Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தண்டவாளம்… பழசாக இருக்கின்ற படியால், 60’ம் கலியாண சோடிகளாக இருக்கும். 😂
  2. நிழலி, நான் பகிடிக்கு சொன்ன முத்த விசயத்தை… நீங்கள் உடனே நம்பியதை பார்க்க சரியான அப்பாவியாக இருப்பீர்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 🤣
  3. தாய்லாந்தில் கண்டு பிடிக்கப் பட்ட 100 மீற்றர் உயரமானதும்.. 800,000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரத்தின் தொல்பொருள் மிகுதி. Fossil trees that have come close to today's tallest redwood heights have been found in northern Thailand. The longest of the petrified log measures 72.2 meters (237 feet), suggesting the original tree towered more than 100 meters (330 feet) in a humid tropical forest about 800,000 years ago. Ancient Sighting Mystery
  4. வீடு இடிந்தாலும் சைக்கிள் இருக்க எதுக்கு கவலை? வட கிழக்கு மக்களின் ஒரே தெரிவு சைக்கிளாக இருக்கட்டும் தேசியம் சுயநிர்ணயம் என்று பயணிக்கும் தடுமாறாத ஒரே தலைமை …… Prashanthan Navaratnam 😁 😂 🤣
  5. இன்று, 13´ம் திருத்த சட்டத்தைப் பற்றிய கருத்தோவியங்கள்.
  6. சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்ட மரணம் என கண்டு பிடிக்க 2 மாதங்கள் எடுத்துள்ளதா?
  7. அந்த ஜேர்மன் காதலர்கள்.... ஒருமுறை வேறொரு வீட்டில்.. இரவு தங்கியிருந்த போது, திடீரென்று மின்சாரம் நின்று விட்டதாம். 😮 வீட்டில் உள்ள ஒருவரும் பதட்டப் படாமல், ஒவ்வொரு இடத்திலும் ஆயத்தப் படுத்தி வைத்திருந்த எண்ணை 🪔 விளக்குகளை ஏற்றிவிட்டு... தமக்கு தலையில் மாட்டக் கூடிய, மின்கல விளக்கும் தந்து விட்டு, மின்சார பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) இயங்க வைக்க, எண்ணை விட ஆயத்தமான போது.. தாங்கள் தடுத்து, இந்த எண்ணையை... நீங்கள் வேறு ஏதாவது தேவைக்கு பயன் படுத்துங்கள் என்று கூறியதை கேட்டு, அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார். 😎 அந்த இருட்டுக்குள் தாங்கள் வெளியே வந்து, அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்து வானத்தை பார்த்து ரசித்ததும் இனிய அனுபவம் என்றார். 😂 அடுத்த நாளும்... மின்சாரம் இல்லாததால், அவர்கள் விறகு அடுப்பில் சமைத்ததை.. ஆரம்பம் முதல் இறுதி வரை அதிசயத்துடன் பார்த்து ரசித்ததாக குறிப்பிட்டு, அவர்கள் சமைத்துத் தந்த வாழைப்பூ கறியின் சுவை... இன்றும் மறக்க முடியாதுள்ளதாம். வாழைப்பூ என்று, ஒன்று... உள்ளதென்றும், அதில் கறியும் வைக்கலாம் என்று, அறிந்து கொண்டநாள் அதுவாம். 😋 அந்த வேளை எடுத்த படங்களையும் எனக்கு காட்டினார். 😂 ஜேர்மனியில் இருக்கும் வரை... விறகு அடுப்பில் சமைப்பதைப் பற்றி கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் பார்த்த போது.... எதிர் பார்த்ததை விட புது அனுபவமாக இருந்ததாம். 🙂
  8. வாசித்த கருத்து தெரிவித்தமைக்கு... நன்றி புங்கையூரான். 🙏 ஏன்... இப்போ அதிகம் எழுதுவதில்லை. உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் வாசிப்பதில் நானும் ஒருவன். 🙂
  9. குமாரசாமி அண்ணை... தமிழ் சிறிக்கு கிடைக்க இருந்த... சாராயப் போத்திலோ, வறுத்த கசுக்கொட்டையோ... அநியமாக கைநழுவி போய் விட்டது. நான் காலையில் அறை திறப்பை பாரம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂 இங்கு வந்து இறங்கி, கால் சட்டை "பொக்கற்றை" தொட்டுப் பார்த்தால்.. அதற்குள்... தெரப்பி செய்யும் இடத்திலுள்ள அலுமாரி திறப்பு உள்ளது. 😮 திரும்பிப் போகவும் தூரம். அதை என்ன செய்வது என்று... தொலைபேசியில் கேட்க, தபாலில் அனுப்பச் சொன்னார்கள். பிறகென்ன... 4 € 85 சென்ற் கட்டி, பதிவுத் தபாலில் அனுப்பி விட்டேன். 🙂
  10. பாராட்டுகளுக்கு, நன்றி நிலாமதி அக்கா. 25 வயது பெடியனின்... பார்வை, ஓர் வளர்ந்த ஆளின் பார்வை போல் விசாலமாக உள்ளது ஆச்சரியம்தான். 🙂 எனக்கு ஈஸ்ட்மென் கலரில் பதிவு போடாட்டில், சாப்பிட்டது செமிக்காத மாதிரி ஒரு பீலிங் வந்திடும். 😂 ஆவலுடன் எதிர் பாருங்கள்... அடுத்த பதிவு, புத்தம் புதிய... ஈஸ்ட்மென் கலரில் வர இருக்கின்றது. 🤣
  11. இன்று பெடியன், சொன்னது… நாளை மாலை, தனது நண்பி தன்னை பார்க்க வருவதாகவும், வரும் போது… எனக்கு இலங்கையில் வாங்கிய சில பொருட்களை 🎁 அன்பளிப்பாக கொண்டு வருகிறாரம் என்றான். அதை கேட்டு… எனக்கு விசர் பிடிச்சிட்டுது. 🤔 (அடேய்… மொக்கு பெடியா…, என்று “மைண்ட் வாய்சில்” திட்டிக் கொண்டு) 😂 நான் நாளைக்கு காலை 8 மணிக்கு துண்டு வெட்டிக் கொண்டு போய் விடுவேன் என்றேன். அதை கேட்டு அவனுக்கும் கவலையாக போய் விட்டது.🥲 அந்தப் பிள்ளை… ஒரு நாள் முந்தி, அதாவது இன்று வந்திருந்தால்… அவவையும், செமையாக ஒரு பேட்டி எடுத்திருக்கலாம்…. ஹ்ம்ம் நழுவி விட்டது. 🙂 அவர்கள் நயினாதீவுக்கு போகும் போது… எடுத்த காணொளியில், வள்ளத்தின் கூரையில் அந்தப் பெண் குந்தி இருந்ததை பற்றி விலாவாரியாக கேட்டிருக்கலாம். 😂
  12. பாராட்டுக்களுக்கு… நன்றி நிழலி. 🙂 நீங்கள் கேட்ட… அந்த, 💋 முத்த விசயத்தை பெடியனிடம் கேட்க…. அவர்கள், தாங்கள் 👩‍❤️‍👨 கலியாணம் 💘கட்டினால் பிறகுதான் 👄 முத்தம் 🫦கொடுப்பது… என்ற கொள்கையை தீவிரமாக கடைப் பிடிப்பதால்.. இன்னும் ஒரு 😘 முத்தம் கூட கொடுக்கவில்லையாம் என்கிறான்.😜 😍 நீங்கள் இதை நம்பாவிட்டாலும், இதுதான் நிஜம். 🤣🤪
  13. கந்தையா அண்ணை… “துயர் பகிர்வோம்” பகுதியில் அந்த திரி உள்ளது. 🙂
  14. நீங்கள் கேட்ட கேள்வியை, இன்று காலை பெடியனிடம் கேட்ட போது… அவன் சிறிதும் யோசிக்காமல், படாரென்று கூறிய மூன்று காரணங்களை கேட்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது. ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கூட இலங்கையில் வசிப்பாராம், ஆனால்… நிரந்தரமாக வசிக்க ஜேர்மனிதான் தனது சிறந்த தெரிவு என்றான். 1) இலங்கையில்… உறவுகள், நட்புகள், கை நிறைய சம்பளம் இருந்தாலும், தன்னுடைய முதுமை காலத்தில்… அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பு இல்லையாம். 2) மருந்து தட்டுப்பாட்டை நேரில் பார்த்து அனுபவித்து இருக்கின்றான். இவன் அங்கு கூடுதலாக உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் குடும்பங்களின் வீடுகளில்தான் தங்கி உள்ளான். ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த முதியவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாம், அவர்கள் அந்த நகரத்தில் உள்ள எந்த மருந்துக் கடையிலும் அதற்குரிய மருந்து இல்லை. இவனுடைய நண்பி ஜேர்மனியில் உள்ள வைத்தியசாலையில் அவசரகால மருத்துவ சேவைப் பகுதியில் வேலை செய்யும் நர்ஸ் என்ற படியால் இவர்கள் கொண்டு சென்ற முதலுதவி மருத்துவ பைக்குள், சிறுநீரக தொற்றுக்கான மருந்தும் இருந்துள்ளது. அவர்கள் கொடுத்த நான்கு குளிசைகளில் அந்த முதியவரின் நோய் குணமாகி விட்டதாம். முதலில் அவர்கள் மருந்து இல்லாமல் அவர்கள் கஸ்ரப் பட்டதையும், மருந்து கொடுத்து குணமாகியதன் பின் அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியும்… அவர்களை சிந்திக்கத் தூண்டியுள்ளது. தாங்கள் இங்கு வாங்கிக் கொண்டு போன மருத்துவ பொதியின் விலை 100 € தானாம். அது அங்கு ஒருவரின் நோயை குணப்படுத்த உதவியது மகிழ்ச்சியாக இருந்ததாம். 3) முக்கியமானது அங்கு உள்ள அரசியல் பாதுகாப்பற்ற தன்மை. அரசியல்வாதிகள்… நாட்டை சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு விற்று விட்டார்களாம். இனி விற்பதற்கு அங்கு ஒன்றும் இல்லையாம். அப்படி உள்ள நாட்டில் எப்படி நிரந்தரமாக வசிப்பது என்று கேட்கிறான். 🙂 ### அவனது பதிலை பார்த்து உங்களது கருத்தை, அறிய ஆவல். ### 😎
  15. பாராட்டுகளுக்கு… நன்றி நொச்சி. 🙂 ஊக்கப் படுத்தியமைக்கு… நன்றி முதல்வன். 🙂
  16. சுவியர்… மெய்தீண்டாக் காதல் பாடல் அருமை. இந்தப் பாடலில் வரும் நாயகனும், நாயககியும் யார் என்று ஆவல். 😁
  17. ஆம் வாசி, நானும் குறிப்பிட்ட சில இடங்களின் தண்ணீர், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு… மேலதிக சுவையை கொடுக்கும் என்று சொன்னேன். தண்ணீரின் வகிபாகம், முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்துடன்… இலங்கையில் உள்ள அன்னாசிப்பழம் போன்ற சில பழங்களை இங்கு கொண்டு வந்தால்… அங்குள்ள வாசனையும், சுவையும் பெரிதாக இங்கு இருப்பதில்லை என்பதை அனுபவ பூர்வமாக கண்டிருக்கின்றேன். 🙂
  18. கோசான்… உண்மையாக சொல்கிறீர்களா, அல்லது பகிடி விடுகிறீர்களா. 😁 எதுக்கும் எழுத்தாளர் மதனின் இணைப்புகள் ஒன்றிரண்டை தரவும். 🙂 எனக்கும் ஒப்பிட்டுப் பார்க்க, ஆசை இருக்கும் தானே… 🤣 நீங்கள் கேட்ட கேள்வி… பெடியனின், அடிமடியில் கை வைக்கும்… பொறுத்த கேள்வியாக உள்ளது. 😂 எனக்கும், என்ன பதில் சொல்லப் போகிறான் என்று… அறிய ஆவலாக உள்ளது. நாளைக்கு, அவனிடம் கேட்டு பதில் சொல்கின்றேன். 😁
  19. நுணாவிலான்…. பெடியன், இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள, தீயணைப்பு படைப் பிரிவில் வேலை செய்கின்றான். சிலவேளை அங்கு பெற்ற பயிற்சி, திட்டமிடல், ஒழுங்கு முறை போன்றவை… அவனது சுற்றுலாவையும் சரியாக திட்டமிட உதவி இருக்கலாம் என எண்ணுகின்றேன். அவன் கூறிய கொசுறு செய்தி ஒன்று… 1972’ம் ஆண்டு ஜேர்மனியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்த போது… இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப் பட்ட நிகழ்வின் பின், இன்று வரை… இஸ்ரேலில் இருந்து வரும் எந்த விமானம் என்றாலும் விமான நிலையத்தில் உள்ள பொதுமக்கள் பாவிக்கும் சில வீதிகள் மூடப்பட்டு, இரண்டு இராணுவ கவச வாகனங்களின் பாதுகாப்புடன் தரை இறங்கிய பின்னரே… வீதிகள் திறக்கப் படுமாம்.
  20. நன்றி ஏராளன். மீண்டும் பெற்றோலுக்கு தட்டுப்பாடா? ”றணில் கோ ஹோம்” ஆரம்பிக்கப் போகிறார்களே. 😂
  21. க்கும்… யாருக்கு…. யாரிடம் இருந்து பாதுகாப்பு. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.