Everything posted by தமிழ் சிறி
-
4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்
அந்தச் சிறுமி உணவு உண்ண கிட்ட வரும் போது, மிருகத்தனமாக தாக்கும் காணொளியை பார்த்தேன். இவனுக்கு உடனடியாக கைதிகளே தண்டனை கொடுத்தது தரமான சம்பவம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- காங்கிரஸ் பதவிகளில் மாற்றம்!
தாயும், மகனும்... மாறி, மாறி பதவி வகித்துக் கொண்டு, பதவியில் மாற்றம் என்று சொல்கிறார்கள். உங்கடை குடும்ப கட்சி. யார் பதவி வகித்தால் நமக்கென்ன.- காங்கிரஸ் பதவிகளில் மாற்றம்!
காங்கிரஸ் பதவிகளில் மாற்றம்! காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றிருந்து. இன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியாவின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்தார். தொடர்ந்து கௌரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் ஆகியோர் ஆதரவு அளிக்க, ஏகமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386766- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்க, போங்க... நாங்க பின்னாலை வாறம். 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எப்பிடி இருந்த ஜேர்மன் பொலிஸ், இப்பிடி ஆகீட்டுது. 😂 🤣- அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி
- விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது.
விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது. விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் புதையல் தேடியவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதன்போது பொலிஸ் தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2024/1386702- யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு.
யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு. க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மாணவி கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் மாணவிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஊடகங்கள் வாயிலாக மாணவியின் சாதனையை பார்வையிட்ட புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் குறித்த மாணவிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதுடன், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவர் துவிச்சக்கர வண்டியையும் வழங்கி வைத்தார். அதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மாணவியிடம் கையளித்தார். குறித்த மாணவி மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கல்வி கற்பதற்கு வீட்டில் ஒரு மேசை கூட இல்லாத நிலையில் வெற்று தரையில் இருந்தே கல்வியினை கற்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் மாணவியின் உறவினர்கள், ஊரவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். https://athavannews.com/2024/1386708- மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் : வெளிநாட்டவர்கள் பங்கேற்பு
மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் : வெளிநாட்டவர்கள் பங்கேற்பு. இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது. ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர்வீதியுலாவும் நடைபெற்றது. இந்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகைதந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியாhகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் இந்த தீமதிப்பு உற்சவத்தில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு தீயில் இறங்கி நேர்கடன்களை செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386712- அண்ணாமலை தோல்வி: மொட்டையடித்த பாஜக தொண்டர்
இப்படியான காட்சிகளை காணொளியில் பார்க்கும் போதுதான்... உண்மையான "கிக்" கிடைக்கும். 😂- கருத்து படங்கள்
- ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் ஏன் தமிழர்களுக்குத் தீர்வு தர முடியாது? : சாணக்கியன்!
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் ஏன் தமிழர்களுக்குத் தீர்வு தர முடியாது? : சாணக்கியன்! தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் தமிழர்களுக்கான தீர்வொன்றை முன்வைக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்பட இல்லை. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தரப்பினராகவே நாம் இருந்து வருகின்றோம். இந்நிலையில் இலங்கையின் அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி பல விடயங்களைக் கூறிவருகின்றார். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காமல் எந்த அபிவிருத்திகளை மேற்கொண்டும் பயனில்லை என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் சர்வதேச நாணயநிதியம் பற்றியும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறுவது வெறும் கனவு என்பதையும் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கதைகளைக் கூறியும் தமிழ்த் தலைவர்களுக்கு பல சலுகைகளை வழங்கியும் தமிழ் மக்களை ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வைக்கலாம் என நினைக்கின்றனர். வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான உரிமம் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைத்துள்ளன. எனினும், பாரிய குற்றங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதைய ஜனாதிபதிக்கு எந்த எண்ணமும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1386675- அண்ணாமலை தோல்வி: மொட்டையடித்த பாஜக தொண்டர்
மொட்டை அடித்துக் கொண்டு, பஜாரை சுற்றி வந்தாலும்…. பரபரப்பு ஏற்படுகின்றது. வினோத மக்கள் வாழும் நாடு இந்தியா. 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆகா… இரண்டு பேரும் தங்கடை புகுந்த நாட்டுக்கு அந்த மாதிரி முரட்டு முட்டுக் கொடுக்கிறார்கள். 😁 ம்ம்ம்ம்… நடக்கட்டும். 😂 🤣- இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்! இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்து. 1989ஆம் ஆண்டு வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாகவே குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அஞ்சலியின் பின் கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது. ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசு எவ்வித மன்னிப்பும் கோரவில்லை. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதியும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம். படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி போரின் பின் கடந்த 2012ம் ஆண்டளவில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது. அந்த நினைவு தூபியை விரைவில் அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1386603- 4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்
4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 4 வயதுடைய சிறுமியொருவரை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, குறித்த 45 வயதுடைய நபர் ஒருவரும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கண்டனம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதிக்கப்பட்ட குழந்தையின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு அரச அதிகாரிகளிடமிருந்து விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நான்கு வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளதுடன், நீதித்துறை செயல்முறையின் ஊடாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற துஷ்பிரயோகம் குழந்தைகளுக்கு நீடித்த பாதிப்பை எடுத்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேபோன்று, இன்றைய சிறுவர்கள் இல்லாமல் நாளை இல்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் நலனுக்கே உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தனது எக்ஸ் தள பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1386636- வெளிநாட்டு மோகம்: ஏமாற்றப்படும் யாழ் இளைஞர்கள்!
வெளிநாட்டு மோகம்: ஏமாற்றப்படும் யாழ் இளைஞர்கள்! யாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கிராமப்புற இளைஞர்களை இலக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வெளிநாட்டு நுழைவிசைவு மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் , விழிப்பாகவும் இருப்பது அவசியம் என மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும், நுழைவிசைவு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386613- கருத்து படங்கள்
- இலங்கையில் கால் பதிக்கும் ‘ஸ்டார் லிங்க்‘
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஐக்கிய அமெரிக்கா பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டி உலகக் கிண்ணப் போட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!- இலங்கையில் கால் பதிக்கும் ‘ஸ்டார் லிங்க்‘
இலங்கையில் கால் பதிக்கும் ‘ஸ்டார் லிங்க்‘ இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ‘ஸ்டார் லிங்க்‘ நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று முதல் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகளைப் பெற்று, தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறோம். இதுவரை கோபுரங்கள் ஊடாக வழங்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய வசதிகளுக்குப் பதிலாக, இந்த செய்மதி தொழில்நுட்ப இணைய வசதி மூலம் எங்கிருந்தும் இணைய வசதியைப் பெற முடியும். இதன் ஊடாக தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்படப் போகிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு இந்த இணையதள சேவை பெரும் வசதியாக அமையும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணைய வசதியையும் பெற முடியும். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ், செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு இணைய வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள், மீனவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இணைய சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிவாரணப் பொதியை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 2000 “Starlink” வலையமைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386470- கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி: விமான நிலையத்தில் பரபரப்பு
கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி: விமான நிலையத்தில் பரபரப்பு. நடிகையும் அரசியல் வாதியுமான கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் டெல்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகார் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியான குல்வீந்தர் கவுர் திடீரெ கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் உறைந்தார். இதனையடுத்து அவருடைய உதவியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் அந்த பெண் பொலிஸ் அதிகாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் கங்கனா சோதனையை முடித்து கொண்டு விமானம் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரி குல்வீந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கங்கனாவை அறைந்தது ஏன்? என குல்வீந்தர் கவுர் கூறும் வீடியோவொன்று தற்போது சமூக வலைத் தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில் “ரூபாய் 100 அல்லது 200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா தெரிவித்திருந்தார் எனவும், டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் தனது அம்மாவும் ஒருவர்” எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த வீடியோவானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386517 - காங்கிரஸ் பதவிகளில் மாற்றம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.