Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழ். வைத்தியசாலைத் தாக்குதல் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அவசர கடிதம்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், நேற்று இரவு 10:30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மது போதையில் வந்த இருவர் யாழ்போதனா வைத்திய சாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினுள் தமது வண்டியை செலுத்தினார்கள். வண்டியின் பின்னால் இருந்தவர் மது போதையில் தனது கையை கண்ணாடிக்குத் தானே இடித்ததனால் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்தவர். அவர் அனுமதிக்கும் வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் தானே சிகிச்சை அலகினுள் பிரவேசித்தார். மற்றையவர் விடுதியின் உள்ளே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வைத்தியசாலை ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளை பேசியதோடு அல்லாமல் அங்கிருந்த அச்சு இயந்திரத்தினை எடுத்து தூக்கி ஊழியர் ஒருவரின் மீது வீசி அவரது தலையில் படுகாயத்தை ஏற்படுத்தி இருந்தார். பாதிக்கப்பட்ட வைத்தியசாலை ஊழியர் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மதுபோதையில் வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். இது தொடர்பாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. 1.உடனடியாக சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதுகாப்பு பொறிமுறையில் உள்ள தவறுகள் கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தப்பட வேண்டும். 2. கடமையில் உள்ள வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். 3 . வைத்தியசாலைக்கு வருகின்ற அப்பாவி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். 4. சம்பந்தப்பட்ட நபர் ஆகக்கூடிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து வைத்தியசாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தொடர் தொழிற்சங்க போராட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படலாம் எனக் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1384512
  2. நில்மினி…. உங்கள் பதிவை வாசிக்க ஆவலுடன் காத்து இருக்கின்றேன். 🥰
  3. குமாரசாமி அண்ணையை ஆக பகிடி பண்ணாதேங்கோ... 😂 அடுத்த சந்திப்பில்... பலகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயமாக உள்ளது. 🤣
  4. எவ்வளவு பண்பாட்டுடன் வாழ்ந்த தமிழ் இனம், இன்று தறி கெட்டுப் போய்… எந்த இடத்தில், எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாமல் திரிகின்றது. வைத்திய சாலையில் இது முதல் தாக்குதலும் அல்ல. எந்த இனமாவது வைத்திய சாலையில் சண்டித்தனம் காட்டுவதை கேள்விப்பட்டதே இல்லை. இந்த இனத்துக்கு மட்டும்… ஏன் கேடு கெட்ட புத்தியோ…
  5. இந்தப் படத்தைப் பார்த்த.. ஆட்கள் முக்கியமான கேள்வி ஒன்று கேட்டிருக்க வேண்டுமே... ஏன் இன்னும் கேட்கவில்லை என்று, ஆச்சரியமாக உள்ளது.
  6. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு! இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384435
  7. அந்தக் கட்சியில் உள்ள தலைவர்களின் படங்களையும், நாலுகாலில் உள்ள தெருநாய்கள் போல் வரைந்த ஓவியரின் குசும்பை பார்த்து வயிறு நோக சிரித்தேன். 😂 🤣
  8. அந்தக் கட்சியின் சின்னம்... "சொறி நாய்" என்று கருத்தோவியம் வரைந்து இருக்கின்றார்கள்.
  9. புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய` ‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் ‘சர்வ ஜன பலய´ புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய புதிய அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. https://athavannews.com/2024/1384233 😂 அந்தக் கட்சியின் சின்னம்... "சொறி நாய்" என்று கருத்தோவியம் வரைந்து இருக்கின்றார்கள்.
  10. புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய` ‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் ‘சர்வ ஜன பலய´ புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய புதிய அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. https://athavannews.com/2024/1384233
  11. தோட்ட முதலாளிமார்களுக்கு மனுஷ நாணயக்கார உத்தரவு! பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, உரிய சம்பளத்தை வழங்காத தோட்டங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு முறையானவர்களிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஏற்கனவே குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகமாக சம்பளத்தை செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்திடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட்ட உள்ளூர் தோட்ட நிறுவனங்களில் இந்த சம்பளத்தை அதிகரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்தபட்ச சம்பளத்தை அமுல்படுத்தாத தோட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களுக்கு வழங்குவதற்கான அடிப்படை சட்டத்தை தயார் செய்ய ஜனாதிபதி அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அடுத்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இல்லையெனில், சட்டத்தை அமல்படுத்த தொழில் திணைக்களத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1384357
  12. விவாதம் தொடர்பாக அனுரவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை! ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார குழு விவாதத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், தலைமைத்துவ விவாதத்திற்கான பிரேரணையை தமது கட்சி எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்விரு விவாதங்களில் முதலில் பொருளாதார விவாதம், இரண்டாவதாக தலைமைத்துவ விவாதம் என்ற நிலைப்பாடு அப்படியே இருப்பதாகவும், பொருளாதார குழு விவாதத்திற்கான திகதியை உடனடியாக அறிவிக்குமாறும் உரிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1384348
  13. 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது! தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் வெளியிடப்பட்டுள்ள கூட்ட அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 வீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கும் கடும் எதிர்ப்பினை முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்கும் இந்தத் தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், தொழில்துறையிலுள்ள அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எந்த நன்மையையும் தராத இந்தத் தீர்மானம் நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழிலின் ஒவ்வொரு துறையையும் மேலும் பலவீனப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு பெருந்தோட்டத்தின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளதாகவும் மேலும், நாடு முழுவதும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2024/1384356
  14. வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த யாழ் இளைஞர் விபத்தில் மரணம்! கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்று முன்தினம் இரவே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி.பானுஜன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த இளைஞன் இன்று கனடாவுக்கு பயணம் செய்வதற்கு தயாராக இருந்தவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்னர். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1384393
  15. பப்புவா நியூ கினியா நிலச்சரிவு – புதையுண்ட 6 கிராமங்கள். பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக, அந்நாடு பேரிடர் மேலாண்மைதுறை ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது. தென்மேற்கு வங்க கடலில், அவுஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியாவில், கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாரிய நிலச்சரவு ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலச்சரிவில் குறைந்தது 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளானதாக குறிப்பிடப்படுகினது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வந்த நிலையில், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் புதையுண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. முன்னதாக இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 670க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த்தாக ஐ.நா. தெரிவித்தது. இந்நிலையில், பப்புவா நியூ கினியவில் பதிவான இந்த நிலச்சரிவில் சிக்குண்டு 2000 க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக தற்போது அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மண்சரிவில் கட்டிடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில்,; மண்ணுக்குள் புதையுண்ட வீடுகள் 8 மீற்றர் ஆழத்தில் புதைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மேலும்;, கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும் மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384390
  16. இந்த குரூப்பை இயக்குவது இந்தியா. அவர்களுக்கு சிங்களத்தின் நலனைவிட தமிழர்கள் ஒரு பொருட்டே அல்ல. எத்தனையோ... கோவில்களை இடித்து விகாரை கட்டும் போதெல்லாம் இவர்கள் எங்கே போனவர்கள்? இப்ப வந்து... ஞானசார தேரருக்கு மன்னிப்பு கொடுக்கட்டாம் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறார்கள். வெட்கம் அற்றவர்கள்.
  17. இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் சடலமாக மீட்பு! இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், (Jean Francois Pactet) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1384131
  18. @Kandiah57, @nochchi, @shanthy எல்லோரும் ஜேர்மனியின் வட பகுதியில் வசிக்கின்றார்கள். நாம் வசிப்பது தென்பகுதி. இரண்டிற்கும் இடையில் 500 கிலோ மீற்றர் தூரம் என்பதால் அவர்களை அழைக்கவில்லை ஈழப்பிரியன்.
  19. ஓம்... யாயினி. கூப்பிட்ட பெயரை மாற்றுவது கடினம் தான். தாத்தா... என்று கூப்பிடுவதும் இனிமையாகத்தான் இருக்கு. 🙂
  20. எமக்கு... அங்கு இருக்கும் மட்டும் நீங்கள்... மாப்பிள்ளை பகுதியா, பொம்பிளை பகுதியா என்று ஆரும் கேட்டு விடுவார்களோ என்று பயமாக இருந்தது. 😂 மொய் எழுதாமல்... வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு... வீட்டுக்கு பார்சலும் கட்டிக் கொண்டு போகிறீர்களோ என்று மிதிமிதி என்று மிதித்து விடுவார்களோ என்று நெஞ்சு பக்கு, பக்கு என்று அடித்துக் கொண்டு இருந்தது. 🤣
  21. மிகவும் நன்றி அல்வாயன். 🙏 பாகம் இரண்டு... எப்படியும் குமாரசாமி அண்ணை, பாஞ்ச் அண்ணையின் மூலம் வெளிவந்தால்தான் சந்திப்பின் மறு பக்கத்தையும் உணரக் கூடியதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. வெளிவரும் என நானும் காத்திருகின்றேன். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.