Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்த சடங்கில் சாப்பிட முதல், இரண்டு கிழமைக்கு முன்னமும் வடை சாப்பிட்டனான். அப்படியிருந்தும்... நாக்கு விடுகுதில்லை, வயிறு கேக்குதில்லை. 😂 சாப்பாட்டு விசயத்திலை கணக்கு பார்க்கக் கூடாது. என்றாலும்.... குத்து மதிப்பாக 75 வடை போயிருக்கும் போலை கிடக்கு. 🤣
  2. வடை... சின்னன் இல்லை. உள்ளங்கையளவு பெரிய வடைதான். 😂 "காய்ஞ்ச்ச மாடு" தியரிப்படி 9 வடை எப்பிடி வயித்துக்குள்ளை போனதென்றே தெரியவில்லை. 🤣
  3. யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து உரையாடியிருந்தபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதனை அவதானித்த அயலவர்கள் தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1385509
  4. கேட்க இனிமையான நல்ல பழைய பாடல்களை இணைக்கும் சுவியருக்கு நன்றி. 🙂
  5. வடை... வயித்துக்கு பிரச்சினையான சாமான் என்ற படியால், ஒன்பது உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது.
  6. கஞ்சி – கார்த்திகைப் பூ – செருப்பு – நிலாந்தன்! இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது. ஆரியகுளம் சந்தியிலும் முத்த வெள்ளியிலும் வெசாக் பந்தல்கள் அதிகமாக அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால் இம்முறை ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ஜனங்களே ஆரியகுளம் சந்தியில் காணப்பட்டார்கள். ஒரு ஊடகவியலாளர் கேட்டார், முள்ளிவாய்க்காலில் திரண்ட ஜனங்களை விடவும் ஆரிய குளத்தடியில் திரண்ட சனங்களின் தொகை அதிகமா? என்று. இல்லை. அது குறைவு தான். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களில் வழங்கப்பட்ட சாப்பாட்டை,சிற்றுண்டிகளை, குடிபானங்களை ,ஐஸ்கிரீமை தமிழ் இளையோர் விரும்பி வாங்கினார்கள். அவ்வாறு குடிபானங்களை வாங்கிய ஒரு இளைஞரிடம் ஒரு ஊடகவியலாளர் பின்வருமாறு கேட்டிருக்கிறார்…..”தமிழ் மக்கள் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைத்த பொழுது அதை ஒரு குற்றமாகக் கருதி, போலீசார் நான்கு பேர்களை கைது செய்து பின் விடுதலை செய்தார்கள். அதுபோலவே கிழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்துக் கொண்டிருந்தபொழுது போலீசார் அதைத் தடுத்து கஞ்சிப் பானையைத் தூக்கி கொண்டு போனார்கள். மேலும் அடுப்பை சப்பாத்து கால்களால் தள்ளி நகர்த்தினார்கள். கிழக்கில் கஞ்சி காய்ச்சியதை ஒரு குற்றமாகக் கூறிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகிய படையினர் வெசாக் பந்தல்களில் வைத்து வழங்கிய குடிபானங்களை நீங்கள் ஏன் வாங்கிக் குடிக்கிறீர்கள்?” என்று. ஆனால் அதை வாங்கி குடிக்கும் இளையோருக்கு அந்த உணவில் இருக்கும் அரசியல் விளங்குவதாக தெரியவில்லை. முள்ளிவாய்க்கால் கஞ்சி நோய் தொற்று உடையது என்று திருகோண மலையில் போலீசார் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நாடு முழுவதும் தானமாகக் கொடுக்கப்பட்ட வெசாக் உணவுகள்,குடிபானங்களை போலீசார் நோய்த் தொற்று உடையது என்று குற்றம் சாட்டவில்லை. வழக்குப் போடவில்லை. ஒரே நாடு இரண்டு நீதி? இந்த உணவு அரசியலை தமிழ் இளையோரில் ஒரு பகுதியினர் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை? ஆனால் இதே இளையவர்களில் ஒரு பகுதியினர் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கார்த்திகைப் பூவை போன்ற ஒரு வடிவத்தை உருவாக்கினார்கள். அது பின்னர் போலீசாரின் விசாரணைக்குள் வந்தது.அந்தச் சின்னத்தை உருவாக்கிய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் உட்பட முழுப் பாடசாலைச் சமூகமும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதன்மூலம் எதிர்காலத்தில் அதுபோன்ற சின்னங்களை பாடசாலைச் சமூகங்கள் உருவாக்க கூடாது என்ற அச்சுறுத்தல் மறைமுகமாக விடுக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டதும் தமிழ் இளையோர்தான்.இங்கு வெசாக் பந்தலில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடித்ததும் தமிழ் இளையோர்தான். இந்த இரண்டு விதமான இளையவர்களும் ஒரே சமூகத்துக்குள் இருந்துதான் வருகிறார்கள். எனவே இங்கு பிரச்சனை இளைய தலைமுறையில் இல்லை. அவர்களை வழிநடத்தும் பெற்றோர்,முதியோர்,ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூகத் தலைவர்களில்தான் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாமா? வெசாக் பந்தல்களில் அன்னதானம் வாங்கிய இளையோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு குற்றப்பொருள் ஆக்கப்பட்டதை யார் எடுத்துக் கூறியிருக்க வேண்டும்? 15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட யுத்த களத்தை நினைவு கூர்வதற்கு உணவையே ஒரு நினைவுப் பொருளாக தமிழ் மக்கள் மாற்றினார்கள். ஆனால் அரசாங்கம் அந்த உணவை ஒரு குற்றம் என்று கூறப்பார்க்கின்றது. 15 ஆண்டுகளின் பின்னரும் நிலைமைகள் மாறவில்லை என்பதனை அது காட்டுகின்றது. இதுதொடர்பாக இளையோருக்கு யார் எடுத்துக் கூறியிருந்திருக்க வேண்டும் ? ஒருபுறம் கார்த்திகை பூவை ஒரு பாடசாலையின்’மெய் வல்லுநர் போட்டியில் காட்சிப்படுத்தியதற்காக ஒரு பாடசாலை சமூகம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அதே கார்த்திகைப் பூவை அண்மையில் டி எஸ் ஐ நிறுவனம் தன்னுடைய செருப்புக்களில் பதித்து விற்க முற்பட்டது. அது சமூக வலைத்தளங்களில் விவகாரமாகியது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் டிஎஸ்ஐ நிறுவனம் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். தமிழ் மக்கள் டிஎஸ்ஐ உற்பத்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறினார். கார்த்திகைப் பூ தமிழ் மக்களைப் பொறுத்தவரை மதிப்புக்குரியது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே அது பழந்தமிழ் இலக்கியங்களில் செங்காந்தள் என்று அழைக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் அந்த பூவுக்கு ஒரு அரசியல் முக்கியத்துவத்தை வழங்கியது. அந்த அரசியல் பரிமாணம் காரணமாகத்தான் அந்தப் பூவைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றது. அந்தப் பூவை ஒரு நினைவாக மாணவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவதை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கின்றது. 15 ஆண்டுகளின் பின்னரும் அரசாங்கம் கஞ்சிக்கும் பூவுக்கும் பயப்படுகின்றது. டி எஸ் ஐ நிறுவனம் கார்த்திகைப் பூவை செருப்பில் பதித்தமை தற்செயலானது அல்ல. அதை ஒரு விளம்பர உத்தியாக, வியாபார உத்தியாக அவர்கள் செய்திருக்கலாம். சர்ச்சைக்குரிய ஒரு பூவை காலில் போட்டு மிதிப்பது என்பது அவர்களுக்கு வருமானத்தைக் கூட்டும் ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் அங்கே மிதிக்கப்படுவது பூ மட்டுமல்ல,தமிழ் மக்களின் உணர்வுகளும்தான். சில ஆண்டுகளுக்கு முன் தனது சேலையில் பௌத்த சின்னங்களைப் பொறித்திருந்த காரணத்துக்காக ஒரு பெண்ணுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முற்பட்டது.பௌத்த மதச் சின்னங்களை அவ்வாறு ஆடைகளில் பதிப்பது பௌத்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்ற ஒரு விளக்கத்தை அரசாங்கம் கொடுத்தது. மேற்கத்திய பண்பாட்டில் இதுபோன்ற விடயங்கள் ஒரு விவகாரம் அல்ல. அங்கெல்லாம் தேசியக் கொடியை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அவமதிப்பார்கள். ஆனால் அதை மேற்கத்திய ஜனநாயகப் பண்பாடு சகித்துக் கொள்கின்றது. ஆனால் கீழேத்தேய உணர்வுகளைப் பொறுத்தவரை நிலைமை அப்படி அல்ல. இங்கு மதச் சின்னங்கள் அல்லது ஒரு சமூகத்தில் மதிக்கப்படும் சின்னங்கள், குறியீடுகள் போன்றன அவமதிக்கப்பட்டால் அது சில சமயங்களில் கலவரங்களாகவும் முடிவதுண்டு. மேற்கத்தியப் பண்பாட்டில் புனிதமானவைகள் அவமதிக்கப்படும் பொழுது அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு ஜனநாயக விரிவு உண்டு. ஆனால் கஞ்சியை அதாவது உணவை ஒரு குற்றமாகக் கருதும் இலங்கை அரசியல் பரப்பில்; ஒரு பூவைக் குற்றமாகக் கருதும் இலங்கை அரசியல் பரப்பில்; அது போன்ற ஜனநாயக விரிவை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் கஞ்சியும் பூவும் குற்றமாக கருதப்படலாம் என்றால், அங்கே ஜனநாயக இதயம் பலவீனமாக இருக்கிறது என்று பொருள். கஞ்சியை, பூவை புனிதமாக, மதிப்புக்குரியதாகக் கருதும் ஒரு கூட்டு மனோநிலை அந்த நாட்டில் உண்டு என்று பொருள். அதை வேறொரு பிரிவு சகித்துக் கொள்ளவில்லை என்று பொருள். இந்த விடயத்தில் இலங்கை தீவில் இரண்டு நீதிகள் உண்டு என்று பொருள். கார்த்திகைப் பூவை காட்சிப்படுத்தியதற்காக ஒரு பாடசாலை சமூகம் பொலிசாரால் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறது. அதே கார்த்திகைப் பூவை ஒரு பாதணி உற்பத்தி நிறுவனம் அவமதிக்கும் பொழுது அது ஒரு சட்டப் பிரச்சினையாக வரவில்லை.அது இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பாதிக்கும் ஒரு நடவடிக்கை என்பது அந்தப் பாதனி நிறுவனத்துக்கு தெரிந்திருக்கவில்லையா? தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் எதிர்ப்பு அறிக்கையையடுத்து டிஎஸ்ஐ நிறுவனம் அந்த அமைப்போடு தொடர்பு கொண்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தில் கொழும்பை மையமாகக் கொண்டு இயக்கும் ஒரு ஊடகம் இடைத்தொடர்பாளராக செயல்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.டிஎஸ்ஐ நிறுவனம் இதுவிடயத்தில் தங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியமைக்காக அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஐங்கரநேசன் கூறியுள்ளார்.மேலும் டி.எஸ்.சி நிறுவனம் அதன் காட்சியறைகளில் வைக்கப்பட்டிருந்த செருப்புகள் மீளப்பெறப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் பரப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பை ஒரு கொழும்பு மையப் பெரு நிறுவனம் கவனத்தில் எடுத்தமை முக்கியமானது. அதே சமயம் இலங்கைத் தீவின் அரசியலானது உணவு, பூ போன்ற பொருட்களுக்கு எல்லாம் உணர்திறன் மிக்கதாக இருப்பது என்பது,அதுவும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் அவை உணர்திறன் மிக்கவைகளாகக் காணப்படுவது எதைக் காட்டுகின்றது? https://athavannews.com/2024/1385334
  7. சென்ற தலைமுறையினர் மாமிசத்தை கிழமைக்கு ஒரு முறைதான் உண்பார்கள். அதுகும் கோவில் கொடியேற்றங்கள் தொடங்கி விட்டால் மாதக் கணக்கில் மரக்கறி உணவுதான். இப்போதைய மரக்கறிகள் கூட... இரசாயனம் கலந்த விளைச்சலுடன் தான் கிடைக்கின்றது. இன்று கிழமையில் 6 நாளும் மாமிசம்தான். அந்த இறைச்சி தரும் மிருகங்களும், பறவைகளும் ஆரோக்கியமாகவும், சதைப்பிடிப்பாகவும் இருக்க அதிக ஊட்ட சத்துக்களையும், நோய் எதிர்ப்பு குளிசைகளான "அன்ரி பயோட்டிக்" போன்ற மருந்துகளை உணவில் அளவுக்கு அதிகமாகவே கலந்து கொடுக்கும் போது... அந்த இறைச்சியை உண்ணும் மனிதனும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து ஒரு கட்டத்ததில் நோயாளி ஆகி விடுகின்றான். எங்கும் எதிலும் வியாபாரம் முக்கியமாகி விட்ட நிலையில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.
  8. ட்றம்பின்ரை வசீகரத்துக்கு என்ன குறைச்சல். 🤣
  9. தில்லை அண்ணா… நீங்கள் தமிழருக்கு நடந்த பல மாறத வடுக்களை திரட்டி, வருங்கால சந்ததி அறியும் வகையில் மகத்தான பணியை செய்கின்றீர்கள். நன்றியும், பாரட்டுக்களும் உரித்தாட்டும். 🙏
  10. சடங்கு வீட்டிற்கு…. இனிமேல், இப்பிடிப் பட்டவங்களை கூப்பிட்டால் நடக்கிறதே வேறை என்று பேச்சும் விழுந்திருக்கும். 🤣
  11. தொட்டுக் கும்பிடும் புத்தகங்கள் இருந்த இடத்தையே எரிக்கும் மன நிலையில் சிங்களவன் இருந்திருக்கின்றான் எனும் போது… உலகில் இப்படி ஒரு இனம் இருக்க வாய்ப்பே இல்லை.
  12. இவ தான்… பழம் விற்கிற ஆளோ தெரியாது. (லொள்) 😂
  13. இதனை 👆 காதில் மாட்டிக் கொண்டு பதில்களை வெளியில் இருந்து பெற்று, சோதனை எழுதி இருக்கின்றார்கள் போலுள்ளது. இவர்கள்.... குறுக்கு வழியில் சோதனை எழுதி சித்தி பெறுவது மற்றைய மாணவர்களை பாதிக்காது என்று இந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சொல்கிறார். அதற்காக முழு முஸ்லீம்களும் ஒன்று பட வேண்டுமாம். செய்யிறது முள்ள மாரித்தனம். அதை கண்டிக்க வக்கில்லை. அதற்குள் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயலில் இறங்கி, வெள்ளை அடிக்க முற்படுகின்றார்.
  14. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் சாதனை. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது. இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ. ஜிலோட்சன் பெற்றுள்ளனையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள். இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர். இதேவேளை ஈ டெக்கில் முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார். பி டெக்கில் 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385089
  15. ஒரு செய்தியில் கிறிஸ்தவ தமிழ்ப் பெயராகவும், மற்றைய செய்தியில் முஸ்லீம் கலந்த பெயராகவும் உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட புலேந்தினி மகேந்திரனைப் போல், தமிழர்களை மதம் மாற்றி இப்படியான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுத்துகின்றார்கள் போலுள்ளது.
  16. நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு. தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2024/1385202
  17. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை இலங்கையில் வழி நடத்தியதாக சந்தேகிக்கும் நபர் கைது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பினை, இலங்கையில் வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒஸ்மான் புஷ்பராஜ் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய நபராக ஒஸ்மான் புஷ்பராஜ் இனங்காணப்பட்டிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி பொலிசார் சந்தேக நபரின் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தனர். சிஐடி மற்றும் ரிஐடியின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், ஒஸ்மான் புஷ்பராஜ் வழிநடத்தியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 25ஆம் திகதி குறித்த சந்தேக நபரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர். https://athavannews.com/2024/1385144
  18. பிரதான சந்தேகநபர் “ஜெராட் புஸ்பராஜா” கைது! இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் பேணி வந்துள்ளார். https://athavannews.com/2024/1385080
  19. எரித்தும் அழிக்க முடியாத வடு : யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு. ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளன. 1981 மே 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில்; வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்னையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே31 மற்றும் ஜுன் 1 ஆம் திகதி இரவு; இடம்பெற்றது. 1981 மே 31 இரவு ஆரம்பமான இந்த வன்முறைகளின்போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகும். இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ உள்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் தீகக்கிரையாகி அழிந்தன. இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்கள் மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அடைந்து கொண்டிருந்தபோது 1981 ஜுன் 1 இல் பகலில் எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாத பொக்கிஷங்கள் என்பதை எரித்து விட முடியாது. https://athavannews.com/2024/1385083
  20. அப்பாடா.... ஒரு மாதிரி @goshan_che வந்திட்டார். இனி அவர், கொல்லைப்புறத்தில் நின்று கொண்டு நம்மை பாதுகாப்பார். 😂 நாம் ஜாலியாக.... "பொப் கோர்ன்" சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் பார்க்கலாம். 🤣
  21. எண்ணை விலை குறைவதை பார்த்தால்… தேர்தல் வரப் போகுது போலை இருக்கு. 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.