Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இராணுவ சிப்பாயின் மனைவியடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது சரமாரி தாக்குதல். அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியுள்ளார். இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (3) இரவு சரணகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் குறித்த இராணுவச் சிப்பாயின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து குறித்த பெண்ணின் வீட்டில் சம்பவதினமான நேற்று இரவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத உறவில் ஈடுபட்டபோது அங்கு சென்ற இராணுவச் சிப்பாய் தனது மனைவி மீதும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதும் சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர்கள் இருவரும் படுகாயமடைந்ததையடுத்து இராணுவச் சிப்பாய் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணையும் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதேவேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதலை மேற்கொண்ட இராணுவ சிப்பாய் மகியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://athavannews.com/2024/1381148
  2. கைப்புண்ணுக்கு... கண்ணாடி வேண்டுமா. 😂 ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் எனும் போதே... உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். 😁 இல்லை என்றால்... உங்களுக்கு பூகோள அரசியல் அறிவு காணாது என்று நினைக்கின்றேன். 🤣
  3. தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து சந்தேகநபராக ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேவேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1381092
  4. சவுக்கு சங்கர் தேனியில் கைது! அழைத்துச் சென்ற பொலிஸ் வாகனம் விபத்து! உரசல் காயத்திற்கு சிகிச்சை! அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர். காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். மேலும் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல் பல்வேறு இணையதளங்களுக்கும் யூடியூப் சனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அப்படி சனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியே தற்போது அவருக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூடியூப் சனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் பொலிசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைக்க பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைவாக 293 (பி),509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமாக தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் பொலிசார் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1381080
  5. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது : தொடரும் போராட்டம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெடுத்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ உதவி மற்றும் ஆயத விநியோகத்தை நிறுத்துதல், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இவ்வாறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திவந்த மாணவர்களின் முகாம்களை கலவரத் தடுப்பு பொலிஸார் வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர். இதன்போது அங்கு போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி, லாஸ் ஏஞ்சலீஸ் மாநில பல்கலைக்கழகத்திலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறித்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஹெமில்டன் அரங்கில் தடுப்புகள் அமைத்து மாணவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸார் கடந்த புதன்கிழமை அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றியிருந்தனர். https://athavannews.com/2024/1381061
  6. முடிவுக்கு வரும் இஸ்ரேலுடனான உறவு! கொலம்பியா அறிவிப்பு. இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) அறித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பொகோட்டாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொலம்பிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசுடனான உறவை தாம் முறித்துக் கொள்வதாகவும், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது எனவும் அனைத்து நாடுகளும் இது தொடர்பில் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கொலம்பிய அரசு தொடர்சியாக கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380784
  7. “மேதகு” படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்.
  8. முதலாளிமார் சம்மேளனத்தின் முக்கிய அறிவிப்பு! பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று, தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1,700 ரூபாய் சம்பளம் குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியிலுள்ள முன்மொழிவுகளுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய எதிர்வரும் 15ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சில ஊடகங்கள் அறிக்கையிடுவது தவறானதாகும் என்றும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதற்கான திகதி அல்லது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக அரச அதிகாரிகளின் அறிக்கைகளும், ஊடகங்கள் அதை தவறாகக் கையாளும் விதமும் சம்பள அதிகரிப்பு தொடர்பாக, தொழிலாளர்கள் மத்தியில் தேவையற்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் சம்மேளனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2024/1380925
  9. மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன். மறைந்த நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது. விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு அங்கு நாளாந்தம் உணவளிக்கப்பட்டு வருகின்றது. விஜயகாந்த் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380958
  10. இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி. இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனானஅனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்கின்றன. மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது. இஸ்ரேலிய அரசாங்கம் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி போதுமான அளவில் வழங்க அனுமதிக்கும் வரை இந்த புதிய நடவடிக்கைகளை அரசு செயற்படுத்தும் என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ள இஸ்ரேல், தற்போது தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இத் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் உட்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1380939
  11. சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்! யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய திட்டங்களை வடிவமைக்குமாறும், அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். அத்துடன் தொல்பொருள் திணைக்களமும், மத்திய கலாசார நிதியமும் மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் போது அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சுற்றுலா இடங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380877
  12. சிங்கள ஊடகங்கள் தான்… இப்படி தவறான தகவல்களை பரப்புகிறது என்று பார்த்தால்… Canada City Newsம் நம் மேல் சேறு அடிக்குது.😁
  13. தமிழ் கதைக்கத் தெரியும். வாசிக்க கொஞ்சம் பிரச்சினையாய் இருக்கு.😂 அதுகும்… இப்பிடியான செய்திகள் என்றால் வாசிக்க பெரும் சிரமம்.🤣
  14. இவருக்கு… வாற சம்மருக்கு, AC கடன் கிடைக்காது. 😂 🤣
  15. இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். இதன்போது எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய ரயில் சேவையினை விஸ்தரிப்பதற்கு எதிர்காலத்தில் இந்தியா நடவடிக்கையெடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி என்.சிவலிங்கம்,மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380770

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.