Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கேரளா இனி கேரளம் ஆகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் “கேரளம்” என்று அழைக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தற்கமைய, அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல துறை இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டதால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது. “மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் உருவான தினம் நவம்பர் முதலாம் திகதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும், அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும்” கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1389536
  2. நீட் தேர்வு முறைகேடு: 63 மாணவர்கள் தகுதி நீக்கம்! நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக பீகாரை சேர்ந்த 17 மாணவர்களும், கோத்ராவில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389372
  3. நீட் தேர்வு முறைகேடு: 63 மாணவர்கள் தகுதி நீக்கம்! நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக பீகாரை சேர்ந்த 17 மாணவர்களும், கோத்ராவில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 30 மாணவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389372
  4. விடுதலையானார் ஜூலியன் அசாஞ்சே! விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1389508
  5. அதெண்டால் உண்மைதான். ஆண்கள் கூட 40,50 பவுணில்… கழுத்து சங்கிலி, கை சங்கிலி, மோதிரம் என்று போட்டுக் கொண்டு இருந்தார்கள். 🙂
  6. ஆட்டோவில் பெரிய குளிர்சாதனப் பெட்டி கொண்டு போகும் திறமை.
  7. "சாக்லேட் பிளேவரில்" கள்ளச் சாராயம் காய்ச்சுவது எப்படி? தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி கள்ளக்குறிச்சி. 😂 🤣
  8. அது விஷம் என்று விற்கிறவனுக்கு தெரியும். 25 வருசமாக பொலிஸ் பிடிக்காததும் அதிசயம்தான். வெள்ளி விழா கொண்டாட வேண்டியதுதான். 😂
  9. எந்த டீம்ல யாரு விளையாடுறானு கூட தெரியாது.. Vijay Vj
  10. சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்! நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். https://athavannews.com/2024/1389352
  11. பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி! இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த 20 வருடமாக சட்டன் (Sutton) பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார். சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக கூறும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக கூறுகிறார். ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும், இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக குறிப்பிட்டுள்ளார். சட்டத் தொழிலைத் தொடர்ந்து, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணித் தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன் கவுன்சிலராக இருந்து, மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனஞ் செலுத்துகிறார். தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் கூட்டிக் காட்டியுள்ளார். சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகிய இடங்களில் வசிக்கும் பலருடன் தான் பேசி வருவதாக தெரிவித்த அவர், வாடகை, வீட்டிற்கான கட்டுத்தொகை, மற்றும் சேவைகளிற்கான கட்டணங்கள் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அவர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளார்கள் என கூறியுள்ளார். அதிகரிக்கும் குற்றச் செயல்கள், தேசிய சுகாதார சேவைக்கான காத்திருப்புப் பட்டியல், வீட்டுப் பிரச்சினைகள், தெருக்கள் மற்றும் பசுமையான இடங்கள் குறித்த சிக்கல்கள் என எமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்வன குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியன சிறப்புற இருக்கும் தகுதிவாய்ந்தவை. பிரிட்டனின் எதிர்காலத்திற்கான ஒரு திட்டத்தைத் தொழிற்கட்சி கொண்டுள்ளது. அத்துடன் பிரிட்டனின் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் தேவையான மாற்றத்தையும் அது வழங்கும். சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகிய இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்தப் பொதுத் தேர்தல் அமைகின்றது. அரசியல் என்பது பொதுச் சேவையாக இருக்க வேண்டும் என தான் நம்புவதாக கூறுகின்ற அவர், அனைத்து குடும்பங்களுக்கும் சேவை செய்வதும், பிரித்தானிய சமூகத்துக்கு பக்கபலமாக இருப்பதும் தனக்குரிய மேன்மையான செயல்கள் எனவும் கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) வலியுறுத்தி உள்ளார். https://athavannews.com/2024/1389293 @ஈழப்பிரியன்
  12. 90வது நிமிடத்தில் ஜேர்மனி ஒரு கோல் அடித்தது. ஜேர்மனி - 1 : சுவிஸ் - 1
  13. அண்ணாமலையை நீக்குவார்கள் என்று பார்த்தால்…. அண்ணாமலை மற்றவர்களை நீக்கிக் கொண்டு இருக்கிறாரே. ராகவன் இன்னும் பா.ஜ.க.வில் இருக்கிறாரா……? 😂 🤣 சபல புத்தியால்…. பெரும் பதவிகளை இழந்த மனுசன். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.