Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்! தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440629
  2. சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂 சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி. தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி. மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும், பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் அரசியல் ஞான சூனியங்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣 முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂
  3. தமிழன் உயிர் என்றால்… எங்கும் வைத்து அடித்துக் கொல்லலாம் என்ற நிலைதான் உள்ளது. 😡
  4. குடும்பச் சண்டைக்கு எல்லாம் விளக்கமறியலில் வைத்தா விசாரிப்பார்கள். கிளிநொச்சி காவல் நிலையத்தில்…. அதுகும் மதியம் 12 மணிக்கு நடந்த கொலையை, கிளிநொச்சி பொலிசாருக்கு விசாரிக்க தகுதி இருக்கா? அப்படி விசாரித்தாலும் அவர்களிடம் இருந்து உண்மை வெளிவந்து விடுமா?
  5. இந்தியர்கள் அதிகம் செலவு செய்யாவிட்டாலும் சுற்றுலா செய்வதில் விருப்பம் உடையவர்கள். ஆனால்…. பாகிஸ்தான்காரர் சுத்துமாத்து வியாபார புத்தி உடையவர்கள். என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
  6. தமிழ்நாட்டின்... திருநெல்வேலி அல்வா, கீழக்கரை அல்வா, இருட்டுக்கடை அல்வா எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஸ்ரீலங்கா தொதல், மஸ்கற்ருடன் போட்டி போட முடியாது. உலகப்புகழ் பெற்றது என்றால் ஸ்ரீலங்கா தொதல்தான். 😋
  7. இங்கிலாந்து, ஜேர்மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும். இந்த இலவச விசா வழங்கும் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமா, அல்லது அதற்கு மேலுமா என்ற தகவல் கிடைத்தால் அறியத்தரவும். இனி என்ன ... அடுத்த ஹொலிடேக்கு, பெட்டியை கட்ட வேண்டியதுதான். 😂 தகவலுக்கு நன்றி ஏராளன்.
  8. எனக்குத்தான் இந்தப் பிரச்சினை இருக்கு என்று பயந்து கொண்டு இருந்தேன். இப்போ நீங்களும் இணைந்து கொண்டதில் சந்தோசம். 😜
  9. தடுப்புக் காவலில்... தூக்குப் போடும் அளவிற்கு எல்லாம் பொருட்கள் இருக்குமா. பொலிஸார்... அந்தத் தமிழ் கைதியை அடித்துக் கொன்று விட்டு, நாடகம் போடுகின்றார்கள் போலுள்ளது.
  10. ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா? இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்சுருக்க என்னை நினைத்து எனக்கே பெருமையா இருந்தது. சினிமாலலாம் அப்படியே கிராபிக்ஸ்ல 40-50 அடிக்கு உயர்வாங்களே அப்படி உயரமா தெரிஞ்சேன். நா ஊருக்கு கிளம்பறத நியாவகம் வைச்சு கிளம்ப முன்னாடி போன் வேற செஞ்சு நியாவகப்படுத்தினான். பேற நியாவகம் இல்ல அதெங்க நியாவகம் இருக்க போகுதுனு இங்கேந்து கிளம்பற முன்னயே நண்பர்கள்கிட்ட மெசேஜ் போட்டு வைச்சேன்...எங்க கிடைக்குமோ மறக்காம வாங்கி குடுத்துடுங்க இல்லனா இங்க என்ன ஒருத்தன் விடமாட்டான்னு. நினைத்தது மாதிரியே அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா நா சொன்னத நியாவகம் வைத்து நண்பர்கள் மறக்காம ஆளாளுக்கு வாங்கி தந்து குடுத்தப்ப ரொம்பவே ஆச்சரியமாருந்தது. ❤️ யாழ்பானம் ஏர்போர்ட் செக்கிங்ல கூட ஏதோனு பைய பிரிச்சு காட்ட சொல்ல தொதல் அல்வானு சொன்னதுமே சார் தொதல் அல்வாவாம் சார்னு சல்யூட் அடிக்காத குறையாக விட்டு விட்டனர். தொதல் அல்வா நம்மூர் ராமநாதபுரம் பக்கம் கீழக்கரை ஸ்பசலாம். இலங்கைலயும் ஸ்பெசல்....சும்மா சொல்லக்கூடாது அவளோ தரம்😋நிஜமா அவளோ சுவை.. திருநெல்வேலி அல்வால தேங்காய்ப்பால் ஊத்தின மாதியே இருந்தது அதோட சுவை😋 எனக்கு மட்டும் இல்லாம வீட்ல நான் தந்த நண்பர்கள்னு எல்லாருக்குமே அவளோ பிடிச்சுது.நல்லாருக்குனு இப்ப வரை சொல்லிட்டே இருக்காங்க. இப்ப என்னைய விட கேட்டத நியாவகம் வைச்சிருந்து மறக்காம வாங்கி தந்து அனுப்பிய அந்த நண்பர்கள் உயரமாக தெரிகின்றனர். படித்ததில் பிடித்தது.
  11. என்ன செய்யிறது... சின்னனிலை கரட் சாப்பிடச் சொன்னவை. 🥕 நான்தான்... அதை சாப்பிடாமல் விட்டதால் வந்த வினை. 😂
  12. போதைப் பொருள் கடத்திய இந்த கனடா பிரஜை... சிங்களம் அல்லது முஸ்லீம் போலுள்ளது. அதுதான்... அவரின் பெயரை இருட்டடிப்பு செய்துள்ளார்கள். தமிழன் என்றால்... பெயர், ஊர், திருமணம் ஆனவர் என்றால் மனைவியின் பெயர், பிள்ளைகளின் பெயர், கனடா விலாசத்துடன், ஊர் விலாசத்தையும் சேர்த்தே பிரசுரித்து சுய இன்பம் காண்பார்கள், இந்த கிலிசு கெட்ட ஊடகங்கள்.
  13. பிரான்ஸ் அங்கீகரித்தால்... ஜேர்மனும் அங்கீகரிக்கும் என நினைகின்றேன். 🙂 ஜேர்மன் அங்கீகரித்தால்.... பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்தற்கு சமன். 😀 கடைசியாக இங்கிலாந்தும், அமெரிக்காவும்... வீணீர் வடித்துக் கொண்டு நிற்கப் போயினம். 😂 🤣
  14. எம். ஆர். ஐ. என்று வாசிக்க வேண்டியதை.... எம். ஜி. ஆர். என்று, அடிக்கடி மாறி வாசிக்கின்றேன். 😂 ஒருக்கால் கண் வைத்தியரிடம் போகவேணும் போலை கிடக்கு. 🤣
  15. கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு! கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்தவர், குடும்பத்துடன் கனடாவில் வசித்து வந்த நிலையில், தனது விடுமுறையை கழிக்க அண்மையில், தனியாக யாழ்ப்பாணம் வந்து அவரது வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினரொருவர் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் வீட்டில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். https://athavannews.com/2025/1440590
  16. மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு! மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார். ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இந்த முடிவால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் தொடர்புடைய வருமானத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்றும் கூறினார். https://athavannews.com/2025/1440631
  17. தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்! நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் இன்று (25) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகமானார். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கமல்ஹாசன், “நான் இன்று டெல்லியில் பதவியேற்று எனது பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையுடன் இந்தக் கடமையை நிறைவேற்றப் போகிறேன் என்று கூறினார். மூத்த நடிகர் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கரகோஷம் சபையில் எழுந்தது. கமல்ஹாசன் மாநிலங்களவையில் நுழைந்தது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில் அவர் முதல் முறையாக தேசிய சட்டமன்றப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். 69 வயதான அரசியல்வாதி ஜூன் 12 அன்று திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழல், கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை எதிர்த்துப் போராடுவதை மையமாகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தனது கட்சியைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது. பின்னர் அவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அங்கு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440613
  18. பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு! எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் ஒரு பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். இதனால் அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக பிரான்ஸ் மாறும். இது தொடர்பான எக்ஸ் பதிவொன்றில் பிரான்ஸ் ஜனாதிபதி, நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன் அங்கீகாரம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். மேலும், காசாவில் போர் முடிவுக்கு வருவதும், பொதுமக்கள் மீட்கப்படுவதும் இன்றைய அவசரத் தேவை. உடனடி போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் காசா மக்களுக்கு பாரிய மனிதாபிமான உதவிகள் தேவை என்றும் அவர் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன அதிகாரிகள் மக்ரோனின் முடிவை வரவேற்றனர். அதேநேரத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது” என்று கூறினார். அதேபோன்று, மக்ரோனின் அறிவிப்பை அமெரிக்கா “வலுவாக நிராகரிக்கிறது” என்று வொஷிங்டனின் வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். G7 என்பது முக்கிய தொழில்மயமான நாடுகளின் குழுவாகும், இதில் பிரான்சுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். தற்போது, பாலஸ்தீன அரசு ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவற்றில் அடங்கும். ஆனால், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவில்லை. https://athavannews.com/2025/1440602

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.