Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வயகரா ஏற்படுத்தும் மாற்றம் : ஆய்வில் வெளியான புதிய தகவல். சில்தெனாபில் (Sildenafil) என்ற ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான வயகரா மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் நியாபக மறதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வயாகரா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நியாபக மறதி மருத்துவத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2024/1387217
  2. 13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து! தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார். அதன்படி நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும். இதேவேளை 13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் தான் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1386871
  3. பாங்கொக்கில் தீ விபத்து; 1000 விலங்குகள் உயிரிழப்பு! தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள பிராணிகள் விற்கும் சந்தையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1000 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 100 கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த விலங்குகளில் நாய்கள், பூனைகள், பாம்புகள் உள்ளிட்டவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாகவே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மனிதர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1387212
  4. மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்! மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட பின்னர் ராடார் அமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் தொடர்புடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்துள்ளது விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்துடன் விமானத்தை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்தார். மேலும் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும், விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை நடவடிக்கை தொடர வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1387111
  5. அதோடை.... "தாத்தா காலத்திலை இருந்தே, தி.மு.க.வுக்குத்தான் ஒட்டுப் போடுகின்றோம்" என்ற வசனத்தையும் இனி கேட்க முடியாது. 😂
  6. பாகிஸ்தான் வீரர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு எப்போதுமே வாய்க்கொழுப்பு அதிகம். அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் உருவாக்கிய நக்கலான போஸ்டர் டிசைன்.. ஆனால் போட்டியில் பாகிஸ்தான் மண்டையிலே அமெரிக்கா நங்கென்று உலகிற்கே கேட்கும் அளவுக்கு கொட்டிவிட்டது. Rajesh Krishnamoorthy
  7. IMF இன் கடப்பாடுகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றவில்லை! அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக வெரிட்டே ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 25 வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளதுடன், நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றியுள்ளதுடன், 16 பொறுப்புகளை நிறைவேற்றவில்லை எனவும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மையுடன் சம்பந்தப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுடனும் தொடர்புடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386994
  8. இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் – அமெரிக்க சிறப்புத் தூதுவர்! நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன்(julie chang) இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான (US United States Ambassador-at-Large for Global Criminal Justice) சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் (Beth Van Schaack) தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்தபோது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த தலைமை இராஜதந்திரிகளின் அமர்வில் பங்கேற்றிருந்தார். இதில் பங்கேற்பதற்கச் சென்றிருந்த ஜுலி சங் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக்குடன் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பது அருமையாக இருந்தது – நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அமெரிக்க தூதுவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார். இதனிடையே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலையும் சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தினை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு 553 மில்லியன் டொலர்கள நிதி உதவியை செயற்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையில் தனியார் துறையின் முன்னணி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் மேற்குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386818
  9. பாடையில் ஏற்றப்பட்ட பட்டங்கள்- யாழ். வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்! பல்கலைக்கழகத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற பட்டத்தை பிரேதப்பெட்டியில் ஏற்றி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாக திரிவதா?” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386848
  10. மதம் மாற்றப்படும் விநாயகர். 😂 🤣
  11. வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை. ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான். எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும். -தோழர் பாலன்- இரண்டுக்கு ஒன்று என்று, நிறைவு பெற்றது. தேசியகீதம், தமிழீழ அணி என தமிழில் எழுதப்பட்டவை தேசியக் கொடி இவை நமது நோ்மறையான குறியீடுகள். இலங்கை இந்திய அரசுகளுக்குத்தான் இன்னும் வயிற்றெரிச்சல். -Nagamany Sathasivam- இந்த உலகிற்கு தமிழீழ அணி என்று சொல்ல வைத்து உள்ளோம். இதுவே ஒரு வெற்றிதான் அண்ணா விரைவில் தமிழீழ அணி அங்கிகாரத்துடன் அதன் வெற்றியை உறுதி செய்யும் ... -இராஜேஷ் இராஜேந்திரன்- தோல்வியில்லை. வெற்றி பெறவில்லை. இறுதி சுற்றில் எத்தனயோ பெரிய குழுவெல்லாம் அசால்டா தட்டி வந்ததே மிகப்பெரிய வெற்றி. -Vijayakumar Tharmalingam-
  12. தமிழீழ அணி இறுதிப் போட்டியில் FA Sapmi vs Tamil Eelam FINAL CONIFA Women World Football Cup 👆 (காணொளி.) 👆
  13. ரோயல்பார்க் கொலை குற்றவாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது. முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  14. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு! இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அதன்படி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னிலையில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர்த், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் இன்று விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் டெல்லி பொலிஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386792
  15. மர்ம நபரால் தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர் ! கோபென்ஹாகென் (Copenhagen) சென்றிருந்த டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) மர்ம நபரொருவரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில், பிரதமரின் கழுத்து பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரதமரை தாக்கியதாகக் கூறப்படும் 39 வயதுடைய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்போது, தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன், நடந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தான் தற்போது நலமாக இருப்பதாகவும், தனக்காக குரல் கொடுத்தவர்களுக்கும், ஊக்கமளித்தவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டென்மார்க் இன் இளம் வயது பிரதமராக மேட் ஃப்ரெடெரிக்சன் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386806

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.