வேட்டிக்குள் விட்டுட்டு... குத்துது, குடையுது என்ற நிலையும் ஏற்படக் கூடாது அல்லவா. 😂 🤣
  16. உடலுக்கு ஆரோக்கியமான பயிற்சியிலும்… மதம் குறுக்கிடுவது வினோதமாக உள்ளது.
  17. இந்த யோகா நிகழ்வில்… முஸ்லீம்களை ஏன் சேர்த்துக் கொள்வதில்லை. இது முஸ்லீம்களுக்கு செய்யும் அநீதியான செயல்பாடாக… இந்திய, இலங்கை அரசுகள் கடைப்பிடிக்கின்றன போலுள்ளது.
  18. கள்ளக்குறிச்சி விவகாரம் : பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – மு.க.ஸ்டாலின். விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டிலிருந்து 57 வைத்தியர்கள கள்ளக்குறிச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மெத்தனால் கலந்து சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லீற்றர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால் 3 இலட்சம் ரூபா வைப்பு நிதி அளிக்கப்படும். அவர்களின் வங்கிக்கணக்கில் 5 இலட்சம் ரூபா வைப்பு நிதி அளிக்கப்படும். 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் தொகை அளிக்கப்படும். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன்” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1389033
  19. சட்டசபையில் இருந்து வலுக்கட்டாயமாக உறுப்பினர்கள் வெளியேற்றம். தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க நாடாளுமன்று உறுப்பினர்கள் கடும் குழப்பநிலையில் ஈடுபட்டிருந்தனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய கடிதங்களை காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். முன்னதாக, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நாடாளுமன்ற உறப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388998
  20. தன்னைப் போல "கவ்வ" வேணும் என்று... குட்டிக்கு இப்ப இருந்தே பழக்குது போலை இருக்கு. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.