Everything posted by தமிழ் சிறி
-
புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச
புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவன்ச. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்தமிழர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் அவர்களின் திட்டங்களை தற்போது நிறைவேற்றி வருவதாக தேசிய சுதந்திரமுன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல்வீரவங்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளனர். எனவே புலம்பெயர் தமிழர்கள் பழிவாக்கும் நோக்கில் தற்போது நாட்டில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடற்படை, இராணுவம் மற்றும் புலனாய்வு ஆகிய துறைகளில் புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு கடற்படையினரே அழுத்தங்களை கொடுத்தனர் என்பதை புலம்பெயர்தமிழர்கள் நன்கு அறிவார்கள். இதனை நான் கூறவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியே இதனை தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு பாரியளவில் ஆட்பலம் இல்லாத நிலையே காணப்பட்டிருந்தது. எனவே அதனை முகாமைத்துவம் செய்வதற்கு அவர்களிடம் இருந்த மிகப்பெரிய பலம் ஆயுதப் பலமே, எனவே தான் உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு கடற்படையினர். இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினரை அழுத்தம் கொடுத்தனர். இதனாலே அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை புலம்பெயர் தமிழர்கள் ஆரம்பித்துள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் தங்களின் திட்டத்தினை செயற்படுத்துகின்றனர். இதுவே தற்போது அநுரகுமார திசாநாயக்கவின் மறுமலர்ச்சியுகத்தின் திட்டமாகும். அதாவது மறுமலர்ச்சி யுகத்தினை ஏற்படுத்துவதாக கூறும் அநுர அரசாங்கம், புலம்பெயர்தழிமர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவே தெரிகிறது. இந்தநாட்டில் இராணுவம் கடற்படை அரசபுலனாய்வு துறை என்பன பலமிக்கதாக இருந்த வரலாறே கடந்த காலத்தில் காணப்பட்டது. ஆனால் இன்று அங்கு வெற்றிடம் நிலவுகிறது. https://athavannews.com/2025/1442127
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்! எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான சேவை தொடர்ந்தது. இந்த நிலையில் 2025 செப்டம்பர் 23, 25 அன்று சேவை மீண்டும் தொடங்கியவுடன், டெல் அவிவ் – கொழும்பு வழித்தடம் விமான நிறுவனத்தின் குல்லிவேர் ஏர்பஸ் A330-200 விமானத்தின் மூலமாக இணைக்கப்படும். மீதமுள்ள கோடை காலத்திற்கு விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது. https://athavannews.com/2025/1442083
-
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழர்களை கொலை செய்த முஸ்லீம் பயங்கரவாதிகளை... நடு ரோட்டில் வைத்து வெட்டிக் கொல்ல வேண்டும்.
-
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல். செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts institute of technology ) செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனாளர்களின் மூளையின் செயற்பாட்டை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக chatgpt பயனாளர்கள் பலருக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை என்றும் அதே வேளையில் AI பயன்படுத்தாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442117
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கொடுத்திருந்தால்... இப்படியான நிலை ஏற்பட்டிருக்காதே. சிங்களவருக்கு... நாடி நரம்பு எல்லாம் துவேசம் கொப்பளித்தால்... மற்ற நாட்டுக்காரன் வந்து நடு வீட்டில் குந்தி இருப்பான். சிங்கப்பூர் போல இருக்க வேண்டிய நாட்டை... நாசம் அறுத்ததே விமல் வீரவன்ச போன்ற மரமண்டைகள்தான். தொண்டை தண்ணி வத்து மட்டும் கிடந்து நல்லாய் கதறுங்கோ.... எங்களுக்கு, கேட்க சந்தோசமாக உள்ளது.
-
ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு!
ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு! ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய பதிவுகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 100,451 புதிய மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார். ஜனவரி முதல் 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மீதமுள்ள பதிவுகளில் இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொரிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அடங்கும். https://athavannews.com/2025/1442044
-
கருத்து படங்கள்
(முன்னாள்) பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 👇 சோமரத்ன ராஜபக்ச சம்பந்தமாக... தொடர்புடைய செய்தி கீழே உள்ளது. 👇
-
பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !
- செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
- பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !
தேசபந்து விவகாரம்; நாடாளுமன்ற தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு! தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் நேற்று (05) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் நேற்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.ப 4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் (வருகைதராத உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. ஒரு உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்டிருந்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேனவின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. இந்தக் குழு நாடாளுமன்றத்தில் கூடி, சட்டத்திற்கு அமைய விசாரணைகளை நடத்தியிருந்தது. விசாரணைகளின் முடிவில் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சபாநாயகர் கடந்த ஜூலை 22 நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மொத்தம் 23 குற்றச்சாட்டுகளில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, மற்றும் 23 ஆம் இலக்கக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியெனக் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441995- முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை கெழும்பு, நுகேகொடையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1442026- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட காற்றாலை பாகங்கள்! மன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை பாகங்களை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும், பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன் நகருக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 3) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள், குறித்த பாகங்களை நகருக்குள் எடுத்து வரக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ச்சியாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் போராட்டங்கள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. இதேநிலையில்,இன்று அதிகாலை மக்கள் கண்காணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதும் , பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன், காற்றாலை பாகங்களை ஏற்றிய வாகனங்கள் நகருக்குள் உள்நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1442009- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்! கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் சேவை கவுண்டர், தகுதியுள்ள வெளிநாட்டினரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திங்களின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப் பதிரங்களை வழங்க உதவுகிறது. தற்காலிக அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உரிமங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1442019- பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை
பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை. பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப் படுத்தும் முயற்சியில் 1,200 தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அப்பகுதியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் ஆரம்பித்த தீ பரவல் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவி வருவதால் தீப் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442005- ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு! ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜப்பானில் புதன்கிழமை (06) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, உலகம் முழுவதிலுமிருந்து வந்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். மேற்கு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா 1945 ஆகஸ்ட் 6, அன்று தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற செல்லப்பெயர் கொண்ட யுரேனியம் குண்டை வீசியது. இந்த குண்டுவெடிப்புகளில் 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் – சிலர் உடனடியாகவும், ஏனையவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்களாலும் மரணித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா சில இராணுவப் பிரிவுகளின் தலைமையகமாகவும், ஒரு முக்கிய விநியோகத் தளமாகவும் இருந்தது. இந்த நிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் சரணடைந்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, இது பல நாட்கள் இடைவெளியில் நடந்தது. அணுசக்தி வல்லரசான அமெரிக்கா மற்றும் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாத இஸ்ரேல் உட்பட 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள், இந்த மைல்கல் ஆண்டிற்கான ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர விழாவில் கலந்து கொண்டனர். குண்டுவெடிப்பு நடந்த சரியான நேரமான உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2025/1442012- காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
வணக்கம். மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙂- பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !
பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ! பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ், பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த நிலையில் விவாதத்தின் இறுதியில் பதவி நீக்கம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்படி தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவோரு வாக்குகளும் அழிக்கப்படாத நிலையில் வாக்களிப்பில் இருந்து ஒரு உறுப்பினர் விலகியிருந்துள்ளார். இதன்படி,பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோன் சற்றுமுன்னர் நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணைக்கு பொதுஜன பெரமுணவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த பிரேரணை மீதான வாக்களிப்பிலிருந்து பொதுஜன பெரமுண விலகி இருக்குமென என்று நாமல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441970- ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் ‘கிங்டம்’ திரைப்படம்? நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘கிங்டம்’, ஈழத் தமிழர்களை மிக மோசமாகச் சித்தரித்துக் காட்டுவதாகத் தெரிவித்து தமிழக அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில், ஈழத் தமிழர்களின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர். ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு எனவும் மிகப்பெரும் மோசடித்தனம் எனவும் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச் சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, ‘கிங்டம்’ திரைப்படம் வெளியாகிய திரையரங்குகளுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களைத் தமிழக பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441968- வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
யாழில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வடக்கின் கல்வி அதிகாரிகளுடனான வடக்கின் கல்வி நிலை பற்றிய கலந்துரையாடல். வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் பிரதமர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்ட நிலையில் அதிகாரிகள் இவ்வாறு நித்திரை செய்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்.com- வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
- வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
🎶 🎵 🎵 🎵 சின்னத் தம்பி...சின்னத் தம்பி.... நித்திரையோ... நித்திரையோ.... 🎵 🎵 🎵 மணி அடிக்கிறது, எழும்புங்கோ... எழும்புங்கோ... 🎶 🎵 🎵 😂 🤣- சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு
சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு. செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால், அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை புதைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரின் மனைவியால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் தற்போது மற்றுமொரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. செம்ணியில் சுமார் 300 பேர் வரையில் புதைக்கப்பட்டதாகவும், சிறையில் உள்ள தனது கணவருக்கு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலையில், சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளியாக காணப்பட்டாலும், அவர் சில விடயங்களை கூறப்போவதாக, அவரின் மனைவி கூறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே, சோமரத்ன ராஜபக்ஷ என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் எனவும், சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441918- இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!
இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்! இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக தற்போது இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு எந்த சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அறுகம்பை விரிகுடா பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதால் மாட்டுமே பொலிஸ் மற்றும் முப்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இஸ்ரேலிய பிரஜைகள் கூடும் இடங்கள் இருந்தால், அவர்கள் பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் கருதப்படுவதால், அரசாங்கம் நிலையான பாதுகாப்பை வழங்கும் என்றும், இது எந்த வகையான சிறப்புப் பாதுகாப்பும் அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தினார். சுற்றுலாப் பயணிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினருக்கும், அவர்களின் பூர்வீக நாட்டைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பை வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1441948- அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு!
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு! அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி அச்சுறுத்தலை” உருவாக்கியதாக கூறியுள்ள ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளுக்கும் இடையே ஆயுத போட்டியை அதிகரிக்க கூடும் என்ற கவலையை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது. இணக்கத்திற்கு வராமல் ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும் மோதலை நானே நிறுத்தினேன் என கூறிவரும் ட்ரம்பின் பேச்சை ஏற்க ரஷ்யா மறுத்து வருவதால் ரஷ்ய ஜனாதிபதி மீது அமெரிக்க ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றால் ஒரே நாளில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவேன் என கடந்த ஆண்டு டொனால் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்று சுமார் 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ரஷ்யா- உக்ரைன் போரை ட்ரம்பால் நிறுத்த முடியவில்லை. ட்ரம்ப்அவ்வப்போது ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பேசினாலும், நாங்கள் ஒன்றும் ஈரான், ஈராக் இல்லை என்று ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. சிறப்பு தூதர்களை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் ரஷ்ய ஜனாதிபதி இறங்கி வரவில்லை. இதனால், கடும் கோபம் அடைந்த ட்ரம்ப், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில்,ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு மத்தியில் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி திமித்ரியின் மெத்வதேவ் பேச்சால் கோபமடைந்த ட்ரம்ப், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா பகுதிகளுக்கு அனுப்ப தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இவ்வாறான நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படும் ரஷ்யா- அமெரிக்கா இடையே வலுத்து வரும் மோதல் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா தரப்பு கூறும் போது, “மேற்கு நாடுகளின் செயல்பாடுகள் தங்கள் நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே, அணு ஒப்பந்தத்தை பராமரிப்பதற்கான சூழல் மறைந்துவிட்டதால், ரஷ்யா இனியும் முந்தைய சுயக்கட்டுப்பாடுகளை பின்பற்றாது” என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு இடைநிலை-தூர அணுசக்தி ஃபோர்ஸ் (INF) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441905- ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை!
ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை! சவுதி அரேபியாவில் நேற்றைய தினம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வளைகுடா நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை சவூதி அரசு நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், மீண்டும் 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை அமுல்படுத்தியது 2022ம் ஆண்டு 19 பேரும், 2023ம் ஆண்டு 2 பேரும், 2024ம் ஆண்டு 117 பேரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதே போன்று கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக நான்கு சோமாலியர்களும் மூன்று எத்தியோப்பியர்களும், தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக சவுதி அரேபியக் குடிமகன் ஒருவரும் இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441940 - செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.