Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்திய மக்களைவைத் தேர்தல் – இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை ! இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கு இணங்க பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாக் கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ் நாட்டின் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க.வின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.க. தலையிமையான தேசிய ஜனநாயக கூட்டணி 239 இடங்களிலும், காங்ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதேவேளை, தமிழகத்தில் 40 தொகுகளையும் கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள்கூட இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனிடையே, ஆந்திராவில் அதிக வாக்குளை பெற்று முன்னிலையில் உள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவின், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, ராகுல் காந்தி 647,445 வாக்குகளை பெற்றுள்ளார். மக்களவையிள்ள 543 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெற்றநிலையில், 272 ஆசனங்களை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386101
  2. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி! பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 6,12,970 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386089
  3. முதன்முறையாக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக! தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது. அதன்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385958
  4. 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1385906
  5. இந்திய மக்களவை தேர்தல் 2024 – பாஜவிற்கு அதிக வெற்றி வாய்ப்பு! இந்தியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய தேர்தல் முடிவுகள் குறித்தான கருத்து கணிப்புக்களின்படி, 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க பெற்ற ஆசனங்களை விட இம்முறை அதிக ஆசனங்களை பெறும் என எதிர்பாக்கப்படுகின்றது. இந்திய மக்களை தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி, 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தம் 64 கோடியே 20 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர். மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி, தெரிவுசெய்யப்பட்டால், அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின்னர் இந்தியாவின் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி தனதாக்கிக்கொள்வார். https://athavannews.com/2024/1385913
  6. எல்லா மாமியாரும்... மருமகன் முன்னுக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறவை. ஆனால் அதுக்கு உரிய தகுதி எரப்பனும், சரத்குமாரிட்டை இல்லையே.....
  7. சரத்குமாருக்கு… ஒரு கட்டத்தில் தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஓரத்தில் இருந்தது என்றால் பாருங்கோவன். 😂
  8. டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு அமோக வெற்றி வாய்ப்பு! டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்லியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அத்துடன், பா.ஜ.க பல சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை பெற்று நிலையில், பா.ஜ.க வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385894
  9. ஜனாதிபதி செயலகத்தில் மோதல்: ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி! ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்த நிலையில், இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கண்டி மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக் கூட்டமும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கூட்டம் நடைபெற்ற அறையிலிருந்து வெளியேறிய போது நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் வலுப் பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவினால் குணதிலக்க ராஜபக்ஷ தள்ளப்பட்ட நிலையில், அவர தவறி படியிலிருந்து கீழே விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் எலும்பில் முறிவொன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால், தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், தான் அவரை தள்ளிவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றதை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்து செல்ல முற்பட்ட போது, அவர் தவறி வீழ்ந்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1385859 ################# ################## ############ ஆதவன் போட்ட தலைப்பை பார்க்க... மகிந்த ராஜபக்சவுக்கு, செம அடி விழுந்தது போலை இருக்கு.
  10. கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவு! இன்று காலை 10 மணி நிலவரப்படி, கர்நாடகத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் ஐக்கிய ஜனதா தளம் 3 இடங்களிலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 17 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (04) காலை 8 மணி முதல் இடம்பெற்று வருகிறது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385865
  11. வட இந்தியாவில் எத்தினை பஸ் எரியப் போகுதோ…. 💥 எப்பிடியும் மோடி ஜீ…. கடைசி நேரத்தில் Entry ஆகி விடுவார். 🙂
  12. தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு ஒரு இடமும் கிடைக்காது போலிருக்கே. பன்னீர் செல்வமும், எடப்பாடியும், தினகரனும், சசிகலாவும் பிரிந்து நின்று அ.தி.மு.க. வை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். ஈழத்தமிழருக்கு செய்த சாபம்தான்…. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறாமல் தடுக்குது.
  13. படத்தில் நீங்கள் பார்க்கும் மரங்கள் நடமாடும் மரங்கள் என்றால் நம்புவீர்களா? ஆம், பனை இனத்தைச் சேர்ந்த (Socratia exorrhiza,) எனப்படும் இந்த மரங்களை நடமாடும் மரங்கள் என தாவரவியல் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். தென் அமெரிக்காவில் ஈரப்பதமான வெப்பமண்டல காடுகளில் நிலத்தில் மிதந்து வளரும் இம்மரங்களானது, கால்களைப் போன்ற அதிசய வேர்களை பெற்றிருக்கும். வளமான மண்ணையும் சூரிய வெளிச்சத்தையும் தேடி நாளந்தம் 2-3 சென்டிமீட்டர் வீதம் வருடாந்தம் 20 மீட்டர் வரை நகர்ந்து செல்ல வல்லவை. அவைகள் நகரும் திசையில் புதிய வேர்கள் வளர்ந்து வேர்பதிக்கும். பின் வேர்கள் அப்படியே இறந்து போகும். இந்த வளர்ச்சி அங்குலம் அங்குலமாகவே தொடரும். ✍ தமிழாக்கம் / imran farook
  14. கிழக்கில் மேய்ச்சல் தரையில் உள்ள ஆயிரக் கணக்கான மாடுகளை… சிங்களவன் வெட்டியும், சுட்டும் கொன்று இருக்கின்றான். இதனால் பல தமிழ் ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். இந்த மறை கழண்டதுகளை, அவர்களுக்காக போராடச் சொல்லுங்கள்.
  15. ரஷ்யாவிற்கு போன 350 ஶ்ரீலங்கா இராணுவத்தை காணவில்லையாம். செத்துப் போனார்களோ… அல்லது அங்கிருந்து வேறு நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார்களோ…. ஆண்டனுக்குத்தான் வெளிச்சம்.
  16. ஒருக்கால்…. அரபு நாடுகள் பக்கம் போய் வாறது. 😂 🤣
  17. அண்ணை, நீங்கள்தான்... உங்கடை ஊர் மழையை கூட்டிக் கொண்டு வந்து, இங்கை விட்டுட்டு போயிருக்கிறீர்கள் போலை கிடக்கு. 😂 இங்கு கடந்த சிலநாட்களாக தொடர் மழை. ஆறுகள் எல்லாம் நிரம்பி அலை புரண்டு ஓடுது. நாங்கள் இருக்கும் பகுதியில் வெள்ள ஆபத்து இல்லை. ஆனாலும்... இந்த மழை கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு தேவைதான்.
  18. ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு! ஜெர்மனியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஜெர்மனியின் பவேரியா, பாடன் வுர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதுடன் இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385564
  19. சீச்சீ.... இப்பிடி வாற ஆட்களுக்கு என்றே, எக்ஸ்ராவாக வடை சுட்டு வைக்கிறவை. 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.