Everything posted by தமிழ் சிறி
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுசேர்க்கும் முகமாகப் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் நேற்றையதினம், காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வு, நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446212
-
51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!
51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார் இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம். நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். இவற்றை பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கும் பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446194
-
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
எல்ல பேருந்து விபத்து; உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்! எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய சில பயணிகளும் சிரித்ததாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். எனினும், இரண்டாவது வளைவு ஒன்றில் பேருந்து பயணித்த போது பிரேக் செயலிழந்துள்ளதை உண்மையில் நாங்கள் உணர்ந்தோம். பின்னர் பேருந்து எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியது, அதன் பின்னர் அது பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. சுமார் ஒரு மணி நேரம் மயக்கமடைந்திருந்த நான், ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு விழித்தேன். என்னால் நகர முடியவில்லை. பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வந்து எங்களை மீட்டனர் என்று குறித்த பயணி கூறினார். பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று வரும் பதுளை வைத்தியசாலையில் இருந்து ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போது இந்த தகவலை தெரிவித்தார். நேற்று இரவு வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஜீப் மீது மோதி 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 30 பேர் இருந்தனர். 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் சம்பவத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் அடங்குவர். தங்காலையிலிருந்து எல்லவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முப்படையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1446202
-
அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்
அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம். மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது. சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன. பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது. இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்” என்று ராகுல் கடுமையாக சாடினார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1446178
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
- கருத்து படங்கள்
- ஐ.நா.வில் இலங்கை குறித்து இந்தியா மௌனம் கலைய வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹநாமா
@satan- கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
- நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
எல்ல பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக உயர்வு! எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்களும், ஒன்பது பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தங்காலை நகராட்சி சபையைச் சேர்ந்த ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, வீதியை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் நடந்தபோது பேருந்தில் சுமார் 30 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1446138- படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்!
படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்! வட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு அதிக சுமையுடன் பயணித்தமையே இவ் விபத்திற்கான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. நைஜீரியாவில்,அண்மைக்காலமாக படகு விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது. https://athavannews.com/2025/1446088- வணக்கம்
வணக்கம் ரதன், வாங்கோ. 🙏 உங்களை அன்புடன் யாழ். களம் வரவேற்கின்றது. 🙂- இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி. 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446093- வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!
நாங்க என்ன செய்யுறது.? புரட்டாசி மாசம் இதுகளை தேடி, ஊரிலை உள்ள நாய்கள் வளவுக்குள்ளையும், வேலிகளுக்கு இடையிலும் செருகுப் பட்டுக் கொண்டு நிற்குதுகள். சரி... அதுகள் சந்தோசமாக இருந்திட்டுப் போகட்டுமன் என்று பார்த்தால், 4 மாதம் கழித்து அதுகள்... வத வத என்று பத்து, பன்னிரண்டு என்று குட்டியளை பெத்து தள்ளுது. இதுகளாலை மனுஷர் ஊருக்குள்ளை நடமாட முடியாமல் கிடக்கு. 😂- தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்!
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பஞ்ச கோபுரங்களைக் கொண்ட தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2025 மகோற்சவ பெருவிழாவில் இன்று காலை பக்தர்கள் புடை சூழ இனிதே இடம்பெற்றது. இதன்போது அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரிலே ஆரோகணித்து மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். அரோகரா கோசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ரத உற்சவம் இனிதே நடைபெற்றது. 12 நாட்களைகொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த 25 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் 11 நாளான இன்று ரத உற்சவமும் நாளை 12-ஆம் நாள் திருவிருவிழாவாக தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446047- வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!
மோட்டார் சைக்கிளில் முன்னுக்கு வாறவரை... "ஜிம்மியும்", இரண்டாவதாக வாறவரை... "பிரவுணியும்" திரத்திக் கொண்டு போய் அடுத்த சந்தியிலை விடுங்க. நாங்கள் மாநாடு நடத்தும் போது ... இவங்கள் ஏன், குறுக்காலை வாறாங்கள். 😂- போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது!
போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது! போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய சொகுசு காரை செலுத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர், கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி வாரியபொல சுமங்கல மாவத்தையில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரின் கணவரும் ஒரு மருத்துவர், இந்த காரின் உரிமை அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் உள்ள உரிமத் தகடுகள் அவரது சகோதரர்களில் ஒருவருக்குச் சொந்தமான காரின் உரிமத் தகடுகள் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய மருத்துவர் கண்டி, பேராதனையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. https://athavannews.com/2025/1446040- ஐ.நா.வில் இலங்கை குறித்து இந்தியா மௌனம் கலைய வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹநாமா
இந்தியா.... ஈழத்தமிழருக்கு எதிராகவும், சிங்களவருக்கு ஆதரவாகவும் தானே இது வரை நடந்து வந்துள்ளது. இனிமேலும் அப்படித்தான் நடக்கும். ஈழத்தமிழர்களை கருவறுத்த இந்தியா என்ற நாடு சுக்கு நூறாக உடைந்து நாசமாகப் போகவேண்டும். அப்போதான்... ஈழத்தமிழனுக்கு விடிவு கிடைக்கும்.- 'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப் பணம் என்பது மிக அதிகம் போல் உள்ளது. அங்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களால் இவ்வளவு பெருந்தொகைப் பணம் கட்ட முடியாதே.- கருத்து படங்கள்
- கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
- காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!
காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1446035- வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002- 'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002- அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!
அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி! தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது, குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன. தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் குலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட குலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாக குறைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1446031- பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு!
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு! பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே,140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும், காஸாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாலஸ்தீன கடலோரப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் கிளர்ச்சிப்படை நீக்கப்பட வேண்டுமெனவும் இரண்டு நிபந்தனைகளை பெல்ஜியம் அரசு முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து வரும் பொருள்களைத் தடை செய்யவும், ஹமாஸ் தலைவர்கள், வன்முறைக் குடியேறிகள் மற்றும் 2 தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் ஆகியோர் மீதும் தடைகளை விதிக்கவும் பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்டாமர் பென் குவிர் மற்றும் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும், ஆக்கிரமிப்பும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றால்,பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445915 - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.