Everything posted by தமிழ் சிறி
-
நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்!
நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்! நாடு முழுவதும் தற்சமயம் குறைந்தது 20 காயமடைந்த யானைகள் சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறும் பெரும்பாலான யானைகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேற்கு வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார். https://athavannews.com/2025/1440379
-
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்!
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்! தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். முன்னதாக திறப்பு விழாவில் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தினர். இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கிய மெகா திட்டத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு நிகழ்வில் இப்போது கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டம் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும். இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது. கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2 அன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440376
-
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்!
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இங்கிலாந்து விஜயமாக வியாழக்கிழமை (23) லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டன் சென்றடைந்த மோடியை, விமான நிலையத்தில் இந்தோ-பசுபிக் பகுதிக்குப் பொறுப்பான இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், புது டெல்லிக்கான இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தனது வருகையை அறிவித்த பிரதமர் மோடி, இந்த பயணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் என்று கூறினார். இந்தப் பயணத்தில் மோடி, இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். மேலும், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், மன்னர் சார்லஸையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் செழிப்பு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்து, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் இதன்போது கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளின் தயாரிப்புகளை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான வரிகளை நீக்க அல்லது குறைக்கும் முயற்சிகளை பிரதமர் மோடியின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு தரப்பினரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு வர்த்தக அளவை இலக்காகக் கொண்டுள்ளனர். 2023–24 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 55 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியது. இதுவரை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ள இங்கிலாந்து இந்தியாவின் ஆறாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 1,000 இந்திய நிறுவனங்கள் சுமார் 1,00,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இங்கிலாந்தில் இந்திய முதலீடுகள் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன. பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு நான்காவது முறையாக இந்த பயணம் அமைந்துள்ளது. அவர் இதற்கு முன்பு 2015, 2018 மற்றும் 2021 இல் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டிற்காக விஜயம் செய்திருந்தார். கடந்த ஆண்டில், மோடியும் ஸ்டார்மரும் இரண்டு முறை சந்தித்துள்ளனர் – முதலில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த G20 உச்சிமாநாட்டிலும், அண்மையில் ஜூன் மாதம் கனடாவின் கனனாஸ்கிஸில் நடந்த G7 உச்சிமாநாட்டிலும் சந்தித்துள்ளனர். https://athavannews.com/2025/1440382
-
கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!
கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து வைகோ மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன. இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. கடந்த 13ஆம் திகதி ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் வைகோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440330
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
வவுணதீவு இரட்டைக் கொலை சம்பவத்திலும்... விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குற்றம் செய்யாதவர்களை மாட்டி விட்டதில்... அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நடந்த கொலையின் உண்மை 2025,ம் ஆண்டுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவரை தமிழ் அப்பாவிகளை போட்டு சிங்களவனும், சோனகனும் சித்திரவதை செய்வார்கள்.- வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!
கொழும்பில் கைது செய்யப் பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு பின்னாலும்... எத்தனை சதி வேலைகள் பின்னப் பட்டு இருக்கின்றதோ யாரறிவர்.- ஆடி மாத சிரிப்புகள்.
- செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440356- சுமந்திரன் தவறானவர் என சாணக்கியன் பகீர் தகவல்! மூடிய சமையலறையில் சுமந்திரன் விசேட சந்திப்பு
சுமந்திரன் தவறானனவர் என்று…. ஊரிலும், புலம்பெயர் தேசத்திலும், யாழ் களத்திலும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும் போது… “ரியூப் லைற்” சாணக்கியனுக்கு இப்பவாவது தெரிந்தது பெரிய விடயம். இல்லாட்டி…. சாணக்கியனுக்கும், சுமந்திரன் சுத்துமாத்து வேலையை காட்டியிருக்கும். தலை தப்பினது தம்பிரான் புண்ணியம். சி.வி. சிவஞானத்துக்கும்… சுமந்திரனின் சுயரூபம் புரிய கனநாள் எடுக்காது.- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
இன்னும் மூன்று வருசத்ததாலை... 2028´ம் ஆண்டும் இந்தப் படம் ஓடும். 😂 🤣- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
அப்ப கருத்து எழுதின ஆட்கள் வேறை, இப்ப கருத்து எழுதிற ஆட்கள் வேறை. எல்லோருடைய கருத்தையும் நாடி பிடித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 😁😂- வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! பயங்கரவாதி ஷாகறான். கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018): 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழிசுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள் ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது. தற்போதைய கைது மற்றும் விசாரணைகள்: படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றத்தைச் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. Liked Tamil AB Amam ######### @satan, @alvayan, @goshan_che, @ஈழப்பிரியன், @கிருபன் , @Paanch , @ஏராளன் , @விசுகு, @குமாரசாமி, @ரசோதரன், @பெருமாள், @புலவர் , @ரஞ்சித் , @நன்னிச் சோழன் , @Sasi_varnam , @நியாயம் , @suvy , @நிழலி, @இணையவன் , @vasee, @அக்னியஷ்த்ரா , @உடையார் , @தனிக்காட்டு ராஜா- கருத்து படங்கள்
- மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!
மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை! வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தவகையில் கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கற்கை நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், கல்வியியலாளர்கள், மாநாடுகளுக்கான வளவாளர்கள் மற்றும் ஆர்வங்காட்டுகின்ற துறைசார் நிபுணர்கள் பரிமாற்றம், இருநாடுகளாலும் வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குதல் மற்றும் கொழும்பு மற்றும் மாலே போன்ற நகரங்களில் பாடநெறிகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைதீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440170- இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன ஒரு அன்பு கலந்த அக்கறை. 🙂👍🏽- செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
செம்மணி புதைகுழியில் இன்று.. குழந்தையின் பால் போச்சி, 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம்.com- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
அல்வாயன் நீங்கள் கூறியது போல்... ஐரோப்பாவில் இயங்கும் சில திருமண சேவையின் இணையப் பக்கங்களை பார்த்த போது, முன்பு இல்லாத அளவிற்கு எல்லோரும் தமது சாதியிலேயே திருமண சம்பந்தங்களை எதிர்பார்ப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.- புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
கொழும்பில் ஒரு தமிழர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் பேரில் வவுனியாவில் ஒரு வீட்டில் 5600 போதை மாத்திரைகள் , 10கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க பாதாள உலக கோஸ்டியினரின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மீண்டும் புலிகள் என்று வதந்தி பரப்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிள்ளையான் வழங்கிய தகவலின் பேரில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அடுத்து சுரேஸ்சாலே எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தமக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்த கோத்தபாயா கும்பல் அதில் இருந்து தப்புவதற்காக மீண்டும் புலிகள் என்ற வதந்தியைப் பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு தாக்குதலைக்கூட தென்னிலங்கையில் நிகழ்த்தலாம் என்பதால் அரசு இதற்கு இடங்கொடாது விரைந்து கோத்தபாயாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தோழர் பாலன்- புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது! வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார். நேற்றைய தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகைதந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்ற தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வேல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440191- செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்! யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் 8 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440171- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு. ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள். அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார். இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன. அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை. நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு. இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும். Sivachandran Sivagnanam ·- இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!
இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு! கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் கடந்த 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440153- இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் முன்னிடம்!
- புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.