Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. செல்வச் சந்நிதி கோவிலில்... கள்ள மோட்டார் சைக்கிளுக்கு, பூசை செய்துள்ளார்.
  2. குருநாகல் பேருந்து நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்பிய ஏழு பேர் அதிரடி கைது. 🙂 ஸ்ரீலங்கா.... சிங்கப்பூர் ஆகிற நாள் வெகு தொலைவில் இல்லை. பீடா, வெத்திலை, பாக்கு கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். எங்கடை அப்பு, ஆச்சிமார் பாவம்... 😂
  3. கள்ள மோட்டார் சைக்கிளுக்கு... கோவிலில் பூசையும் நடக்கின்றது. காணொளி: 👉 https://www.facebook.com/myjaffna/videos/1410267050249344 👈 களவு எடுத்த நகையை விற்று வாங்கிய புது மோட்டார் சைக்கிளுக்கு கோவிலில் வைத்து பூசை நடக்கின்றது. 😂 மோட்டார் சைக்கிளில் வெள்ளோட்டம் ஓடுபவர்தான்... அந்த, மச்சம் உள்ள காதலன். 🤣 ஐயர் மோட்டார் சைக்கிள் ரயரில் தேசிக்காய் வைத்து நசித்தும்... அந்த மோட்டார் சைக்கிள், ரோட்டில் ஓடாமல்... பொலிஸ் ஸ்ரேசனிலை நிற்க வேண்டி வந்திட்டுது. 😜
  4. அப்ப அந்த 500 க்கு கொஞ்ச உடுப்புகள் மட்டும்தான் வாங்கலாம். அதற்குப் பிறகு வாற செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால்... மேற்கொண்டு குழந்தை பெறுவதைப் பற்றி சீனர்கள் அக்கறை செலுத்துவார்கள். 😂
  5. உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு! உலகளாவிய பயண தளமான ‘Big 7 Travel’ தொகுத்த உலகின் 50 சிறந்த தீவுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, இலங்கை உலகின் மிக அழகான தீவாக முடிசூட்டப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் பிரெஞ்சு பாலினேசியாவின் மோரியா, ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவுகளை முந்தி முதலிடத்துக்கு வந்துள்ளது. Big 7 Travel தகவலின்படி, இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தீவு தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுறுசுறுப்பான உள்ளூர் சுற்றுலா பகுதிகளுக்காக இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறை அதன் நிலையான மீட்சி மற்றும் மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகளாவிய அங்கீகாரம் மேலும் அதனை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1441145
  6. அமெரிக்காவை தாக்கத் தொடங்கியுள்ள சுனாமி அலைகள்! ரஷ்யாவின் கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி அலைகள் அமெரிக்காவின் ஹவாயை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஹவாய் அருகே 6 அடி (1.8 மீ) உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கம்சட்காவில் 3-4 மீ (10 முதல் 13 அடி) உயரத்திலும், ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 60 செ.மீ (2 அடி) உயரத்திலும், அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில் அலை மட்டத்திலிருந்து 1.4 அடி (30 செ.மீ க்கும் குறைவான) உயரத்திலும் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று புதன்கிழமை (30) அதிகாலை ரஷ்யாவின் தூர கிழக்கைத் தாக்கியது. 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தை உலுக்கி, வடக்கு பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது. 1952 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடுமையான பின்னதிர்வுகள் ஏற்பட்டன. நில அதிர்வு நிபுணர்கள் வரும் வாரங்களில் 7.5 ரிக்டர் அளவு வரை மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். வடக்கு குரில்ஸ்கைத் தாக்கிய சுனாமி அலை, குடியேற்றத்தின் சில பகுதிகளையும் உள்ளூர் மீன்பிடி வசதியையும் வெள்ளத்தில் மூழ்கடித்தது. கம்சட்கா, குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரை சுனாமி எச்சரிக்கைகள் ஒலித்தன. https://athavannews.com/2025/1441188
  7. பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்! பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை பொரளை, மயான சந்தியில் கனரக வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பதும் நேற்றைய சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். https://athavannews.com/2025/1441081 #################### ######################### பொரளை கோர விபத்து – கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி! பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது. பொரளை கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், மீதமுள்ள ஐந்து பேர் ஆண்கள் என்றும் மருத்துவர் கூறினார். இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் லொறி ஒன்று, கனத்தை சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான கிரேன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கிரேன் பிரேக்குகள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1440915
  8. யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் ! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 09 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 34 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 33 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 99 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441104
  9. இறந்தவரின் சகோதரி பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலம் ஒரே சொதப்பலாக உள்ளதால், சீக்கிரம் அம்பிட்டு விட்டார். 😂 🤣 இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார்க்களாம், தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற வேளை... அவர்கள் உள்ளே வந்து தன்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்று விட்டார்களாம், பின்னர் அதிகாலை 3 மணியளவில் தான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்த வேளை தம்பி சடலமாக காணப்பட்டாராம், மாரடைப்பால் இறந்தவரை... கொலை என்று ஏன் சொன்னார்? 😂 தனது நகையை... இவரே என் ஒளித்து வைத்தார்...? என்று, துப்புத் துலக்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கும் போலை இருக்கு. 🤣
  10. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்! பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக சீனா முழுவதும் பல மாகாணங்கள் சில வகையான கொடுப்பனவுகளை முன்னோட்டமாக செயல்படுத்தியுள்ளன. 2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் பகுதி மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சீனாவில் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மார்ச் மாதத்தில், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை குடியிருப்பாளர்களுக்கு வழங்கத் தொடங்கியது. பெய்ஜிங்கின் வடகிழக்கில் உள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 500 யுவான் வழங்குகிறது. சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது, உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு – இந்தியாவிற்குப் பின்னர்- வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. சீனாவில் திருமண விகிதங்களும் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன. குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிக செலவு மற்றும் தொழில் கவலைகள் காரணமாக இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதைத் தள்ளிப் போடுகின்றனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை கொள்கையை ஒழித்த பின்னரும், நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441086
  11. நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை! மாலைதீவிலிருந்து நாட்டிற்கு வந்து இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் பிணை வழங்கியுள்ளார். நாமல் ராஜபக்ஷ திட்டமிட்ட விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக நேற்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. அப்போது நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். https://athavannews.com/2025/1441084
  12. 🔴யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த பெருந்திருவிழா - கொடியேற்றம் - 29.07.2025">யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த பெருந்திருவிழா - கொடியேற்றம் - 29.07.2025
  13. தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ! காரணம் இதுவா ! தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தாய்லாந்து கம்போடியா இடையிலான எல்லை மோதல். இந்த எல்லை மோதலுக்கு காரணமாக இருக்கும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரே விஹார் கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது அது தாய்லாந்து கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமாக மாறியது. இந்த சர்ச்சைக்குரிய கோவிலின் ஒரு சிறிய வரலாறு குறித்து பார்ப்போம். 11ஆம் நூற்றாண்டில் ப்ரே விஹார் கோவிலின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய கோவிலாக கட்டப்பட்டது என்று கோவில் வரலாறு கூறுகிறது. தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது. இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மத தலம். இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா. நீதிமன்ற அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன. பின்னர் இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தீர்ப்பு வழங்கியது . அன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில், 1904ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது. மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, கம்போடியாவின் எல்லைக்குள்ளேயே கோயில் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. ஆனால், இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை வரைபடத்தை ஏற்றிருந்தால், தவறான புரிதலில் அது நடந்திருக்கும் என்றும் தாய்லாந்து வாதிட்டது. ஆனால், தாய்லாந்து உண்மையில் வரைபடத்தை முன்னர் ஏற்றுக்கொண்டதை கண்டறிந்த நீதிமன்றம், கோயில் கம்போடிய பகுதிக்குள் அமைந்துள்ளது என தீர்ப்பளித்தது. அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்கு பிறகு கோவிலில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பி தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. இந்நிலையில்தான் எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே தாய்லாந்து-கம்போடியா இடையில் மோதல் ஆரம்பமானது. தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் ‘போராக உருவெடுக்கக்கூடும்’ என தாய்லாந்து எச்சரித்துள்ளது. இந்த மோதலால் இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நேற்றைய தினம் மலேசிய பிரதமர் தலைமையில் கோலாலம்பூரில் இரு நாட்டு பிரதமர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441056
  14. இந்த யுவதி.... திருடிய நகையின் மதிப்பு 48 லட்சம் ரூபாய் என்றும், இவர் தனது சொந்த வீட்டில் திருடவில்லை என்றும், பிறிதொரு வீட்டில் வேலை செய்வதாகவும்... அந்த வீட்டிலேயே நகையை ஆட்டையை போட்டதாகவும் முகநூலில் செய்தி உலாவுகின்றது. அந்த வீட்டு உரிமையாளர்கள் நகைகளை காணவில்லை என்றவுடன்... சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து... அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது. நம்ம யாழ்ப்பாணம்
  15. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்? இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவர்களின் நாட்டின் சாரதி அனுமதி பத்திரம் உள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் நாட்டுக்கு வருபவர்களும் இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும்பிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ள வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதேநேரம், தேவையான சாரதி அனுதிப் பத்திரம் அல்லது சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இலங்கையில் வாகனங்களை செலுத்துவதை சுற்றுலா பயணிகள் தவிரக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தவுடன் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு வசதியாக இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வசதிகளை அறிமுகப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1441072
  16. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்! நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது. இதேவேளை, ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு நேற்றையதினம் வைரவர் உற்சவம் நடைபெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வைரவர் வெளி வீதியுலா வந்ததுடன் , வெளிவீதி பிரகாரத்தில் சேவல் கொடிகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441007
  17. அந்த ரிக் ரொக் ஆசாமிக்கு.... இவவுடன் இன்னும், எத்தனை காதலிகள் இருக்கின்றார்கள் என்று உறுதியாக தெரியாமல் எப்படி கலியாணம் கட்டிக் கொடுப்பது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.