Everything posted by தமிழ் சிறி
-
ஊருக்கு... "கொலிடே" போறேன்.
சுவியர், யாழ்ப்பாண பஸ் பிரயாணத்தின் போது நசி பட்டுப் போனாலும், அதுகும் பல ஆயிரம் மலரும் நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து விடும். அதில் பயணம் செய்யும் போது... வேலைக்குச் செல்லும் நடுத்தர வயதினர், வைத்தியசாலைக்கு செல்லும் வெளிப்புற நோயாளர்கள், பலதரப் பட்ட பாடசாலை மாணவர்கள்... அவர்களின் முகத்தில் தெரியும் கனவுகள் என்று ஆயிரம் கதை சொல்லும் முகங்களை தரிசிக்க முடியும். ஊருக்குச் செல்பவர்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்வதை முக்கிய நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும். 🙂
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
கொழும்பு - யாழ்ப்பாணம் பேரூந்துகளில் போகும் போது.. கூடுமானவரை தண்ணீரை குறைத்து அருந்தி பிரயாணம் செய்வது நல்லது. அதிக நீர் அருந்தினால்... அடிக்கடி ஒன்றுக்கு போக வேண்டி வரும். பேரூந்து சாரதி நிறுத்தும் சில மலசல கூடங்களுக்குப் போனால், இல்லாத வியாதிகளையும் வாங்கிக் கொண்டு வரவேண்டி வரலாம். காட்டுப் பக்கம் ஒதுங்கினால்... தவிச்ச முயல் அடிப்பதற்கு என்றே... பல கள்வர்கள் பதுங்கி இருப்பார்கள் போலுள்ளது. 😂
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
கட்டண கழிப்பிடத்தில்…. காசு கொடுத்து, சிறுநீர் கழிக்க மனமில்லாமல், காட்டுப் பக்கம் ஒதுங்கியவருக்கு.. ஐந்து பவுண் சங்கிலியை பறி கொடுக்க வேண்டி வந்து விட்டது. 😂 பிற்குறிப்பு: இலங்கையில் ஒரு பவுண் (270,000) இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய். 5 * 270,000 = 13,50000 பதின்மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் நட்டம். 🤔
-
ஊருக்கு... "கொலிடே" போறேன்.
என்னில் அவ்வளவு நம்பிக்கையை வைத்தமைக்கு நன்றி அல்வாயன். 🙏 நான் வாழும் நாட்டில் கூட… தேவையில்லாத ஆடம்பரங்களை செய்வதில்லை. இது @குமாரசாமி , @Paanch அண்ணை ஆகியோருக்கும் தெரியும்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனுக்கு வாக்குப் போட்டு, முதல் அமைச்சாராக்குகின்ற மக்கள் அங்கு இல்லை. ஏற்கெனவே சுத்துமாத்தின் அரசியலுக்கு… சென்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுரை எழுதியாகி விட்டது. இனி… சுமன் முக்குவதில் அர்த்தமில்லை. மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விட தமிழ் மக்களுக்கு விசரே. 😂 🤣
-
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
பாஞ்ச் அண்ணை, சம்பந்தன்... தமிழருக்கு செய்த அநியாயம் ஒன்று, இரண்டு என்றால் நினைவில் வைத்திருக்கலாம். இது, வாழ்க்கை முழுக்க நயவஞ்சக வேலை செய்து விட்டு செத்துப் போனால் .. எதை என்று நினைவில் வைத்திருப்பது.
-
ஊருக்கு... "கொலிடே" போறேன்.
இல்லை சாத்தான். நான் ஊருக்குப் போனால்... அங்குள்ள மக்களாகவே மாறி விடுவேன். சாரம், வேட்டி, பாட்டா செருப்பு, ஒரு மஞ்சள் பை... போன்றவை தான் எனது சீருடை. 😂
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
பசுமை மின்சாரம் = காற்றாலை மின்சாரம் ******************************************************* காற்றாலை மின்சாரத்தை பசுமை மின்சாரம் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனவும் அழைக்கின்றனர். ஒப்பீட்டு ரீதியில் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதிப்பு குறைந்த ஒரு துறையாகும் இது. ஆனாலும் இதிலும் ஒரு சில பாதிப்புக்கள் உண்டு. இருப்பினும் அந்த பாதிப்பு ஏனைய துறைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்போடு ஒப்பிடும் போது இந்த காற்றாலையால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை ஒரு பாதிப்பாக கருத முடியாது என்கின்றனர் சூழலியலாளர்கள். காற்றாலையால் பறவைகள் வனவிலங்களின் வாழ்விடங்களில் மாற்றம். ஒலி மாசுப்படுதல், சூழல் அமைப்பு தோற்றத்தில் மாற்றம் போன்றவற்றை குறிப்பிடலாம் அத்தோடு வலசைப் பறவைகளின் வழிதடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த பாதிப்புக்கள் எல்லாம் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவில் கர்நாடகாவில் நடந்த ஆய்வில் காற்றாலையால் பறவைகளுக்கு ஏற்பட்டபாதிப்பு 0.1 வீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது. நீர் மின்சாரம், அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற வழிகளில் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் காற்றாலை மின்சாரமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத துறையாகும். உலகில் அபிவிருத்தியில் உச்ச நிலைக்கு சென்ற சென்றுக்கொண்டிருக்கின்ற, அறிவியல்துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் எல்லாம் காற்றாலை மின்சார திட்டத்தையே அதிகம் ஊக்குவித்து வருகின்றன. இந்த திட்டத்தில் உலகில் சீனா முதல் இடத்திலும்,அமெரிக்க இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், தொடர்ந்து ஜேர்மன், ஸ்பெயின், இங்கிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா,பிறேசில் என நாடுகள் காணப்படுகின்றன. கடலோர காற்றாலை மின் உற்பத்தியில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி இப்போது உள்ளது போல ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து அடைந்து வந்தால் உலக வெப்ப மயமாதலை 1.5 பாகை செல்சியசாக குறைக்கலாம் எனவும் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ( விரிவான கட்டுரை ஒன்றில் சந்திப்போம்) Murukaiya Thamilselvan ##################### ######################## ###################### மன்னார் ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவை இடம்பெயர்வு பாதையாக (migratory bird flyway) இருப்பதால், இலங்கை வனவிலங்கு திணைக்களமும் BirdLife International மும் வெளியிட்ட ஆய்வுகளின்படி, திட்டம் நிறுவப்பட்ட பின்பு சில வலசைப் பறவைகளின் பாதைகள் மாறியுள்ளதாகவும், சிலவற்றின் இடம்பெயர்வு பழக்கங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊக்குவிப்பதோடு, அவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் வனவிலங்கு கண்காணிப்பு திட்டங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். மன்னார் திட்டத்திற்கான பரிந்துரைகளில் பறவைகள் அதிகம் பறக்கும் காலங்களில் (peak migration season) சில காற்றாலைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறை மற்றும் பறவைகளின் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெற வேண்டும் . மன்னார் போன்ற உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பசுமை சக்தி மற்றும் உயிரியல் பாதுகாப்பு இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, வெளிப்படையான திட்ட மேலாண்மை மட்டுமே மக்களின் நம்பிக்கையை உருவாக்கும். Kumanan Kana ·
-
மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது!
சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது! சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபாவை அவர் இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13) காலை புறக்கோட்டையில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1442930- புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய
புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்! புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை நேற்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442923- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
அம்பாறை தொகுதியில்.. சிங்களவன் பியசேன என்பனை தமிழரசு கட்சியில் போட்டியிட வைத்து... பாராளுமன்றம் அனுப்ப, அவன் ஓடிப் போய் மகிந்த கட்சியில் இணைந்து... சம்பந்தனுக்கு அல்வா கொடுத்த சம்பவமும் நடந்தது. இப்படி.... சம்பந்தனின் ராஜதந்திரம் எல்லாம் சாயம் வெளுத்த சம்பவங்கள் நிறைய உண்டு. சம்பந்தன், தமிழனை காட்டிக் கொடுத்து.... சாகும் மட்டும்... அரசாங்க மாளிகையில் சொகுசாக இருந்து, அனுபவித்துப் போனது தான், அரசியலில் செய்த சாதனை.- ஊருக்கு... "கொலிடே" போறேன்.
ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய் கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும் இல்லையோ வானாவது பிடிக்கணும் வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும் போகேக்க விமான நிலையத்திலும் போய் இறங்கி விமான நிலையத்திலும் போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும் படம் பிடித்து கட்டாயம் போடணும் சொல்லீட்டும் தான் நான் போனாலும் சப்பிரைஸ்சா தான் போறன் என்று சனத்திற்கு நல்லா படம் காட்டணும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா காற்சட்டை ஒன்றை கொழுவணும் கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும் தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும் கையில் ஒரு தண்ணிப் போத்தல் கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ் தலையில ஒரு தொப்பி கட்டாயம் முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ ஒரு காசுப்பையை தொங்க விடணும் கையில கொஞ்ச மோதிரம் கைச் சங்கிலி கழுத்தில வடம்போல சங்கிலிகள் கடைசிவரை பூட்டாத சேட் மேல் பட்டன் கையை அகட்டியபடி ஒரு நடை கையில கட்டுக்காசுக்கு வாங்கிய போன் காலில சேலில வாங்கின செருப்புகள் இடைக்கிடை என்ன வெக்கையப்பா இங்க மனுசர் வாழலாமோ என்றனும் இங்கிலீசிலையும் கொஞ்சம் கதைக்கணும் இடைக்கிடை வெளிநாட்டையும் பீத்தனும் கடை கடையா ஏறி இறங்கணும் காணாததை கண்டவன் போல கண்ணில் கண்டதையும் வாங்கி வைக்கணும் கண்டவைக்கு ஹலோ என்றனும் இங்க கடையில மலியப்போட்ட சாமான்களை கட்டிக்கொண்டுபோயவைக்கு குடுக்கணும் ரிச்சாவுக்கு இயக்கச்சியில் போகணும் உச்சா போறதை தவிர மிச்சமெல்லாம் மிச்சம் விடாமல் படம்பிடிச்சு போடணும் கச்சான் கடலை சாப்பிடணும் நல்லூர் கந்தசாமியாரையும் கட்டாயம் பார்க்கணும் அந்த றீயோவில ஐஸ்கிறீம் நக்கணும் அப்படியே நாலு கடற்கரை போகணும் அதிலும் மீன் சந்தைப்படம் கட்டாயாம் அப்படியே ஏலுமென்றால் சந்தையும் இங்க பாணும் பருப்பும் சாப்பிட்டாலும் அங்க போய் பீசா பர்கர் என்று நிக்கணும் ஊரில இருக்கேக்க போகாத கோயிலுக்கு உதுதான் எங்கட குலதெய்வம் என்று ஊரைக் கூட்டி பொங்கல் வைக்கணும் ஊரில் உள்ள கோயில் எல்லாம் போகணும் உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு நல்ல ஊர் ஆடு வெட்டி பாட்டி வைக்கணும் ஊத்தி நல்ல சாராயமும் வாக்கணும் வாக்கிற சாரயத்தில வந்தவன் எல்லாம் வாழ்த்தணும் பெரிய வள்ளலென்று எல்லாம் முடிய ஏக்கங்களோட மிளகாய் தூளும் அரிசி, வேற வகை மாக்களோடு கருவாடும் பனங்கட்டியும் மிச்ச சொச்ச சாமானும் கட்டிக்கொண்டு எச்சிலயாவது பூசி அழுகிறமாதிரி நடிச்சு அதையும் வீடியோ எடுத்துப் போட்டிட்டு அப்படியே அழுவார் மாதிரி வந்திடணும் வந்து போன கடனை கட்ட சரியாகீடும். 😂😂😂 உண்மை உரைகல்- கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
சில காலத்திற்கு முன்பு நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றில்... தமிழர்கள் பெரும்பான்மையாக வந்து, கிழக்கு மாகாண முதமைச்சராக தமிழர் ஒருவர் வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும்... அதனை ஒரு முஸ்லீமுக்கு கொடுத்த... கபோதி தான் சம்பந்தன். அதற்குப் பிறகு கிழக்கு தமிழர்களை சோனகன் அடக்கி ஒடுக்கியதெல்லாம் பெரும் சோகம். சோனகனுக்கு முதமைச்ச ஆசையை தூண்டி விட்டு... சம்பந்தன் கூத்துப் பார்த்ததால், இப்ப அவர்கள் தொடர்ந்தும் முதலமைச்சர் கனவில் மிதக்கின்றார்கள்.- “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம்
“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம். கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் பொதுச்செயலகத்தின் தலைவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவ}ஸ்வராவின் தலைமையில் இன்று காலை கோட்டை ரயில்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நிறுவன அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்களத்தி;ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர் ஆரம்ப நிகழ்வையடுத்து இன்று காலை 6.20 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடைந்த யாழ்தேவி ரயில் காலை 6.40க்கு “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான பயணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது. குறித்த ரயில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தினை சென்றடையவுள்ளது இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவஸ்வர “யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் சமூக மற்றும் நெறிமுறைகள் மற்றும் தேசியமட்டத்திலான அர்ப்பணிப்புக்கள் மற்றும் முயற்சிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்நோக்கமாகும்” https://athavannews.com/2025/1442868- புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்கான புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்! பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்காகவும் புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் 071-8598888 எனும் புதிய WhatsApp இலக்கம் இன்றிலிருந்து (13) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காகவும், வீடியோ மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரம் பயன்படுத்த முடியும். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ் இலக்கத்தினூடாக தங்களின் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442887- தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ள அவர் நேற்று 12காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றதாகவும் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொண்டைமானாறு செல்வச் சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் தந்தை மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதன்படி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1442905- காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
குறித்த பெண் இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. சுதி செய்யிற வேலை… விசர் பெட்டையை, எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. இவர் செய்த வேலைகளுக்கு, இந்தியாவிலும், இலங்கையிலும் தண்டனை கிடைக்கும். நல்லாய் அனுபவிக்கட்டும்.- செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை!
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை! செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 07ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் , நாளைய தினம்(14) நடைபெறும் வழக்கு விசாரணைகளின் போது உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1442859- கருத்து படங்கள்
- ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!
- எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி
எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரிச்சலுகை வழங்கினால், அரசாங்கத்தினால் குறித்த கடனைச் செலுத்த முடியாது எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442800 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.