Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்கவேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து! உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேற்றையதினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இதன்போது இங்கு நடைபெறும் அகழ்வு பணிகளில் குழந்தைகள் , வயது குறைந்தவர்களின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் எலும்பு கூடுகள் அசாதாரணமாக சூழலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன எனவும் இவை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மனித புதைகுழிகள் கொக்குத்தொடுவாய் , மன்னார் , மாத்தளை , போன்று தெற்கிலும் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் , அவை தொடர்பில் ஆய்வு செய்ய கூடிய பொறிமுறைகள் இலங்கையில் இன்னமும் இல்லாத நிலைமைகள் காணப்படுகின்றன எனவே சர்வதேச நிபுணத்துவ உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகளை முறையாக பாதுகாப்பதற்கு கூட சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதாக கூறுகிறது. உண்மைகளை மறைத்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை கண்டறிய சர்வதேச நிபுணர்களை நாட்டுக்கு அழைத்து , அவர்களிடம் புதைகுழி விவகாரங்களை கையளித்து , எவ்வித தலையீடுகளும் இன்றி செயற்பட்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1441020
  2. இரு உயர்மட்ட கைதுகள் தொடர்பான அப்டேட்! குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய தனித்தனி விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் உயர் அரசு அதிகாரிகளான இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் காணாமல் போன விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜூலை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதற்கிடையில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெல் பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவரை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://athavannews.com/2025/1441036
  3. தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் – துமிந்த திசாநாயக்க விடுவிப்பு! தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால், துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டார். ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில், கடந்த மே 23 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். பின்னர், பிணை மனு பரிசீலிக்கப்பட்டு, கடந்த 14 ஆம் திகதி நிபந்தனைகளின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441033
  4. ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார். பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்று ரயில் சாரதிகள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (28) ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1441000
  5. நாடு கடத்தப்பட்ட நிலையில் வெலிகம சஹான் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு (28) நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இவர், பாணந்துறை மற்றும் களுத்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் “பத்தே சுரங்க” என்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் முக்கிய சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் ஒரு ஒப்பந்தக் கொலையாளி என்றும் குறிப்பிடப்படுகிறது. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1440990
  6. யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 23 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 08 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் (28) 31 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 01 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 96 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 2 நாட்களில் 08 சான்று பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையான கால பகுதியில் 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440973
  7. கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தவிட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றையதினம் மாணவியின் தாயார் மற்றும் தந்தை ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் இன்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலையாகியிருந்தார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, மாணவியின் பாடசாலை வரவு தொடர்பான ஆவணம் மற்றும் மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிபதற்காக பொலிஸ் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440970
  8. மாலைதீவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை முக்கியத்துவம் – ஜனாதிபதி அநுர மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஜனாதிபதி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அழைப்பிற்கும் அமோக வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் அதிமேதகு ஜனாதிபதி முகமத் முய்சு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீண்ட கால உறவு உள்ளது. இந்து சமுத்திரத்தில் உள்ள நமது இரு நாடுகளும் பழங்கால கடல்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் பொதுவான வரலாறு ஆகியவற்றுடன் நமது தொடர்புகளால் வளம் பெற்றுள்ளன. சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும் எங்கள் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். எப்போதும் இலங்கைக்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது மக்களின் பொது நலனுக்காக நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி முய்சுவும் நானும் இனங்கண்டோம். மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். கல்வித் துறையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே வலுவான பங்காளித்துவம் உள்ளது. பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இத்துறையில் மேலும் ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி முய்சுவும் நானும் கலந்துரையாடினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தினோம். மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்று நான் தெரிவிக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இலங்கை தற்போது உருவாக்கி வருகின்ற அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் அடைவதற்கான பொறிமுறை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி முயிசுவிடம் தெரிவித்தேன். இலங்கையின் நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றியும் அவருக்கு விளக்கினேன். அவை முதலீட்டாளர் நேய மற்றும் உற்பத்தி – விசேட தொழில்துறை வலயங்களாக உள்ளதோடு, மாலைதீவு முதலீட்டாளர்கள் அந்த வலயங்களில் முதலீடு செய்யலாம். மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்/செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். நமது இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை ஒரு முக்கிய பொருளாதார காரணியாகும். இந்த சூழலில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். விசேடமாக விமானத் தொடர்புகளை மேம்படுத்துவதுடன், விமான சேவைகள் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடியோம். விவசாயத்துறை, இளைஞர்களை வலுவூட்டுதல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடுகளாக, மீன்பிடி மற்றும் கடல்சார் துறையின் பெரும் ஆற்றலை நாங்கள் இனங்கண்டோம். நவீன மற்றும் நிலைபேறான மீன்பிடி நடைமுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடினோம். இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவு கடல் எல்லை வழியாக அரபிக் கடலுக்குள் தடையின்றிச் செல்வதற்கு போக்குவரத்து வழிகளை நிறுவுவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கையும் மாலைதீவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளன. இலங்கை மற்றும் முழு இலங்கை சமூகத்தையும் நிலைபேறான நிலைக்கு உயர்த்துவதற்காக சமூக அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் தார்மீக அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய கூறுகளின் ஊடாக செயற்படும் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தை எனது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுபற்றி நான் ஜனாதிபதி முய்சுவுக்கு விளக்கினேன். திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான ‘Maldives Clean Environment’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஜனாதிபதி முயிசுவைப் பாராட்டினேன். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் அதிகரித்தல் ஆகிய சவாலை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய பொதுவான முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் இனங்கண்டோம். இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது அதன் மின்சாரத்தில் 70% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கில், நமது இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த நான் பரிந்துரைத்தேன். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வலுவான கலாசார உறவுகள் உள்ளன. எங்கள் மொழிகள் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளதுடன், சிங்களம் மற்றும் திவெஹி மொழி ஆகிய இரண்டும் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும். மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புத் துறையில் இலங்கைக்கு மாலைதீவு வழங்கும் ஆதரவை நான் பாராட்டியதுடன், மாலைதீவுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று நான் உறுதி அளித்தேன். நமது இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பை தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதிமேதகு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு இரு தரப்பினருக்கும் வசதியான நாளில் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன். எனது விஜயத்தின் போது நான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றுவதுடன் மாலைதீவில் வாழும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளேன். அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே, எனக்கும் எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்பது உறுதி – என்று கூறியுள்ளார். https://athavannews.com/2025/1440987
  9. இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்! இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ஆயுத கொள்முதலில் இந்திய பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவில் இருந்து இந்திய விமானப்படைக்கு போர் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் இந்திய விமானப்படையுடனான ஆரம்ப ஒப்பந்தம் 35 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த குறித்த ஒப்பந்தம் அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440896
  10. நிமிஷா பிரியாவின் ஏமன் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதா? 2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (29) நிராகரித்துள்ளது. அதன்படி, நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சில நபர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தவறானவை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஏமன் தலைநகர் சனாவில் ஹவுத்தி போராளிகள் இரத்து செய்துள்ளதாக கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் திங்கட்கிழமை (28) அறிவித்தது. இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் பெறப்படவில்லை என்று அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கண்ட தகவல் வந்துள்ளது. நிமிஷாவின் மரணதண்டனை முதலில் ஜூலை 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கிராண்ட் முப்தி முஸ்லியார் ஏமன் அதிகாரிகளிடம் கருணை கோரி நேரடியாக முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு நாள் முன்பு நிறுத்தப்பட்டது. குற்றப் பின்னணி எனன்? கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015 இல் அரசு செவிலியர் பணியை இராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஜூலை 16 ஆம் திகதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது. சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு 8.6 கோடி இந்திய ரூபா குருதிப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மத தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441017
  11. நியூயோர்க்கை உலுக்கிய துப்பாக்கி சூடு; பொலிஸ் அதிகாரி உட்பட நால்வர் உயிரிழப்பு! பல நிதி நிறுவனங்களின் அலுவலகங்களைக் கொண்ட நியோர்க் நகரில் அமைந்துள்ள மிட் டவுன் மன்ஹாட்டன் வானளாவிய கட்டிடத்திற்குள் திங்கட்கிழமை (28) துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு குறித்த விவரங்களை பொலிஸார் உடனடியாக வெளியிடவில்லை. ஆனால், இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நான்கு பேரில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும், சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்படும் ஏனைய மூன்று பேரும் பொதுமக்கள் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், நியூயார்க் நகர காவல் துறை தனது சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இறந்து விட்டதாகக் கூறியது. நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், துப்பாக்கிச் சூட்டினால் பலர் காயமடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயோர்க் போஸ்ட் செய்திச் சேவையானது, குண்டு துளைக்காத ஆடையை அணிந்திருந்த ஒரு துப்பாக்கிதாரி, AR-ரக துப்பாக்கியை ஏந்தியபடி, பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், நியூயார்க் நகர காவல் துறை அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், பின்னர் தன்னைத்தானே அவர் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டது. மேலும், ஆறு பேர் காயமடைந்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்திச் சேவை குறிப்பிட்டது. அதேநேரம், சிஎன்என் செய்திச் சேவை, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தவிர, பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. சிஎன்என், நியூயோர்க் போஸ்ட் மற்றும் என்பிசி செய்திச் சேவை உள்ளிட்ட பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள், சந்தேக நபர் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது நபர் என தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறியுள்ளன. துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் துப்பாக்கியுடன் கட்டிடத்திற்குள் நடந்து செல்வதைக் காட்டும் புகைப்படத்தை, பல முக்கிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. சந்தேக நபரின் பின்னணி குறித்த முதற்கட்ட விசாரணையில் குறிப்பிடத்தக்க குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி அறிக்கை மேலும் கூறியது. நியோர்க் நகரின் 345 பார்க் அவென்யூவில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் பிளாக்ஸ்டோன் மற்றும் பன்னாட்டு தொழில்முறை சேவை வலையமைப்பான கேபிஎம்ஜி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. அதனுடன் அமெரிக்க தேசிய கால்பந்து லீக் தலைமையகமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440994
  12. தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்தம் நிச்சயமற்ற நிலையில்! எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திங்களன்று (28) இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை கம்போடியா “வேண்டுமென்றே” மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இது ஒரு நிலையற்ற தொடக்கமாக அமைந்துள்ளது. தாய்லாந்து இராணுவம் நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியதாகக் கூறுகிறது. ஆனால் இன்று காலை வரை “பல இடங்களில்” கம்போடியத் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வந்தாக அது கூறுகிறது. அதேநேரம், நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே “எந்த ஆயுத மோதல்களும் இல்லை” என்று கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சு AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த உள்ளூர் தளபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் ஒரு கம்போடிய சிப்பாய் மோதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நூற்றாண்டு பழமையான சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக பதற்றங்கள் கடந்த வாரம் அதிகரித்தன. கடந்த வாரம் ஐந்து தாய் வீரர்கள் கண்ணிவெடி வெடிப்பில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவை முழு அளவிலான மோதலாக மாறியது. தாய்லாந்து தனது எல்லையின் சில பகுதிகளை மூடி, கம்போடிய தூதரை வெளியேற்றி, புனோம் பென்னிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்தது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், கம்போடியா தாய்லாந்தின் மீது பல ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாட்களில் இரு தரப்பினரிலும் அதிகமான பொதுமக்கள் இறந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். போர் நிறுத்தத்திற்கான காலக்கெடுவான திங்கட்கிழமை (28) நள்ளிரவு வரை இரு படைகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் தொடர்ந்தன. தாய்லாந்து கம்போடிய நிலைகள் மீது மேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1441023
  13. ரிக்ரொக் காதலனுக்காக… சொந்த வீட்டில் களவு எடுத்த இந்தப் முட்டாள் பெட்டையை பெத்த தாய் தகப்பன் தான் பாவம்.
  14. கன நாள் ஒரு சம்பவமும் நடக்கவில்லையே, இவர்கள் திருந்தி விட்டார்கள் என நினைத்தேன். ஹ்ஹூம்…. திருந்த சந்தர்ப்பமே இல்லை.
  15. நான் யாழ்ப்பாணத்தில், நிற்கும் போது இறந்தால்.... காணொளியில் உள்ள மாதிரி.... பறை மேளம் அடித்து, பிரேத ஊர்வலம் வைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துளேன். 🙂 😜
  16. பிறக்கும் போதும் அழுகின்றாய். படம்: கவலை இல்லாத மனிதன் பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு இயற்றியவர்: கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம் பெரும்பேரின்பம் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
  17. முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது. முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹேர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரனைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || முன்னாள் க...முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைதுமுன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹேர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரனைகள...
  18. கம்போடியா - தாய்லாந்து போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் கோலாலம்பூரில் ஆரம்பமாகின! கம்போடிய பிரதமர் ஹுன் மானெட்டும் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் மலேசியாவில் நேருக்கு நேர் சந்தித்துப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர், தற்போதைய ஆசியான் தலைவரான மலேசியப் பிரதமர் இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதுடன்; சீனா, மற்றும் அமெரிக்கா சமாதான பேச்சுக்கான நேரடி ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. Vaanam.lk
  19. நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1440923
  20. புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமான குறித்த பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன வரலாற்றில் இணைகிறார். https://athavannews.com/2025/1440826
  21. ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு பயணம்! மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதனை முன்னிட்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் இத்தருணத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாக அமையும். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வணிக மன்றமொன்றில் உரையாற்றவும், வெளிநாட்டில் வாழும் இலங்கைச் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி திசாநாயக்கவின் இப்பயணத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளார்கள். https://athavannews.com/2025/1440835
  22. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு! அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன. இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து. மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது. ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இது ஆகஸ்ட் 1 முதல் செயல்படுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய 30% இறக்குமதி வரி விகிதத்தில் பாதியாகும். 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், சில பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத வரிகளுடன் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அதன் சந்தைகளைத் திறக்கும் என்றும் அவர் கூறினார். வான் டெர் லேயனும் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டியதுடன், இது இரு பங்காளிகளுக்கு இடையிலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறினார். ஏனெனில் அவை உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும், அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், வொஷிங்டனின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிராக ட்ரம்ப் வரிகளை விதித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து, அவர் இங்கிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் வரி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஸ்கொட்லாந்தன் தெற்கு அயர்ஷயரில் உள்ள டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்ப் மற்றும் வான் டெர் லேயன் இடையேயான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (27) ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் பின்னர் பேசிய ட்ரம்ப், அமெரிக்க இராணுவ உபகரணங்கள் உட்பட, வொஷிங்டனில் ஐரோப்பிய ஒன்றியம் தனது முதலீட்டை $600 பில்லியன் (£446 பில்லியன்) அதிகரிக்கும் என்றும், எரிசக்திக்காக $750 பில்லியன் செலவிடும் என்று கூறினார். அதேநேரம், அமெரிக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் அணு எரிபொருட்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் செய்யப்படும் அந்த முதலீடு, ரஷ்ய மின்சார ஆதாரங்களை ஐரோப்பியர்கள் நம்பியிருப்பதைக் குறைக்க உதவும் என்று வான் டெர் லேயன் கூறினார். https://athavannews.com/2025/1440840

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.