Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை நடத்திய குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிராக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு சட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த, கடந்த 2021 ஆம் ஆண்டு வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் பலவந்தமாக நுழைந்து பல கைதிகளை மிரட்டியிருந்தார். இந்நிலையில் இச் சம்பவங்களை விசாரிக்கவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும் அரசாங்கம் குழுவொன்றை நியமித்த நிலையில் அக்குழு லொஹான் ரத்வத்த குற்றங்களைச் செய்துள்ளார் என தெரிவித்திருந்தது. மேலும் அவர் மீது பி ரிப்போர்ட் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸிற்கு பரிந்துரை செய்தும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். எனவே இவ்விடயம் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிஸாருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1368061- ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல். சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டவர் 22 என்று அழைக்கப்படும் இராணுவ தளத்தில் 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாக்குதலை ஈரான்; மறுத்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஈரானால் தயாரிக்கப்பட்டது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்க ஈரான் ரஷ்யாவிற்கு அனுப்பிய ட்ரோன்களைப் போன்றது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். https://athavannews.com/2024/1368079- கொஞ்சம் சிரிக்க ....
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எத்தனை பேர்... அதை, கவனித்தீர்கள். 😂 🤣- அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
பைடனுக்கும் நோபல் பரிசுக்கும்... ஏணி வைத்தாலும் எட்டாது. 😂 🤣- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
இரண்டு கைகளையும் உயர்த்தி வாக்குப் போட்டவர்கள்.- சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!
சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு! தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்திற்குள் காணப்படும் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368048- வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
தமிழரிலும் நட்டுக் கழண்டவர்கள் இருக்கின்றார்கள். 😂 🤣- கருத்து படங்கள்
- இளைஞனைத் தாக்கிக் காலை முறித்த பொலிஸார்: யாழில் சம்பவம்
இளைஞனைத் தாக்கிக் காலை முறித்த பொலிஸார்: யாழில் சம்பவம். இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் வழங்கியுள்ள முறைப்பாட்டில்” நான் சைக்கிளில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த அச்சுவேலி பொலிஸார் என்னை நிற்குமாறு கூறினர். நான், ஏன் எனக் கேட்ட போது எனது முகத்தில் தாக்கிவிட்டு ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை எனக் கேட்டார்கள். அப்போது நான் காய்ச்சல் காரணமாக வரவில்லை எனத் தெரிவிக்க மீண்டும் என்னை தாக்கினார்கள். நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னைக் கடுமையாகத் தாக்கிவிட்டு என்னை வீசி விட்டுச் சென்றுவிட்டார்கள். இதனையடுத்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன். தற்போது எனது ஒரு கால் முறிந்துள்ளது. என்னை தாக்கிய பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1367931- தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள்
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால் , அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நபர் , சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொண்டு அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்ற பின்னர் அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், இந்நிலையில் , குறித்த சிறுமி சுகவீனமுற்றமையால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் மூன்று மாதம் கருவுற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , சிறுமி வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் வைத்தியர்களினால் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்படடுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367959- போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என நினைத்து தொற்றுநீக்கியை அருந்திய மயங்அகர்வால் - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
இந்த கிரிக்கெட் வீரர், ஓசி... என்றால், "பொலிடோலும்" குடிப்பார் போலுள்ளது. 😮 போத்தலில் என்ன எழுதியிருக்கு என்று வாசிப்பதில்லையா? முதலில்... அந்த தொற்று நீக்கி ஏன் அங்கு வந்தது. சிலவேளை அதற்கு முன் அந்த இருக்கையில் இருந்து பயணித்த பயணி, மறந்து போய் விட்டுவிட்டு சென்றிருப்பாரோ. முன்பு எனது வேலையிடத்தில் வேலை செய்யும் ஒருவர் களவாக குடிநீர் போத்தலில் ரொய்லற் கழுவும் மருந்தை நிரப்பிக் கொண்டு போய் வீட்டில் வைத்திருந்திருக்கின்றார். பாடசாலையால் வந்த அவரின் ஆறு வயது மகன் அதனை ஜூஸ் என குடித்து, மிகவும் ஆபத்ததான நிலையில் இருந்து காப்பாற்றப் பட்டாலும் அதன் பாதிப்புகள் பல வருடங்களை கடந்தும் தொடர்ந்து கொண்டுள்ளது. ஒரு ஐரோ கூட பெறுமதி இல்லாத மருந்தை களவெடுத்தது மட்டுமல்லாமல், அதனை குடிநீர் போத்தலில் நிரப்பி வைத்த மடமைத்தனத்தால் மகனின் வாழ்க்கையை பாழாக்கி விட்டார்.- அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை! இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘கிளாடியா டென்னி‘ என்பவரே ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்காகவே பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1367898- புது வரவு
அக்கா… நீங்களும் அடிக்கடி காணாமல் போகின்றீர்கள். 😂 நீங்களும் தொடர்ந்து இணைந்திருங்கள்.🤣- மாலைத்தீவு நாடாளுமன்றில் கைகலப்பு : காணொளி உள்ளே
இதில்.. எந்த நாட்டு பாரளுமன்ற சண்டை திறம்.😂- கருத்து படங்கள்
- வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு, இதன் மூலம் நாட்டில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் எனவும் ஜேர்மனி அரசு எதிர்பார்க்கிறது. உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின்,பிரித்தானியா ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367758- மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!
அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம். 🤣- நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்
பூவா, தலையா போட்டுப் பார்.... நீயா, நானா என்று தெரிந்து விடும். செந்தமிழன் சீமான். 😂- கருத்து படங்கள்
- கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!
கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்! பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று குழுகூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் கட்சியின் யாப்பின் திருத்தம் செய்ததன் பின்னர், நிறைவேற்றுக்குழுவுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று சபைக்கு என்னால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதாவது கதிரையின் அடையாளத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பரந்த அமைப்பை நாம் உருவாக்கவுள்ளோம். ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். நாங்கள் அரசியலமைப்பை திருத்த வேண்டும். அந்த அரசியலமைப்புகளை எமது கட்சி தலைமையகத்தில் திருத்தம் செய்வோம். அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் சபையொன்றை நியமிக்க எதிர்பார்க்கின்றோம். வெற்றிலைச் சின்னத்தை பெறமுடியாது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்குத் தொடுத்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் இராஜினாமா செய்து வெற்றிலையுடன் கூட்டணியில் இணைவார்கள்” என நம்புகிறோம் என மைத்ரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1367602- மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!
மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு! உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது. குறித்த சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது . இதில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367616- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
- லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.