Everything posted by தமிழ் சிறி
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ஸ்ரீலங்கா காவல் துறையிலோ, இராணுவத்திலோ, கடற்படையிலோ... குற்றம் செய்யாத யோக்கியன் யாராவது இருக்கிறார்களா. உயர் அதிகாரியிலிருந்து சிப்பாய் வரை....அத்தனையும் பயங்கர கிரிமினல் கள்ளர்.
-
கருத்து படங்கள்
- முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு! முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத்தை வரைவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. குறித்த சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இடைநிறுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டு காலத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட, இந்த சட்ட சீர்திருத்தத்தை எளிதாக்குவதற்கு இரண்டு வரைவு சட்டமூலங்கள் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441387- 20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!
20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா! இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 20% வரி குறைப்பினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது ஒரு வெற்றியாகும். மேலும் நமது ஏற்றுமதியின் பிராந்திய போட்டித்தன்மையை மேலும் பராமரிக்க இது உதவும். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக (திரைக்கு முன்னும் பின்னும்) கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு சிறிய நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அந்த நிவாரணத்தை வழங்கிய அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, இலங்கையில் வர்த்தகத் தடைகளைத் தளர்த்தி, இலங்கையை உலகத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் இன்னும் பல சாதனைகளை அடைய முடியும் என்பதை நான் வலியுறுத்துகிறேன் – என்றார். https://athavannews.com/2025/1441420- 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தவறு செய்தவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களைத் தண்டிக்க தற்போதைய அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1441403- மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!
மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை! மஹவ – அநுராதபுரம் ரயில் பதையில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவுவதற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தவணைத் தொகை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் (770 மில்லியன் ரூபா). இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது. இது இந்திய பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தண்டவாளங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில் செல்லும் வகையில் வடக்குப் பதை இதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, ரயில் சேவைகளின் அதிர்வெண் மற்றும் செயல்திறனையும் அதிகரிக்கும். இலங்கையில் பல ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. இலங்கையின் ரயில்வே துறைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். https://athavannews.com/2025/1441417- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு. பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் நீடிக்கவோஇ விலகவோ நிர்வாகிகளிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதனால் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது” 3 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்; 1. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொஉமீகுழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று முதல் தொஉமீகுழு தனது உறவை முறித்துக்கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொஉமீகுழு இடம்பெறாது. 2.ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 3.எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது தற்போது இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.’ இவ்வாறு அவர் கூறினார். பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விலகியது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441362- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
அவன்: என்ன பாட்டு பாடுறாய். அவள்: அது பாட்டு இல்லை, இருமல் சத்தம். அவன்: ஓ... இருமலா, நான் பாட்டு என நினைத்தேன்.- சிரிக்கலாம் வாங்க
- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
1.3 மில்லியனை விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை! இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை 1,341,953 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்களின் எண்ணிக்கை 274,919 ஆகும். மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வழங்கிய தகவல்களின்படி, ஜூலை மாதத்தில் கடந்த 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். https://athavannews.com/2025/1441310- கருத்து படங்கள்
- இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது!
இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது! இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகுவர். இதற்கு மேலதிகமாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலக் கட்டத்தில் இலஞ்சம் கோரல் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 இலஞ்சம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் CIABOC தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 29, வரை மொத்தம் 122,913 நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு கூறியுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில், அதிகாரிகள் 928,787 கிலோ கிராம் ஹெராயின், 1,396,709 கிலோ கிராம் ஐஸ், 11,192,823 கிலோ கிராம் கஞ்சா, 27,836 கிலோ கிராம் கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், ஜூலை 29 அன்று இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் முப்படையினரால் நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 6,695 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 10,128 வாகனங்கள் மற்றும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. சோதனையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 948 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்தக் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலதிமாக இந்த நடவடிக்கைகளின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. https://athavannews.com/2025/1441291- சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அறையின் கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அண்மையில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும், சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். https://athavannews.com/2025/1441288- ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய சிவில்விமானப் போக்குவரத்து ஆணையகம் (DGCA) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் திகதி, குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ‘ஏர் இந்தியா போயிங் 787-8’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் அதன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ‘ரன்’ நிலைமையில் இருந்து தானாகவே ‘கட் ஆப்’ நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த DGCA, வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 51 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக: போயிங் 787 மற்றும் 777 வகை விமானங்களை இயக்கும் விமானிகள் போதுமான பயிற்சி இல்லாமல் செயல்பட்டு வருவது, போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுவது, சவாலான விமான நிலையங்களை அணுகும்போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதது, என்பவை குறிப்பிடத்தக்கவை. மேலும், அவசரகால உபகரணங்கள் சரிபார்க்கப்படாமலும், இயந்திரப் பாகங்கள் நேரத்தில் மாற்றப்படாமலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிழைகள் உள்ளதாகவும் ஏற்கனவே ஏர் இந்தியாவுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிலளிக்கப்படுமென என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441215- விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம் விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்
விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம். அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris) எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்த சோதனை, நாட்டின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது சோதனை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓர்பிடல் ரொக்கெட் சோதனை முயற்சி, அவுஸ்திரேலியாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441284- செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்! செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441266- எனது மரணச்சடங்கு.🖤
சில செத்த வீடுகளில்... குறிப்பிட்ட சிலர், பழைய பிரச்சினைகளை கிளறி ரணகளம் ஆக்க என்றே வருவார்கள். அவர்களில் தொழிலே இதுதான். அதில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் இருப்பார்கள். அந்த வாய் சண்டையை பார்க்க சுவராசியமாக இருக்கும். 😂- காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
கைதடிக்காரர் @Kandiah57 அடிக்கடி களத்துக்கு வருவதை கண்டுள்ளேன். ஆனால்... கருத்து எழுதாமல் இருக்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை. தினமும் களத்திற்கு வந்து எல்லோருடனும் இனிமையாக பழகும் ஒருவர், திடீரென்று வராமல் இருக்கும் போது... மனதிற்கு சங்கடமாக உள்ளது. நீங்கள் சொல்வது போல்... சிலவேளை கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போலுள்ளது.- எனது மரணச்சடங்கு.🖤
2020 களில்... தெற்கு கானாவின் கிரேட்டர் அக்ரா பிராந்தியத்தில் உள்ள இசைக்குழு... "அப்பா இறந்துவிட்டார்" என்ற பொருள்பட இசை நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் மற்றும் கானாவிற்கு வெளியேயும் நிகழ்ச்சிகளை நடத்தி உலக மக்களின் பெரும் அபிமானத்தை பெற்றார்கள். இன்று கூட அவர்களின் மீம்ஸ்கள்... முடிவே இல்லாமல், இணையத்தில் பிரபலமாக போய்க் கொண்டு உள்ளது. ஆக... மரணத்தைக் கூட, ஏதோ ஒரு வகையில் மக்கள் ரசிக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
வட மாகாணத்தில் இருக்கும்... ஊர்களிலேயே, திடுக்கிடும் பல வகையான செய்திகளை கொடுப்பதில் சாவகச்சேரியை அடிக்க ஏலாது. 😂 அந்த மண்ணில் ஏதோ... விஷயம் இருக்கு. 🤣Important Information
By using this site, you agree to our Terms of Use.
- முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.