Everything posted by தமிழ் சிறி
-
164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து!
164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து! நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிதுள்ளனர். பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. இந்தக் குற்றவாளிகளில் அநேகமானவர்கள் டுபாயில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வேறும் நாடுகளிலும் மேலும் சில குற்றவாளிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கிளப் வசந்த படுகொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரான் பிரான்சில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் கஞ்சிபானை இம்ரானுடன், குடு அஞ்சு என்ற மற்றுமொரு பாதாள உலகக் குழு தலைவரும் பிரான்ஸில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த சந்தேக நபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393219
-
நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் கர்நாடக அரசு!
நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் கர்நாடக அரசு! தமிழகத்தைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்துள்ளது. மாநில அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஒப்புதல் அளித்துள்ளார். இதேவேளை நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, “தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியிருந்தார். அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393235
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் 39 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை! காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய(22) நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 39,006 போ் உயிரிழந்துள்ளதாகவும். 89,818 போ் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கான் யூனிஸ் பகுதியில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று(22) மட்டும் 70 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கடந்த ஒக்டோம்பர் 7 ஆம் திகதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393242
-
கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிணையில் விடுதலை!
@ஏராளன் உங்களுக்கு ஒரு விசயம் தெரியமா? @Maruthankerny தான்தான் ஹிருணிக்காவை பிணையில் எடுத்து விட்டதாக முகநூலில் சொல்லிக் கொண்டு திரிகிறார். உண்மையாக இருக்குமோ... 😂 @விசுகு, @ஈழப்பிரியன், @தனிக்காட்டு ராஜா எல்லோருக்கும் இந்த விசயம் தெரியும். 😃
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இந்தியர்கள் அலப்பறை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். சென்ற முறை கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்ட போது… கமலா ஹரிசை வாழ்த்தி, பால் ஊத்தாத குறையாக “கட் அவுட்” எல்லாம் வைத்து வெறுப்பேற்றினார்கள். இதானால் தான்… இந்தியர்களை கழுவி ஊற்ற வேண்டி உள்ளது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள். இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை. உலகின் மிக விலையுயர்ந்த பிராண்ட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்! இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள், விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், விலையுயர்ந்த அணிகலன்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய குட்டை கவுனில் இருக்கிறேன்! எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என் வீடு எனக்கு அரண்மனை போன்றது, ஆனால் நான் ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன். நான் இந்த உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது நான் மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்திலிருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறேன்! ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை செய்வார்கள். ஆனால், இன்று என் தலையில் முடி இல்லை. நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டேன். ஆனால் இன்று என் உணவு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் மற்றும் இரவில் ஒரு துளி உப்பு. நான் வெவ்வேறு விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், இன்று இரண்டு பேர் எனக்கு மருத்துவமனை வராண்டாவிற்கு உதவுகிறார்கள். எந்த வசதியும் எனக்கு உதவவில்லை. அதற்காக நான் எந்த வகையிலும் தளரவில்லை. ஆனால், சில அன்பர்களின் முகங்கள், அவர்களின் பிரார்த்தனைகள் என்னை வாழ வைக்கின்றன. இதுதான் வாழ்க்கை. எவ்வளவு செல்வம் இருந்தாலும், கடைசியில் வெறுங்கையுடன் சென்று விடுவீர்கள். எனவே அன்பாக இருங்கள், உங்களால் முடிந்தவர்களுக்கு உதவுங்கள். பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்களை மதிப்பிடுவதை தவிர்க்கவும். நல்லவர்களை நேசியுங்கள், உங்களுக்காக இருப்பவர்களை நேசியுங்கள், யாரையும் புண்படுத்தாதீர்கள், நல்லவர்களாக இருங்கள், நல்லவர்களாகவே இருங்கள், ஏனென்றால் அதுதான் உங்களுடன் செல்லும்.😌 -லதா மங்கேஷ்கர்,,, Joseph Anthony Raj- ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன!
ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன! ”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்” என முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால். அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும். உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு கோரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை முன்வைத்தால் ஜனாதிபதி அதற்கு ஏதேனும் சூழ்ச்சிகளை மேற்கொள்வார். மறுபுறம் 22 ஆம் திருத்தத்தை நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியம் உள்ளது. தற்போதைய நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தற்போது அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விரும்பமாட்டார்கள்” இவ்வாறு முன்னாள் அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393114- பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து! தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393129- 'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
கைலாசா போகும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போலுள்ளது.- பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சுவரொட்டிகள் – நிலாந்தன். ஜனாதிபதித் தேர்தலையொட்டி வடக்கில் கடந்த சில வாரங்களாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.வழமையாக யாழ்ப்பாணத்தின் சுவர்களை ஜேவிபி சுவரொட்டிகளே நிரப்புவதுண்டு. இம்முறை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, ரணில் விக்கிரமசிங்க ஆவிக்குரிய சபைகள் கூறுவது போல நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட ஒரு பலவண்ண சுவரொட்டியை நாடு முழுவதும் ஒ ட்டினார். பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட உதவிகள் கிடைக்கப் போவதை முன்னிட்டு அதை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சாதனையாக கருதி அவ்வாறு ஒரு சுவரொட்டியை அவர் வெளியிட்டார்.அந்த சுவரொட்டிக்கு அடுத்தபடியாக ரணில்தான் என்ற பொருள்பட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அந்த இரண்டு சுவரொட்டிகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னோக்கி ஒட்டப்பட்டவை. அதற்குப்பின் தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு ஒரு சுவரொட்டி போட்டது. அதில் தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்த மூவருடைய படங்களைப் போட்டு “நாங்கள் ரெடி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதற்கும் சிறிது காலம் செல்ல ஜேவிபி அண்மை நாட்களாக ஒரு பெரிய பலவண்ண சுவரொட்டியை ஒட்டி வருகின்றது.அதில் அனுரகுமாரவின் பெரிய முகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.”எங்கள் தோழர் அனுர” என்றும் எழுதப்பட்டுள்ளது. அதன் பின் நேற்று அதாவது சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி. ஒட்டியது யார் என்று தெரியாது. அது ஒரு அனாமதேயச் சுவரொட்டி. அதில் வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் “தேசமே பயப்படாதே”என்று எழுதப்பட்டுள்ளது. அதை யார் ஒட்டியது என்று தெரியாது. இனி வரும் நாட்களில் தெரிய வரலாம். முதலில் புதிர் போல ஒரு வசனத்தை போட்டு சுவரொட்டி வரும். பின்னர் அதற்கு விளக்கம் வரும். சில கிழமைகளுக்கு முன் ரணில் விக்கிரமசிங்க “இதோ நற்செய்தி வருகிறது” என்று ஒட்டியதும் அப்படித்தான். இவ்வாறாக தமிழ் பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கி விட்டன.ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன! தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்காக முயற்சி செய்யும் மக்கள் அமைப்பும் தமிழ்த் தேசிய கட்சிகள் ஏழும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்கனவே வந்துவிட்டன. கடந்த மாதம் 29ஆம் தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில் அந்த உடன்பாடு எட்டப்பட்டது. அன்றைக்கே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால் சில கட்சிகள் அந்த உடன்படிக்கை கைதாத்திடும் நிகழ்வை பெருமெடுப்பிலான ஒரு நிகழ்வாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தன.எனினும்,அதனை முதலில் ஊடகவியலாளர்களுடன் ஒப்பீட்டளவில் கைக்கடக்கமான ஒரு நிகழ்வாகச் செய்வது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆறாம் திகதி அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் தமிழ் அரசியலில் மூத்த தலைவராகிய சம்பந்தரின் மறைவையொட்டி அந்த நிகழ்வை ஒத்தி வைக்குமாறு கட்சிகள் கேட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட அந்த வைபவம் வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் தந்தை செல்வா கலையரங்கில் அந்த நிகழ்வு இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய நகர்வுகள் கட்டமைப்பு சார்ந்து முன்னேற தொடங்கியுள்ளன என்று தெரிகிறது. கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கும் கட்டமைப்பானது அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகும் பொழுது, பொது வேட்பாளரை நோக்கித் தேர்தல் களம் மேலும் சூடாகும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு பொது வேட்பாளர் என்ற விடயம் எப்பொழுதோ மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது. அதற்கு ஆதரவாக ஒரு பகுதி ஊடகங்கள் எப்பொழுதோ இயங்கத் தொடங்கிவிட்டன. அண்மையில் மாவை சேனாதிராஜா ஒரு நேர்காணலில் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த நேர்காணலில் அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, ஒரு புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக என்பதை விடவும், மக்களை ஒன்று திரட்டுவதற்கானது அன்று மிகத் தெளிவாகக் கூறுகிறார். இப்பொழுது தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் அவர்தான். அதனால் அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்ட வேண்டும் என்ற விடயத்தை தமிழ்ப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.அந்த நோக்கத்துக்காகத்தான் பொது வேட்பாளர் என்றும் அழுத்திக் கூறுகிறார்.ஏற்கனவே சிறீதரனும் அவருடைய அணியும் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பகிரங்கமாக ஆதரித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழரசுக் கட்சிக்குள் பொது வேட்பாளருக்கு ஆதரவான அணி படிப்படியாக பலம் பெற்று வருவது தெரிகின்றது.இது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுத் தளத்தை மேலும் பலப்படுத்தும். தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவது என்பது அதன் பிரயோக வடிவத்தில் தமிழ் மக்களை ஒரு பெரிய திரளாக ஐக்கியப்படுத்துவதுதான். தமிழ் மக்கள் ஐக்கியப்படும் பொழுது சாதனைகளையும் சாகசங்களையும் செய்வார்கள். தமிழ் மக்கள் இப்பொழுது தம் பலம் எதுவென்று அறியாத மக்களாக சிதறிப் போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எல்லா பேரரசுகளின் இழு விசைகளுக்குள்ளும் வரும் ஒரு மக்கள் கூட்டம். அதனால் தமிழ் மக்களைக் கையாள வேண்டிய தேவை உலகின் மூன்று பேரரசுகளுக்கும் உண்டு.அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ் வாக்குகள் பொன்னானவை.கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவ்வாறு கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை கடந்த 15 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தல்களின் போது வெற்றுக் காசோலையாக வீணாக்கி வந்த ஒரு அரசியல் போக்கை மாற்றி, அவற்றை அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடு, ராஜதந்திரப் பெறுமதியோடு,அரசியல் பெறுதியோடு ஒன்று திரட்டுவதே தமிழ் போது வேட்பாளரின் தேர்தல் இலக்கு ஆகும். இந்துப் புராணங்களில் வரும் அனுமாரைப் போல தமிழ் மக்களுக்குத் தங்கள் பலம் எதுவென்று தெரியவில்லை.அனுமார் வாயுபுத்திரர் ஆவார். காற்றைப் போல அவருக்கு சக்தி அதிகம். ஆனால் தன் பலத்தை அவர் அறிவதில்லை. அப்பாவியாக சாதுவாக இருப்பார்.ராமாயணத்தில் அவருக்கு அவருடைய பலத்தை உணர்த்தி “நீ வாயுபுத்திரன் ; ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடப்பாய்” என்று அவருக்கே அவருடைய பலத்தை உணர்த்தியது ஜாம்பவான் என்ற வானரத் தளபதி ஆகும். தன் பலம் எதுவென்று தெரிந்ததும் அனுமார் விஸ்வரூபம் எடுத்தார். ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடந்தார். சீதையைக் கண்டார். எனவே அனுமாரைப் போல தமிழ் மக்களுக்கும் அவர்களின் பலம் எதுவென்று தெரியவில்லை. ஒரு காலம் அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்த மக்கள்.முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு போராட்டத்தை நடத்திக் காட்டிய மக்கள். ஆனால் இன்று சிதறிப்போய் இருக்கிறார்கள். அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல அவர்கள் சிதறிப்போய் இருக்கிறார்கள். அவர்களை திரும்பவும் கூட்டிக்கட்டினால், அவர்கள் மீண்டும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். எனவே தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பலம் எது என்பதை, அவர்களுடைய கேந்திர முக்கியத்துவம் எது என்பதனை, எடுத்துக் கூறவள்ள தலைமைகள் மேல் எழ வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் தங்கள் பலம் எது என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.அப்படி ஒரு முடிவுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு. இந்த அடிப்படையில் தமிழ்மக்கள் தமது பொன்னான வாக்குகளை அவற்றுக்குரிய கேந்திர முக்கியத்துவத்தோடு உபயோகிப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தங்கள் ஒன்று திரண்ட பலத்தோடு எழுவார்கள். இதுவரையிலும் 7 தமிழ் தேசிய கட்சிகளே தமிழ் மக்கள் பொதுச்சபையுடன் உடன்பாட்டுக்கு வர இருக்கின்றன. எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஏனைய கட்சிகளும் இப்பொதுக் கட்டமைப்புக்குள் இணையக்கூடும். தமிழ் மக்கள் ஒன்றாகத் திரளும் பொழுது கட்சிகள் மக்களைப் பிரதிபலிக்கும். இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையில் இருப்பவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்கள்தான். அதில் அவ்வப்போது சிறிய சிறிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் எல்லா கட்சிகளையும் ஒரு கட்டமைப்பாக கூட்டிக் கட்டுவதில் அவர்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்திருக்கிறார்கள்.இந்தத் தோல்வி கரமான அனுபவங்களின் பின்னணியில், இதற்கு முன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். எனவே கடந்த 15 ஆண்டுகால அனுபவங்களிலிருந்தும் கற்றுக் கொண்ட தமிழர்கள் மீண்டும் ஒரு பலமான திரட்சியாக மாறுவதற்குரிய வாய்ப்புகளை ஜனாதிபதித் தேர்தல் களம் திறந்து வைத்திருக்கின்றது. தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் மக்களுடைய சுவர்களில் தங்களுடைய விலை கூடிய பல வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் மனங்களில் சிறு பொறியாகச் சுடரத் தொடங்கியுள்ள “ஒன்றுபடுவோம்” என்ற பெரு விருப்பை ஓர் அரசியல் ஆக்க சக்தியாக தமிழ் பொது வேட்பாளர் மாற்றுவாரா? https://athavannews.com/2024/1393135- யாழ்ப்பாணத்தில் தேர்தல் சுவரொட்டிகள் – நிலாந்தன்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சுவரொட்டிகள் – நிலாந்தன். ஜனாதிபதித் தேர்தலையொட்டி வடக்கில் கடந்த சில வாரங்களாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.வழமையாக யாழ்ப்பாணத்தின் சுவர்களை கேவிபி சுவரொட்டிகளே நிரப்புவதுண்டு. இம்முறை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, ரணில் விக்கிரமசிங்க ஆவிக்குரிய சபைகள் கூறுவது போல நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட ஒரு பலவண்ண சுவரொட்டியை நாடு முழுவதும் ஒ ட்டினார். பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட உதவிகள் கிடைக்கப் போவதை முன்னிட்டு அதை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சாதனையாக கருதி அவ்வாறு ஒரு சுவரொட்டியை அவர் வெளியிட்டார்.அந்த சுவரொட்டிக்கு அடுத்தபடியாக ரணில்தான் என்ற பொருள்பட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அந்த இரண்டு சுவரொட்டிகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னோக்கி ஒட்டப்பட்டவை. அதற்குப்பின் தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு ஒரு சுவரொட்டி போட்டது. அதில் தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்த மூவருடைய படங்களைப் போட்டு “நாங்கள் ரெடி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதற்கும் சிறிது காலம் செல்ல ஜேவிபி அண்மை நாட்களாக ஒரு பெரிய பலவண்ண சுவரொட்டியை ஒட்டி வருகின்றது.அதில் அனுரகுமாரவின் பெரிய முகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.”எங்கள் தோழர் அனுர” என்றும் எழுதப்பட்டுள்ளது. அதன் பின் நேற்று அதாவது சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி. ஒட்டியது யார் என்று தெரியாது. அது ஒரு அனாமதேயச் சுவரொட்டி. அதில் வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் “தேசமே பயப்படாதே”என்று எழுதப்பட்டுள்ளது. அதை யார் ஒட்டியது என்று தெரியாது. இனி வரும் நாட்களில் தெரிய வரலாம். முதலில் புதிர் போல ஒரு வசனத்தை போட்டு சுவரொட்டி வரும். பின்னர் அதற்கு விளக்கம் வரும். சில கிழமைகளுக்கு முன் ரணில் விக்கிரமசிங்க “இதோ நற்செய்தி வருகிறது” என்று ஒட்டியதும் அப்படித்தான். இவ்வாறாக தமிழ் பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கி விட்டன.ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன! தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்காக முயற்சி செய்யும் மக்கள் அமைப்பும் தமிழ்த் தேசிய கட்சிகள் ஏழும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்கனவே வந்துவிட்டன. கடந்த மாதம் 29ஆம் தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில் அந்த உடன்பாடு எட்டப்பட்டது. அன்றைக்கே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால் சில கட்சிகள் அந்த உடன்படிக்கை கைதாத்திடும் நிகழ்வை பெருமெடுப்பிலான ஒரு நிகழ்வாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தன.எனினும்,அதனை முதலில் ஊடகவியலாளர்களுடன் ஒப்பீட்டளவில் கைக்கடக்கமான ஒரு நிகழ்வாகச் செய்வது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆறாம் திகதி அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் தமிழ் அரசியலில் மூத்த தலைவராகிய சம்பந்தரின் மறைவையொட்டி அந்த நிகழ்வை ஒத்தி வைக்குமாறு கட்சிகள் கேட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட அந்த வைபவம் வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் தந்தை செல்வா கலையரங்கில் அந்த நிகழ்வு இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய நகர்வுகள் கட்டமைப்பு சார்ந்து முன்னேற தொடங்கியுள்ளன என்று தெரிகிறது. கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கும் கட்டமைப்பானது அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகும் பொழுது, பொது வேட்பாளரை நோக்கித் தேர்தல் களம் மேலும் சூடாகும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு பொது வேட்பாளர் என்ற விடயம் எப்பொழுதோ மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது. அதற்கு ஆதரவாக ஒரு பகுதி ஊடகங்கள் எப்பொழுதோ இயங்கத் தொடங்கிவிட்டன. அண்மையில் மாவை சேனாதிராஜா ஒரு நேர்காணலில் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த நேர்காணலில் அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, ஒரு புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக என்பதை விடவும், மக்களை ஒன்று திரட்டுவதற்கானது அன்று மிகத் தெளிவாகக் கூறுகிறார். இப்பொழுது தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் அவர்தான். அதனால் அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்ட வேண்டும் என்ற விடயத்தை தமிழ்ப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.அந்த நோக்கத்துக்காகத்தான் பொது வேட்பாளர் என்றும் அழுத்திக் கூறுகிறார்.ஏற்கனவே சிறீதரனும் அவருடைய அணியும் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பகிரங்கமாக ஆதரித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழரசுக் கட்சிக்குள் பொது வேட்பாளருக்கு ஆதரவான அணி படிப்படியாக பலம் பெற்று வருவது தெரிகின்றது.இது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுத் தளத்தை மேலும் பலப்படுத்தும். தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவது என்பது அதன் பிரயோக வடிவத்தில் தமிழ் மக்களை ஒரு பெரிய திரளாக ஐக்கியப்படுத்துவதுதான். தமிழ் மக்கள் ஐக்கியப்படும் பொழுது சாதனைகளையும் சாகசங்களையும் செய்வார்கள். தமிழ் மக்கள் இப்பொழுது தம் பலம் எதுவென்று அறியாத மக்களாக சிதறிப் போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எல்லா பேரரசுகளின் இழு விசைகளுக்குள்ளும் வரும் ஒரு மக்கள் கூட்டம். அதனால் தமிழ் மக்களைக் கையாள வேண்டிய தேவை உலகின் மூன்று பேரரசுகளுக்கும் உண்டு.அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ் வாக்குகள் பொன்னானவை.கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவ்வாறு கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை கடந்த 15 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தல்களின் போது வெற்றுக் காசோலையாக வீணாக்கி வந்த ஒரு அரசியல் போக்கை மாற்றி, அவற்றை அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடு, ராஜதந்திரப் பெறுமதியோடு,அரசியல் பெறுதியோடு ஒன்று திரட்டுவதே தமிழ் போது வேட்பாளரின் தேர்தல் இலக்கு ஆகும். இந்துப் புராணங்களில் வரும் அனுமாரைப் போல தமிழ் மக்களுக்குத் தங்கள் பலம் எதுவென்று தெரியவில்லை.அனுமார் வாயுபுத்திரர் ஆவார். காற்றைப் போல அவருக்கு சக்தி அதிகம். ஆனால் தன் பலத்தை அவர் அறிவதில்லை. அப்பாவியாக சாதுவாக இருப்பார்.ராமாயணத்தில் அவருக்கு அவருடைய பலத்தை உணர்த்தி “நீ வாயுபுத்திரன் ; ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடப்பாய்” என்று அவருக்கே அவருடைய பலத்தை உணர்த்தியது ஜாம்பவான் என்ற வானரத் தளபதி ஆகும். தன் பலம் எதுவென்று தெரிந்ததும் அனுமார் விஸ்வரூபம் எடுத்தார். ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடந்தார். சீதையைக் கண்டார். எனவே அனுமாரைப் போல தமிழ் மக்களுக்கும் அவர்களின் பலம் எதுவென்று தெரியவில்லை. ஒரு காலம் அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்த மக்கள்.முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு போராட்டத்தை நடத்திக் காட்டிய மக்கள். ஆனால் இன்று சிதறிப்போய் இருக்கிறார்கள். அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல அவர்கள் சிதறிப்போய் இருக்கிறார்கள். அவர்களை திரும்பவும் கூட்டிக்கட்டினால், அவர்கள் மீண்டும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். எனவே தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பலம் எது என்பதை, அவர்களுடைய கேந்திர முக்கியத்துவம் எது என்பதனை, எடுத்துக் கூறவள்ள தலைமைகள் மேல் எழ வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் தங்கள் பலம் எது என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.அப்படி ஒரு முடிவுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு. இந்த அடிப்படையில் தமிழ்மக்கள் தமது பொன்னான வாக்குகளை அவற்றுக்குரிய கேந்திர முக்கியத்துவத்தோடு உபயோகிப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தங்கள் ஒன்று திரண்ட பலத்தோடு எழுவார்கள். இதுவரையிலும் 7 தமிழ் தேசிய கட்சிகளே தமிழ் மக்கள் பொதுச்சபையுடன் உடன்பாட்டுக்கு வர இருக்கின்றன. எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஏனைய கட்சிகளும் இப்பொதுக் கட்டமைப்புக்குள் இணையக்கூடும். தமிழ் மக்கள் ஒன்றாகத் திரளும் பொழுது கட்சிகள் மக்களைப் பிரதிபலிக்கும். இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையில் இருப்பவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்கள்தான். அதில் அவ்வப்போது சிறிய சிறிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் எல்லா கட்சிகளையும் ஒரு கட்டமைப்பாக கூட்டிக் கட்டுவதில் அவர்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்திருக்கிறார்கள்.இந்தத் தோல்வி கரமான அனுபவங்களின் பின்னணியில், இதற்கு முன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். எனவே கடந்த 15 ஆண்டுகால அனுபவங்களிலிருந்தும் கற்றுக் கொண்ட தமிழர்கள் மீண்டும் ஒரு பலமான திரட்சியாக மாறுவதற்குரிய வாய்ப்புகளை ஜனாதிபதித் தேர்தல் களம் திறந்து வைத்திருக்கின்றது. தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் மக்களுடைய சுவர்களில் தங்களுடைய விலை கூடிய பல வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் மனங்களில் சிறு பொறியாகச் சுடரத் தொடங்கியுள்ள “ஒன்றுபடுவோம்” என்ற பெரு விருப்பை ஓர் அரசியல் ஆக்க சக்தியாக தமிழ் பொது வேட்பாளர் மாற்றுவாரா? https://athavannews.com/2024/1393135- அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு
அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்நிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்வத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக சபர்களை கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இன்றைய தினம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தராத நிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களை நுவரெலியா பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தகவல்களை பரிசீலனை செய்த நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நபர்களை கைதுசெய்து ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1393139- சிரிக்க மட்டும் வாங்க
ஓம்... ஏராளன். மகிந்த ராஜபக்ச சொல்லச் சொல்ல... நாமல் எழுதிய கடிதம் இது. 😂- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
எல்லாம்... இந்தியாவின் மீது உள்ள கோபம்தான் விசுகர். 😂 அந்தக் கோபம்... கமலாவின் மீது, திரும்பி விட்டது. 🤣- 60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை.
60 நாயுடன் உடலுறவு கொண்டதை கூட மன்னிக்கலாம். அவற்றை கொன்றது மன்னிக்க முடியாத குற்றம். ஒரு நாயும்... இந்த மனிதனை கடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. சிலவேளை நாயும், விரும்பி உள்ளதோ... யாரறிவார். 😂- கருத்து படங்கள்
- பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
- கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிணையில் விடுதலை!
கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிணையில் விடுதலை! மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று சிறையில் அடைத்து தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அந்த தண்டனைகளுக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய இந்தத் தீா்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1393085- ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பம்!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பம்! இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கவில்லை என ஆசிரியர் – அதிபர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1393071- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
1) ட்ரம்பின் துப்பாக்கி சூட்டின் போது... தாக்குதலாளி 120 மீற்றர் தூரத்தில் இருந்து சுடுகின்றார். 2) அதனை விட குறைந்த தூரத்தில் பாதுகாப்பு பிரிவினர் இன்னொரு கூரை மீது இருக்கின்றார்கள். 3) அவர்கள்... துப்பாக்கி சூடு நடத்தும் மட்டும், தாக்குதலாளியைக் காணவில்லையாம். 4) ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய மறுகணம், தாக்குதலாளியை சுட்டுக் கொல்கிறார்களாம். 5) கூரை மீது இருந்த தாக்குதலாளி, மற்றைய கூரை மீது இருந்த அரச பாதுகாப்பு பிரிவினர், ட்ரம்ப் பேசிய மேடை மூன்றும்.... சாதாரண கண்ணால் பார்க்கக் கூடிய தூரத்தில் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. அப்படி இருந்தும் முன்பே கண்டு பிடிக்காமல் இருந்தார்கள் என்பதை நம்பும் படியாக இல்லை. மயிரிழையில், சில மில்லி மீற்றர் தலை அசைவுடன்.. ட்ரம்ப் உயிர் தப்பியமை அதிசயம் என்றுதான் கூற வேண்டும். நீங்கள் கூறிய மாதிரி இன்னுமொரு தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. அப்படி நடத்தி விட்டு... பழியை வேறு யார் மீதாவது போட்டு தப்புவதும் அமெரிக்காவுக்கு முதல் முறை அல்ல.- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கரும்பு தின்ன கைக்கூலியா…. 😂 கமலா ஹரீஸ்…. எங்கை என்று பார்த்துக் கொண்டு இருக்கிறா என நினைக்கின்றேன். 🤣 ஆனாலும்… தம்பு தான், அடுத்த ஜனாதிபதி. 🤣- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பாவம் கிழவன். கடவுளாலும் தன்னை போட்டியிலிருந்து விலக வைக்க முடியாது என்று விடாப்பிடியாக நின்ற ஆளை… “கோவிட் - 2024” வந்து விலகப் பண்ணிப் போட்டுது. 😂 கபிதன்… நீங்கள் வேறு ஒரு திரியில்… பைடனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று இருந்த போது… ஆளை மாற்றப் போகின்றார்கள் என்று முன்பே கூறிய உங்கள் கணிப்பிற்கு பாராட்டுக்கள். 👍🏽 சென்ற வியாழக்கிழமை (18.07.) அன்றே நீங்கள் கணித்தது இன்னும் சிறப்பு. 😁- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பைடன் விலகினால்... அவரின் இடத்திற்கு கமலா ஹாரிசா போட்டியிடுகின்றார்?- 60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை.
60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை. நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீரியல் கொலை சம்பவத்தை விடவும் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட ஆடம் பிரிட்டன் என்பவர் ஆஸ்திரேலியாவில் விலங்கியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். 52 வயதாகும் இவரது வீடு டார்வின் பகுதியில் அமைந்துள்ளது. விலங்கியல் நிபுணர் என்பதால் நாய்களிடம் நெருங்கி பழகிய அவர், சில நாய்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்து அவற்றிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நாய்களை பலாத்காரம் செய்த அவர், பின்னர் அவற்றை கொன்று பீப்பாய்களில் அடைத்து வைத்திருக்கிறார். இதேபோன்று ஆடம் பிரிட்டன் சுமார் 60 நாய்களை கொன்று குவித்துள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆடமை கைது செய்து விசாரணை நடத்திய பொலிஸார் அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர். இதில் ஆடமுக்கு பாராஃபிலியா எனப்படும் குழந்தைகளை தொந்தரவு செய்யும் மனநிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆடம் செய்த குற்றங்கள் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று அவரது மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவங்கள் ஆண்டுக்கணக்கில் நடந்த நிலையில், ஆடமை 2022 ஏப்ரலில் பொலிஸார் கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆடம் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அவருக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் அவர், உயிரிழக்கும் வரையில் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393028 - லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.