Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இளையராஜா எண்பது வயதில், தானே எழுதி இசையமமைத்து பாடிய பாடல். வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி-ஈ கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல ஒலகத்தில் எங்கோ மூலையில இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள இறு சிறு உசிரு துடிக்கிறது நெசமா யாருக்கும் தெரியாது சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் காட்டுல வீசிடும் காத்தறியும் வழி நெடுக காட்டுமல்லி கண் பார்த்தும் கவனமில்லை எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி
  2. ஆகாய பந்தலிலே பொன்னுஞ்சல் ஆடுதம்மா... பாடலாசிரியர்: கண்ணதாசன், பாடகர்(கள்): டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா, இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன், திரைப்படம்: பொன்னூஞ்சல். ஆகாயப் பந்தலிலே… பொன்னூஞ்சல் ஆடுதம்மா… ஊர்கோலம் போவோமா… உள்ளம் அங்கே ஓடுதம்மா… ஊர்கோலம் போவோமா… உள்ளம் அங்கே ஓடுதம்மா… ஆகாயப் பந்தலிலே… பொன்னூஞ்சல் ஆடுதம்மா… பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி… மணச் சங்கு கையேந்தி… நாம் அங்கே போவோமா… பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி… மணச் சங்கு கையேந்தி… நாம் அங்கே போவோமா… மீனாளின் குங்குமத்தை… மீனாளின் குங்குமத்தை… நானாள வேண்டுமம்மா… மானோடு நீராட… மஞ்சள் கொண்டு செல்வோமா… ஆகாயப் பந்தலிலே… பொன்னூஞ்சல் ஆடுதம்மா… ஊர்கோலம் போவோமா… உள்ளம் அங்கே ஓடுதம்மா… பால் வண்ணம்… பழத்தட்டு பூக்கிண்ணம்… மணப்பெண்ணின் தாய் தந்த… சீராக காண்போமா… பால் வண்ணம்… பழத்தட்டு பூக்கிண்ணம்… மணப்பெண்ணின் தாய் தந்த… சீராக காண்போமா… ஊராரின் சன்னதியில்… ஒன்றாக வேண்டுமம்மா… தாயென்றும் சேயென்றும்… தந்தையென்றும் ஆவோமா… ஆகாயப் பந்தலிலே… பொன்னூஞ்சல் ஆடுதம்மா… கண்ணென்றும்… வளை கொண்ட கை என்றும் இதழ் கொண்ட அங்கங்கள்… நீ வாழும் இல்லங்கள்… பொன்மாலை அந்தியிலே… என் மாலை தேடி வரும்… அம்மா உன் பெண்ணுள்ளம்… நாணம் சொல்லி ஆடி வரும்… ஆகாயப் பந்தலிலே… பொன்னூஞ்சல் ஆடுதம்மா… ஊர்கோலம் போவோமா… உள்ளம் அங்கே ஓடுதம்மா…
  3. பேரப்பிள்ளை சுகமாக பிறந்தது மகிழ்ச்சி. 👍 நீங்களும் குறுகிய நேரத்துக்குள்.. Cardiologist டாக்டரையும் பார்த்து, உங்கள் அலுவல்களையம் சமாந்திரமாக செய்து முடித்து விமானம் ஏறியமைக்கு பாராட்டுக்கள். பேராண்டிக்கு பெயர் வைத்து விட்டீர்களா.
  4. பண்டாரவளை – தியத்தலாவ கார்ப் பந்தய விபத்து: இருவர் கைது! பண்டாரவளை – தியத்தலாவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கார்பந்த விபத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தியத்தலாவ கார் பந்தயத்தின் போது கார் ஒன்று ஓடு பாதையை விட்டு விலகி ஓடு பாதைக்கு வெளியே நின்ற பார்வையாளர்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 4 பந்தய உதவியாளர்களும், 8 வயது மற்றும் 9 வயது சிறார்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய முத்துசாமி உதயகுமார், 8 வயதுடைய சிவகுமார் தனுஷிகா, சீதுவை பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சமத் நிரோஷன், அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரசிக அபேநாயக்க, மாத்தறையைச் சேர்ந்த 62 வயதுடைய சாந்த உபாலிகமகே, அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய அசேன் ஈனடிகல, மாத்தறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஜயவர்தன ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில், தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயம் இறுதியாக கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன்படி 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படாத நிலையில் நேற்று இந்தப் போட்டி நேற்று நடைபெற்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1379186
  5. மாலை தீவு நாடாளுமன்ற தேர்தல்: ஜனாதிபதி முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி. நடைபெற்று முடிந்த மாலைதீவின் 20 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த தேர்தலில் ஜனாதிபதி முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 66 இடங்களை வென்றுள்ளது. இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயற்பாடுகளை அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1379148
  6. மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி. மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1379132
  7. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும்... ஒவ்வொரு தொகுதி வாரியாக எந்தக் கட்சி, யார் யார் போட்டியிடுகிறார்கள் போன்ற விபரத்தை ஒரே பார்வையில் பார்க்கக் கூடிய மாதிரி எதாவது பக்கம் இருந்தால் அந்த இணைப்பை தந்து உதவ முடியுமா.
  8. UPDATE – தியத்தலாவை விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! பதுளை – தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சார் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். FOXHILL 2024 கார் ஓட்ட போட்டியின்போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி, பொதுமக்கள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிவித்துள்ளார் . விபத்தில் காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1379124
  9. அந்த மனிசி சுவிசிலை இருந்தது. டீசன்ரான பொம்பிளை என்று பார்த்தால்... பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சண்டையில்... "சோடா மூடி" ரேஞ்சிலை நின்று சண்டை பிடிக்குது. 🤣
  10. நீங்கள் என்னத்தை நிறுவினாலும், அவங்கள் சம்மதிக்க வேணுமே. 😂 மகா வம்சத்தையே... அடிக்கடி திருத்திக் கொண்டு இருக்கிற ஆட்கள் அல்லவா அவர்கள். 🤣
  11. புத்த பிக்குகளும், இலங்ககை தோ(தொ)ல் பொருள் திணைக்களமும்... வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிக்கப் போகிறார்களே.... 😂
  12. நீங்கள்.... நேரத்துக்கு ஒரு கதை கதைக்கிற ஆள். 😂 நிலாந்தன் மாறி சொல்லியிருந்தால்... உந்த ஆய்வாளர்களின் ஆய்வுகளை கணக்கெடுப்பதில்லை. எல்லாரும் விலை போன ஆட்கள் என்று "உருட்டி" இருப்பீர்கள். எனக்கு உங்களின் நகர்வுகள் அத்தனையும் அத்துப்படி. 🤣
  13. 6 பேரின் உயிரை காவு கொண்ட தியத்தலாவை விபத்து – 21 பேர்காயம். பதுளை – தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடடுகின்றது. பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1379117
  14. 👇 வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்! 👇
  15. வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்! களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி - அவர் ஒரு வெள்ளைக்காரர் - ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார். அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர், அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார். அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள், அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என்பதை அறிந்த கடைக்காரர் சிறு தொகையை திரும்ப கொடுக்கிறார். இந்த விடயம் “டிக்டொக்” காணொளியில் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் விளைவாக கடைக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன . ஏற்கனவே இது போன்ற மற்றொரு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணியை ஒரு கொத்துரொட்டி கடைக்காரர் அவமதிக்கின்றார். சம்பவம் நடந்தது கொழும்பு புதுக்கடையில். அங்கேயும் ஒரு இடியப்ப கொத்து என்ன விலை என்று கேட்டபோது கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறுகிறார். சுற்றுலாப் பயணி அதை நம்பாமல் கேள்வி கேட்டபோது கடைக்காரர் சுற்றுலாப் பயணியை நோக்கி வாயை பொத்து என்ற சமிக்கையை காட்டுகிறார். அது சமூக வலைத் தளங்களில் பரவலாக வெளிவந்தது. விளைவாக கடைக்காரர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள். இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, சமூக வலைத்தளங்களில் பகிடியாக ஒரு விடயம் பகிரப்படுகிறது. இனி சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது வீடியோவையும் ஓன் பண்ணிவிட்டு சென்றால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள் நியாயமான விலையைகக் கூறுவார்கள் என்பதே அந்தப் பகிடியாகும். ஆனால் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பது போல அரசாங்கம் உள்ளூர் மக்களை சாப்பாட்டுக் கடைக்காரர்களின் விடயத்தில் பாதுகாக்கும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது தொடர்பாக முகநூலில் ஒரு மருத்துவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். நட்சத்திர அந்தஸ்துள்ள சுற்றுலா விடுதிகளில் உணவின் விலை உச்சமாகத்தான் உள்ளது. சாதாரண இளநீரில் இருந்து தொடங்கி மேற்கத்திய முறையிலான உணவுகள்வரை எல்லாவற்றுக்கும் பெரிய விலை தான். ஏன் அப்படியென்று சுற்றுலாப் பயணிகள் கேட்பதில்லை. ஏனென்றால் நட்சத்திர விடுதிகளில் அதுதான் விலை. அதையே தெருவோரக் கடைக்காரர் செய்தால் அது வழக்காகி விடுகிறது என்ற தொனிபட மேற்படி மருத்துவர் ஒரு குறிப்பை போட்டிருந்தார். இது விடயத்தில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.முதலாவது வெள்ளைத் தோலைக் கண்டால் அல்லது சுற்றுலாப் பயணிகளைக் கண்டால் உள்ளூர் வியாபாரிகள் விலையை உயர்த்திக் கூறும் ஒரு நிலைமை எப்பொழுதும் உண்டு. இது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவும் உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஒரு பொதுத் தோற்றப்பாடு. ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு ஒரு பொருளை டொலர் மதிப்பில் விற்க முற்படுவது.இதுதான் புதுக்கோட்டை மற்றும் களுத்துறைச் சம்பவங்களின் பின்னணி. இது முதலாவது . இரண்டாவது விடயம்,சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல உள்ளூர் பணக்காரர்களும் சுற்றுலா விடுதிகளில் உணவு அருந்தும் பொழுது அந்த விலைப்பட்டியலைக் குறித்துக் கேள்வி கேட்பதில்லை. சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைக்கு அருகாக அமைந்திருக்கும் ஒரு மரக்கறி உணவகத்தில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்தது. நட்சத்திர அந்தஸ்துள்ள உணவு விடுதிகள் சாதாரண உணவுகளுக்கும் குடிபானங்களுக்கும் பல மடங்கு விலையைப் போடுகின்றன. பணக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதைக் கேள்வி கேட்காமல் நுகர்கிறார்கள். அதையே தெருவோரக்கடை என்று வந்தால் அல்லது தெருவோரத்தில் பொருளை விக்கும் ஏழை என்று வந்தால் ஆயிரம் நியாயங்கள் கேட்டு விலையை எப்படிக் குறைக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள் . இது சமூக வலைத்தளங்களின் காலம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எனவே இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுது அது உடனுக்குடன் படமாக்கப்படுகின்றது. எடுத்த கையோடு சுடச்சுட சமூக வலைத்தளங்களில் செய்தியாக்கப்படுகின்றது. குற்றங்களைத் தடுப்பதற்கும் அநியாயங்களைத் தடுப்பதற்கும் அது உதவுகின்றது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தங்களை உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் அல்லது சுரண்டப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் அதற்கு காரணம். இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புக் காரணமாக மேற்சொன்ன இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் இந்த விடயத்தில் உஷாராகக் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகளைக் கவர வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு ஏனென்றால் சுற்றுலாப் பயணிகள்தான் இப்பொழுது நாட்டுக்குள் டொலர்களைக் கொண்டு வரும், பொன்முட்டை இடும் வாழ்த்துக்களாகும்.இந்த மாதத்தில் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் மொத்தம் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வந்திருக்கிறார்கள். நாட்டின் பெரும்பாலான நட்சத்திர அந்தஸ்த்துள்ள விடுதிகள் மட்டுமல்ல சாதாரண விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. நாட்டின் உயர்தர மதுச்சாலைகள்,தேநீர்க் கடைகள்,சிற்றுண்டிச் சாலைகள் போன்றவற்றிலும் கடற்கரைகளிலும் உல்லாசப் பயணத் தலங்களிலும் பெருமளவுக்கு சுற்றுலாப் பயணிகளைக் காண முடிகின்றது. சுற்றுலாப் பயணிகள் அதிக தொகையாக இலங்கைக்குள் வருவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உண்டு.இது ஒரு அழகிய நாடு.அது முதலாவது முக்கியமான காரணம். இரண்டாவது காரணம், நாட்டின் நாணயப் பெறுமதி வெகுவாகக் குறைந்துவிட்டது.இதனால் ஒரு வெளிநாட்டவர் தன்னுடைய நாணயத்தை இங்கே செலவழிக்கும் பொழுது குறைந்த செலவில் அதிக அளவு நன்மைகளைப் பெற முடியும். இக்காரனத்தால் இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக தொகையாக வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவுக்கும் மாலை தீவுகளுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கடிகள் தோன்றிய பின் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கி ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளைக்காரர்களைப் போல காசை அள்ளி வீசமாட்டார்கள் என்ற ஒரு அபிப்பிராயம் சுற்றுலா விடுதி உரிமையாளர்களிடமும் உள்ளூர் வணிகர்களிடமும் உண்டு. அமெரிக்க ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை விடவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் சந்தை நிலவரங்கள் தொடர்பாக அதிகம் விழிப்புடன் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கியே போவதாக ஓர் அவதானிப்பு உண்டு. வடக்கு கிழக்கை நோக்கி வருபவர்களின் தொகை ஒப்பிட்டுளவில் குறைவு என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள விருந்தகங்கள், சுற்றுலாத் தங்கங்களின் விருந்தோம்பும் பண்பைக் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.சுற்றுலாப் பயணிகளை கவரத்தக்க விருந்தோம்பல் பண்பாடும் அதற்குரிய விருந்தோம்பல் வலை அமைப்பும் தமிழ்ப் பகுதிகளில் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.அவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவரத்தக்க ஒரு சுற்றுலாப் பாரம்பரியத்தை அல்லது ஒரு சுற்றுலாப் பண்பாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான உயர் கற்கை நெறிகள் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் உண்டு.எனினும் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் கவர்ச்சிமிகு செழிப்பான விருந்தோம்பல் பாரம்பரியம் ஒன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. இன்னும் சில மாதங்களில் நல்லூர் திருவிழா வருகிறது. அதையொட்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகரித்த தொகையில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருவார்கள்.இனிவரும் மாதங்களில் நாட்டுக்கு அதிகம் வருவாயை ஈட்டித் தரப்போகும் தரப்புகளில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்படுவார்கள்.முன்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது சொந்தக்காரர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. ஆனால் இப்பொழுது இந்தப் போக்கு மாறி வருகின்றது.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு விரும்புகின்றார்கள். உறவினர்களின் வீடுகளில் தங்குவதை விடவும் சுற்றுலா விடுதிகளில் தங்குவதை அவர்கள் விரும்பக் காரணம் என்ன? மிகவும் துயரமான ஒரு காரணம் உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கும் பொழுது உறவினர்களும் நண்பர்களும் இவர்களிடம் எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பதை இவர்கள் கொடுக்க முடியாத போது அல்லது இவர்கள் கொடுப்பது அவர்கள் எதிர்பார்த்ததை ஈடு செய்யாத போது அங்கே அதிருப்தி உண்டாகிறது. அதனால் மனக் கஷ்டங்கள் ஏற்படுகின்றன.விடுமுறைக் காலத்தை தாய்நாட்டில் சந்தோஷமாகக் கழிப்பதற்கு என்று வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் மேற்சொன்ன காரணத்தால் தமது விடுமுறை நாட்கள் மன அழுத்தம் மிக்கவைகளாக மாறின என்று குறைபடுகிறார்கள். மேலும் அங்கிருந்து வரும் முதலாம் தலைமுறை புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை.பெரும்பாலானவர்களுடைய பெற்றோர் இப்பொழுது உயிரோடு இல்லை.எனவே பெற்றோரோடு தங்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்குக் குறைவு. மேலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. தங்கப் போகும் வீடுகளிலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. ஒரு குறுகிய காலத்துக்குள் எல்லாரையும் உள்வாங்கும் அளவுக்கு உள்ளூர் வீடுகளின் அறைகள் போதாமல் இருக்கலாம். மேலும்,வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளைகள் “ஏசி” அறைகளைக் கேட்கிறார்கள். அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு ஒரு காரணம். இது போன்ற காரணங்களால் சுற்றுலா விடுதிகளுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு தரப்பினராக புலம் பெயர்ந்த தமிழர்களும் மாறி வருகிறார்கள். எதுவாயினும் நாட்டுக்குள் வெளிநாட்டுக் காசு வருகிறது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஓர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது ஒரு வரப் பிரசாதம். அது நாட்டின் டொலர் கையிருப்பைக் கூட்டுகின்றது. அது போலவே வெளிநாட்டுக்குச் சென்ற தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனுப்பும் காசும் நாட்டின் டொலர் கையிருப்பை அதிகப்படுத்துகிறது.அண்மைக் காலங்களில் 10பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பியிருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவை தவிர அரசாங்கம் வரிகளை உயர்த்தியிருக்கின்றது.மின்சாரக் கட்டணம் தொலைதொடர்புக் கட்டணம் போன்ற உள்ளூர்ச் சேவைக் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இவற்றால் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கின்றது. இவை போன்ற பல காரணங்களினாலும் நாட்டின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் நிமிர்த்தப்படுகிறது என்று ஓர் உணர்வு ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு மேல் போனது.ஆனால் இப்பொழுது உள்ளூர் சந்தைகளில் 100 ரூபாய்க்கு சற்று அதிகமாகப் போகின்றது. அப்படித்தான் தக்காளிப் பழம் பெரியது ஒரு கிலோ 800 ரூபாய்க்கு மேல் போனது. இப்பொழுது 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை போகின்றது. மரக்கறி விலை குறைகிறது. கடல் உணவுகளின் விலையும் குறைக்கின்றது. அரசாங்கம் சாதாரண சிங்கள மக்களைக் கவரும் நோக்கத்தோடு நெத்தலிக் கருவாடு, சீனி,பருப்பு போன்றவற்றின் விலைகளை அவ்வப்போது குறைத்து வருகின்றது.ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் பொழுது மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கலாம். ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க கடுமையாக உழைக்கின்றார். அவர் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருவதை மேற்கு நாடுகள் விரும்புகின்றன.பன்னாட்டு நாணய நிதியம் போன்ற உலகப் பெரு நிறுவனங்களும் விரும்புகின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு மேற்படி தரப்புகள் அவருக்கு உதவும். எனினும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்று கூறப்படுகின்றவை சாதாரண சிங்கள மக்களைச் சென்றடைந்தனவா என்ற கேள்விக்கு விடை முக்கியம். ஏனெனில் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்குரிய பிரதான வாக்காளர்கள் சிங்களக் கிராமங்களில்தான் இருக்கிறார்கள். சிங்கள பௌத்த அரசியலின் வாக்கு வங்கியின் இதயம் கிராமங்களில்தான் உண்டு. கிராமப்புற வாக்காளர்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதுதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போகின்றது. https://athavannews.com/2024/1379104
  16. உண்மை சொல்லுகின்ற ஆட்கள், "தீம்கா"வாக இருக்க சந்தர்ப்பமே இல்லை பையா. 😂 நான் இன்னும் அந்தக் கூத்தை பார்க்கவில்லை. எதுக்கும் அனுப்பி வையுங்க. பிற்காலத்துக்கு உதவும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.