Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு! கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த ‘ஈ-கேட்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். https://athavannews.com/category/sri-lanka
  2. சங்கிலிய மன்னனின் மந்திரிமனை... சென்ற வருடம் கவனிப்பாரற்று இடிந்து விழுந்து விட்டது. அதனை காப்பாற்ற எந்த அரசியல்வாதியும் அக்கறை செலுத்தவில்லை. இப்ப... கோட்டையை ஆய்வு செய்கிறார்களாம். தேர்தல் வருகிறது என்றால்.... சுத்து மாத்து அரசியல்வாதிகள் போடும் வேடங்கள் அநேகம். முதலில்... உங்கள், தமிழரசு கட்சி, இடிந்து விழுந்து கொண்டு இருக்கின்றது. அதை காப்பாற்றுகின்ற வழியை பாருங்கள்.
  3. விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு! தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பவாரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தரையிறங்கும் முயற்சியின் போது பாராமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக நான்கு முக்கியமான பொதுக் கூட்டங்களில் பவார் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் பின்னர் குறித்த விமானம் தீக்கிரையானது. விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 66 வயதான அஜித் பவார், மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரின் மருமகன், மக்களவை எம்.பி. சுப்ரியா சுலேவின் உறவினர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1461908
  4. இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை! இங்கிலாந்தில் மிகக் கடுமையான வறுமை கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக ஜோசப் ரவுண்ட்ரீ அறக்கட்டளை எச்சரிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 14.2 மில்லியன் மக்கள் வறுமையில் வாடும் நிலையில், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு குழந்தைகள் நலனுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதிலும், ஒட்டுமொத்த வறுமை விகிதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதால், ஏனைய எளிய மக்கள் சமூகப் பாதுகாப்பின்றி தவிப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த நெருக்கடியைக் கையாளப் போவதாக அரசாங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1461808
  5. சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர்.
  6. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது. பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1461687
  7. யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்! பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகாக யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சர்வதேச இராஜதந்திரிகள் நேற்றையதின்பம் (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் UNDP துணை வதிவிடப் பிரதிநிதி ஆகியோரே குறித்த கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதன்போது திறந்த மற்றும் சிந்தனைக்கான இடத்தை உருவாக்கல், பெண்களின் தலைமை பற்றிய உரையாடல், பொது அலுவலகங்களில் பெண்கள் நுழைவதற்கும் மற்றும் நிலைநிறுத்துவதற்கும் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பெண்களின் அரசியல் பங்கேற்பை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புக் கூட்டாண்மை மூலம் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1461683
  8. கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்துடன், 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கிய நிலையில் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1461737
  9. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1461768
  10. லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்! இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் . இதனிடையே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பெண், பின்னர் நினைவு திரும்பும்போது அந்த நபரையும் அவரிடமிருந்த தன் குழந்தையையும் காணவில்லை என்பதை புரிந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தன் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக, அப்பெண், பொலிசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், CCTV கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1461761
  11. என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂 சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣
  12. 2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு! உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாசாரம், இயற்கை மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை அழகியலோடு வெளிப்படுத்திய ‘ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர்’ போட்டிக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விருது பெற்ற புகைப்படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமன்றி, வலிமையான கதைகளைச் சொல்லும் சாட்சியங்களாக அமைந்துள்ளன. சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த அமெச்சூர் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 23 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், அசல் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெற்றியாளர்கள் அனைவரும் தங்களது கெமராவின் அசல் கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 16 சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு, புகைப்படக் கலைஞரின் பெயர் தெரியாத வண்ணம் இந்தத் தேர்வை மிகவும் நேர்மையாக நடத்தியுள்ளனர். இந்த விருதுபெற்ற புகைப்படங்கள் விரைவில் லண்டனில் உள்ள கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. https://athavannews.com/2026/1461615
  13. பெரிய கண்டுபிடிப்பு. ஓய்வூதியம் கொடுக்கும் போது… ஊழல் செய்யாமலா இருக்கிறார்கள்.
  14. சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy
  15. யாழில் இந்திய குடியரசு தினம்! இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. https://athavannews.com/2026/1461533
  16. பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2026/1461553
  17. இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா! இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது. புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை தாங்குவார். இந்த முக்கியமான நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய போர் நினைவுச்சின்னம் வரை நீண்டிருக்கும் கர்தவ்ய பாதை, விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகால பாரம்பரியம், நாட்டின் முன்னோடியில்லாத வளர்ச்சி முன்னேற்றம், வலுவான இராணுவ வலிமை, துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தரப்பு குடிமக்களின் தீவிர பங்கேற்பு ஆகியவற்றின் அசாதாரண கலவையைக் கொண்டிருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு வருகை தருவதோடு இது தொடங்கும்அங்கு அவர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். அதன் பிறகு, பிரதமர் மற்றும் பிற பிரமுகர்கள் அணிவகுப்பைக் காண கர்தவ்ய பாதையில் உள்ள மரியாதை மேடைக்குச் செல்வார்கள். https://athavannews.com/2026/1461463
  18. பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid ! பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த டபுள் கோவிட் குறித்து வைத்தியர்கள் தெரிவித்ததாவது, இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, முதியோர்கள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள, உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலையை தவிர்க்கலாம் என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், கூட்டம் அதிகமான இடங்களை தவிர்த்தல் (சமூக இடைவெளி) போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் வைத்தியசாலைகள் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதார அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. Athavan Newsபிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிற
  19. பதவி வெறி பிடித்து திரியும் சுத்துமாத்து சுமந்திரனுக்கு, தான் ஏதோ… எம். ஜி. ஆர். என்ற நினைப்பு. 😁 தங்களுக்கு பின்னால் திரியும் ஒரு சில அல்லக்கைகளைப் பார்த்து, தங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று முதல் அமைச்சர் கனவில் திரிகிறார். 😡 பிச்சைக்காரனுக்கு…. “செக்குருட்டி” வேலை வேணுமாம். 😂 த்தூ…. என்று காறித் துப்பி 💩, மீண்டும் 👡 செருப்படி 🩴 கொடுக்க, தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்கள். 🤣
  20. ஆசை, தோசை, அப்பளம், வடை…. 😁 😂 🤣 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன்…. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.” இது… சுத்துமாத்து சுமந்திரனுக்காகவே எழுதிய பாடல். 😂 பைத்தியக்காரன் கதைப்பதை எல்லாம், சீரியசாக எடுக்கக் கூடாது. 🤣 இவர், அனுர அரசில், பிரதம மந்திரி பதவிக்கும் ஆசைப் பட்ட ஆள். 😁 அதுதான்…. சென்ற தேர்தலில், கட்டின கோவணத்தையும் உருவி விட்டு… வீட்டில் குந்த வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.