Everything posted by தமிழ் சிறி
-
ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!
- எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி
எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரிச்சலுகை வழங்கினால், அரசாங்கத்தினால் குறித்த கடனைச் செலுத்த முடியாது எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442800- அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்!
அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்! நாட்டில் நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளுகின்ற பேருந்துகள் மூலம் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்ளை குறைப்பதற்கு புதிய திட்டம் ஒன்று தயரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக தனியார் துறையின் தலையீட்டில் முதலாவது முன்னோட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னோடித் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று கதிர்காமம் டிப்போவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் போது பல நீண்ட தூர பேருந்துகளில் AI கெமராக்கள் பொருத்தப்பட்டன. பல நீண்ட தூர பேருந்துகளில் AI கமரா அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதுடன் பல டிப்போக்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அமைச்சர் நிலைமைகளை ஆராயந்துள்ளார். அதன்படி, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கெமரா அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், பேருந்து சாரதியின் நடத்தைகளை கண்காணிக்கவும், தேவைப்படும்போது எச்சரிக்கைகளை வழங்கவும் 40, AI கெமராக்கள் பேருந்துகளில் முதற்கட்மாக நிறுவப்படவுள்ளன. இந்த அமைப்பு மூலம் சாரதியின் சோர்வு, மயக்கம் அல்லது கண் மூடல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து விதிகள் மற்றும் ஆசனப்பட்டி பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் மூலம் சாரதிகளுக்கு சமிக்ஞைகளை வழங்கப்படும் என்றும் மற்றும் பேருந்தை கட்டுப்படுத்தவும் இந்த தொழில் நுட்பம் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1442838- டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!
டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி! போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைகளை வைக்க முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட டான்பாஸ், 2014 முதல் ரஷ்யாவால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் முழுவதையும், டொனெட்ஸ்கின் சுமார் 70% பகுதியையும் கொண்டுள்ளது. ஆனால் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, டான்பாஸை விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டத்தையும் உக்ரேன் நிராகரிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், ரஷ்ய படைகள் தங்கள் கோடைகால தாக்குதலைத் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன. கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய நேரத்தில் 10 கி.மீ (ஆறு மைல்கள்) தூரம் அவை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442823- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரன்... மைத்திரியின் கூட்டரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் போது மட்டும்... இராணுவத்துடன் தோழில் கை போட்டுக் கொண்டு, "டூயட்" பாடி திரிவாராம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்று, செருப்படி வாங்கி... வீட்டில் குந்தி இருக்கும் போது மட்டும், இராணுவம் கசக்குதாம். இந்தப் புத்தி முன்பு ஏன் வரவில்லை.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரன் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டு, தனது மூக்கை அறுத்துக் கொள்வதுதான் வழமை. அதில்... செல்வநாயகம் காலத்து அரதப் பழசான கடையடைப்பை தூசிதட்டி எடுத்து, இப்போ செய்ய முற்படுகின்றார். அதற்கு மக்களின் ஆதரவு இல்லை என்று இப்போதே தெரிந்து விட்டது. சுத்துமாத்து சுமந்திரன் புதிதாக சிந்தித்து, கீழ் வரும் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும். 1) தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தல். 2) சாகும் வரை உண்ணா விரதம். 3) பெற்றோல் ஊத்தி தீக்குளித்தல். போன்றவற்றை செய்தால்... மக்களின் அமோக ஆதரவு அவருக்கு நிச்சயம் உண்டு. 😂 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!
பிரதமர் பதவியில் மாற்றமில்லை! ஜனாதிபதியே பிரதமரைப் பாதுகாத்ததாக உதயகம்மன்பில விளக்கம். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது குறித்து உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது ” பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும். அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது. அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது. இதனை நாம் கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துக் கொண்டுள்ளார். ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது. தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும், அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்துள்ளனர். பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார். https://athavannews.com/2025/1442747- கருத்து படங்கள்
- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
ஆகஸ்ட் முதல் 10 நாட்களில் 77,482 சுற்றுலா பயணிகள் வருகை! 2025 ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 77,482 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் (SLTDA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 13,511 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது 17.4% ஆகும். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,691 பேரும், இத்தாலியிலிருந்து 6,036 பேரும், சீனாவிலிருந்து 5,659 பேரும், பிரான்சிலிருந்து 5,518 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்திற்கான அண்மையபுள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 292,633 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 140,068 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 116,895 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று SLTDA குறிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மொத்தம் 200,244 வெளிநாட்டினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது ஜூலை 2024 தரவுகளுடன் ஒப்பிடும்போது 6.6% அதிகரிப்பாகும். https://athavannews.com/2025/1442661- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
காற்றாலை மின்திட்ட விவகாரம்: மன்னாரில் பதற்றம். மன்னாரில் இரண்டாம் கட்டமாக, நேற்று நள்ளிரவு காற்றாலை மின் திட்டத்திற்கான, காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாகங்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நகர் பகுதிக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மன்னார் பஜார் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. குறிப்பாக காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாங்களை ஏற்றிவந்த வாகனங்களுக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் வாகனம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442633- செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம். யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு கடந்த 09ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மனி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேருதாஸ், புரட்சிகர் இளைஞர் முண்ணனியின் மாவட்ட செயலாளர் மலரவன், சி.பி.எம்.ரெட் ஸ்டாரின் மாவட்ட பொறுப்பாளர் இனியவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர். செம்மணி மனித புதைகுழியில் கடந்த 05ஆம் திகதி அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள், குழந்தைகள், உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442607- ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..!
ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..! பீகாரைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்து குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து, போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில் வடமாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் தினத்தன்று, ஆசிரியர் கானிடம் படித்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டியுள்ளனர். மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேவேளை ராக்கி குறித்து உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பேசிய ஆசிரியர் கான், தனது மணிக்கட்டில் 15,000-க்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் இதன் எடை காரணமான கையை கூட உயர்த்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1442513- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க மேலும் சில நாடுகள் பரிந்துரை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என மேலும் சில உலக நாடுகள் பரிந்துரை செய்து வருகின்றன. அதன்படி, புதிதாக, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்துள்ளன. முன்பதாக, பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா ஆகிய நாடுகள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்த நிலையில் தற்போது புதிய சில நாடுகளும் பரிந்துரைத்துள்ளது. எனினும், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடந்த போரை நிறுத்திய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442401- 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!
- கருத்து படங்கள்
- 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!
37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442186- 7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்!
7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மோடி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் குவாங்சௌ( Guangzhou) நகரத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் விஜயம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகளில் புதிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற கோரத்தனமான இராணுவ மோதல் இருநாட்டு உறவுகளை கடுமையாகப் பாதித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியில் சீன விஜயம் இந்திய -சீன உறவுகளை மீளாய்வு செய்யும் எனவும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும், மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், பிராந்திய நிலைமை தொடர்பான விவாதங்களுக்கு ஒரு புதிய திருப்பு முனையாக அமையும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எவ்வாறு இருப்பினும் மோடியின் சீன விஜயம் குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442200- கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு! கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கானா விமானப்படைக்கு சொந்தமான Z-9 வகை ஹெலிகொப்டர், அசாந்தி( Ashanti) மாகாணத்தின் ஆதான்சி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் அக்ராவிலிருந்து( Accra) ஒபுவாசி (Obuasi) நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றிய அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் எனக் கூறப்படும் நிலையில், ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், குறித்த ஹெலிகொப்டர் விபத்து இடம் பெறுவதற்கு முன்னர் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442204- தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாய் அமர்ந்து பேசினால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் ; பாராளுமன்றம் அலைய வேண்டியதில்லை - ரிஷாட் எம்.பி.
ரிஷாட் பதியுதீன் வீட்டில்… 18 வயதிற்கு உட்பட்ட மலையக தமிழ் சிறுமியை வேலைக்கு வைத்திருந்த காலங்களில், அவரின் மனைவியின் சகோதரனால் பாலியல் வன்புணர்வு தொடராக செய்யப் பட்டு, அந்தப் பெண்ணை எரித்துக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புகள் என்னவாயிற்று? 1) சிறுமியை வேலைக்கு எடுத்த குற்றம். 2) பாலியல் வன்கொடுமை குற்றம். 3) கொலை குற்றம் எல்லாம் செய்து விட்டு… இவர்கள் எப்படி வெளியில் நடமாட முடிகின்றது. தங்களின் முதுகில்… மூட்டை, மூட்டையாக அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவனுக்கு உபதேசம் செய்யும் நரகத்தின் முள்ளுகள் உள்ள நாடு இது.- தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .
“அக்குட்டியும் பிச்சுமணியும்” காணொளிகள்… தமிழர் மத்தியில் நிகழும் முக்கிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவை வடிவில் தயாரித்து வழங்குவார்கள். மிக நன்றாக இருக்கும். அண்மையில்…. சாவகச்சேரி காதலி, தனது காதலனுக்கு 19 பவுண் நகை களவெடுத்து விற்று, 12 லட்சம் ரூபாய்க்கு புது மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு காணொளி தயாரித்து இருந்தார்கள். பயங்கர பகிடியாக இருந்தது. அவர்களின்…. முக பாவனையும், காணொளியின் தரமும் சிறப்பாக இருக்கும்.- சிரிக்கலாம் வாங்க
- முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
காலையில் கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ, விளக்கமறியல் ஜெயிலில் வைக்கப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுவதை படங்களில் காணலாம்! Vaanam.lk- மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை!
மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை! மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ – 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஒன்றாக – கைவிடாத’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது. ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக சமூக சேவைகள் திணைக்களத்துக்கு இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ரூ.632 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பிள்ளைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தார். அத்துடன் பிள்ளைகளுடன் நேரில் உரையாடியும், குழு புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பை பகிர்ந்துகொண்டார். இதன்போது , மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் ஓவியமும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1442018- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பரீட்சையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கச் சொல்லும் கேள்வி, இப்படித்தான் இருக்கும் 😹😹 - எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.