Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி! இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டள்ளது. அத்துடன் கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371975
  2. சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சாந்தன் உயிரிழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் மனிதாபிமானம் அற்ற நிர்வாகத்தின் காரணமாக சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து. எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் இராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் கழிப்பதற்கு திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1371988
  3. சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்: போராளிகள் நலன்புரிச் சங்கம் கோரிக்கை. சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது இந்திய அரசால் சட்டப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தனின் உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலையில் இருந்தது. இது கூட இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1371924
  4. யாழ்ப்பாணத்தில் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி! முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, அன்னாரின் பூதவுடல் நாளை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள்; மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அவரது குடுப்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டு நாளை காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி இந்திய – திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனுக்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு “போராட இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371864
  5. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சாந்தனின் உடல் : மீண்டும் பிரேத பரிசோதனை. சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக நேற்றைய தினம் உறவினரிடம் கையளிக்கப்பட்டது. எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது. தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1371867
  6. காத்தான் குடியில் கைதான 30 பேருக்கு சரீர பிணை : 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு. காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையான ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது 23 மோட்டார்சைக்கிள்கள் முச்சக்கரவண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸாரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371873
  7. காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது! காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் உள்ளிட்ட 5 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1371797
  8. சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது! இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் இன்று முற்பகல் 11.35 மணிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது தயாரின் இல்லத்திற்கு சாந்தனின் கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் உடல், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நல பாதிப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்று சாந்தனின் உடல் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1371847
  9. சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு! உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம், இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீPலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371829
  10. எனக்கு முகமறியாத சாந்தனின் மரணம் இத்தனை துயரை இந்த நாளில் தரும் என்று எண்ணியிருக்கவில்லை. “சட்டத்தில் சாமானியர்களுக்கு எல்லா உரிமையும் இருகிறது. நீதிதான் சாமானியருக்கு இல்லை” சாந்தனுக்காக ஒரு கணம் வணங்கிக் கொள்வோம். Kuna Kaviyalahan
  11. செய்தி கேட்ட கணம் முதலாய் சேயைத் தேடிய தாய் தான் சிந்தை எங்கும் வந்து போகின்றாள் அக்காப் பிள்ளை அம்மா ஆரோ பெத்த பிள்ளை என்னைக் கண்ட போதே உச்சி மோந்து எஞ்சில் ததும்ப முத்தம் தந்து உவகை கொண்டு உருகி நின்றவள் பெத்த பிள்ளை தன்னை காண வருவானென்று எத்தனை ஆண்டாய்க் காத்திருந்தவள் கண்டிருந்தால் எப்படி எல்லாம் அணைத்து மகிழ்ந்திருப்பாள். எல்லாம் கானலாகிப் போனதுவே Inuvaijur Mayuran
  12. வெறும் ஒரு மணிநேர விமானப் பயணத்தில் அவனால் அவனின் அம்மாவின் கரம் பற்றியிருக்கமுடியும்.. அம்மாவின் வாசத்திற்காய், அம்மாவின் அரவணைப்பிற்காய் ஏங்கிய அந்த மனிதன் இன்று தன் மூச்சை நிறுத்திவிட்டான்.. விடுதலை என அறிவிக்கப்பட்டு, 16 மாதங்கள் கடந்த பின்னர் கூட தன் அன்புத் தாயுடன் அவனை சேரவிட மறுத்த இந்திய அதிகார திமிரை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். சாந்தன்.. இனியொருபோதும் திரும்பவரப்போவதில்லை. அவனின் நினைவுகளுடன் மட்டுமே தன் எஞ்சிய காலத்தை கழிக்கப் போகின்றார் சாந்தனின் அம்மா.. வக்கற்ற இந்த தமிழினத்தை மன்னித்துவிடுங்கள் அம்மா.. கண்ணீர் வணக்கம் சாந்தன்..😭😭😭 Nadarajah Anparasan
  13. சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை! சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார். சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371552
  14. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதேவேளை சாந்தன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். இன்னிலையில் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371513
  15. புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை ! சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் புதிய கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தும் அதேவேளையில், குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக, கைதிகளை திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1371327

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.