Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள் : தமிழ் மக்களுக்கு நாமல் எச்சரிக்கை! வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும், ஆரம்பம் முதலே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் அவதானிக்க வெண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாகவும், குறித்த கட்சிகளின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பிட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1387651
  2. எது கெடும் ? அடேயப்பா... கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார். (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும் கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கமில்லா மனிதம் கெடும். (31) தோகையினால் துறவு கெடும். (32) துணையில்லா வாழ்வு கெடும். (33) ஓய்வில்லா முதுமை கெடும். (34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும். (35) அளவில்லா ஆசை கெடும். (36) அச்சப்படும் கோழை கெடும். (37) இலக்கில்லா பயணம் கெடும். (38) இச்சையினால் உள்ளம் கெடும். (39) உண்மையில்லா காதல் கெடும். (40) உணர்வில்லாத இனமும் கெடும். (41) செல்வம் போனால் சிறப்பு கெடும். (42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும். (43) தூண்டாத திரியும் கெடும். (44) தூற்றிப்பேசும் உரையும் கெடும். (45) காய்க்காத மரமும் கெடும். (46) காடழிந்தால் மழையும் கெடும். (47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும். (48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும். (49) வசிக்காத வீடும் கெடும். (50) வறுமை வந்தால் எல்லாம் கெடும். (51) குளிக்காத மேனி கெடும். (52) குளிர்ந்து போனால் உணவு கெடும். (53) பொய்யான அழகும் கெடும். (54) பொய்யுரைத்தால் புகழும் கெடும். (55) துடிப்பில்லா இளமை கெடும். (56) துவண்டிட்டால் வெற்றி கெடும். (57) தூங்காத இரவு கெடும். (58) தூங்கினால் பகலும் கெடும். (59) கவனமில்லா செயலும் கெடும். (60) கருத்தில்லா எழுத்தும் கெடும். கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.. மிக உண்மையும் கூட.
  3. யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்! யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் குறித்த கும்பல் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலிஇ பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றையதினம் (வியாழக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறைக் கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டியை அடித்து உடைத்து, வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் தீ வைத்துள்ளனர். பின்னர் வீட்டின் வெளியே நின்ற ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளுக்கும் , அவரது சகோதரனின் முச்சக்கரவண்டி மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவற்றிற்கும் தீ வைத்துள்ளனர். அதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளன. “திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வீட்டினுள் வீசி விட்டு குறித்த கும்பல் தப்பி சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2024/1387567
  4. குவைத் தீ விபத்து : UPDATE குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு குவைத்திலுள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்திலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றம் தமிழகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387597
  5. பாலின சமத்துவம்: 129வது இடத்தில் இந்தியா! உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவக் குறியீட்டில் இந்தியா 129வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகப் பொருளாதார அமைப்பு, பாலின சமத்துவத்தை மதிப்பீடு செய்து வருகின்றது. அந்தவகையில் 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 129வது இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் குறித்த பட்டியலில் முதல் 5 இடங்களையும் முறையே ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நோர்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. மேலும் 146 ஆவது இடத்தில் சூடான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387601
  6. அட… நேபாளத்துக்கு வந்த நினைப்பை பாருங்கோவன். 😂
  7. ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை! ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தியுள்ளமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் (vatican) திருச்சபையில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி, பாப்பரசர் பிரான்சிஸ்க்கும், பேராயர்களுக்கும் (bishops) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, வத்திகானில் புரோசியாஜினே (Frociaggine) காற்று வீசி வருவதாகவும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். புரோசியாஜினே (Frociaggine) என்பது ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழி என குறிப்பிடப்படுகினறது. புரோசியாஜினே (Frociaggine) என்ற சொல் ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும். இந்த வார்த்தை “இயற்கையை மீறிய மயக்கம்” என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது. இந்நிலையில், பாப்பரசரின் இந்த கருத்து தற்போது இத்தாலிய ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாப்பரசர் பிரான்சிஸ் இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை பயன்படுத்தியிருந்த நிலையில், அது சர்சையை ஏற்படுத்தியதையடுத்து, அதற்கு அவர் கடந்த மாதம் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் Frociaggine என்ற வசைமொழியை பயன்படுத்தியுள்ளார். 87 வயதாகும் பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாகவுள்ள நிலையில், LGBT சமூகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் கொண்டவர் என விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387440
  8. குவைத்தில் தீ விபத்து – இந்தியர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு! குவைத் நாட்டில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு குவைத்தில் மங்காப்(Mangaf) நகரிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பொன்றில், அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 6.00 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் உயரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், தீ விபத்துக்குள்ளான குறித்த கட்டடத் தொகுதியில் அதிகளவில் மலையால மக்களே வசிப்பதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்துவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாகவும், அவர்களுக்கான உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ள குவைத் பொலிஸார், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1387458
  9. ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழப்பு! ஷ்ய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இரு இந்தியர்கள் உக்ரைனுடான போரில் உயிரிழந்துள்ள சம்பவம் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்துக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும், பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு அநேகமானவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அங்கு தொழில் பெற்றுத்தராது, உக்ரைனுடன் போரில் சண்டையிட, ரஷ்ய இராணுவத்தில் அவர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1387424
  10. வெற்றியீட்டிய கிருபன், நிழலி, பிரபாவுக்கு வாழ்த்துக்கள். 👍 வித்தியாசமான கேள்விகளுடன் போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. 👌 போட்டியில் பங்கு பற்றிய உறவுகளுக்கு வாழ்த்துக்கள். 🙂
  11. விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update) கிழக்கு ஆபிாிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) விமான விபத்தில் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் துணை ஜனாதிபதியுடன் பயணித்த 9 பேரும் குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேர் பயணித்த இராணுவ விமானமானது நேற்றைய தினம் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காமல் மாயமானது. இதனையடுத்து மாயமான விமானத்தைத் தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விபத்தில் சிக்கி, துணை ஜனாதிபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக மலாவி ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், துணை ஜனாதிபதியின் மறைவிற்கு அந்நாட்டு தலைவர்களும் உலகத் தலைவர்களும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் பயணித்த ஹெலிகொப்டரானது கடந்த மாதம் 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387282
  12. 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் : அரசு அனுமதி. திபெத் பீட பூமியின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நடவடிக்கையானது சீனா அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகள் தனத கட்டுப்பாடடின் கீழ் இருப்பதாக கூறி பெயர் வைத்தமைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. திபெத் பகுதியைப் பற்றி நன்கு வரலாற்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த மறுபெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், இதற்கு டெல்லி அனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் தொடர்பாக இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கேற்ப இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கான வரைபடங்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், அருணாச்சலில் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்திருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்தே, பிரதமராக மோடி மூன்றாவது முறை பதவியேற்ற நிலையில், சீனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திபெத்திய பகுதிகளுக்கு மறுபெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 30 இடங்களில் 11 இடங்கள் மக்கள் வாழுமிடங்களும், 12 மலைப்பகுதிகளும், 4 ஆற்றுப்படுகைகளும், 1 ஏரியும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387257

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.