Everything posted by தமிழ் சிறி
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் உறவினர் தெரிவிப்பு! அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார். எனவும் பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர் எனவும் அதனாலயே பொலிஸார் சுட்டுள்ளனர் எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே எனவும் குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றதாகவும் அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிசாரின் கட்டளையை மீறி சென்றதாக தெரிவித்து ஹயஸ் ரக வாகனம் ஒன்றின்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464076
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்! ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2026/1464095
-
யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு!
யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1464079
-
கருத்து படங்கள்
- 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி! ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர். https://athavannews.com/2026/1464002- அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!
ரஷ்யாவின்… பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அமெரிக்கன் கட்டதுரைக்கு… கட்டம் சரியில்லை. 😆- ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!
இந்தக் கொலைகாரரை வெளியே விடாதீர்கள். இதுகள் வெளியில் நடமாடுவதால், மக்களின் உயிருக்குத்தான் ஆபத்து.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
வாகனத்தை ஓடியவர் 17 வயது சிறுவன் போலுள்ளது. இலங்கையில் எத்தனை வயதில், வாகன அனுமதிப் பத்திரம் கொடுப்பார்கள்? இங்கு 16 வயதில் அனுமதி எடுத்தாலும், 18 வயது வரை அவர் தனியே ஓட முடியாது. அருகில் வாகன அனுமதி பத்திரம் உள்ள ஒருவர் இருக்க வேண்டும்.- குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
அந்த “நானா”, கனடா என்ற படியால்…. உங்களது படமும், அவரின் கமெராவில் இருக்கலாம். 🤣- இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி
இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி. டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக, இலங்கை தனது தேயிலைக்கான சர்வதேச சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி சில்வா எச்சரித்துள்ளார். சூறாவளி காரணமாக சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தேயிலைத் தேவையை ஈடுசெய்வதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இலங்கையின் விநியோகம் குறையும் பட்சத்தில், சர்வதேச கொள்வனவாளர்கள் ஏனைய நாடுகளை (இந்தியா, கென்யா போன்றவை) நாடும் அபாயம் உள்ளது. கடந்த 15-20 ஆண்டுகளில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியாளராக இலங்கை இருந்தபோதிலும், தற்போது அந்த சந்தைகளை ஓரளவு இழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். சவால்கள் நிலவினாலும், இலங்கை தொடர்ந்தும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்து வருகின்றது. இவற்றில் ரஷ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளன. 2024 ஆம் ஆண்டில் 245.7 மில்லியன் கிலோவாக இருந்த ஏற்றுமதிஇ 2025 இல் 257.44 மில்லியன் கிலோவாக (11.65 மில்லியன் கிலோ உயர்வு) அதிகரித்துள்ளது. சீன சந்தை இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உருவெடுத்து வருவதாக லுஷாந்த டி சில்வா தெரிவித்தார். சீனா ஒரு மிகப்பெரிய சந்தை. அங்குள்ள 1.4 பில்லியன் மக்களில் வெறும் 5 வீத பங்கினை நாம் பெற்றுக்கொண்டாலும், அது இலங்கைத் தேயிலைத் துறைக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என அவர் விளக்கினார். https://athavannews.com/2026/1463915- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
என்ன செய்வது….? சிங்களவர் போல் தன் இனத்தை நேசிக்கும்… தலைவர்கள் இல்லாத, சபிக்கப்பட்ட இனமாக தமிழ் இனம் உள்ளமை பெரும் சோகம். இருந்த ஒரு தலைவனையும், போராட்டத்தையும் காட்டிக் கொடுத்தே அழித்து விட்டது… அதே இனத்தில் இருந்து வந்த கோடாலி 🪓 காம்புகள் எனப்படும் ஒட்டுக் குழுக்கள் கூட்டம்.- கருத்து படங்கள்
- மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே
மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே. மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மற்றும் அது தொடர்பான அமைச்சின் நிலைப்பாட்டை கடற்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார். மீன்பிடி பெருவலை என்பது இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் நீண்டகாலமாகப் பிணைந்துள்ள ஒரு தொழில் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் கடல் வளங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் எனத் தெரிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களால், மீன்பிடி பெருவலைத் தொழிலில் டிராக்டர்கள் மற்றும் வின்ச்சுகளை (Winches) பயன்படுத்துவதற்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட அனுமதியே தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அந்தத் தற்காலிக அனுமதியை நிரந்தரமாக்கக் கோரியே மீனவர்கள் போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டார். குறிப்பாக, இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும்போது அது கடலின் அடிப்பகுதியைச் சுரண்டிச் செல்லும் ‘பாட்டம் ட்ராலிங்’ (Bottom Trawling) போன்ற பாதிப்புகளை உருவாக்குவதாகவும், இதனால் பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்க வாழ்விடங்கள் முற்றாக அழிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார். மேலும், கடற்கரை ஓரமாக டிராக்டர்கள் இயக்கப்படுவதால் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் சேதமடைவதோடு, கடற்கரையின் இயற்கை மணல் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகச் சுற்றாடல் அமைப்புகள் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் எச்சரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், வரும் 27ஆம் தேதி வரை இது குறித்து அமைச்சு எந்தவொரு இறுதி முடிவையும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கடந்த கால அமைச்சர்கள் மீனவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டிய பிரதி அமைச்சர், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த அறிவியல் பூர்வமற்ற முடிவுகளின் விளைவுகளையே இன்று மீனவர்கள் அனுபவித்து வருவதாகவும் சாடினார். கடலையும் கடற்கரைச் சூழலையும் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காக மீன் வளத்தை உறுதிப்படுத்துவதே தமது இலக்கு என்றும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் ஒரு நிலையான தீர்வைக் காணத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ரத்னகமகே மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1463777- பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது
பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது. பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாரான சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றிவளைப்பின் போது, கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்து வகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதானவர் முன்னாள் வைத்திய அதிகாரி எனவும், அவர் ஒரு கருக்கலைப்புக்காக 45,000 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணத்தை அறவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதைத் தொடர்ந்து, குறித்த வைத்தியரின் உதவியாளர் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைதைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு தொகையையும் வழங்குவதாகக் கூறி, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். https://athavannews.com/2026/1463760- சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குடிநீர் போத்தல்கள்இபவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம். தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு, விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாகஇ இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள் என அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் விமர்சித்துள்ளார். விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கு விசிலுக்குத் தடை விதிப்பது என்பதுஇ மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2026/1463787- குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது! கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் கனடாவின் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது. அத்துடன், டொராண்டோ காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். அதனால், தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் தெரியாத உதவிக்குறிப்புகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது. https://athavannews.com/2026/1463740- அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை! ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேகலாவின் கல்விப் பயணம் ஈழத்தின் பெருமைமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர், பின்னர் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மாதிரியாக்கத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் கால்பதிப்பது அரிதாக இருந்த காலத்தில் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது ஈழத் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள பெண் சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. அறிவியல் துறையில் ஈழத்து அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி வரும் கலாநிதி மேகலா பாலமுரளி அவர்களுக்குத் தமிழ் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இவரது சாதனைகள் வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. HR Tamil News- 78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!
78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்! இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக் கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக் கொண்டாடியது. ஆனால் அதே நாளில்,கிளிநொச்சியில்,மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.அது சுதந்திர நாள் அல்ல கரிநாள் என்று பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்புகளும் இணைந்து அந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தின. அதே நாளில் பிற்பகல் யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில்,ஒரு கருத்தரங்கை சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஒழுங்குப்படுத்தியிருந்தது.அக்கருத்தரங்கின் தலைப்பு “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”. சிங்கள மக்கள் சுதந்திர நாள் என்று கொண்டாடுவதை ஏன் தமிழ் மக்கள் கரி நாள் என்று அழைக்கிறார்கள்? தமிழ் மக்கள் ஏன் அதனை சுதந்திர தினமாக கருதவில்லை? அதைவிட முக்கியமாக,அது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அதன் மெய்யான பொருளில் சுதந்திர தினம் தானா? இல்லை. அண்மையில் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தது. பன்னாட்டு நாணய நிதியம் அல்லது உலக வங்கி ஓர் அரசாங்கத்தைப் பாராட்டுகிறது என்று சொன்னால் அதன் பொருள் என்ன? அந்த உலகளாவிய நிதி அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்படிவாக அந்த நாடு செயல்படுகிறது என்று பொருள்.அவ்வாறு பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்ப்படியும் ஒரு நாடு பொருளாதார அர்த்தத்தில் தன்னை ஒரு சுதந்திரமான நாடு என்று அழைத்துக் கொள்ள முடியாது.இது முதலாவது. இரண்டாவது,ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்,இந்த நாட்டின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99ஆண்டு கால குத்தகைக்கு வாங்கிவிட்டது.அதுபோலவே கொழும்பு துறைமுகத்திற்கு அருகே சீனா ஒரு துறைமுகப் பட்டினத்தைக் கட்டி வருகிறது. இந்த பிராந்தியம் இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காணப்படுவது.அவ்வாறு இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் ஒரு தீவில், இங்கிருந்து கிட்டத்தட்ட 400 கடல் மைல் தொலைவில் உள்ள மற்றொரு வெளிப் பிராந்தியப் பேரரசு ஆகிய சீனா பலமாக காலூன்றி விட்டது. இந்தியா அதனைச் சகித்துக் கொள்ளுமா? இல்லை. இந்தியாவும் தன் பிடியை இங்கு எப்படிப் பலப்படுத்தலாம் என்றுதான் சிந்திக்கும். யாழ்ப்பாணத்தின் தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை இந்தியா சீனாவிடமிருந்து தன் வசப்படுத்திக் கொண்டு விட்டது. கச்சதீவையும் அம்பாந்தோட்டையைப்போல லீசிங்கில் கேட்டால் என்ன என்ற ஓர் உரையாடல் இந்திய உயர் மட்டத்தில் உண்டு என்று தெரிகிறது. தவிர மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே ஒரு பாலத்தை கட்டுவதும் இந்தியாவின் விருப்பம் என்று தெரிகிறது. இவை இதனை காட்டுகின்றன? இந்தச் சிறிய தீவு இரண்டு பேரரசுகளின் இழிவிசைகளுக்குள் சிக்கியிருக்கிறது என்பதைத்தான்.அதாவது கலைத்துவமாகச் சொன்னால் இச்சிறிய தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பம். இந்த அப்பத்துக்குள் வாழும் ஓர் இனம் தன்னை மட்டும் இறமையும் சுதந்திரமும் உள்ளதாக எப்படிக் கருதிக் கொள்ளலாம்? இது இரண்டாவது. மூன்றாவதாக,1948இல் இருந்து இன்றுவரையிலுமான 78ஆண்டுகால பகுதிக்குள் சரி அரை வாசிக்கும் கூடுதலான காலகட்டம் அதாவது 46 ஆண்டுகள் இலங்கைத் தீவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கூறுவது போல, காலனித்துவ ஆட்சிக்குப் பின் 1971 இலிருந்து இன்றுவரையிலும் இலங்கைத் தீவு அசாதாரண சட்டங்களால்தான் ஆட்சி செய்யப்படுகிறது. இவ்வாறு அசாதாரண சட்டங்களே சாதாரண சட்டங்கள் போல நடைமுறையில் உள்ள ஒரு சிறிய தீவு தன்னை சுதந்திரமான தீவு என்று அழைத்துக் கொள்ளலாமா? இல்லை. சாதாரண சட்டங்களின் கீழ் இந்த நாட்டை ஆள முடியவில்லை என்பது இந்த நாடு அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் உள்ளது என்பதைக் காட்டுகிறது. அந்த அசாதாரணச் சூழல் எவ்வாறு உருவாகியது? சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள்,மலையக மக்கள் ஆகிய நான்கு மக்கள் கூட்டங்களும் கௌரவமான விதத்தில், பொருத்தமான விதத்தில் இந்தச் சிறிய தீவைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பதால்தான் நாட்டில் பல தசாப்த காலமாக அசாதாரண நிலை நிலவுகிறது. சிங்களத் தலைவர்கள் கூறுவார்கள்,நாட்டில் ஜனநாயகம் உண்டு என்று. ஆனால் ஜனநாயகம் என்பது வாக்களிப்பு உரிமை மட்டுமல்ல.அதைவிட ஆழமான பொருளில், தீர்மானம் எடுக்கும் அதிகாரமும்தான். சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 22 ஆசனங்களைத்தான் இதுவரை பெற்றிருக்கிறார்கள். அப்படியென்றால் எப்படி தீர்மானத்தில் பங்கெடுப்பது?இதுதான் பிரச்சினையே. இவ்வாறு சிங்கள மக்களைத் தவிர ஏனைய சிறிய மக்கள் கூட்டங்கள் அரசியல் தீர்மானங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாதவர்களாகக் காணப்படும் ஒரு தீவு தன்னை இறமையுள்ளது என்றும் சுதந்திரமானது என்றும் அழைத்துக் கொள்ளலாமா? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக, தங்களுக்கு அரசியல் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என்று கேட்டுத்தான் கடந்த 78 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். அவர்களை நசுக்குவதற்குத்தான் நாடு அசாதாரண சட்டங்களின் கீழ் தொடர்ச்சியாக ஆளப்பட்டு வருகிறது. எனவே தமிழ் மக்களின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சிங்கள மக்களும் நிம்மதியாக இருக்கமுடியாது;முஸ்லிம் மக்களும் நிம்மதியாக இருக்க முடியாது;மலையக மக்களும் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதுதான் கடந்த 78 ஆண்டுகால அனுபவம் ஆகும். அதிலும் குறிப்பாக கடந்த 78 ஆண்டுகளில் இலங்கைத் தீவில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வெளிநாட்டுப் படைகள் தரையிறங்கியுள்ளன. முதலாவது சந்தர்ப்பம் ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம். 1971 இல். இரண்டாவது சந்தர்ப்பம், 1987இல் வடமராட்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கையின் போது இந்தியா தனது விமானங்களை அனுப்பி உணவுப் பொதிகளை தமிழ்ப் பகுதிகளுக்குள் போட்டது.அங்கேயே இலங்கையின் இறைமை மீறப்பட்டு விட்டது. சுதந்திரம் சோதனைக்கு உள்ளாகி விட்டது. அடுத்தது 2004 ஆம் ஆண்டு நோர்வையின் சமாதான முயற்சிகள்.இந்த முயற்சிகளின் போதும் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்புக் குழு ஒன்று நாட்டுக்குள் இறங்கியது.அதுவும் படைப் பரிமாணத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்புத் தான். இவ்வாறு வெளிநாட்டுப் படைகள் அல்லது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள் அல்லது ஐநாவின் சிறப்புத் தூதுவர்கள் நாட்டுக்குள் வருகிறார்கள் என்று சொன்னால் இந்த நாடு முழு அளவுக்கு சுதந்திரமாக உள்ளது என்று எப்படிக் கூறலாம்? திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலுமாக பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொழுதே விவகாரம் நாட்டுக்கு வெளியே போய்விட்டது.அதை இலங்கைக்குள் தீர்க்க முடியவில்லை.இது பன்னாட்டுத் தலையீட்டைக் காட்டுகிறது.இவ்வாறு பன்னாட்டு சமூகம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும்போது அந்த நாடு எப்படித் தன்னை சுதந்திரமான நாடு என்று கூறலாம்? ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உலகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியிருப்பதை சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதைவிடக் குறிப்பாக,யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாகப் போற்றப்படுகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கக் கண்டத்துக்குப் போக முடியாது. போரை முன்னெடுத்த முக்கிய தளபதிகள் அமெரிக்கக் கண்டத்துக்கு அல்லது ஐரோப்பாவின் சில நாடுகளுக்குப் போக முடியாது.அப்படியென்றால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததன் மூலம் இந்த நாடு உறுதிப்படுத்திக் கொண்ட, பாதுகாத்துக் கொண்ட சுதந்திரத்தின் பொருள் என்ன? எனவே கடந்த 78 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் படம் என்ன? சிங்கள மக்களும் சுதந்திரமாக இல்லை; தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் சுதந்திரமாக இல்லை. இலங்கைத் தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பம். இங்கே தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் இல்லை, முஸ்லிம் மக்களுக்கும் இல்லை, மலையக மக்களுக்கும் இல்லை. https://athavannews.com/2026/1463708- கருத்து படங்கள்
- தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்
மக்களால்... நிராகரிக்கப் பட்ட, "பின் கதவு" சுமந்திரனுக்கு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்... என்ன அலுவல் ❓ நாடாளுமன்றத்துக்குள்... "காலடி" எடுத்து வைக்க வேண்டாம் என்று தானே.. தமிழ் மக்கள் இவரை, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். இதற்குப் பின்பும்... "நாலுகால் பிராணி" மாதிரி, நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு... நாடாளுமன்றத்துக்குள் போக... வெட்கம், ரோசம், மானம் எதுவுமே இல்லையா? 🤓 சுத்துமாத்து சுமந்திரனுக்கு.. தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவியை, மத்திய குழு வழங்கவே இல்லை. வைத்தியர் சத்தியமூர்த்தியின் பதவியை அடாத்தாக எடுத்து... "பதில் செயலாளர்" என்று ஆரம்பத்தில் சுத்துமாத்து விட்டு, இப்போ... தமிழரசு கட்சியின் செயலாளர் என்று, தனக்குத்தானே "லேபிள்" ஒட்டிக் கொண்டு திரியும், இந்தக் குழப்பவாதிக்கு... தமிழ் மக்கள், விரைவில் பாடம் படிப்பிப்பார்கள். இந்த மனிதன் செய்யும்... "நரக" வேலைகளால், தமிழ் மக்களின் முக்கியமான பல விடயங்கள் மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருப்பது... இந்தப் "பைத்தியக்காரனுக்கு" இன்னும் விளங்கவில்லையா.- டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.
டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை. டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். TikTok மீதான விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் போதைப்பொருளைப் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக எல்லையற்ற ஸ்க்ரோல் (Infinite Scroll) , தானாக இயங்கும் காணொளிகள் (Autoplay), புஷ் அறிவிப்புகள் (Push Notifications), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை (Algorithms), இவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறும் செயல் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தோமஸ் ரெக்னியர் (Thomas Regnier) மேற்கோள் காட்டினார். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக TikTok உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதமானோர் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணிநேரம் வரை இந்தச் செயலியில் செலவிடுகின்றனர். “TikTok தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen) தெரிவித்துள்ளார். இதேவேளை, விதிகளை மீறும் பட்சத்தில், TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance) இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் அச்சுறுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்துள்ள TikTok செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் இந்த ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1463654- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
தமிழ் அரசியல்வாதிகள் எப்பதான்... தமது வேலைகளை ஒழுங்காக செய்திருக்கின்றார்கள். எல்லாம்.... "அணில் ஏற விட்ட நாய்" மாதிரி, "போன பஸ்சுக்கு, கை காட்டுகின்ற" ஆட்கள் தானே.- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
"வல்லவனுக்கு வல்லவன்" எப்ஸ்டீன். 😜 "முற்பகல் செய்யின்... பிற் பகல் விளையும்." 😂 ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣 கருத்தோவியம்... வேறை லெவல்.- கருத்து படங்கள்
- பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், இரு பொலிஸார் இடையில் கத்திக்குத்து.
பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், இரு பொலிஸார் இடையில் கத்திக்குத்து. பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளதாகவும், காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு , கத்திகுத்தினை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1463602 - 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.